பாண்டிய, சோழ
மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்
(தமிழ் நாட்டில் மலைக் கல்வெட்டுகளிலும்,
தாமிர தட்டுகளிலும் எழுதப்பட்டவை)
1.1. பராந்தக நெடுஞ்சடையன் (768-815)
1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி.
1.1.1 (01)
கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால் நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத |
5 |
கொற்கைக்கிழா னற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக் கேள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடி யென்றப்பதியைச் சீரோடு திருவளரச் செய்தார்வேந்த னப்பொழுதே நீரோடட்டிக் கொடுத்தமையா னீடுபுக்தி துய்த்தபின் |
10 . . |
அளவரிய ஆதிராசரை யகலநீக்கி யகலிடத்தைக் களப்ரனென்னும் கலியரசன் கைக்கொண்டதனை யிறக்கியபின் படுகடன்முளைத்த பருதிபோல பாண்டியாதிராசன் வௌிப்பட்டு விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து வேலை சூழ்ந்த வியலிடத்துக் |
15 |
கோவும் குறும்பும் பாவுடன் முறுக்கிச் செங்கோ லோச்சி வெண்குடை நீழற் றங்கொலி நிறைந்த தரணி மங்கையைப் பிறர்பா லுரிமை திறவிதின் நீக்கித் தன்பா லுரிமை நன்கன மமைத்த- |
20 |
மானம் பேர்த்த தானை வேந்தன் ஒடுங்கா மன்ன ரொளிநக ரழித்த கடுங்கோ னென்னுங் கதிர்வேற் றென்னன் மற்றவற்கு மகனாகி மகீதலம் பொதுநீக்கி மலர் மங்கையொடு மணனயர்ந்த |
25 |
அற்றமிலடர் வேற்றானை யாதிராச னவனிசூளாமணி எத்திறத்து மிகலழிக்கும் மத்தயானை மாறவர்மன்; மற்றவர்க்கு மருவினியவொரு மகனாகி மண்மகளை மறுக்கடிந்து விக்ரமத்தின் வௌிப்பட்டு விலங்கல்வெல்பொறி வேந்தர்வேந்தன் சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன் செங்கோற்சேந்தன் |
30 |
மற்றவற்குப் பழிப்பின்றி வழித்தோன்றி உதயகிரி மத்யமத் துறுசுடர்போலத் தெற்றென்று திசைநடுங்க மற்றவன் வௌிப்பட்டுச் சூழியானை செலவுந்திப் பாழிவா யமர்கடந்து வில்வேலி கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும் |
35 |
விரவிவந் தடையாத பரவரைப் பாழ்படுத்தும் அறுகாலினம் புடைதிளைக்குங் குறுநாட்டவர் குலங்கெடுத்தும் கைந்நலத்த களிறுந்திச் செந்நிலத்துச் செருவென்றும் பாரளவுந் தனிச்செங்கோற் கேரளனைப் பலமுறையும் உரிமைச்சுற்றமோ டவர்யானையும் புரிசையுமதிற் புலியூரும் |
40 |
பகல்நாழிகை யிறவாமை இகலாழியுள் வென்றுகொண்டும் வேலாழியும் வியன்பறம்பு மேலாமைசென் றெறிந்தழித்தும் இரணியகர்ப்பமுந் துலாபாரமுந் தரணிமிசைப் பலசெய்தும் அந்தணர்க்கும் அசக்தர்க்கும் வந்தணைகவென் றீத்தளித்த மகரிகையணி மணிநெடுமுடி அரிகேசரி யசமசமன் சிரீமாறவர்மன் |
45 |
மற்றவற்கு மகனாகிக் கொற்றவேல் வலனேந்திப் பொருதூருங் கடற்றானையை மருதூருண் மாண்பழித் தாய்வேளை யகப்படஎய் யென்னாமை யெறிந்தழித்துச் செங்கொடியும் புதான்கோட்டுஞ் செருவென்றவர் சினந்தவிர்த்துக் கொங்கலரும் நறும்பொழில்வாய்க் குயிலொடு மயிலகவும் |
50 |
மங்கலபுரமெனு மாநகருண் மகாரதரை எறிந்தழித்து அறைகடல் வளாகம் பொதுமொழி யகற்றிச் சிலையும் புலியுங் கயலுஞ் சென்று நிலையமை நெடுவரை யிடவயிற் கிடாஅய் மண்ணினி தாண்ட தண்ணளிச் செங்கோல் |
55 |
தென்ன வானவன் செம்பியன் சோழன் மன்னர் மன்னன் மதுரகரு நாடகன் கொன்னவின்ற நெடுஞ்சுடர்வேற் கொங்கர்கோமான் கோச்சடையன்; மற்றவற்குப் புத்திரனாய் மண்மகளது பொருட்டாக மத்தயானை செலவுந்தி மானவேல் வலனேந்திக் |
60 |
கடுவிசையா லெதிர்ந்தவரை நெடுவயல்வாய் நிகரழித்து கறுவடைந்த மனத்தவரைக் குறுமடைவாய்க் கூர்ப்பழித்து மன்னிக்குறுச்சியுந் திருமங்கையு முன்னின்றவர் முரணழித்து மேவலோர் கடற்றானையோ டேற்றெதிரே வந்தவரைப் பூவலூர்ப் புறங்கண்டும் |
65 |
கொடும்புரிசை நெடுங்கிடங்கிற் கொடும்பா ளூர்க்கூடார் கடும்பரியுங் கடுங்களிறுங் கதிர்வேலிற் கைக்கொண்டும் செழும்புரவிப் பல்லவனைக் குழும்பூருட் டேசழிய எண்ணிறந்த மால்களிறும் இவுளிகளும் பலகவர்ந்தும் தரியலராய்த் தறித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும் |
70 |
பூவிரியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட்டு அழகமைந்த வார்சிலையின் மழகொங்கம் அடிப்படுத்தும் ஈண்டொளிய மணியிமைக்கு மெழிலமைந்த நெடும்புரிசைப் பாண்டிக் கொடுமுடி சென்றெய்திப் பசுபதியது பதும பாதம் பணிந்தேத்திக்- |
75 |
கனகராசியும் கதிர்மணியும் மனமகிழக் கொடுத்திட்டுங் கொங்கர்வன் நறுங்கண்ணிக் கங்கராசனொடு சம்பந்தஞ்செய்தும் எண்ணிறந்தன கோசகசிரமும் இரணியகர்ப்பமுந் துலாபாரமும் மண்ணின்மிசைப் பலசெய்து மறைநாவினோர் குறைதீர்த்தும் கூடல்வஞ்சி கோழியென்னு மாடமா மதில்புதுக்கியும்- |
80 |
அறைகடல் வளாகங் குறையா தாண்ட மன்னர் மன்னன் றென்னவர் மருகன் மான வெண்குடை மான்றேர் மாறன்; மற்றவற்கு மகனாகி மாலுருவின் வௌிப்பட்டுக் கொற்றமூன் றுடனியம்பக் குளிர்வெண்குடை மண்காப்பப் |
85 |
பூமகளும் புலமகளும் நாமகளும் நலனேத்தக் கலியரைசன் வலிதளரப் பொலிவினொடு வீற்றிருந்து கருங்கட லுடுத்த பெருங்கண் ஞாலத்து நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக் கருதாதுவந் தெதிர்மலைந்த காடவனைக் காடடையைப் |
90 |
பூவிரியும் புனற்கழனிக் காவிரியின் றென்கரைமேல் தண்ணாக மலர்ச்சோலைப் பெண்ணாகடத் தமர்வென்றும் தீவாய் அயிலேந்தித் திளைத்தெதிரே வந்திறுத்த ஆய்வேளையுங் குறும்பரையு மடலமரு ளழித்தோட்டிக் காட்டுக்குறும்பு சென்றடைய நாட்டுக்குறும்பிற் செருவென்றும் |
95 |
அறைகடல் வளாக மொருமொழிக் கொளீஇய சிலைமலி தடக்கைத் தென்ன வானவன் அவனே சிரீவரன் சிரீமனோகரன் சினச்சோழன் புனப்பூழியன் வீதகன்மஷன் விநயவிச்ருதன் விக்ரமபாரகன் வீரபுரோகன் மருத்பலன் மான்யசாசனன் மனூபமன் மர்த்தித வீரன் |
100 |
கிரிஸ்திரன் கீதிகிந்நரன் கிருபாலயன் கிருதாபதானன் கலிப்பகை கண்டகநிஷ்டூரன் காரியதட்சிணன் கார்முகபார்த்தன் பராந்தகன் பண்டிதவத்சலன் பரிபூர்ணன் பாபபீரு குரையுறு கடற்படைத்தானைக் குணக்கிறுகியன் கூடணிற்ணயன் நிறையுறு மலர் மணிநீண்முடி நேறியர்கோ னெடுஞ்சடையன் |
105 |
மற்றவன்றன் ராஜ்யவத்சரம் மூன்றாவது செலாநிற்ப ஆங்கொரு நாண்மாட மாமதில்….. |
—————————————————————————————————————————–
1.1. பராந்தக நெடுஞ்சடையன் (768 – 815)
2. சீவரமங்கலச் செப்பேட்டுப் பகுதி
1.1.2 (02)
அன்ன னாகிய அலர்கதிர் நெடுவேற் றென்னன் வானவன் செம்பியன் வடவரை யிருங்கய லாணை ஒருங்குட னடாஅய் ஒலிகெழு முந்நீ ருலகமுழு தளிக்கும் வலிகெழு திணிதோண் மன்னவர் பெருமான் |
