முக்குலத்தோர் இந்திர மரபினரா?

(போட்டு உடைக்கபடவேண்டிய கட்டுக்கதை)

முக்குலத்தோர் இனத்தில் மூன்று உட்பிரிவுகள் உள்ளன. கள்ளர், மறவர், அகமுடையார்.இவர்களை சில மட அறிவுஜீவிகள் இந்திர மரபினர் என இகழ்ந்து கூறி வருகின்றனர்.இவர்கள் இந்திர மரபினரா அல்லது இவர்களை அப்படி கூற காரனம் என்ன.இந்த பொய்மையை போட்டுடைக்கவே இந்தக்கட்டுரை.

அகலிகை-இந்திரன் புரட்டுக்கதை:ahalya

இப்பெயர் வர காரணம் பற்றி எட்கர் தார்ஸ்டன் கருத்துப்படி ஒரு காலத்தில் கௌதமரிஷி என்பவர் தன்னுடைய மனைவியை தனியாக விட்டுவிட்டு வெளிய10ர் சென்றுவிட்டார். அப்போது இந்திரன் வீட்டினுள் நுழைந்து கௌதம முனிவருடைய மனைவியின் அழகில் மயங்கி அவளோடு உறவு கொண்டதால் மூன்று குழந்தைகள் பிறந்தன. முனிவர் திரும்பி வந்தபோது ஒரு குழந்தை கதவுக்கு பின்னால் கள்ளத்தனமாக ஒளிந்து இருந்ததால் கள்ளன் என்றும் மற்றொருவன் மரக்கிளையின் மீது அமர்ந்து இருந்ததால் மறவன் என்றும், மற்றொருவன் தைரியமாக வீட்டின் முன்புறம் நின்று கொண்டு இருந்ததால் அகமுடையான் (அகந்தை) என்றும் அழைக்கப்பட்டார்கள்.இவ்வாறு எட்கர் தார்ஸ்டன் செவிவழிச் செய்தியைக் கேட்டு தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருந்தாலும் வரலாற்று நோக்குடன் பார்க்கும் பொழுது இக்கொள்கை ஏற்புடையது அல்ல.மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான் என்ற வார்த்தையில் மரம் என்ற சொல்லில் ரகரம் இடையினம். ஆனால் மறவன் என்ற சொல்லில் உள்ள எழுத்து வல்லின றகரமாக இருப்பதால் இவ்வொப்புமை ஏற்புடையதல்ல. மரம் என்பதன் பொருள் மறம் என்பதோடு எவ்வகையிலும் தொடர்பு இல்லாதது. ஏற்றுக் கொள்ள முடியாதது என்பது திண்ணம்.

வம்சாவளிகளும்-சாதிய புராணநூலகளும் உருவாக காரனம் என்ன?

