வழக்கம் போல் இங்கயும் வரலாற்றை திசை திருப்பிவிட்டு இருக்கின்றார். முரண்பாடான செய்திகளையே எடுத்துக்காட்டி இருக்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட வருந்துகின்றோம்.ம.போ.சி கூறியதாவது:
இவ்வாறு உறுதியாகச் சான்று கூறிய ம.போ.சி அவர்கள்.
எட்டு ஆண்டுகள் அரியணையில் இருந்தவர் வேலுநாச்சியார் அவர்கள். யானைமலை, திண்டுக்கல் வாழ்வு என்னாயிற்று? உடன் இருந்தவர்கள் இருந்தவர்கள் மருதுபாண்டியர்கள். ஆக்கிரமிப்பு நடந்தது எப்போது?மாற்றானுக்கு ஒரு அங்குல இடம்கூட தரமாட்டேன் என்று உரிமை முழக்கமிட்டு களம் புகுந்தவர் மன்னர் முத்து வடுகநாத தேவர்.
தளபதிகளாக இருந்த மருதுபாண்டியர்கள் கச்சை வரிந்து கட்டிக்கொண்டு கையில் வாளெடுத்து காலத்திலே வெள்ளையர் தலைகளை வெட்டி வீழ்த்துவதிலேயே முன்னணி சென்றவர்கள்.
வாளையும் கையையும் மடக்கி கொண்டு, வெண்கவரி வீசிக்கொண்டு பதுமை போல் முத்துவடுகநாதரின் பின் சென்றவர்கள் அல்ல மருதுபாண்டியர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் – “தேவர் முரசு” மார்ச்சு 86 குறிப்பு.
அவர் கையில் விலங்கு பூட்ட முடிந்ததா?
வானம் பொழியுது, பூமி விளையுது வரிப்பணம் ஏன்? யார் முழங்கியது?
மயில்றாயன் கோட்டை, மேலூர் கள்ளர்களிடம் மதுரை நாயக்கர் அரசு வரிப் பணம் கேட்டு வந்தபோது அவர்கள் முழங்கிய வீர முழக்கங்களை தாங்கள் தான் முலங்கியதாகப் பெயர் பதிய வைத்துக் கொண்டவர்கள் அல்ல மருதுபாண்டியர்கள்.
ஆனால்…! மருதுபாண்டியர்கள் பற்றி வேல்சு கூறுகிறார்.
தென்றல் விளையாடி வந்த சீமையிலே சுழட்டி அடிக்கும் சூறாவளிப் புயலாக 1801ம் ஆண்டு மே திங்கள் ஊமைத்துரை உருவிலே வந்தது.
அகதியாக வந்து அடைக்க்கலாமானான் மருதுபாண்டியர்களிடம் என்பதை மறந்துவிடக் கூடாது.
வரலாறு:
இன்றைய நிகழ்ச்சி எதிர்கால வரலாறு, உண்மைச் செய்திகளை எடுத்தக் காட்டும் ஓர் காலக் கண்ணாடி ஆகும். அதுவும் கூட அன்றே கலப்படமாகி விட்டது!
“ஒருவருடைய வரலாறு எழுதப்பட வேண்டுமேயானால், அவர் மறைத்த பின்னர் தான் எழுதப்படவேண்டும். அவரோடு தொடர்பு கொண்டவர்கள் கல்விப்பயிற்சி முகுந்தவர்களால் தான் எழுதப்படவேண்டும். அது தான் உண்மையான வரலாறு ஆகும். பிற்காலத்தில் எழுதுவது என்பது பொய்யும், புனைந்துரையும் புகுத்து விடும்” என்பது பாம்பன் சுவாமிகளின் திருவாக்கு.
அதை முழுமையாக ஏற்றுக்கொண்ட ம.போ.சி. தமது நூலில் முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், எழுத்து வரி வடிவிலே அமைக்கபடுகின்ற போது முழுமையாகவே தமது கருத்துக்களை புறக்கணித்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.
மருதுபாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர் என்று உறுதியான எடுத்துக்காட்டு எந்த அடிப்படையில்? என்ன தகுதி? என்பது இளையோர்களது கேள்வி? சொல்லித்தானே ஆகவேண்டும் பதில்!
ஏன்? என்ன காரணம்?
ம.போ.சி எழுதிய நூல் வரலாறு மட்டுமல்ல, தேசியச் சொத்து(!), தமிழத்தின் பங்கு. இதை மறந்துவிடக் கூடாது. பதில் சொல்ல வேண்டியதாக இருக்கின்றது.
எனவே, அவரது அணுகுமுறை, அவரது கருத்துக்களுக்கே மாறானதாகவே எழுதப்பட்டிருக்கின்றது. அந்த தேசிய தமிழகப் பங்கு நூலினால் விடுபட்டுப்போன செய்திகளை உரக்க சிந்திக்க வேண்டியதாக இருக்கின்றது மறத்தமிழ் தேசிய மக்கள்.
எனவே, இந்திய தேசிய வரலாறு தமிழத்தின் பங்கு அல்ல என்பதை உறுதியாக எடுத்துக்காட்டுவது தவறாகாது.
இந்திய துணைக் கண்டத்திலேயே வழிகாட்டியாகவும், தமிழகத்தின் மிகப்பெரிய ஓர் தேசிய இனத்தின் உண்மை நிகழ்சிகளை ஆய்ந்து அதை நியாப் படுத்தி வெளியிட வேண்டிய கடமை தவறிய நூல் தேசிய வரலாறு ஆகுமோ?
இதை வரலாறு என்று ஏற்றுக் கொள்ளப்படுமேயானால்…?
எதிர்காலம் வரலாற்று ஆசிரியர் என்று எவரும் பெருமை பேச முடியுமோ? தமிழகம் மட்டுமல்ல. தமிழுலகமே வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஏற்படலாம் (ஏற்கனவே பாதி அப்படித்தானே இருக்கிறது இப்போது) என்பதை சுட்டிக் கட்டுகின்றோம்
எது உண்மையான வரலாறு? வரலாற்று புரட்டு எது என்பதையும் தெரிந்து கொண்டீர்கள்.
எனவே தியாகி யார்? துரோகி யார்? வீரர்கள் யார்? கோழைகள் யார்? வீரர்களுக்குரிய மரியாதையைச் செய்ய தவறி விடமாடார்கள் என்று நம்புவோமாகுக.
(ஆசிரியருக்கு, இன்றும் ராஜராஜன், பூலித்தேவன், மருதுபாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தியாகம் போற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. தமிழும் தமிழரும் உள்ளவரை இது நடக்கும். எத்தனையோ நல்ல வீரிய உள்ளங்கள் வாழ்ந்து மறைந்த புண்ணிய பூமி எம் தமிழ் பூமி. அவர்களின் எண்ணங்கள் என்றும் இங்கே உறைந்து நின்று அனைவரையும் காக்கும் – வீரத் தமிழ் மைந்தர்கள்.) ஒலிக்கட்டும் உண்மை வரலாறு.
சமுதாய விடிவெள்ளி திரு. வி.ஆ. ஆண்டியப்பத்தேவர்.