புதுகை கல்வெட்டுகளில் இவைகளும் அடக்கம்

 

கல்வெட்டு என்:10:1

இடம்:புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்னம் குடைவரை கோவில்

காலம்: இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி(1136)

 

செய்தி:இராஜ இராஜன் கலிங்கு செய்வித்தை இரும்பாழியை சேர்ந்த மறவன் அனபாய நாடாழ்வானுக்கு தென்கவி நாட்டார் நெல் கொடுத்தமை

 

ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 3ராவது ஜெயசிங்க குல காள வளநாடாய் தென்கவி நாட்டுக்கு இசைந்த நாட்டோம் இராஜ இராஜன் கலிங்கு செய்வித்த இரும்பாழி மறவன் அரசன் தேவனான அனபாய நாடாழ்வானுக்கு இருப்பாக மாத்தல்.

கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை  கண்டுபிடிப்பு –தினத்தந்தி செய்தி

ஜூன்-29

 

பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர்  தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்

 

அப்போது அய்யனார் சிலையடியில்

 

“இச் சிலை கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்”

 

என பொறிக்கப்பட்டிருந்தது சோழர் கால கலைவடிவில் இது 900 ஆண்டு பழைமையான ஒன்றாக

 

கருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

 

 

 

நன்றி: தினதந்தி

 

 

 

 

 

கல்வெட்டு என்:14:2

இடம்:திருமையம் வட்டம் அரசு விநாயகர் கோவிலில் உள்ள கல்தூன் கல்வெட்டு

காலம்: மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி(13 ஆம் நூற்றாண்டு)

செய்தி:கூடலூர் நாட்டை சேர்ந்த பெருங்கூற்குடி மறவர் பன்மன் என்ற நிலைமை அழகிய நாடாழ்வான் அரசுமலையில் விநாயகரை பிரதிட்டை செய்து அதற்க்கு தன் தாய் தந்தையரின் பெயரை சாற்றியுள்ளார்.. இதற்காக கீழ் வயலிலும் சோழன் குடிகாட்டிலும் நிலம் வழங்கியமை

 

Eluru_Naatar

Eluru_Naatar1

uruvatti_Nattar

கோமாறவர்மரான திரிபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவர்க்கு யாண்டு 3ராவது இரட்டைபாடி கொண்ட சோழவழனாட்டு பெருங்கூற்குடி மறவ பமன் தென்னன் நிலைமை அழகிய நாடாழ்வான்(ஒல்லையூர்) கூற்றத்து அரசுமீகாமையில் விநாயக் பிள்ளையாரை பிரதிட்டை செய்து மறக்குல விநாயக பிள்ளைக்கு மாதாபிதாக்களை சாற்றி…………..


“கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்”

அடிகள் என்ற மரியாதைக்குரிய கல்வெட்டு : சில கல்வெட்டுகளில் தமிழ் மன்னர்களும் மக்களும் தன வயதை பொறுத்து அடிகளார்,சிறுவன்,பெரியார் போன்று கல்வெட்டு பொறித்துள்ளனர். அம்பாசமுத்திரம் சுந்தர சோழ பாண்டியன் கல்வெட்டுகளில் பராந்தகன் மறவநடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மாராயன் ” என ஒரு கல்வெட்டு வந்துள்ளது. இதே போல் “மாதவன் மறவடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மகாராயர்” என ஒரு கல்வெட்டும் வந்துள்ளது. அதே ஊரில் வேறொரு இடத்த்தில் கிடைத்த கல்வெட்டுகளில் வீதி விடங்க வெள்ளாளன் அடிகள் தேவன் இத்தயவர்க்கு” என ஒரு கல்வெட்டு வந்துள்ளது பழுவூர் கல்வெட்டு “அடிகள் பழுவேட்டரையன் கண்டான் மறவனார் பெருந்தேவியார்” என அடிகள் என பழு வேட்டரையன் கல்வெட்டும் வந்துள்ளது பரிசை கிழான் செம்பியன் ஆற்காட்டு வேளாண் மறவன்

 

எனவே அடிகள்,சிறுவன்,பெரியார்,கிழவன் என்பது வயது முந்திரிச்சியும் அறிவையும் உணர்த்தும் கல்வெட்டுகளாகும் .

 

கல்வெட்டு முதலாம் மாறவர்மன் குலசேகரனின் வேந்தோனி கல்வெட்டு:

thurvaravathi_periyaraiyan

 

 

 

 

 

 

 

காலம் :15 ஆம் நூற்றாண்டு 

இடம்:பனையூர் -காணாடு 

 

செய்தி :

பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால் 

 

கல்வெட்டு:

 

இத்திரு நிலைக்கால் இரண்டுமே கீழ் படியும் உட்பட இவ்வூர் மறவரில் நயினான் எழுந்திர வென்றான் போரில் வென்ற தேவன் தன்மம் 

 

 

 

 

14639720_1694163197568063_6184877443620908800_n

 

 

 

கல்வெட்டு

இடம்:இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து 2கிமி தொலைவில் உள்ள வேந்தோனி என்னும் ஊரில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள 1 1/2 உயர கல்லில் உள்ள செய்தி

காலம்: முத்லாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி(1296)

செய்தி:அகரமாகிய(அஹ்ரஹாரம்) மதிதுங்க சதுர்வேதிமங்கலத்தை காளைய கண்டன் கோட்டை ஊராரும் குண்டையங்கோட்டை ஊராரும் காக்கவேண்டும் என அறிவுருத்துகிரது.