5 |
றென்னல ராடி தேம்புனற் குறட்டிப் பொன்மலர் புறவில் வெள்ளூர் விண்ணஞ் செழியக் குடியென் றிவற்றுட் டெவ்வ ரழியக் கொடுஞ்சிலை அன்றுகால் வளைத்தும் மாயிரும் பெரும்புனற் காவிரி வடகரை |
10 |
ஆயிர வேலி அயிரூர் தன்னிலும் புகழி யூரிலுந் திகழ்வே லதியனை ஓடுபுரங் கண்டவ னொலியுடை மணித்தே ராடல் வெம்மா அவைஉடன் கவர்ந்தும் பல்லவனுங் கேரளனு மாங்கவற்குப் பாங்காகிப் |
15 |
பல்படையொடு பார்ஞௌியப் பவ்வம்மெனப் பரந்தெழுந்து குடபாலும் குணபாலும் மணுகவந்து விட்டிருப்ப வெல்படையொடு மேற்சென்றங் கிருவரையும் இருபாலும் இடரெய்தப் படைவிடுத்துக் குடகொங்கத் தடன்மன்னனைக் கொல்களிற்றொடுங் கொண்டுபோந்து |
20 |
கொடியணிமணி நெடுமாடக் கூடன்மதி லகத்துவைத்துக் கங்கபூமி யதனளவுங் கடிமுரைசுதன் பெயரறையக் கொங்கபூமி யடிப்படுத்துக் கொடுஞ்சிலைபூட் டிழிவித்துக் பூஞ்சோலை அணிபுறவிற் காஞ்சிவாய்ப்பே ரூர்புக்குத் திருமாலுக் கமர்ந்துறையக் குன்றமன்னதோர் கோயிலாக்கியும் |
25 |
ஆழிமுந்நீ ரகழாக அகல்வானத் தகடுரிஞ்சும் பாழிநீண்மதில் பரந்தோங்கிப் பகலவனு மகலவோடும் அணியிலங்கையி லரணிதாகி மணியிலங்கும் நெடுமாட மதில்விழிஞ மதுஅழியக் கொற்றவேலை உறைநீக்கி வெற்றத்தானை வேண்மன்னனை |
30 |
வென்றழித்தவன் விழுநிதியொடு குன்றமன்ன கொலைக்களிரிங் கூந்தன்மாவுங் குலதனமும் நன்னாடுங் அவைகொண்டும் அரவிந்த முகத்திளையவ ரறிநெடுங்கண் ணம்புகளாற் பொரமைந்தர் புறம்பெய்தும் பொன்மாட நெடுவீதிக் கரவந்தபுரம் பொலிவெய்தக் கண்ணகன்றதோர் கல்லகழொடு |
35 |
விசும்புதோய்ந்து முகிறுஞ்சலில் அசும்பறாத வகன்சென்னி நெடுமதிலை வடிவமைத்தும் ஏவமாதி விக்ரமங்க ளெத்துணையோ பலசெய்து மணிமாடக் கூடல்புக்கு மலர்மகளொடு வீற்றிருந்து மநுதர்சித மார்கத்தினால் குருசரிதம் கொண்டாடிக் |
40 |
கண்டக சோதனை தான்செய்து கடன்ஞாலம் முழுதளிக்கும் பாண்டிய நாதன் பண்டித வத்சலன் வீர புரோகன் விக்ரம பாரகன் பராந்தகன் பரம வைஷ்ணவன் றானாகி நின்றிலங்கும் மணிநீண்முடி நிலமன்னவனெடுஞ் சடையற்கு |
45 |
ராஜ்யவர்ஷம் பதினேழாவது பாற்பட்டு செல்லாநிற்க . . . . . . |
——————————————————————————————————————————
1.1. பராந்தக நெடுஞ்சடையன் (768 – 815)
3. சின்னமனூர் சிறிய செப்பேட்டுப் பகுதி
1.1.3 (03)
ஸ்வஸ்திஸரீ அமிர்தகிரணன் அன்வயத்தில் ஆகண்டலனது அழிவகல சமர்முகத் தசுரகணந் தலையழியச் சிலைகுனித்து வடவரையது வலாரசூளிகை மணிக்கெண்டைப் பொறிசூட்டியுந் தென்வரைமிசைக் கும்போத்வனது தீந்தமிழிற் செவிகழுவியும் ஹரிஹயன தாரம்பூண்டும் அர்தாசன மாவனோடேறியும் |
5 |
சுரிவளையவன் றிருமுடிமிசைத் தூணிபலபடத் தோளேச்சியும் ஓதமீள வேலெறிந்து மோராயிரங் கிரதுச்செய்தும் பூதகணம் பணியாணடும் புவனதலம் பொதுநீக்கியும் யானையாயிர மையமிட்டும் அபரிமிதமதி செயங்கள்செய்து ஊனமில்புகழ் பாண்டியவம்சத் துலோகநாதர் பலர்கழிந்தபின்- |
10 |
ஜகத்கீத யசோராசீர்ஜயந்தவர்மன் மகனாகிப் பகைப்பூபர் தலைபணிப்பப் பரமேசுரன் வௌிப்பட்டு அரிகேசரி அசமசமன் அலங்கிய விக்ரமன் அகாலகாலலெனத் தனக்குரியன பலகுணநாம முலகுமுழு துகந்தேத்தப் பராவனிப குலமிறைஞ்சப் பாரகலம் பொதுநீக்கி |
15 |
தராசுரரது இடரகலத் தனவருஷம் பொழிதற்கு வலாஹகத்தின் விரதம்பூண்டு துலாபாரம் மினிதேறிச் சரணிபனா யுலகளித் திரணியகர்ப்ப மிருகால்புக்கு கோசகசிரத் தொடக்கத்துக் குருதானம் பலசெய்து வாசவன்போல் வீற்றிருந்தனன் வசுதாபதி மாறவர்மன் |
20 |
மற்றவர்கு மகனாகி மதிபுரையும் குடைநீழல்
அற்றமின்றி அவனிமண்டலமுடனோம்பி அருள்பயந்த |
25 |
மருதூரொடு குவளைமலையு மத்தவேழஞ் செலவுந்தி. . . . |
1.2. பராந்தக வீரநாராயணன் (859-907)
தளவாய்புரச் செப்பேட்டுப் பகுதி
1.2.1 (04)
ஸ்வஸ்தி ஸரீ ஓங்குதிரை வியன்பரப்பில் உததிஆ லயமாகத் தேங்கமழ் மலர்நெடுங்கட் டிசைமகளிர் மெய்க்காப்ப விண்ணென் பெயரெய்திய மேகஞாலி விதானத்தின் தண்ணிழற்கீழ் சகஸ்ரபண மணிகிரணம் விளக்கிமைப்ப புஜங்கம புரஸ்ஸர போகிஎன்னும் பொங்கனை |
5 |
மீமிசைப் பயந்தரு தும்புரு நாரதர் பனுவ னரப்பிசை செவியுறப் பூதல மகளொடு பூமகள் பாதஸ்பரி சனைசெய்யக் கண்படுத்த கார்வண்ணன் திண்படைமால் ஸரீபூபதி ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநாபி மண்டலத்துச் |
10 |
சோதிமரகத துளைத்தாட் சுடர்பொற் றாமரைமலர்மிசை விளைவுறு களம கணிசமென மிளிர்ந்திலங்கு சடைமுடியோ டளவியன்ற கமண்டலுவோ டக்ஷமாலையோடு தோன்றின சதுர்புஜன் சதுர்வக்த்ரன் சதுர்வேதி சதுர்த்வயாக்ஷன் மதுகமழ்மலர்க் கமலயோனி மனந்தந்த மாமுனிஅத்ரி |
15 |
அருமரபிற் பலகாலந் தவஞ்செய்வுழி அவன்கண்ணில் இருள்பருகும் பெருஞ்சோதி இந்துகிரணன் வௌிப்பட்டனன் மற்றவர்க்கு மகனாகிய மணிநீள்முடிப் புதனுக்குக் கற்றைச்செங் கதிர்க்கடவுள் வழிவந்த கழல்வேந்தன் ஏந்தெழிற்றோள் இளனொருநா ளீசனது சாபமெய்திப் |
20 |
பூந்தளவ மணிமுறுவுற் பொன்னாகிய பொன்வயிற்றுள் போர்வேந்தர் தலைபனிப்ப வந்துதோன்றிய புரூரவற்பின் பார்வேந்த ரேனைப்பலரும் பார்காவல் பூண்டுய்த்தபின் திசையானையின் கும்பகூடத் துலவியசெழு மகரக்குலம் விசையொடு விண்மீனொடு போர்மிக்கெழுந்த கடற்றிரைகள் |
25 |
சென்றுதன் சேவடிபணிய அன்றுநின்ற ஒருவன்பின் விஞ்சத்தின் விஜம்பணையும் பெறல்நகுக்ஷன் மதவிலாசமும் வஞ்சத்தொழில் வாதாவி சீராவியும் மகோததிகளின் சுருங்காத பெருந்தன்மையும் சுகேதுசுதை சுந்தரதையும் ஒருங்குமுன்னாள் மடிவித்த சிறுமேனி உயர்தவத்தோன் |
30 |
மடலவிழ்பூ மலயத்து மாமுனி புரோசிதனாகக் கடல்கடைந்து அமிர்துகொண்டுங் கயிலிணைவட வரைபொறித்தும் ஹரிஅயன தாரம்பூண்டு மவன்முடியொடு வளைஉடைத்தும் விரிகடலை வேலின்மீட்டும் தேவாசுரஞ் செருவென்றும் அகத்தியனொடு தமிழாய்ந்தும் மிகத்திறனுடை வேந்தழித்தும் |
35 |
தசவதனன் சார்பாகச் சந்துசெய்தும் தார்த்தராஷ்டிரர் படைமுழுதும் களத்தவியப் பாரதத்துப் பகடோட்டியும் மடைமிகுவேல் வானரத்வஜன் வசுசாப மகல்வித்தும் அரிச்சந்திர னகரழித்தவன் பரிச்சந்தம் பலகவர்ந்தும் நாற்கடலொரு பகலாடி நாற்கோடிபொன் னியதிநல்கி |
40 |
நூற்கடலைக் கரைகண்டு நோன்பகடா யிரம்வழங்கியும் உரம்போந்த திண்டோளரைசுக சுரம்போகித் துறக்கமெய்தியும் பொன்னிமையப் பொருப்பதனில் கன்னிமையிற் கயலெழுதியும் பாயல்மீ மிசைநிமிர்ந்து பல்லுண்டி விருப்புற்றும் காயல்பாய் கடல்போலக் குளம்பலவின் கரையுயரியும் |
45 |
