அருள்மிகு ராமநாத சுவாமி

வரலாற்று சிறப்பு மிக்க இத்திருத்தலம்  பனிரெண்டாம் நூற்றாண்டு   வரை ஒரு துறவியின்  பராமரிப்பில் இருந்து வந்ததாகவும் ,அதன் பின் கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டில்   இலங்கை

அரசர் பராக்கிராமபாகு என்பவர் இத்திருகோயில் மூலஸ்தானத்தை ( கர்ப்பக்கிரகம்   ) கட்டியும் , பதினைந்தாம் நூற்றாண்டில்  ராமநாதபுரம் அரசர் உடையான் சேதுபதி மற்றும் நாகூரை சேர்ந்த வைசியர் ஒரு

வரும் மேற்கு கோபுரத்தையும் , மதில்  சுவர்களையும் கட்டினார்கள் .


இதனை தொடர்ந்து மதுரையை சேர்ந்த செல்வந்தர்  ஒருவர் அம்பாள் கோயில் பிரகாரம் மற்றும் திருப்பணிகளையும் செய்துள்ளார் . பதினாறாம்  நூற்றாண்டில்   மன்னனாக இருந்த சின்ன உடையான் சேதுபதி கட்டத் தேவர் நந்தி மண்டபத்தையும் மற்றும் சில திருப்பணிகளையும் செய்து உள்ளனர் . சிறப்பு மிக்க இத்திருகோயிலில் விற்றிருக்கும்  நந்தியின் நீளம்  22 அடி அகலம் 12  அடி உயரம்  17 அடியாகும்  . பின்னர் சேதுபதி மன்னர்கள் , நாட்டுகோட்டை நகரத்தார்களாலும் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து இல்லாத காலத்தில் இவ்வாலயம் அமைக்க அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி நம் முன்னோர்களின் பக்தி நெறியின் வர்ச்சியையே    எடுத்துக்காட்டுகிறது   . இத் திருக்கோயிலில் 17 ம்  நூற்றாண்டில் தளவாய் சேதுபதி அவர்களால் கிழக்குப் பகுதியில் இராஜ கோபுரத்தின் ஒரு பகுதி கட்டப்பட்டது அதனைத்   தொடந்து 1897 ,1904 ஆண்டுகளுக்கு இடையே  நாட்டுக்கோட்டை  நகரத்தார் குடும்பத்தாரைச்     சேர்ந்த  தேவகோட்டை ஜமீன்தார்  ஏஎல்.ஏ .ஆர்  குடும்பத்தினரால்  ஒன்பது நிலைகளுடைய ,126 உயரமுள்ள கிழக்கு கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது .

This entry was posted in சேதுபதிகள் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *