வாணர் என்றாலே மாவலி வம்சத்தோர் என்றே பொருள்.மாவலியின் குரு சுக்கிரச்சாரியர் என்னும் பார்க்கவரே ஆவார்.மாவலி சேர அரசர்.அசுரனாக அவரைக் கூறுதல் கட்டுக்கதையே.திராவிட அரசர்களையே புராணங்கள் அசுரன் எனக்கூறுகிறது. மாவலி வழி வந்த சேர வம்சமே வாணர்கள்.ஆதலால் தான் இன்றைக்கும் மாவலியின்பேரன் வாணன் தங்களை வாணாதிராயன் என்றும் சேரர்கள் வானவன் அல்லது வாணர். வான வரம்பன் = மலைகளை எல்லைகளாக உள்ள சேரன்r வானவர் குலத்து குறுநில மன்னர்களாக பிற்கால மலையமான்கள்.வானாதிராயர் வானராயர்-மலைராயர் வானகோவரையர்-மலை கோமான் வானவிச்சாதிர நாடாழ்வான் போன்ற மலையர் குலத்து பிற்கால மக்கள் மகதை என்கின்ற ஆத்தூர் பகுதியே ஆண்டனர்.சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை வாணர்களான வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்கள் ஆத்தூர் அருகில் உள்ள அகழியூரைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்டனர். சேரர் நாடு என்று அழைக்கபடும் கேரளாவில் ஓனம் நன்னாளில் சேர அரசன் மாவலி என்ற மகாபலி மக்களை கான வருவதாக நம்பிக்கை. அதன் திருவிழாவே திருவோணம். பிற்கால வாணர்கள் பலர் தங்களை வேட்வதிரையர்,குறும்பகோலர்,மறவர்,மலையமான்,சுருதிமான்,வன்னியன்,முத்தரையர் என்ற பல பெயரில் அழைக்கபட்டனர். வாணர் என்ற அரசர்கள் ஒரே சாதியர் அல்லர்.ஒரு காலத்தில் சோழரையும்,கங்கரையும்,பாண்டியரையும் வாணர் வீழ்தினர் என சிலர் கூறுவர். தென்காசி பாண்டியன் இறந்தவுடன் மாவலிக்கு பாண்டிய பட்டம் கட்டினர் என்றும் கயத்தாறு வெட்டும் பெருமாள் “வெட்டு மாவலி” வம்சத்தினர் என்பது ஒரு சிலரின் கருத்து. ஒரு காலத்தில் கங்க மன்னனுக்கு கட்டுபட்டு வாழ்ந்த வாணர் தங்களை “மகாபலிகுல சத்திரியர்” என கூறுவதாக கங்க மன்ன செப்பேடு கூறுகிறது.
சேனை தழையாக்கி செங்குருதி நீர்தேக்கி
ஆனை மிதித்த அடிச்சேற்றில் மானபவன்
மாவேந்தர் வேந்தன் பறித்து நட்டான் ஏகம்பன்
மூவேந்தர் தங்கள் முடி”
இங்ஙனம் மாவலி மரபு வாண கோவரையர் வரை, தொடர்ந்து வந்த தூய தமிழ்க் குடியாயிருக்க அவனையும் அவன் மகனையும் அசுரன் எனக் கூறுவது எவ்வாறு பொருந்தும்?
இனி அசுரர் தமிழர் அல்லது திராவிடர் என்பதற்கு வேறுமொரு சான்றுண்டு. வடநூல்கள் கூறும் எண்வகை மணங்களுள் ஒன்றான ஆசுரம், மறச் செயல் புரிந்த மகட் கோடலாம். ஆசுரமாவது, கொல்லேறு கோடல், திரிபின்றி செய்தல், வில்லேற்றுதல், முதலியன செய்து கோடல் என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள் சூ. 92 உரை) பண்டைத் தமிழகத்து முல்லை நிலத்தில் ஒரு பெண் பிறந்தபோதே ஒருசேங்கன்றிற்கு அவள் பெயர் குறித்து அதை கொல்லேறாக வளர்ப்பதும், அவள் பூப்படைந்தபின் அக் கொல்லேற்றை அடக்குபவனுக்கே அவளைக் கொடுப்பதும் வழக்கம்.
“கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.”
(கலித். 103)
கன்று, காலி வளர்த்து நெய், பால் விற்கும் இளச் செய்தி இஃதாயின் போரையே தொழிலாகக்கொண்ட பாலை மறவரும் மூவேந்தரும் எத்துணைத் தறுகணாளரும் துணிசெயலாளருமா யிருந்திருப்பார். இதனாலேயே செயற்கருஞ் செயலை அசுர நிருத்தியம் என்றும், அறுவை மருத்துவத்தை (surgery) அசுர வைத்தியம் என்றும் வடநூல் கூறும்.
எண்: 1972/16
ஆண்டு: 8- ஆம் நூற்றாண்டு
அரசு மண்ணன் : கொங்கணி சிவமாறன்
இடம்: தர்மபுரி ஊத்தங்கரை
செய்தி:
மாவலி வாணராயரான மறவனார் சேவகன்
கமியதழுமன் போரில் இறந்தது.
கல்வெட்டு:
சிவமாறவர்மருக்கு யாண்டு
மாவலி வாணராயர் கங்கநாடாள
இந்திரன் தகடூர் மேல் வந்து
மறவனார்
சேவகன் ………
வாணர்கள் என்ற மகாபலிகுல மறக்குல மன்னர்கள் கல்வெட்டு: மன்னன்: முதலாம் இராஜ இராஜசோழன் ஆண்டு:10-ஆம் நூற்றாண்டு இடம்: ஜம்பை,தர்மபுரி மாவட்டம்,சிவண் கோவில் என்:589.305/1903 கல்வெட்டு: ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல பெரு நிலச்செல்வம் கொண்டு காந்தலூர் சாலை கலமறித்து…..ஈழமும் இரட்டைபாடி கொண்ட……செழியரை தெசு கொல் வன்மரான உடையார் ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு…..ஸ்ரீ ராஜ ராஜ தேவர் …………. மூண்று சன்னிதிகலைம் திருவமுது படைக்க…………மறவன் நரசிங்க பன்மனான இராஜ இராஜ வாணகோவரையர்…………. செய்தி: ஜம்பை பகுதியை ஆண்ட மன்னன் மறவன் நரசிங்க பன்மனான இராஜ இராஜ வாணகோவரையன் ஜம்பை சிவன் கோவிலில் திருவமுது படைக்க நிவதனம்………… இவருக்கு விஜய மனோஹரி வல்லப மகராஜ பலி குல திலகம் என பெயர் உள்ளது.
“ஆரார் தலைவணங்கார் ஆரார்தாம் கையெடார்.
ஆரார்தாஞ் சத்திரத்தில் ஆறாதார் சீராரும்
தென்புலியூர் மேவும் சிவனருள் சேர் அம்பட்டத்
தம்பிபுகான் வாசலிலே தான்”
-என்னும் கம்பர் பாடல், பண்டைத்தமிழ் அறுவை மருத்துவத்திற்குச் சான்று பகரும்.
பண்டைக் காலத்தில் மாபேருடல் வலிமையுள்ள ‘மல்லரையும்,'(மல்யுத்த மறவர்) “மறவரையும்”,….
‘உறுவலி’…. “மதவலி’ …..”மாவலி”…. என்றழைப்பது வழக்கம். மாவலிமை யுடைமையாலேயே மாவலி அப் பெயர் பெற்றான். மூவுலகையும் அடக்கி யாண்ட மாவலி என்று அவனை இகழ்வோரும் புகழ்வர். வரையாது வந்தீயும் வள்ளன்மையும் வருவதற் கஞ்சா வாய்மையும் முறைசெய்து காப்பாற்றும் இறைமையும் மாவலியின் அரும் பண்புகள்.
ஆரியத்திற்கு மாறாக யிருந்ததினாலோ சிவநெறிக் கடும் பற்றினாலோ சூழ்ச்சியாக மாவலி மாய்க்கப்பட்டான். அதன் முடிவு அவன் கொடைத் திறத்தையும் சொல் தவறாமையையுமே குன்றின் மேலிட்ட விளக்காக எடுத்துக்காட்டும் அன்றோ? !!!
சோழர்கள்
காலத்தின் பெரும்பகுதியில் விளங்கிய மறவன் ….வாணவரசன் “ஏகவாசகன் குலோத்துங்கசோழ வாணகோவரசன்’ என்பவன். இவன் சாசனங்கள் சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சை ஜில்லாக்களில் அமைந்துள்ளன. இவனன்றி இக்காலத்தில் மிகவும் பிரபலனாக விளங்கியவன்.
“ஆறகளூருடைய மகதேசன் ராஜ ராஜ தேவன்.
பொன் பரப்பினான் வாணகோவரையன்”
எனப்பட்டவன். திருவண்ணாமலைக் கோயிலிலும் பிறவிடங்களிலும் வரைந்துள்ள கல்வெட்டுகளில் இவ் வாணனைப் பற்றிய பாடல்கள் பல உள்ளன. அவையாவும் சொற்சொரிவும் பொருட் பொலிவும் பெற்று விளங்கும். அவற்றிலிருந்து பெருந்தமிழ்ப் புலவர்களின் புகழ்மாலை சூடியவன் இவன் என்பது தெரியலாம். இவனது வீரச்சிறப்பும் வெற்றிகளும் அறச்செயல்களும் அப்பாடல்களில் மிக அழகாகச் சிறப்பிக்கப்படுகின்றன. இவன் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலைப் பொன் வேய்ந்தவனாதலால் “பொன் பரப்பினான்” என்ற பெயர் இவனுக்கு வழங்கியது.
(மூன்றாம் குலோத்துங்கச் சோழன் பக். 65, 66) மாவலி வழியினரைப் பற்றி வி. வெங்கையர் வரைவது.
பாண வம்சத்து அரசர்கள் மகாபலியின் பரம்பரையைச் சேர்ந்த வர்கள், அவர்களின் கல்வெட்டுகள் வடஆர்க்காடு ஜில்லா வேலூருக்கடுத்த திருவல்ல மென்கிற கிராமத்திலும், மைசூர் சமஸ்தானத்தில் குல்கான்பொடே என்கிற ஊரிலும் கிடைத்திருக்கின்றன.
மூவுலகிலும் தொழப்பட்டவனாயும் தேவர்களுக்கும் அசுரர் களுக்கும் தலைவனாயுமிருக்கின்ற பரமேசுவரனுக்கு வாயில் காக்கும் படியாக நியமிக்கப்பட்ட மகாபலிபுரத்தைச் சேர்ந்தவன், என்று சில பாண வரசர்கள் தங்களுக்குரிய கல்வெட்டுகளிற் சிறப்பிக்கப்பட் டிருக்கிறார்கள். பாண குலத்தைச் சேர்ந்த செப்புப் பட்டயங்கள் இரண்டுண்டு, அவற்றில் ஒன்று சிதம்பரம் கனகசபையின் முகட்டைப் பொன்வேய்ந்த பராந்தகன் என்று சொல்லப்பட்ட வீரநாராயணச் சோழன், பாண வம்சத்தை நின்மூலம் பெய்து அவர் நாட்டைக் கங்க வம்சத்தைச் சேர்ந்த அத்திமல்ல னென்ற அரசனுக்குக் கொடுத்ததாகச் சொல்லுகின்றது. இந்த வீரநாராயணன் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீவித்திருந்தான். மற்றொரு செப்புப் பட்டயத்தில் கீழே எழுதப்பட்டிருக்கும் வம்சாவளி கிடைத்தது. பலி; அவன் மகன் பாணன்; அவன் குலத்திற் பிறந்தவன் பாணாதிராசன். இவ் வம்சத்தைச் சேர்ந்த அநேக அரசர்கள் மரித்தபிறகு இருந்தோன் ஜயந்திவர்மன் (இவன் ஆந்திர தேசத்திற்கு மேற்கிலிருந்த நாட்டை ஆண்டவன்)
இதுகாறும் கூறியவைகளிலும், கீழ்கண்ட சான்றுகள் மூலமாகவும்,… மதவலி -உறுவலி -மாவலி எனப்பட்ட மறவரே மாவலி வாணாதிராயர் ஆவார். வாணர்கள் எனும் வாணாதிராயர்கள் தம்மை மறவர்கள் என்றே கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள்.
“மறவன் நரசிங்க பன்மனான வாணகோவரையர் “
“தொங்கல் மறவனாகிய மும்முடிச்சோழ வாணகோவரையன் “
மன்னன்: முதலாம் சுந்தர சோழன் ஆண்டு: கி.பி. 992,10-ஆம் நூற்றாண்டு இடம்: ராயண்டபுரம்,சிவண் கோவில்,திருவண்ணாமலை மாவட்டம் முடிச் சோழ வாணகோவரை யனாகிய தொங்கல மறவன்: கல்வெட்டின் பாடம்: 1 ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜராஜ 2 கேசரி பன்மற்கி யாண்டு 7 ஆவ 3 து வாணகோப்பாடிப் பெண் 4 ணைத் தென்கரை இராஜகண்ட பு 5 ரத்தில் காந நங்கைய்க்கு ஸ்ரீமன்மு 6 ம்முடிச் சோழ வாணகோவரை 7 யனாகிய தொங்கல மறவன் வை 8 ய்த்த திருநொந்தா விளக்கு ஒன்று 9 ஒன்றிநால் ஆடு … இது பந்மா 10 ஹேச்வர ரக்ஷை றிப்பு: சிவப்பு எழுத்துகள் கிரந்தம். விளக்கம்: செய்திக்கட்டுரையில், அரசனின் ஆட்சியாண்டு குறிப்பிடப்பெறவில்லை. ஆனால், இரண்டாம் வரியில், அரசனின் ஆட்சியாண்டு குறிப்பிடப்பெறும் பகுதியில், ஏழாம் ஆண்டைக் குறிக்கும் …எண் குறியீடு “எ” என்பது தெளிவாகப் புலப்படுகிறது. எனவே இக்கல்வெட்டின் காலம் கி.பி. 992 எனலாம். கொற்றவையைக் குறிக்கும் … “காந நங்கை” என்னும் சொல் கல்வெட்டுகளில் மிகுந்த புழக்கத்தில் இல்லை எனத்தெரிகிறது. “காடு கிழாள்” என்னும் சொல்லுக்கு ஒப்பான ஒரு சொல்லாக இதைக் கருதலாம். ”நங்கை” என்னும் சொல் இக்கல்வெட்டில் சொல்லின் இறுதியில் கூடுதலாக “ய்” என்னும் மெய் சேர்ந்து “நங்கைய்” என எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்து முறையைத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் காணலாம். அவற்றில் (பிராமிக் கல்வெட்டுகளில்), “ப(ள்)ளிய்” என்றும், “கணிய்” என்றும் ”அந்தைய்” என்றும் பல இடங்களில் வருவதைக் காணலாம். 5-ஆவது வரியின் இறுதியிலும், 6-ஆவது வரியின் தொடக்கத்திலும் சேர்ந்து “மும்முடிச்சோழன்” என்னும் சிறப்புப் பெயர் காணப்படுகிறது. இப்பெயருக்கு முன்னொட்டாக “ஸ்ரீமன்” என்னும் வடசொல் கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது வியப்புக்குரியது. ஏனெனில், 10-நூற்றாண்டில் இராசராசன் காலத்துக் கல்வெட்டுகளில் “ஸ்ரீமன்” என்னும் சொல் பயின்று வரக்காணோம். இச்சொல், விஜயநகரர், நாயக்கர் காலத்துப் பயன்பாடு. கொடையாகக் கொடுக்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை 96 என்று செய்திக்கட்டுரை கூறுகிறது.
” மறவன் பன்மனான ராஜராஜ வாணகோவரையர்”
“மறவன் தூங்காணையன் பிராந்தக வன்னாடுடையானும் அவன் மெத்துனந் வாணராயன் அரவிஞ்சனுந்”
என வாணர்கள் தம்மை சாசனங்களில் தொடர்ந்து மறவன் என்றே கூறியுள்ளனர்.
மாவலி வாண குலத்து மறவர் ஜாதி
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
சங்கரன்கோயில் கோமதியாபுரம் தெருவிலிருக்கும் கிருஷ்ணவாணாதிராயத்தேவர் மூத்த குமாரர் திரு. கி.பழனித்தேவர் அவர்கள் வசம் இருக்கும் 1911 ம் ஆண்டித்திய அனுபவ ஒத்தியல் பத்திரம்.
செய்தி
– – – – – – –
1911 வருடம் ஜூலை தியதி 1க்கு முதல் விரோதிக்கிருதி வருடம் ஆடி மாதம் சனிவாரம் சுக்லபக்ஷ்ம் சஷ்டி திதி மிதுனச் சூரியன் சிம்மச் சந்திரன் கூடிய சுபதினத்தில் கஸ்பா சங்கநயினார் கோவில் தானிருக்கும் வாணாதிராய வலசை மேற்படி கலெக்கட்டார் வலசையிலிருக்கும் உறங்காலி வாணாதிராயத்தேவர் “மாவெலி வாணா குலத்து மரவர் ஜாதி” விவசாயம். மேற்படியார் குமாரர் சங்கரசுப்பு வாணாதிராயத்தேவர் / மேற்படியார் மகன் மேற்படியார் ஜாதி விவசாயம் ஜீவனம் தூங்கன்வாணாதிராயத்தேவன்
2 பேர்களும் மேற்படி ஊரிலிருக்கும் மேற்படி ஜாதி விவசாயம் ஜீவனம் சொக்க வாணாதிராயத்தேவருக்கு எழுதிக் கொடுத்த நஞ்சை நிலம் அனுபவ ஒத்தியல் என்னவென்னால்,
நம்முடைய காணிவயல் கஸ்பா சங்கநயினார் கோவில் கண்டிகைப்பேரி மேற்படியூரிலிருக்கும் ஆனையூர் மலைக்கு மேற்காயுள்ள சித்திரபுத்திரத்தேவர் காணி நஞ்சைக்கு கீழ்பால் எல்லைக்கு வடக்கு வீறப்பத்தேவர் காணி நஞ்சைக்கு தெற்கு …. பாறைக்கு கிழக்கு எல்கையிலுள்ள புஞ்சைக்குக்கீழ் சித்திரபுத்திர பூலித்துரை மடத்துக்கு வட மேற்கு நீள்பாக எல்லை ஆக 3 குழி நிலம் கொடுக்க சம்மதிக்கிறோம். இது எது காரணம் பற்றியென்னால்
திருநெல்வேலி ஜில்லா ஆக்டிங் கலெக்கட்டார் சுபாவில் சென்ற பிறகு சாணாரைக் குத்திப்போட்ட காரணத்தினாலே துப்பாக்கி குண்டில் மரணிச்சபடியினாலே பட்டபிரான் தேவர் மக்கள் மனைவி இரணியன் தேவர் மக்கள் மனைவி யிவர்கள் யாவரும் ஜலத்தில் வாரிக்கொண்டு போன படியினாலே நீர் நிர்கதியற்தும் நாதியற்றும் …… எங்களுடைய கூட்டத்தார் எங்களைத் தூற்றாமலிருக்கவும் இளையதாரத்து பிள்ளையான நீரே மேற்படி நஞ்சைநிலம் மேற்படி ஊர் மேற்படி கஸ்பா மேற்படி விலாஸத்திலிருப்பதை அனுபவ ஒத்தியலாக எடுத்து அனுபவித்துக் கொள்ளவும் இவை பௌத்திர பாரம்பரியமாக …. உமது சந்ததி….
……….
…….. சங்கரநமச்சிவாயத்தேவர்.. .{இதற்கு மேல் படிக்க இயலவில்லை } ..
இப்பத்திரத்தில் பல்வேறு வரலாற்றுத் தகவல்களும் உள்ளன. அவை ஸ்காட் துரை- சாணார் -மறவர் கலவரம் – வெள்ளப்பெருக்கு {ஜலத்தில் வாரிக்கொண்டு போன படியினாலே } – இது தாமிரபரணி வெள்ளமா ? அல்லது சிற்றாற்றின் வெள்ளப்பெருக்கா என்பது தெரியவில்லை.
“வாணன் அடைக்கலங்காத்தான்”
மாவலி வாண குலத்து மறவர் ஜாதி என்று இக்கல்வெட்டு உள்ள சங்கரன்கோவில் பகுதியின் 1911 ஆம் ஆண்டித்திய பத்திரம் தெரிவிக்கும் செய்தியை ஒப்புநோக்கும் பொழுது மேற்கண்டவன் மறவர் இனத்தவனாக இருக்கலாம் என்று கருதமுடிகிறது.
சங்கரன்கோவில் அருகிலுள்ள பெருங்கோட்டூர் இங்கு “கொட்டுர்னாட்டு இராச உத்தம நல்லூர் “என்று வழங்கப்பட்டது
திரு வாணாத தேவர் கல்வெட்டு.
●~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~●
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள “சோலைச்சேரி” ஊரில் உள்ள இக்கல்வெட்டு சேத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட அரசாகிய ராஜஸ்ரீ திரு வாணாத சேவகப்பாண்டிய மகாராஜா பற்றிய தகவலைத் தருகிறது.
கல்வெட்டு வாசகம்.
– – – – – – – – – – – – – – – – –
1. ஶ பாண்டி விநாயகர் துணை
2. சேத்தூர் மகாராஜா ௵ வடம
3. லை திரு வாணாத சேவகப் பாண்
4. டிய மகாராஜா அவர்களின்
5. அனுக்கிரகத்தினால் சோலை சே
6. ரி வடுகாயர் பெத்த நல்லு
7. நாயக்கர் மகன் பெத்த நல்லு
8. நாயக்கர் உபயம்
9. கொல்லம்௯௩ஶபங்குனி.
{இறுதிப் பகுதி உடைந்துள்ளது}
கல்வெட்டு செய்தி.
– – – – – – – – – – – – – – – – –
சோலைச்சேரி ஊரைச் சேர்ந்த வடுகாயர் சமூகமாக அறியப்பட்ட, தெலுங்கு இடையர் ஜாதியைச் சேர்ந்த பெத்தநல்லு நாயக்கர் மகனாகிய பெத்த நல்லு நாயக்கர் சேத்தூர் அரசராகிய ஸ்ரீ ராஜஸ்ரீ
“திரு வாணாத சேவகப்பாண்டிய மகாராஜா” அவர்கள் அருளால் எழுப்பிய கோயிற் பணியைச் சுட்டுகிறது. கல்வெட்டு அருகிலேயே பெத்த நல்லு நாயக்கர் மற்றும் அவரது மகனான மற்றொரு பெத்த நல்லு நாயக்கர் இருவரும் நின்று வணங்கிய நிலையில் சிலைவடிவமாகக் காணப்படுகின்றனர்.
கல்வெட்டு காட்டும் வரலாறு.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
சேத்தூர் மன்னர்கள் தென்தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பான வரலாற்றிற்குச் சொந்தக்காரர்கள். மறவரில் “வணங்காமுடி பண்டார மறவர்கள்” என வழங்கப்படும் ‘பொக்கிஷதார மறவர்’ பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களை வாணர்குலமாகிய வாணாதிராயர் வம்சத்தவர் என உறுதி செய்யும் வகையிலான பல்வேறு சான்றுகள் தற்காலத்தில் கிடைத்த வண்ணம் உள்ளன. அதில் ஒன்றாகவேஇந்த 18ம் நூற்றாண்டு கல்வெட்டையும் கருதவேண்டியுள்ளது. இதில் வாண குலத்திற்கே உரிய “திரு வாணாத ” எனும் அடைமொழியால் அவர்கள் அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத் தொல்லியல் ஆய்வாளர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட்டு வரும். திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஏற்கனவே வாணாதிராயர்களுக்கு, “மறத்திரு வாணாதிராயர்கள்” -என குறிப்புகள் உள்ளதாகக் காட்டுகின்றார். இதற்கு வலுவைக் கூட்டும் விதமாக இந்த கல்வெட்டு, மறவர் ஜாதியைச் சேர்ந்த சேத்தூர் அரசர்களை “திரு வாணாத சேவகப்பாண்டிய மகாராஜா ” என வழங்கி அமைந்துள்ளது . மேலும் இப்பெயர் இந்த அரசவழியினருக்கு காலந்தோறும் அடைமொழி முன்னொட்டுப் பெயராக தொடர்ந்து வழக்கில் இருந்து வரும் பெயராகவே உள்ளமையை வரலாறு உணர்த்துகிறது.
நெல்லையில் “தச்சனூர் அருளாளன் சேவகத்தேவன்” என வாணாதிராயர் ஒருவரை தனது பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள் எனும்நூலில்முனைவர்.திரு.வேதாச்சலம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். “சேவகத்தேவன்” எனும் பட்டமும் சேத்தூர் அரசர்கட்கு வழங்கிவருவதும் நாம் கண்கூடாகக் காணும் உண்மை ஆகும்.
மேலுள்ள கல்வெட்டில் சேத்தூர் அரசர்களுக்காக வடுகாய நாயக்கர் சமூகத்தின் பெத்த நல்லு நாயக்கர் மகனாகிய பெத்த நல்லு நாயக்கர் {தகப்பனார் -மகன் இருவருக்கும் ஒரே பெயர் }தமது விசுவாசத்தால் செய்த அறச்செயல் அறியவருகிறது. இது மதுரை நாயக்கர் மேலாண்மையை ஏற்காது வாணாதிராயர் கீழ் தம்மை பணித்துக்கொண்ட தும்பிச்சி நாயக்கரை நமக்கு ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது. வாணர்களுடைய வரலாறு முழுமையடைய வேண்டுமெனில் ,வத்திராயிருப்பு -சேத்தூர் – கொல்லங்கொண்டான்- தலைவன்கோட்டை -சங்கரன்கோயில் பகுதி மறவர்கள் பற்றி ஆய்வுகள் முழுமையடைய வேண்டியது இங்கு அவசியமாகிறது.
நன்றி!
கல்வெட்டு படம் உபயம்: திரு. Ra Ja @ தென்கரை மஹராஜ பாண்டியன் அவர்கள் {கடம்பூர் -சொக்கம்பட்டி வாரிசுதாரர் }
போர் வாணன்
••••••••••••••••••••
பனையூர் குளமங்கலம் மறவர்களின் பதினெட்டுக்கரைகளில் எந்தக் கரையிலும் சேராத ஒரு மறவர் கூட்டம் “போர் வாணன்” என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு குலதெய்வமாக சின்னையா பட்டவனும் -தொட்டிச்சி சின்னம்மாவும் உள்ளனர்.
நன்றி!
அன்பன். கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.
இன்னும் நிறைய வாணர் குல மன்னர்கள் மறவர் என்ற கல்வெட்டு வந்துள்ளது.