மன்னெதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செயதும் அங்கதனி அருந்தமிழ்நற் சங்கம்இரீஇத் தமிழ்வளர்த்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும் கடிஞாயிறு கவினலங்கற் களப்பாழர் குலங்களைந்தும் முடிசுடிய முரண்மன்னர் ஏனைப்பலரு முன்னிகந்தபின் |
50 |
இடையாறையும் எழில்வெண்பைக் குடியிலும்வெல் கொடிஎடுத்த குடைவேந்தன் றிருக்குலத்துக் கோமன்னர் பலர்கழிந்தபின் காடவனைக் கருவூரில் கால்கலங்க களிறுகைத்த கூடலர்கோன் ஸரீபராந்தகன் குரைகடற்கோச் சடையற்குச் சேயாகி வௌிப்பட்ட செங்கண்மால் ஸரீவல்லபன் |
55 |
வேய்போலும் தோளியர்கேள் வித்யாதர ணிரண்யகர்பன் குண்ணுரில மர்வென்றுங் குரைகடலீ ழங்கொண்டும் விண்ணாள வில்லவற்கு வழிஞத்து விடைகொடுத்தும் காடவனைக் கடலாணுர்ப் பீடழியப் பின்னின்றும் குடகுட்டுவர் குணசோழர் தென்கூபகர் வடபுலவர் |
60 |
அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்படத்தன் களிறொன்று வண்குடந்தைக் கதிகாட்டி யம்புரசீலன் ஒளிறிலைவேல் உபாய பஹுலன் உம்பர்வான் உலகணைந்தபின் மற்றவர்க்கு மகனாகிய கொற்றவனெங் கோவரகுணன் பிள்ளைப்பிறைச் சடைக்கணிந்த பினாகபாணிஎம் பெருமானை |
65 |
உள்ளத்தி லினிதிருவி உலகங்காக் கின்றநாளில் அரவரைசன் பல்லுழி ஆயிமா யிருந்தலையால் பெரிதரிதின் பொறுக்கின்ற பொரும்பொறைமண் மகளைத்தன் தொடித்தோளி லௌிதுதாங்கிய தொண்டியர்கோன் துளக்கில்லி வடிப்படைமா னாபரணன் திருமருகன் மயிலையர்கோன் |
70 |
பெத்தப்பிக் குலச்சோழன் புகழ்தரு சிரீகண்டராசன் மத்தமா மலைவலவன் மணிமகள்அக் களநிம்மடி திருவயிறு கருவுயிர்த்த ஸரீபராந்தக மகாராசன் விரைபரித்தேர் வீரநாரணன் முன்பிறந்த வேல்வேந்தனைச் செந்தாமரை மலர்பழனச் செந்நிலந்தைச் செருவென்றும் |
75 |
கொந்தார்பூம் பொழிற்குன்றையும் குடகொங்கிலும் பொக்கரணியும் தென்மாயலுஞ் செழுவெண்கையமுf பராந்தகத்துஞ் சிலைச்செதிர்ந்த மன்மாய மாமிகுத்தவர் வஸ்துவா கனங்கொண்டும் ஆறுபல தலைகண்டும் அமராலயம் பலசெய்தும் சேறுபடு வியன்கழனித் தென்விழிஞ நகர்கொண்டும் |
80 |
கொங்கினின் தேனூரளவும் குடகொங்க ருடல்மடிய வெங்கதிர்வேல் வலங்கோண்டும் வீரதுங்கனைக் குசைகொண்டும் எண்ணிறந்த பிரம்மதேயமும் எண்ணிறந்த தேவதானமும் எண்ணிறந்த தடாகங்களும் இருநிலத்த லியற்றுவித்தும் நின்ற பெரும் புகழாலும் நிதிவழங்கு கொடையாலும் |
85 |
>வென்றிபொர்த் திருவாலும் வேல்வேந்தரில் மேம்பட்ட கதிரார் கடுஞ் சுடரிலைவேல் கலிப்பகை கண்டருள்கண்டன் மதுராபுர பரமேச்வரன் மாநிதி மகரகேதனன்தன் செங்கோல்யாண்டு நாற்பதின்மேல் மூன்றோடீர்யாண்டில் . . . . . |
1.3 இராச சிம்மன் (907-931)
சின்னமனூர் பெரிய செப்பேட்டுப் பகுதி
1.3.1 (05)
ஸ்வஸ்திஸரீ திருவொடுந்தெள் ளமிர்தத்தொடுஞுf செங்கதிரொளிக் களஸ்துபத்தொடும் அருவிமதக் களிறொன்றுடந் தோன்றிஅர னவிர்சடைமுடி வீற்றிருந்த வெண்தங்கள் முதலாக வௌிப்பட்டது நாற்றிசையோர் புகழ்நீரது நானிலத்தி னிலைபெற்றது திருவொடுால் நேரஸ்துதிக் கப்பட்டது |
5 |
விரவலர்க் கரியது மீனத்வய சாசனத்தது பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனா கப்பெற்றது ஊழியூழி தோறுமுள்ளது நின்றஒரு வனைஉடையது வாழியர்பாண் டியர்திருக் குலமிதனில் வந்துதோன்றி வானவெல்லை வரைத்தாண்டும் அலைகடல்கடைந் தமிர்துகொண்டும் |
10 |
நானில்த்தோர் விஸ்மயப்பட நாற்கடலொடுபகலாடியும் மறுவிலொளிர் மணிமுடியொடுசங்கவெள்வளைதரெத்தும் மறுவிலொளிர் மணிமுடியொடு சங்கவெள் வளைதரித்தும் நிலவுலகம் தூதுய்த்தும் பாகசாசன னாரம்வவ்வியுஞ் செம்மணிப்பூ ணெடுதோன்றித் தென்றமிழின் கரைகண்டும் |
15 |
வெம்முனைவே லொன்றுவிட்டும் விரைவரவிற் கடல்மீட்டும் பூழியனெனப் பெயரெய்தியும் போர்க்குன் றாயிரம்வீசியும் பாழியமபா யகினிமர்ந்தும் பஞ்சவனெனும் பெயர்நிறீயும் வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில்வகுத்தும் உளமிக்க மதியதனா லொண்டமிழும் வடமொழியும் |
20 |
பழுதறத்தா னாராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும் மாரதர்மலை களத்தவியப் பாரதத்திற் படகோட்டியும் விசயனைவசு சாபம்நீக்கியும் வேந்தழிச்சுரம் போக்கியும் வாசயில் மாக்கயல்புலிசிலை வடவரைநெற்றியில் வரைந்தும் தடம்பூதம் பணிகொண்டு தடாகங்கள் பலதிருத்தியும் |
25 |
அடும்பசிநோய் நாடகற்றி அம்பொற்சித்ர முயரியந் தலையாலங் கானத்திற் றன்னொக்கு மிருவேந்தரைக் கொலைவாளிற் றைதுமிதித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும் மகாபாரதம் தமிழ்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மகாராசரும் சார்வபௌமரும் மகிமண்டலங் காத்திகந்தபின் |
30 |
வில்லவனை நெல்வேலியும் விரிபொழிற்சங் கரமங்கைப் பல்லவனையும் புரங்கண்ட பராங்குசன்பஞ் சவர்தோன்றலும் மற்றவற்கு பௌத்ரனாயின மன்னபிரா னிராசசிங்கனும் கொற்றவர்க டொழுகழற்காற் கோவரகுண மகராசனும் ஆங்கவர்காத் மசனாகி அவனிதலம் பொறைதாங்கித் |
35 |
தேங்கமழ்பொழிற் குண்ணூரிலும் சிங்களத்தும் விழிஞத்தும் வாடாத வாகைசூடிக் கோடாதசெங் கோனடாவிக் கொங்கலர்பொழிற் குடமுக்கிற் போர்குறித்து வந்தெதிர்ந்த கங்கபல் லவசோழ காலிங்க மாகதாதிகள் குருதிப்பெரும் புனற்குளிப்பக் கூர்வெங்கனை தொடைநெகிழ்த்துப் |
40 |
பதிதியாற்ற லொடுவிளங்கின பரசக்கிர கோலாலனுங் குரைகழற்கா லரைசிறைசக் குவலயதலந் தனதாக்கின வரைபுரையு மணிநெடுந்தோள் மன்னர்கோன் வரகுணவர்மனும் மற்றவனுக் கிளையனான மனுசரிதன் வாட்சடையன் பொற்றடம்பூண் சிரிபராந்தகன் புனைமணிப்பொன் முடிசூடிக் |
45 |
கைந்நிலந்தோய் கரிக்குலமும் வாஜிப்ருந்தமுங் காலாலுஞ் சென்னிலத்தி னிலஞ்சோரத் திண்சிலைவாய்க் கணைசிதறியும் கரகிரியிற் கருதாதவர் வரகரிக்குல நிரைவாரியும் நிலம்பேர நகர்கடந்துந் நெடும்பெண்ணா கடமழித்தும் ஆலும்போர்ப் பரியொன்றா லகன்கொங்கி லமர்கடந்தும் |
50 |
தேவதானம் பலசெய்தும் பிரமதேயம் பலதிருத்தியும் நாவலந்தீ வடிப்படுத்த நரபதியும் வானடைந்தபின் வானவன்மகா தேவியென்னு மலர்மடந்தை முன்பயந்த மீனவர்கோ னிராசசிங்கன் விகடவா டவனவனேய் அகிபதியா யிந்தலையால் அரிதாகப் பொறுக்கின்ற |
55 |
மகிமண்டலப் பெரும்பொறைதன் மகாபுஜபலத் தாற்றாங்கி புசகநாயக தரணிதாரண ஹரணராசித புசபலனாய் உலப்பிலிமங் கலத்தெதிர்ந்த தெவ்வருடல் உகுத்தசெந்நீர் நிலப்பெண்ணிற் கங்கராக மெனநீவப் பாணிதந்தும் மடைப்பகர்நீர்த் தஞ்சசையர்கொன் தானைவரை நைப்பூரிற் |
60 |
படைப்பரிசா ரந்தந்து போகத்தன் பணைமுழக்கியுங் கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானை இடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேல்கொண்டும் புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும் |
65 |
சேவலுயர் கொடிக்குமர னெனச்சீரித் தென்றஞ்சைக் காவலனது கரிதுரக பதாதிசங்கங் களத்தவியப் பூம்புனனா வற்பதியில் வாம்புரவி பலங்காட்டியும் விஜயத்துவஜம் விசும்பணவச் செங்கோறிசை விளிம்மணவக் குசைமாவுங் கொலைக்குன்றமுங் குருதியார முங்கொணர்ந்தும் |
70 |
குலவர்தன ரடிவணங்க மகேந்திரபோக மனுபவித்த விகடவாடவன் சிரிகாந்தன் மீநாங்கித சைலேந்திரன் இராசசிகா மணிதென்னன் ராசித குணகணுங்கோன் எண்ணறிந்த பிரமதேயமும் எண்ணிறந்த தேவதானமும் எண்ணறிந்த பள்ளிச்சந்தமும் எத்திசையு மினிதியற்றி |
75 |
உரம்பிலொதி ஒலிகடல்போ லொருங்குமுன்னந் தானமைத்தவல் இராசசிங்கப் பெருங்குளக்கீழ் சூழல்நக ரிருந்தருளி இராஜ்யவர்ஷம் இரண்டாவதன் எதிர்பதினான் காம்யாண்டில். . . . . |
1.4. வீர பாண்டியன் (946-966)
சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி
1.4.1 (06)
ஸ்வஸ்திஸரீ சந்திரனது வழித்தோன்றிஇத் தராமண்டல முழுதாண்டுபண்டு இந்திரன்முடி வளையுடைத்தும் இமயத்துக் கயலெழுதியும் ஆனையாயிர மையமிட்டும் அகத்தியனொடு தமிழ்தெரிந்தும் வானவர்க்குத் தூதுசென்றும் மால்கடலின் வரவுமாற்றியும் ஈண்டியவக் கடல்கடைந்தும் இன்னனபல திறல்செய்த |
5 |
பாண்டியபர மேச்வரராள் பரம்பரையில் வந்துதோன்றினன் மன்னவர்க்கோன் இராசமல்லன் மணிமுடிமா னாபரணன் தென்னவர்க்கோன் மற்றவற்குச் சேரலன்றன் மடப்பாவை சீர்திகழு மணிபயிலிச் செழுநிலந்தொழ வௌிப்பட்ட வீரகேரளன் வீரபாண்டியன் விநயகஞ்சுகன் விசாலசீலன் |
10 |
தன்னுடைய குலம்விளங்கத் தன்தேயத் தமிழ்கூடலில் மன்னியமணி முடிகவித்து மகாபிஷேக மகிழ்ந்தநாளில் மேதகுசா சனசுலோகம் விதிகிடந்தவா செய்யவல்ல பூசுரமத் திவன்னதுதன் பூம்பொருநம் புடைவர்க்கும் சீர்திகழ்தரு முள்ளிநாட்டுத் தென்வீரதர மங்கலத்து |
15 |
ஏர்திகழும் பெருந்தன்மை ராதிதர கோத்திரத்தில் அளப்பரிய பேரொழுக்கத் தாச்வலாயன சூத்திரத்து விளக்கமுற வந்துதோன்றி விப்ரர்க்கோர் விளக்காயின ஒருதன்மை இருபிறப்பில் முச்செந்தீ நால்வேதத்து அருமரபில் ஐவேள்வி ஆறங்கத் தந்தணாளன் |
20 |
கோவிந்தஸ்வாமி பட்டர்க்குச் சோமாசிதன் குலவரவில் வாசுதேவ பீதாம்பர பட்டனென்ற மறைவாழ்நனை மதித்தருளி நீசெய்கென மற்றவனு மனமகிழ்ந்து விதித்தமைத்த அநுஷ்டுப்பின் விழுப்பநோக்கி மிகமகிழ்ந்து தனக்கிரண்டாமாண்டின் எதிராமாண்டில் |
25 |
அண்டநாட்டு மின்னுக்கொடி நெடுமாடவீதி. . . . . |
1.5 சீவல்லபன் (1120 -1146)
1.5.1 (07)
- ஸ்வஸ்திஸரீ
திருமடந்தையும் சயமடந்தையும் திருப்புயங்களில் னிதிருப்ப
ருநிலமும் பெருமைஎய்த எண்டிசையும் குடைநிழற்ற
மன்னவரெல்லாம் வந்திறைஞ்ச மரபிலேவரு முடிசூடித்
தென்குமரி முதலாகிய திரைகடல் எல்லையாகப்
பார்முழுதுங் கயலானை பரந்துசெங்கோ லுடன்வளர – 5
மன்னிய வீர சிம்மா சனத்து
உலகுமுழு துடையா ளுடன்வீற் றிருந்தருளி
மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதல்
கோச்சடைய பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்
சீ வல்லப தேவர்க்கு யாண்டு 4 ஆவது – 10
1.5 சீவல்லபன் (1120 – 1146) — 2
1.5.2 (08)
ஸ்வஸ்திஸரீ
திருமகள் செயமகள் திருப்புயத் திருப்ப
இருநிலத் தொருகுடை நிற்பப் போர்வலி
செம்பியர் சினப்புலி ஒதுங்க அம்புயர்
மேருவில் கயல்விளை யாடப் பார்மிசை
மந்த… … … … … … மாற்றி – 5
நாற்றிசை மன்னவர் திறைமுறை அளப்ப
மன்னவ . . . . . . . . .ந் தருளும்
மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதல்
கோச்சடைய பன்மரான உடையார் சீ வல்லப
தேவர்க்கு யாண்டு ஆறாவது. . . .
1.6. மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் (1130 – ….)
1.6.1 (09)
- ஸ்வஸ்திஸரீ
திருமகள் புணரப் பூமகள் விளங்க
விக்கிரம சயமகள் பொற்புயத் திருப்பக்
கனக மேருவிற் கயல்விளை யாட
ருநிலத் தொருதனி வெண்குடை நிழற்ற
உயரும் மணிமுடிதன் உரிமையிற் சூடி – 5
உலகுபொது நீங்க ஓருகோ லோச்சி
வஞ்சி மன்னரும் வடபுல வேந்தரும்
அஞ்சிவந் திறைஞ்சி அடிமலர் சூட
மன்னிய வீர சிம்மா சனத்து
உலகு முழுதுடை யாரொடும் வீற்றிருந் – 10
தருளிய மாமுதல் மதிக்குலம் விளக்கிய
கோமுதல் கோமாற பன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ பராக்கிரம
பாண்டிய தேவர்க்கு யாண்டு……………….
1.7. சடையவர்மன் பராந்தக பாண்டியன் (1130 – …. )
1.7.1 (10)
- ஸ்வஸ்திஸரீ
திருவளரச் செயம்வளரத் தென்னவர்தம் குலம்வளர
அருமறைநான் கலைவளர அனைத்துலகும் துயர்நீங்கத்
தென்மதுரா புரித்தோன்றித் தேவேந்தினோ டினிதிருந்த
மன்னர்பிரான் வழுதியர்கோன் வடிம்பலம்ப நின்றருளி
மாக்கடலை யெறிந்தருளி மலையத்துக் கயல்பொறித்துச் – 5
சேரலனைச் செருவில்வென்று திறைகொண்டு வாகைசூடிக்
கூபகர்கோன் மகட்கொடுப்பக் குலவிழிஞம் கைக்கொண்டு
கன்னிப்போர் செய்தருளிக் காந்தளுர்ச்சாலை கலமறுத்து
மன்னுபுகழ் மறையவர்தம் அணிஅம்பலத் தினிதிருந்து
ஆயிரத் தெண்ம ரவிரோதப் பணிப்பணியால் – 10
பறைபேர்த்துக் கல்நாட்டிப் பண்டுள்ள பேர்தவிர்த்து
அளப்பனவும் நிறுப்பனவுங் கயலெழுதி அனந்தபுரத் தெம்மாற்கு
நிலவியபொன் மணிவிளக்கு நின்றெரியப் பத்தமைத்து
ஆங்கமைத்த தாயநல்லூர் அடத்தென்னாட் டரையனென
அறிவகையால் பரிந்துரைத்துத் தென்னவர்தம் குலதெய்வம் – 15
தென்குமரிக் . . .திருநாள் விழாவதனில் தைப்பூசப் பிற்றைஞான்று
வந்திருந்தா ரெல்லார்க்கும் ஆற்றாதே தியாகமிட
அறத்தால் விளங்கிய வாய்ந்த கேள்வி புறத்தாய நாடு பூமகட் களித்து
தெலிங்கவீமன் குளங்கொண்டு தென்கலிங்கம் அடிப்படுத்துத்
திசையனைத்தும் உடனாண்ட சிரீபராந்தக தேவர்க்குயாண்டு… …
1.8. சடையவர்மன் வீரபாண்டியன் (1175 – 1180)
1.8.1 (11)
- ஸ்வஸ்திஸரீ
பூமடந்தையும் செயமடந்தையும் பொலிந்துதிருப் புயத்திருப்ப
பார்முழுதுங் குடைநிழற்றப் பராக்கிரமத்தான் முடிசூடித்
தென்மதுரா புரித்திரு விளையாட்டத் திற்கண்டு
மன்னரெல்லாம் வந்திறைஞ்ச மலைநாடு கொண்டருளி
மாபார தம்பொருது மன்னவர்க்குத் தூதுசென்று – 5
தேவாசுர மதுகைதரித்துத் தேனாரு மறையுங்கொண்டருளி
வடவரையிற் கயல்பொறித்து வானவர்கோ னாரம்பூண்டு
திடவாசகக் குறுமுனியாற் செந்தமிழ்நூல் தெரிந்தருளி
செங்கோ லெங்கும் திசையுற நடாத்தி
மன்னிய வீர சிம்மா சனத்தில் – 10
திரைலோக்கிய முழுதுடை யாளொடும்வீற் றிருந்தருளி
மாமுதன் மதிக்குலம் விளக்கிய கோமுதற்
கொற்ற வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள்
சிரீ வீரபாண்டிய தேவர்.