 

ஸ்வஸ்திஸ்ரீ கோமாறவர்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் எம்மமண்டலமும் கொண்ட குலசேகர தேவர்க்கு யாண்டு 28வது வடதலை செம்பியன் நாட்டு காளையக்கண்டன் கோட்டை ஊரார் நோக்கி கொள்க. சுபஸ்மஸ்து மதிதுங்க சதுர்வேதி மங்கல குளமும் குண்டையங்கோட்டை ஊரார் நோக்கி கொள்க……………

இதில் வரும் காளையக்கண்டன் கோட்டை ஊரார் செம்பி நாட்டு மறவர்களும் குண்டையங்கோட்டை ஊரார் குண்டையங்கோட்டை மறவர்களும் என தெரிகின்றது.

 

இடம்:மறவமதுரை அகளங்கீஸ்வரர் கோவில்

காலம்:1449(கி.பி.127)

செய்தி: மறவமதுரையிருக்கும் சோழகோன் சிலருகு நிலம் வழங்கியது.

சகாத்தம் 1449………..மறவன் மதிரை ஊரவரில் இம்பன் சோழகோன் உள்ளிட்டாரும்

 

இடம்:அரியலூர் தட்சனாமூர்த்தி மண்டபம்

காலம்::இராசகேசரிவர்மன் சுந்தரசோழன் கிபி(968)

செய்தி:வன்னாடு(வாணர் நாடு) பகுதியை ஆண்ட சிற்றரசனான மறவன் தூங்கான் பராந்தக வன்னாடுடையான் வரி அளவை நிர்மானம்

 

இடம்:அரியலூர் தட்சனாமூர்த்தி மண்டபம்

காலம்::இராசகேசரிவர்மன் சுந்தரசோழன் கிபி(968)

செய்தி:வன்னாடு(வாணர் நாடு) பகுதியை ஆண்ட சிற்றரசனான மறவன் தூங்கான் பராந்தக வன்னாடுடையான் மனைவி தன் குலதெய்வமான பகவதிக்கு நந்தா விளக்கு வைத்தல்.

குறிப்பு: இதே கன்னி பகவதி பாண்டியர்களுக்கும் குல தெய்வம்

thurvaravathi_periyaraiyan

சிங்கம்புனரி இளமக்கள் என்னும் இளமறவர்கள் கல்வெட்டு:

இடம்:திருமையம் திருவுடைய நாயனார் கோவில்

காலம்::மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1308)

செய்தி:கடம்பராயன் எரிச்ச்லூர் உடையார்க்கு நிலம் வழங்கியது.

 

ஸ்வஸ்திஸ்ரீ கோமாரபன்மரான திரிபுவன சக்கரவர்திகள்…………மடப்புறமாக இளமக்கள் பற்றில் கொனர்ந்தது.

 

 

இடம்:திருமையம் திருவுடைய நாயனார் கோவில்

காலம்::மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1308)

செய்தி:சுந்தரபாண்டியன் தன் பெயரால் சந்ததி எடுத்ததில் இளமக்கள் நன்கொடை வழங்கியது.

மறவன் வயக்கால்

மன்னன்:முதலாம் இராஜேந்திர தேவர்

காலம்:1010

“ஸ்வஸ்திஸ்ரீ கொவிராஜகேசர்…………. மறவன் வயக்காலும்

மறவன் ஈஸ்வர கிரகஹம் மன்னன்:முத்லாம் இராஜேந்திர தேவர் காலம்:1010 “மறவனீன்வர பெருமானடிகள் இவ்வூர்……..”

 

இளங்கோவேளாயின மறவன் பூதி மன்னன்:முத்லாம் இராஜ இராஜ தேவர் காலம்:984 “ஸ்வஸ்திஸ்ரீ கொவிராஜகேசர்…………. …..தென்னவன் இளங்கோவேளாயின மறவன் பூதி

 

இராமன் மறவனும் 

மன்னன்:முத்லாம் இராஜ இராஜ தேவர் காலம்:984 “ஸ்வஸ்திஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர்…………….. …………….இராமன் மறவனும் தென்னவன் 

 

 

 


ஸ்வஸ்திஸ்ரீ கோமாரபன்மரான திரிபுவன சக்கரவர்திகள்…………இளமக்களான தேவன் திருவாலவாயுடையான் குலோத்துங்க சோழ நாடாழ்வார்க்கும் இவன் தம்பியான உத்தமசோழ நாடாழ்வார்க்கும் பிள்ளான் பெருமா……………
…..

நன்றி:ஆவணம் இதழ்

உயர் திரு.அமரர் மாணிக்கம் அவர்கள்

This entry was posted in கல்வெட்டு, தேவர், தேவர்கள், மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *