சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் பணியாற்றிய முத்துராமலிங்கத்தேவர் வழியை பின்பற்றி நாமும் வாழவேண்டும் என சிவகிரியில் நடந்த தேவர் ஜெயந்தி விழா பொதுக்கூட்டத்தில் நடிகர் கருணாஸ் பேசினார்.
சிவகிரி பஸ்நிலையம் முன்பு தேவர் மகாசபை சார்பில் தேவர்ஜெயந்தி விழா பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு சிவகிரி தேவர் மகாசபைத்தலைவர் பாஸ்கரவேலு தலைமை வகித்தார். விக் னேஸ் ராஜா முன்னிலை வகித்தார்.
இணைச்செயலாளர் ராஜு வரவேற்றார். தொடர்ந்து நடிகர் கருணாஸ் பேசினார்.
’’தமிழகத்தில் நான் திரைப்படத்துறைக்கு 12வயது முதல் இசைத்துறை மூலம் வந்தேன். தற்போது சினிமா துறையில் நான் பரபரப்பாக உள்ள நிலையில் சமுதாயப்பணியில் ஈடுபடலாம் என நினைத்தபோது பலர் அதனால் கலைத்துறையில் உங்களுக்கு பாதிப்பு வரும் எனத் தெரிவித்தனர்.
ஆனால் சுயநலத்திற்காக சில சமுதாய தலைவர்கள் அரசி யல் செய்வதால் சமுதாயம் தடம் மாறி செல்கிறது. எனவே சமூகத்தை நல்வழியில் கொண்டு செல்வதற்காகவே இவ்விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். மேலும் தேசியமும்,தெய்வீகமும் தனது இரு கண்கள் என பசும்பொன்.
முத்துராமலிங்கத்தேவர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் பணியாற்றினார். அவரது வழியில் நாமும் வாழவேண்டும். அதே நேரத்தில் பொருளாதார ரீதியாக நாம் முன்னேற்றமடைய அனைவ ரும் தங்களது குழந்தைகளை படிக்க வைத்திடவேண்டும்’’என்று பேசினார்.
11 Responses to பசும்பொன் தேவர்: நடிகர் கருணாஸ் பேச்சு