1.9. சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 – 1218)
1.9.1 (12)
- ஸ்வஸ்திஸரீ
பூதல வனிதை மேதக விளங்க
மந்தர மார்பினில் ந்திரை யிருப்பப்
புயவரை தழுவி வயமகள் களிப்ப
மயலறு சிறப்பின் மாமுனி தெரிந்த
யலிசை நாடகம் எழில்பெற வளர
வஞ்சினங் கூற மதக்களிறு நடாத்தி – 5
வெஞ்சின வேங்கை வில்லுடன் ஒளிப்பத்
திக்கடிப் படுத்துச் சக்கரம் செல்லப்
பௌவ மானிலம் பார்த்திபர் பொதுவறத்
தெய்வ மேருவில் சேல் விளையாட
ஒன்றுபுரி நெஞ்சத்து ருவகை பிறப்பின் – 10
முந்நூல் மார்பின் நான்மறை யாளர்
மாக விசும்பின் வானவர்க் கமைத்த
யாக வெள்வி டந்தொறும் யல
ஐம்புலங் கட்கும் அருமைசால் அறுவகைச்
செம்பொருட் சமயம் சீருடன் பரவ – 15
எழுபொழில் கவித்த முழுமதிக் கவிதைத்
திருநிலவு சொரிந்த விருநில வரைப்பின்
வெங்கலி கடிந்து செங்கோல் நடப்ப
விண்பொருஞ் சிகர மாதிர வெண்கோட்டு
எண்பெருங் களிறினும் சைமகள் ஏற – 20
ஒன்பது கண்டத்து உயர்புல வேந்தரும்
அன்புடன் வணங்கி அருந்திறை காட்டி
மணித்தட முடிமேல் அடிமலர் சூட
மணிமுடி சூடி வளங்கெழு கவரி
சேரர் செம்பியர் திரண்டரு கசைப்ப – 25
வீரசிங்காதனம் ஏறும் நாப்பண்
கடவுள் மீனன் கற்புத் திகழ
உடன்முடி சூடி உலகம் போற்றச்
செருமலி தானைப் பார்புர வேந்தர்
கடகத்தோளும் ஆகமம் பிரியா – 30
வோடரி நெடுங்கண் ஒண்தொடி மகளிர்
திலதந் தலைமேல் சேவடி வைக்கும்
உலக முழுதுடையாளொடும் வீற்றிருந்
தருளிய மாமதி மதிக்குலம் விளக்கிய
கோமுதற் கோச்சடைய பன்ம ரான – 35
திரிபுவனச் சக்கர வர்த்திகள்
ஸரீ குலசேகர தேவர்க்கு யாண்டு ரண்டாவது
நாள் முப்பததைந்தினால் . . . . .
———————————————
1.9. சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 – 1218) -2
1.9.2 (13)
- ஸ்வஸ்திஸரீ
பூதல மடந்தை புகழொடு பொலிய
வேதமும் தமிழும் மேல்மையில் விளங்கக்
கற்புடை திருமகள் பொற்புயத் திருப்பத்
திக்கிரு நான்கு சக்கர வாளமும்
சூழும் புவனமும் ஏழுங்கவிப்ப – 5
வெண் குடைநீழல் செங்கோல் நடப்ப
நாடொறும் மதியமும் ஞாயிறு வலங்கொள்
ஆடகப் பொருப்பின் அரசுமீ னிருப்ப
சுந்தர மார்பினில் ந்திரன் பூட்டிய
ஆரமும் அலங்கலும் அழகுடன் திகழ – 10
வீணையும் புலியும் வில்லுஞ் சுரம்புக
ஆனை மன்னவர் அடிமலர் சூட
மரபினில் வந்த மணிமுடி சூடி
விளங்கிய கதிரொளி வீரசிம்மா சனத்து
உலகமுழு துடையாரொடும் வீற்றிருந் தருளிய – 15
மாமுதல் மதிக்குலம் விளக்கிய
கோமுதல் கோச்சாடய பன்ம ரான . . .
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்
மாடக்குளக் கீழ் மதுரைக் கோயிலுள்ளாலை
ஸரீவல்லவன் பீடத்துப் பள்ளிப் பீடம் – 20
முனைய தரையனில் எழுந்தருளி யிருந்து
யாண்டு ஒன்பதாவது நாள் நாற்பத்து நாலினால். . .
—————————————————————————————————————————-
1.9 சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 – 1218) – 3
1.9.3 (14)
- ஸ்வஸ்திஸரீ
பூவின் கிழத்தி மேவிவீற் றிருப்ப
மேதினி மாது நீதியிற் புணர
வயப்போர் மடந்தை சயப்புயத் திருப்ப
மாக்கலை மடந்தை வாக்கினில் விளங்கத்
திசையிரு நான்கும் சையிலா வெறிப்ப – 5
மறைநெறி வளர மனுநெறி திகழ
அறநெறிச் சமயங்கள் ஆறும் தழைப்பக்
கானில் வேங்கை வில்லுடன் தொடர்ந்துற
மீனம் கனகாசலத்து வீற் றிருப்ப
எண்கிரி சூழ்ந்த எழுகடல் எழுபொழில் – 10
வெண்குடை நிழற்ற செங்கோல் நடப்பக்
கொடுங்கலி நடுங்கி நெடும்பிலத் தொளிப்ப
வில்லவர் செம்பியர் விராடர் மராடர்
பல்லவர் திறையுடன் முறைமுறை பணிய
ருநேமி யளவும் ஒருநேமியோங்க – 15
ன்னமுதாகிய யலிசை நாடகம்
மன்னி வளர மணிமுடி சூடி
விளங்கு கதிரொளி வீரசிம்மா சனத்து
கற்பகநிழற்கிழ் கலைவல்லோர் புகழ்
மன்னவர் தேவியர் வணங்கி நின்றேத்தும் – 20
அன்ன மென்னடை அவனி முழுதுடை
யாளொடும் வீற்றிருந் தருளிய
மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதல்
கோச்சாடய பன்மரான திரிபுனச்
சக்கரவர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்க்கு – 25
யாண்டு பதின்முன்றாவதின் எதிராமாண்டு . .
1.10. மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1215 – 1239)
1.10.1 (15)
- ஸ்வஸ்திஸரீ
பூமலர்த் திருவும் பொருசய மடந்தையும்
தாமரைக் குவிமுலை சேர்ப்புயத் திருப்ப
வேத நாவின் வெள்ளிதழ்த் தாமரைக்
காதல் மாது கவின்பெறத் திளைப்ப
வெண்டிரை யுடுத்த மண்டிணி கிடக்கை – 5
ருநில மடந்தை உரிமையிற் களிப்பச்
சமயமும் நீதியும் தருமமும் தழைப்ப
மையவர் விழாக்கொடி டந்தொறு மெடுப்பக்
கருங்கலி கனல்கெடக் கடவுள் வேதியர்
அருந்தொழில் வேள்விச் செங்கனல் வளர்ப்பச் – 10
சுருதியும் தமிழும் சொல்வளங் குலவப்
பொருதிற லாழி பூதலஞ் சூழ்வர
ஒருகை ருசெவி மும்மத நாற்கோட்டு
அயிரா வதமுதற் செயிர்தீர் கொற்றத்து
எண்டிசை யானை எருத்த மேறிக் – 15
கண்டநாடு எமதெனக் கயல்களி கூர
கோசலந் துளுவந் குதிரங் குச்சரம்
போசல மகதம் பொப்பளம் புண்டரம்
கலிங்கம் ஈழங் கடாரங் கவுடம்
தெலிங்கஞ் சோனகஞ் சீனக முதலா – 20
விதிமுறை திகழ வெவ்வேறு வகுத்த
முதுநிலக் கிழமையின் முடிபுனை வேந்தர்க்
கொருதனி நாயகன் என்றுல கேத்தத்
திருமுடி சூடிச் செங்கோ லோச்சிக்
கொற்றத் தாளக் குளிர்வெண் குடைநிழல் – 25
கற்றைக் கவரி காவலர் வீச
மிடைகதிர் நவமணி வீரசிங்கா தனத்து
உடன்முடி சூடி யுயர்குலத் திருவெனப்
பங்கய மலர்க்கரங் குவித்துப்பார்த் திபர்வர
மங்கையர் திரண்டு வணங்கும் சென்னியிற் – 30
சுடரொளி மவுலிச் சுடர்மணி மேலிடச்< dd>சிவந்த ணைமலர்ச் சீறடி மதுகரம்
கமலமென் றணுகும் உலகு முழுதுடை
யாளொடு வீற்றிருந் தருளிய
மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதற் – 35
கோமாற வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீசுந்தர
பாண்டிய தேவர்க்கு யாண்டு பதினைந்தாவது நாள்
நூற்று எழுபத்தாறினால்.
—————————————————————————————————————————–
1.10. மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1215 – 1239) – 2
1.10.2 (16)
- ஸ்வஸ்திஸரீ
பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப
நாமருவிய கலைமடந்தையும் செயமடந்தையும் நலம்சிறப்ப
கோளார்ந்த சினப்புலியும் கொடுஞ்சிலையும் குலைந்தொளிப்ப
வாளார்ந்த பொற்கிரிமேல் வரிக்கயல்கள் விளையாட
ருங்கடல் வலயத் தினிதறம் பெருகக் – 5
கருங்கலி கடிந்து செங்கோல் நடப்ப
ஒருகுடை நீழல் ருநிலங் குளிர
மூவகைத் தமிழு முறைமையின் விளங்க
நால்வகை வேதமும் நவின்றுடன் வளர
ஐவகை வேள்வியும் செய்வினை யற்ற – 10
அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ
எழுவகைப் பாடலும் யலுடன் பரவ
எண்டிசை யளவும் சக்கரம் செல்லக்
கொங்கணர் கலிங்கர் கோசலர் மாளுவர்
சிங்களர் தெலிங்கர் சீனர் குச்சரர் – 15
வில்லவர் மாகதர் விக்கலர் செம்பியர்
பல்லவர் முதலிய பார்த்திவ ரெல்லாம்
உறைவிட மருளென ஒருவர்முன் னொருவர்
முறைமுறை கடவதம் திறைகொணர்ந் திறைஞ்ச
லங்கொளி மணிமுடி ந்திரன் பூட்டிய – 20
பொலங்கதிர் ஆரம் மார்பினிற் பொலியப்
பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த
மனுநெறி தழைப்ப மணிமுடி சூடிப்
பொன்னிசூழ் நாட்டிற் புலியாணைபோ யகலக்
கன்னிசூழ் நாட்டுக் கயலாணைகை வளர – 25
வெஞ்சின வுளியும் வேழமும் பரப்பித்
தஞ்சையு முறந்தையும் செந்தழல் கொளுத்திக்
காவியும் நீலமும் நின்றுகவின் நிழற்ற
வாவியும் ஆறு மணிநீர்நலன் அழித்துக்
கூடமா மதிலுங் கோபுரமா டரங்கும் – 30
மாடமா ளிகையும் மண்டபம்பல விடித்துத்
தொழுதுவந் தடையார் நிருபர்தந் தோகையர்
அழுத கண்ணீர் ஆறு பரப்பி
கழுதைகொண் டுழுது கவடிச்செம் பியனைச்
சினமிரியப் பொருது சுரம்புக வோட்டியும் – 35
பொன்முடி பறித்துப் பாணனுக்குக் கொடுத்துப்
பாடருஞ் சிறப்பிற் பருதிவான் தோயும்
ஆடகப் புரிசை ஆயிரத் தளியிற்
சேரர் வளவன் அபி ஷேகமண் டபத்து
வீராபி ஷேகம் செய்துபுகழ் விரித்து – 40
பரராசர் நாமந் தலைவிடுத் துமிழுந்
தறுகண் மதசர யானைமேல் கொண்டு
நீராழி வையம் முழுதும்பொது வழித்த
கூராழியுஞ் செய்ய தோளுமெய் கொண்டுபோய்
அடையப் படாத வருமறைதேரந் தணர்வாழ் – 45
தெய்வப் புலியூர் திருவெல்லை யிற்புக்குப்
பொன்னம்ப லம்பொலிய ஆடுவார் பூவையுடன்
மன்னுந் திருமேனி கண்டுமனங் களித்துக்
கோலமலர் மேலயனுங் குளிர்துழாய் மாலும்
அறியா மலர்ச்சே வடிவணங்கி வாங்கு – 50
மேற்சிறை யன்னம் துயிலொழிய வண்டெழும்
பூங்கமல வாவிசூழ் பொன்னமரா பதியில்
ஒத்துலகந் தாங்கும் உயர்மா மேருவைக்
கொணர்ந்துவைத் தனையசோதி மணிமண்ட பத்திருந்து
சோலைமலி பழனச் சோணாடு தான்ழந்து – 55
மாலை முடியுந் தரவருக வென்றழைப்ப
வான்நிலை குலைய வல்லாநிலத்து எல்லை
தான்கடந்து சக்கர வாளகிரிக் கப்புறத்துப்
போன வளவன் உரிமையோடும் புகுந்து
பெற்ற புதல்வனைநின் பேரென்று முன்காட்டி – 60
வெற்றி அடியிணைக்கீழ் வீழ்ந்து தொழுது ரப்பத்
தானோடி முன்னிழந்த தன்மையெல்லாம் கையகலத்
தானே தகம்பண்ணி தண்டார் முடியுடனே
விட்ட அகலிடந்தன் மார்வேளைக் குத்திரிய
ட்ட படிக்கென்றும் துபிடிபா டாகவென – 65
பொங்குதிரை ஞாலத்துப் பூபாலர் தொழவிளங்கும்
செங்கயல் கொண்டு ஊன்றுந் திருமுகமும்
பண்டிழந்த சோழ பதியெனும் நாமமும்
தொல்நகரும் மீள வழங்கி விடைகொடுத்து
விட்டருளி ஒருக்கடற் பாரில் வேந்தர்களைக் – 70
குற்றங்கள் தீர்க்குங் கடவுளிவன் என்றெண்ணித்
தளையுற் றடையாதார் தண்ட லிடையிற்
கிளையுற் றெனமுழுதுங் கேட்டருள நன்றேத்தி
வணங்கும் வடகோங்க னைச்சிறையு மீட்டு
களங்கோ ளருநீ ருந்தேரன் மாலை – 75
கழித்தெல் வழங்கி யருளியபின் னொருநாள்
மற்றார முழங்கு முரசக் கடற்றானை
முன்புகுந்து தென்கொங்கர் வந்திட்ட தெண்டனுக்கு
மின்பொங்கச் சாத்தியஆ பரணந்தக்க தெனவழங்கி
ஆறாத பெருநண்பி னவன்சிறையு மீட்டித் – 80
திருமால்ரு மருங்கும்சந்திர சூரியர்சே விக்கச்செங்கண்
கருமால் களிக்கிற்றில் வருமுக்கட் கடவுளென
மாட மதுரையிற் தான்போந்து புவனியிலே
கூட்டுக் கொங்கரையுங் கும்பீடு கொண்டவர்க்குத்
தொல்லைப் புவிக்கு மிணங்காமல் தாஞ்சொன்ன – 85
எல்லைக்குள் நிற்ப சைந்திட்டு ஏற்(ப)க்கொண்டு
வ்வாறு செய்யா தொழியில்ய மனுக்குவெவ்
வேல்விருந் தாக்குதும் உம்மையென விட்டருளி
முன்னம் நமக்கு முடிவழங்கு சேவடிக்கீழ்
ன்னம் வழிபடுவோ மென்னாது பின்னொருநாள் – 90
காலனது புனநா டெனுங்களியா லெதிர்செல்லா
திறைமறுத்த சென்னிவிடு தூசியும் பேரணியும்
ஒக்கச் சுருண்டொதுங்கி வாசியும் வாரணமும்
தெருமடற் கருவக் காலனும் வெட்டுண்ணக்
கண்ணி ரண்டு மயங்கக் கைக்கொண்டு – 95
வேலா வலையத்து வீழ்ந்தவன் போய் மெய்நடுங்க
அம்பருந்து மார்த்த கடல்மண்ட லீகருடல்
வெம்பருந் துண்ண அக்களத்தில் ஆனையின்
வெண்மருப்புங் கையுங் குறைத்தெங்கன் மீனவற்கும்
பால்குடமா மென்றுதான் வீரர்கோன் மாமுகடு – 100
தடவி மழைமடுக்கும் காகநெடும் பந்தற்கே
அவற்றது ஆடலும் கூகையின் பாடலுங்
கண்டும் கேட்டுங் களித்தஉடல் கருங்கூந்தல்
வெள்ளெயி றில்செவ் வாய்பெரிய சூலக்க
வல்லி பலிகொள்கஎன வாழ்த்தி வென்று – 105
பகையின் மிகையொழிய வேந்தலறக் கொன்று
சினந்தணியாக் கொற்றவ நெடுவாள் உயற்கு
செங்குருதி நிறத்தொளி செய்து தெகுபுலத்து
வெண்கவடி வித்த வீர முழுதெடுத்துப்
பாடும் பரணிதனைப் பார்வேந்தர் கேட்பிக்க – 110
ஆடுந் திருமஞ் சனநீர்கள் மண்குளிர
ஆங்கவந் திணைகட்டணத்துக் கற்பு தனக்கரணாய்ஓங்குரி மைக்குழாம் ஓருகை திசைகொண்டு
மூரி மணிப்பட்டங் கட்டி முடிசூட்டி
மார்பில் அணைத்துவளவ னவன்முதல் தேவியென்று – 115
பேர்பெற்ற வஞ்சி முதலாய பெய்வளையார்
பொங்கு புனற்கும்சப முதலாய்போ லவர்புகழ
மங்கலங்கள் எட்டும் மணிகதவத்தேந்தி
கொடிகொண்ட நெற்றி நிறைந்தக்கோ புரஞ்சூழ
முடிகொண்டசோழபுர மண்டபத்துப் புகுத – 120
திசைதொறும் சொம்பொற் செயத்தம்பம் நாட்டி
வாகைக் கதிர்வேல் வடவேந்தர் தம்பாதம்
மேகத் தழையணிய வீரக் கழலணிந்து
விளங்கிய மணியணி வீரசிம் மாசனத்து
விளங்கெழு கவரி யிருமருங்கசைப்பக் 125
கடலென்ன முழங்கும் களிநல் யானை
வடபுல வேந்தர்தம் மணிப்புயம் பிரியா
லங்கிழை அரிவையர் தொழுதுநின் றேத்தும்
உலக முழுதுடை யாளொடும் வீற்றிருந்து
அருளிய ஸரீகோ மாறபன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீசோணாடு – 130
கொண்டுமுடிகொண்டசோழபரத்து வீராபிக்ஷேகம்
பண்ணி அருளிய
ஸரீசுந்தர பாண்டியதேவர்கு யாண்டு – 20 வது
நாள் 37 னால் . . . .
1.11. சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1252 – 1271)
1.11.1 (17)
- ஸ்வஸ்திஸரீ
பூமலர்வளர் திகழ்திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப
நாமலர்வளர் கலைவஞ்சி நலமிகுமா மனத்துறையச்
சிமையவரைத் திறன்மடந்தை திருத்தோளின் மிசைவாழ
மையவர் கோன்அன்றிட்ட எழிலாரம் கழுத்திலங்கப்
பகிரதிபோற் துய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந்தோட்டத் – 5
திகிரிவரைக் கப்புறத்துஞ் செழுந்திகிரி சென்றுலவத்
தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார்நிழற்ற
வெங்கோபக் கலிகடிந்து செங்கோலெண்டிசைநடப்பச்
செம்முரசின் முகில்முழங்கச் சிலையகன்று விசும்படையத்
திறற்புலிபோய் வனமடையக் . . . . . – 10
கயலிரண்டும் நெடுஞ்சிகர கனவரையின் விளையாட
ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத்
தருமறையோர் ஐவேள்வி யாறங்கமுடன்சிறப்ப
அருந்தமிழும் ஆரியமு அறுசமயத் தறநெறியும்
திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்கக் – 15
குச்சரரும் ஆரியரும் கோசலரும் கொங்கணரும்
வச்சிரரும் காசியரும் மாகதரும் . . .
அருமணரும் சோனகரும் அவந்தியரு முதலாய
ருநிலமா முடிவேந்தர் றைஞ்சிநின்று திறைகாட்ட
வடிநெடுவாளும் வயப்பெரும்புரவியும் – 20
தொடிநெடுந் தோளுமே துணையெனச் சென்று
சேரனும் தானையும் செருக்களத் தொழிய
வாரசும் புலரா மலைநாடு நூறப்
பருதிமாமரபிற் பொருதிறல் மிக்க
சென்னியைத் திறைகொண்டு திண்தோள்வலியிற் – 25
பொன்னி நாட்டு போசலத்தரைசர்களைப்
புரிசையிலடைத்துப் பொங்குவீரப் புரவியும்
செருவிற லாண்மைச் சிங்கணன் முதலாய
தண்டத் தலைவரும் தானையும் அழிபடத்
துண்டித்தளவில் சோரி வெங்கலுழிப் – 30
பெரும்பிணக் குன்றம் ருங்களனிறைத்துப்
பருந்தும் காகமும் பாறும் தசையும்
அருந்தி மகிழ்தாங்கு அமர்கள மெடுப்பச்
செம்பொற் குவையும் திகழ்கதிர் மணியும்
மடந்தையர் ஆரமார்பும் உடன் கவர்ந்தருளி – 35
முதுகிடு போசலன் தன்னொடு முனையும்
அதுதவ றென்றவன் தன்னை வெற்பேற்றி
நட்பது போலுட் பகையாய் நின்ற
சேமனைக்கொன்றுசினந்தணிந்தருளி
நண்ணுதல் பிறரால் எண்ணுதற்கரிய – 40
கண்ணனூர்க்கொப்பத்தைக் கைக்கொண்டருளி
பொன்னிசூழ் செல்வப் புதுப்புனல் நாட்டைக்
கன்னி நாடென காத்தருள் செய்யப்
பெருவரை யரணிற்பின்னருகாக்கிய
கருநா டரசனைக் களிறுதிரை கொண்டு – 45
துலங்கொளி மணியும் சூழிவேழமும்
லங்கை காவலனைக் றைகொண்டருளி
வருதிறை மறுத்து அங்கவனைப்பிடித்துக்
கருருமுகில் நிகளங் காலினிற் கோத்து
வேந்தர்கண் டறியா விறற்றிண் புரிசைச் – 50
சேந்தமங்கலசெழும்பதிமுற்றிப்
பல்லவன் நடுங்கப் பலபோ ராடி
நெல்விளை நாடும் நெடும்பெரும் பொன்னும்
பரும யானையு பரியு முதலிய
அரசுரிமைக் கைக்கொண்டு அரசவற்களித்துத் – 55
தில்லையம்பலத்துத் திருநடம்பயிலுந்
தொல்லை றைவர் துணைகழல் வணங்கிக்
குளிர்பொழில் புடைசூழ் கோழி மானகர்
அளிசெறி வேம்பின் அணிமலர் கலந்த
தொங்கல் வாகைத் தொடைகள் சூட்டித் – 60
திங்ளுயர் மரபு திகழவந் திருந்த
தன்னசை யால்நன் னிலைவிசை யம்பின்
எண்ணெண் கலைதேர் இன்மொழிப் பாவலர்
மண்ணின்மே லூழி வாழ்கென வாழத்தக்
கண்டவர் மனமும் கண்ணும் களிப்ப – 65
வெண்டிரை மகர வேலையி னெடுவரை
ஆயிரம் பணைப்பணத் தனந்தன் மீமிசைப்
பாயல் கொள்ளும் பரம யோகத்து
ஒருபெருங் கடவளும் வந்தினி துறையும்
ருபெருங் காவிரி யிடைநிலத் திலங்கு – 70
திருவரங் கம்பெருஞ் செல்வம் சிறப்பப்
பன்முறை யணிதுலா பார மேறிப்
பொன்மாலை யன்ன பொலிந்து தோன்றவும்
பொன்வேய்ந் தருளிய செம்பொற் கோயிலுள்
வளந்திகழ் மாஅல் உதய வெற்பெனத் – 75
திருவளர் குலமணிச் சிங்கா சனமிசை
மரகத மலையென மகிழ்தினி தேறித்
தினகரோ தயமெனச் செழுங்கதிர் சொரியும்
கனக மாமுடி கவின்பெறச் சூடிப்
பாராள் வேந்தர் உரிமை அரிவையர் – 80
ருமறுங்கு நின்று விரிபெருங் கவரியின்
மந்த வாடையும் மலயத் தென்றலும்
அந்தளிர்க் கரங்கொண்ட சைய வீச
ஒருபொழு தும்விடாது உடனிருந்து மகிழும்
திருமகளெனத் திருத்தோள் மேவி – 85
யொத்தமுடி சூடி யுயர் பேராணை
திக்கெட்டும் நடப்பச் செழுந்தவஞ் செய்த
இவன்போ லுலகிலே வீரன் பலத்திற
மதிமுகத் தவனி மாமகளிலகு
கோடிக் காதல் முகிழ்த்துநின் றேத்தும் – 90
உலகமுழுதுடை யாளொடும் வீற்றிருந்தருளிய
சிரீகோச் சடைய வன்மரான
திரிபுவன சக்கர வர்த்திகள்சிரீ சுந்தர பாண்டிய
தேவர்க்கு யாண்டு ஏழாவது கன்னி ஞாயிற்று
அபர பட்சத்துத் திரியோதசியும் ஞாயிற்றுக் கிழமையும் – 95
பெற்றஅத்தத்துநாள் .
1.12. சடையவர்மன் வீரபாண்டியன் (1253 – 1268)
1.12.1 (18)
- ஸ்வஸ்திஸரீ
திருமகள் வளர்முலை திருமார்பு தளைபடப்
பொருமகள் வளர்முலை புயம்புணர்ந்து களிப்ப
வன்மொழி நாமிசைச் சொன்மகள் ருப்பத்
திசைகள் எட்டினும் சைமகள் வளர
ருமூன்று சமயமும் ஒருமூன்று தமிழும் – 5
வேதம் நான்கும் நீதியில் விளங்க
கங்கங் கவுடம் கடாரம் காசிபம்
கொங்கங் குதிரம் கோசலம் மாளுவம்
அருமனம் சோனகம் சீனம் வந்தி
திருநடம் ஈழம் கலிங்கம் தெலிங்கம் – 10
பெபனந் தண்டகம் பண்டர முதலிய
எப்புவி வேந்தரும் கல்மண்டலீகரும்
மும்முரைசு முழங்கும் செம்மணி மாளிகை
கோயில் கொற்ற வாயில் புகுந்து
காலம் பார்த்து கழலிணை பணிந்து – 15
நல்ல வேழமும் நிதியமும் காட்டிப்
பூவிரி சோலை காவிரி களத்துச்
சோழன் பொருத வேழப் போரில்
மதப்பிற் றாறாக் கதக்களி யானை
துளைக்கைச் சொம்பொற் றொடிக்கையிற் பிடித்து – 20
வளைத்துமேல் கொண்டு வாகைச் சூடி
தலைப்பே ராண்மை தனித்தனி யெடுத்து
கலைத்தவி ரரசர் கவின்பெறத் துதிப்பத்
தெற்ற மன்னர் திதாத்தி யாமல்
ஒற்றை யாழி யுலகு வலமா – 2
ஏனை மன்னவர் தற்கோ டிறைந்து
மீனவர் கோடித் தெருவில் என்க
வடுவரைக் கொடுங்கோல் வழங்கா வண்ணம்
நடுவுநிலை செங்கோல் நாடொறும் நடப்ப
எத்திசை மன்னரும் ருங்கலி கடிந்து – 30
முத்த வெண்குடை முழுநிலவு சொரிய
ஒருமொழி தரிப்பப் புவி முழு தாண்ட
மதமார்பு விளங்க மணிமுடி சூடி
உரைகெழு….பல அரைசியல் வழக்கம்
நெறிப்பட நாட்டுங் குறிப்பி னூரட்டு – 35
சைந்திருப் பாதஞ்செ..திருந்த மந்திரி சரணமை
திகழ்ந்தினிது நோக்கி முரண்மிகு சிறப்பில்
ஈழ மன்னர் லகுவரி லொருவனை
வீழப் பொருது விண்மிசை யேற்றி
உரிமைச் சுற்றமும் உய்குலம் புக்குத் – 40
தருமை யானையும் பலப்பைப் புரவியும்
கண்மணித்தேரும் சீன வடமரும்
நாகத் தோடும் நவமணிக் குவையும்
ஆடகத் திரியும் அரியா சனமும்
முடியும் கடகமும் முழுமணி யாரமும் – 45
கொடியுங் குடையுங் குளிர் வெண் கவரியும்
முரசுஞ் சங்கமும் தனமும் முதலிய
அரைசுகெழு தாய மடைய வாரி
காணா மன்னவர் கண்டுகண் டேங்க
கோணா மலையினும் திரிகூட கிரியினும் – 50
உருகெழ கொடிமிசை ருகயல் எழுதி
ஏனை வேந்தனை ஆனைதிறை கொண்டுபண்
டேவல் செய்யா திகல்செய் திருந்த
சாவன் மைந்தன் நலமிகந் திறைஞ்ச
வீரக் கழலை விரலரைச் சூட்டித் – 55
திருக்கோ லம்அலை வாய்ப்படன் கழித்து
வழங்கி யருளி முழங்கு களிறேறி
பார்முழு தறிய ஓர் ஊர்வலஞ் செய்வித்து dd>தந்தை மரபு என நினைப்பிட்டு
அரைசிட மகிழ்ந்து ஆனூர் புரிச்சு – 60
விரையச் செல்கென விடைகொடுத் தருளி
யாக மடந்தை அன்புடன் சாத்தி
வாகை சூட மதுமணங் கமழ
வசந்தவெண் கவரியின் வாடலுந் தென்றலும்
வேந்தர் வீச வீரசிங்கா தனத்துக் – 65
கபகந் தழுவிய காமர் உள்ளதள்
பொற்றொடி புணர்ந்து மலர்ந்த மலர்க்கெழும்
பாபுரைச் சிற்றடி உலகமுடையாரொடும்
விற்றிருந் தருளிய ஸ்வஸ்திஸரீ கோச்சடைய பன்மரான
திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீ வீரபாண்டிய தேவர்க்கு – 70
யாண்டு 11ஆவது நாளள் 173 னால் . . .
————————————————————————————————————————————
1.12. சடையவர்மன் வீரபாண்டியன் (1253 – 1268) – 2
1.12.2 (19)
- ஸ்வஸ்திஸரீ
கொங்குஈழம் கொண்டு கொடுவடுகு கோடழித்து
கங்கை ருகரையும் காவிரியும் கைக்கொண்டு
வல்லானைவென்று தில்லைமா நகரில் வீற்றிருந்து
வீராபி ஷேகமம் விசயாபி ஷேகமும்
பண்ணியருளிய கோச்சடைய வன்மரான திரிபுவனச் – 5
சக்கரவர்த்திகள் சிரீவீரபாண்டிய தேவர்க்கு யாண்டு
16வது சிம்ம ஞாயிற்று பூர்வபட்சத்து வியாழக்
கிழமையும் தசமியும் பெற்ற மூலத்து நாள் . .
1.13 மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268 – 1285)
1.13.1 (20)
- ஸ்வஸ்திஸரீ
தேர்போ லல்குல் திருமகள் புணரவும்
கார்சேர் கூந்தல் கலைமகள் கலப்பவும்
பார்மகள் மனத்துப் பாங்குட னிருப்பவும்
செங்கோல் நடப்பவும் வெண்குடை நிழற்றவும்
கருங்கலி முருங்கவும் பெரும்புகழ் விளங்கவும் – 5
கானிலை செம்பியன் கடும்புலி யாளவும்
மீனம் பொன்வரை மேருவில் ஓங்கவும்
முத்தமிழும் மனுநூலும் நால்மறை முழுவதும்
எத்தவச் சமயமும் னிதுடன் விளங்கவும்
சிங்களம் கலிங்கம் தெலிங்கம் சேதிபம் – 10
கொங்கணம் குதிரம் கோசலம் குச்சரம்
முறைமயின் ஆளும் முதுநில வேந்தர்
திறைமுறை காட்டிச் சேவடி வணங்க
மன்னர் மாதர் பொன்னணி கவற்ற
ருபுடை மருங்கும் ஒருபடி யிரட்டப் – 15
பழுதறு சிறப்பிற் செழுவைக் காவலன்
வீரசிங் காதனத்து ஓராங் கிருந்தே
ஆரும் வேம்பும் அணியிதழ் புடையாத்
தாரும் சூழ்ந்த தடமணி மகுடம்
பன்னூ றூழி தொன்னிலம் புரந்து – 20
மாழ்கெனக் குட்டம் மகிழ்ந்துடன் சூடி
அலைமக ள் முதலாம் அரிவையர் பரவ
உலக மழுதுடையாளொடும் வீற்றிருந்
தருளின கோமாற வன்ம ரான
திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீகுலசேகர . – 25
தேவர்க்கு யாண்டு பத்தாவது . . .
1.14. மாற வர்மன் விக்கிரம பாண்டியன் (1283 – 1296)
1.14.1 (21)
- ஸ்வஸ்திஸரீ
திருமகள் செயமகள் திருப்புயத் திருப்ப
பொருகடல் ஆடை நிலமகள் புணர
கடவுள் மேருவில் கயல் விளையாட
வடபுல மன்னவர் வந்தடி பணிய
நேமி வரைசூழ் நெடுநில முழுவதும் – 5
தரும வெண்குடை நிழலில் தழைப்ப
செங்கோல் நடப்பக் கருங்கலி துறந்து
வேத விதியில் நீதி நிலவ
சேரனும் வளவனும் திறைகொணர்ந் திறைஞ்ச
வீரமும் புகழும் மிகநனி விளங்க – 10
நதிபெருஞ் சடைமுடி நாதன் சூடிய
மதிக்குலம் திகழ மணிமுடி சூடி
விளங்கிய மணியணி வீர சிங்காசனத்து< dd>வீற்றிருந்தருளிய ஸரீகோமாற பன்மரான
திரிபுவன சக்கர வர்த்திகள் ஸரீ விக்கிரம பாண்டிய – 15
தேவர்க் கியாண்டு ஏழாவதின் எதிர் நாலாமாண்டு . .
1.15. சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1296 – 1310)
1.15.1 (22)
- ஸ்வஸ்திஸரீ
புயல்வாய்த்து சமஸ்த சாகர பரமண்டலத்து
க்ஷமைவினொடும் கருணையெய்தி சமயத்தன்மை
னிது நடாத்தி நிகழா நின்ற சாரிகைக்
கோட்டையில் விக்கிரம பாண்டியன் மடிகையில்
நான்குதிசைப் பதிணென் விஷயத்தோம் சுத்தவல்லி – 5
வளநாட்டுத் தனியூர் ராசாதி ராசச்
சதுர்வேதி மங்கலத் துடையார்
சயங்கொண்ட சோழீஸ்வரமுடையார் திருமுன்
விக்கிர பாண்டியன் திருமண்ட பத்து
நிறைவற நிறைந்து குறைவறக்கூடி – 10
ஸரீகோச்சடைய பன்மரான
திரிபுவன சக்கர வர்த்திகள் ஸரீசுந்தர பாண்டிய
தேவர்க்கு யாண்டு பன்னிரண்டாவது கன்னி ஞாயிற்றுப்
பூர்வ பட்சத்துத் திரியோதசியும் வெள்ளிக்கிழமையும்
பெற்ற சோதிநாள் . . .
1.16. அரிகேசரி பராக்கிரம பாண்டியன் (1422 – 1463)
1.16.1 (23)
- சுபமஸ்து
பூமிசை வனிதை மார்பினிற் பொலிய
நாமிசை கலைமகள் நலனுற விளங்கப்
புயவரை மீது சயமகள் புணரக்
கயலிணை யுலகின் கண்ணென திகழச்
சந்திர குலத்து வந்தவ தரித்து – 5
முந்தையோர் தவத்து முளையென வளர்ந்து
தென்கலை வடகலை தௌிவுறத் தெரிந்து
மன்பதை புரக்க மணிமுடி புனைந்து
சங்கர சரண பங்கயஞ் சூடிச்
செங்கோ லோச்சி வெண்குடை நிழற்றி – 10
வான வாரியும் மன்னருள் வாரியும்
தான வாரியும் தப்பாது அளித்து
மறக்களை பறித்துநல் அறப்பயிர் விளைத்து
சிங்கையில் அனுரையில் ராசையிற் செண்பையில்
விந்தையி லறந்தையில் முதலையில் வீரையில் – 15
வைப்பாற் றெல்லையில் மன்னரை வென்கண்டு
எப்பாற் றிசையும் சைவிளக் கேற்றிப்
பதிணெண் பாடை பார்த்திவ ரனைவரும்
திறையும் சின்னமும் முறைமுறை கொணர்ந்து
குறைபல ரந்து குறைகழல் றைஞ்ச – 20
அவரவர் வேண்டியது அவரவர்க் கருளி
அந்தணர் அனேகர் செந்தழல் ஓம்ப
விந்தைமுத லகரம் ஐந்திடத்து யற்றிச்
சிவநெறியோங்க சிவார்ச்சனை புரிந்து
மருதூ ரவர்க்கு மண்டப மமைத்து – 25
முன்னொரு தூறு முங்கில்புக் கிருந்த
சிற்பரர் தம்மைத் திருவத்த சாமத்துப்
பொற்கலத் தமுது பொலிவித் தருளிச்
சண்பக வனத்துச் சங்கரர் தமக்கு
மண்டபம் அமைத்து மணிமுடி சூட்டி – 30
விழாவணி நடாத்தி விரைப்புன லாடல்
வழாவகை நடாத்தநின் மன்னருள் அதனால்
வற்றா வருவியும் வற்றி வற்கடம்
உற்றவிக் காலத்து உறுபுனல் நல்கென
வேண்டிய பொழுதே வேறிடத் தின்றிச் – 35
சேண்டகு புனலிற் செழும்புன லாட்டி
மின்கால் வேணி விசுவ நாதர்க்குத்
தென்கா சிப்பெருங் கோயில் செய்து
நல்லா கமவழி நைமித் திகமுடன்
எல்லாப் பூசையும் எக்கோ யிலினும் – 40
பொருள் முதலனைத்தும் புரையற நடாத்தித்
திருமலி செம்பொன் சிங்கா சனமிசை
உலக முழுது முடையா ளுடனே
லகு கருணை யிரண்டுரு வென்ன
அம்மையும் அப்பனு மாயனைத் துயிர்க்கும் – 45
ம்மைப் பயனும் மறுமைக் குறுதியும்
மேம்பட நல்கி விற்றிருந் தருளிய
ஸரீஅரிகேசரி பராக்கிரம
பாண்டிய தேவர்க்கு யாண்டு ருபத்தெட்டாவதின்
எதிராவது . . நாள்