1850-ஆம் ஆண்டு ஆங்கில அரசு ஒவ்வொரு பளையங்ககளின் மரபு,உரிமை மற்று ஆதரத்தை சமர்பிக்குமறு ஆனயிட்டது முறையில்லாத,வம்சமழிந்த அரசுகளை தன் அரசாங்கத்தில் சேர்க்குமாரு ஆனையிட்டனர். எனவே அனைத்துப் பளையங்களும் தனித்தனியே வம்சாவளிகளை எழுதிக்கொண்டனர். இதில் புரானம்,இதிகாசம் முதலிய நிழ்வுகளை தம்முடன் இனைத்து எழுதினர் ராமயன,மஹாபாரத கதைகளை தம்முடன் இனைத்து எழுதினர். நாயக்க பளையங்களின் கதைகள் முகமதியருக்கு பெண்தர மறுத்து நாட்டை விட்டு புதிய நாட்டிற்கு இடம் பெயர்ந்ததை குறிப்பிட்டு இருந்ததன. இதற்கு அடுத்து பெரும்பான்மையான் மறவர் பாளயபட்டுகள் அனைத்தும் திருவிளையாடற்புரானம் மற்றும் பெரியபுரான நிகழ்வுகளில் தம் வம்சாவளியில் இனைத்து எழுதின. இக்காலகட்டத்தில் சாதியையும் தொழிலையும் நியாயப் படுத்தி சாதி நூல்கள் எழுதப்பட்டன.
1. சிலை எழுபது – கம்பர்
2. ஏரெழுபது – கம்பர்
3. ஈட்டி எழுபது – ஒட்டக்கூத்தர்
இம்மூன்று நூல்களும் ஒவ்வொரு சாதியைப் பற்றியும் பேசுகிறது. சிலை எழுபது என்ற நூல் வன்னிய சாதி பற்றியது. இந்நூலில் `சாதியில் உயர்ந்த வன்னியர்கள், அக்கினியில் உதித்த வன்னியர்கள் என்றெல்லாம் வன்னியர்கள் உயர்வாக குறிப்பிடப் படுகின்றனர். மற்றொரு நூலான ஏரெழுபதில் வேளாளர்கள் உயர்வாகக் குறிப்பிடப்படுகின்றனர். `செல்வம் பெருகுதலைக் கொண்ட வேளாளர்கள் என்று வேளாளர்கள் சிறப்பாகப் பேசப்படுகின்றனர். வேளாளரை சிறப்பிக்கும் ஒரு பாடலின் கருத்து வருமாறு : `பிறரால் வணங்கப்படும் அந்தணர் குடியில் பிறப்பதால் என்ன பயன்? ஒளிவீசும் மணி முடியை அணிந்த சிறப்புப் பெறுகின்ற அரசர் குலத்தில் பிறப்பதால் என்ன பயன்? அந்தணர், அரசர் என்னும் குலங்களை விடுத்து வணிகத் தொழில் புரியும் செல்வவளம் மிக்கவர்களின் குலத்தில் பிறப்பதால் என்ன பயன்? அத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் என்ன? உழவுத்தொழில் செய்யும் குலமாகிய வேளாளர் குலத்தில் பிறந்தவர்களே உலக உயிர்களைப் பசியாகிய நோயில் இருந்து காப்பதற்காகப் பிறந்தவர்களாவர். (ஏரெழுபது. பாடல் எண்.8, 2007:9) வேளாளர்கள் இல்லையெனில் விவசாயம் நடைபெறாது என்றும் தொழில் அடிப்படையில் வேளாளர்கள் உயர்ந்தவர்கள் என்றும் இந்நூல் கட்டமைக்கிறது. இவ்விரண்டு நூல்களையும் எழுதியது கம்பர். இவர் கம்பராமாயணத்தை எழுதிய கம்பரா? அல்லது பிற்காலத்தைச் சேர்ந்த வேறு கம்பரா? என்ற விவாதம் ஆய்வாளர்களிடம் உள்ளது. ஒரே ஆசிரியரே ஏன் இருவேறு சாதிகளைப் பற்றி நூல் எழுத வேண்டும்? என்ற கேள்வியும் எழுகிறது. ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதி வரலாற்றை எழுதும்படி பாண்டித்தியம் உள்ள புலவர் மரபினரிடம் கேட்க அதனை அவர்கள் ஏற்று எழுதிக் கொடுத்துள்ளனர் என்பதை இதனூடாக அறிய முடிகிறது. இதுபோல் ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்ட `ஈட்டி எழுபது என்ற சாதி நூல் செங்குந்தர்களைப் பற்றி பேசுகிறது. இதில் சிவபெருமான் வழியில் வந்தவர்களாக செங்குந்தர்களின் பெருமை கூறப்படுகிறது. மேற்கண்ட இம்மூன்று சாதி நூல்களும் பிற சாதியினரைப் பற்றி குறைத்துக் கூறவில்லை. மாறாக தம் சாதிப் பெருமையை எடுத்துக் கூறுவதற்காகவே உருவாக்கப்பட்டவை.

உனமையில் சிலைஎழுபதோ,ஏரெழுபதோ அல்லது ஈட்டி எழுபதோ கம்பரோ அல்லது ஒட்டக்கூத்தரோ எழுதவில்லை கம்பராமயனம் எழுதிய கம்பரோ,விக்கிரம்சோழனுலா எழுதிய ஒட்டக்கூத்தரோ இந்த நூல்களை எழுதவில்லை அவர்களின் கவிதையின் தமிழ்ந்டைக்கு முற்றிலும் புரம்பாக எழுதபட்டது.இது கம்பர்,ஒட்டக்கூத்தர் பெயரில் 18-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் எழுதபட்டது என்பதே வரலாற்று உனமை.

புதுக்கோட்டை தெலுங்கு புலவர் வெங்கண்ணாவால் வந்த வினை:
இதைப்போலவே புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரும் தம் சம்ஸ்தானத்துக்கான வம்சாவளி கதையினை கற்பனை கலந்து எழுத முனைந்தனர்.புதுக்கோட்டை சம்ஸ்தான புலவர் வெங்கண்ணா கள்ளகேசரி,பூவிந்திரபுராணம்,தொண்டைமான் வம்சாவளி போன்ற சாதிய நூல்களை எழுதியவர் .இவர் கட்டவிழ்த்து விட்ட கட்டுக்கதை தான் இந்திரன்-அகலிகை கதை.

சங்க கால தொண்டைமான் இளந்திரையன் சோழ மன்னன் நலங்கிள்ளிக்கும் நாககன்னிகைக்கும் பிறந்தவன் என மனிமேகலையும்,பதிற்றுபத்தும் கூறுகின்றது.இந்த தொண்டைமான் இளந்திரையனை தான் இந்திரன் என தவராக கருதி.தொண்டைமான் இந்திரன் வம்சாவளியில் அந்த கதையை எழுதிவிட்டனர். அது அந்த காலக்கட்டத்தில் ஓலைசுவட்யில் ஏற்பட்ட பிழையா அல்லது புனைவா என தெரியவில்லை.இளந்திரையன் தான் வெங்கண்ணாவால் இந்திரன் ஆனார்.

இந்த கருமத்தை தவராக பொருள் கொண்டுதான் ராஜாளியர் “இந்திர குலாதிபர் சங்கம்” என்று முக்குலத்தோர் சங்கத்தை தொடங்கினார்.இந்த ஆதாரத்தை கொண்டு தான் வேங்கடசாமி நாட்டார் முக்குலத்தோரை இந்திரமரபினர் என ‘கள்ளர் சரித்திரம்’ எழுதினார்.

எட்கர் தர்ஸ்டனும் இந்த ஆதாரத்தை வைத்து தான் முக்குலத்தோர் அகலிகை கதையை ஆராய்ந்தார்.இதனால் தான் பல பேரின் கேவல தூற்றுதலுக்கு ஆளானோம்.

இந்திரன் தமிழ் கடவுளா?

முதலில் இந்திரன் தமிழ் கடவுளா.தமிழக புராணங்களும் இந்திய இதிகாசங்களும் கூறும் இந்திரன் நம் நாட்டின் கடவுளே அல்ல அது ஆரியரால் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட கிரேக்க கடவுள் ஜீயுஸ்(zEUS).இந்திரன் மழைக்கான கடவுளாக பார்க்கபட்டான்.அதனால் வேளாளர்கள் இந்திரனை தெய்வமாக வனங்கினர்.வேளாளரின் கொத்தடிமைகளான் ஜாதிகளும் வணங்கி தங்கள் குல தலைவனாக இந்திரனை கூறுகின்றனர்.இது நமக்கு எந்த வகையில் பொருந்தும் நாம் என்ன உழுகுடியா.

முக்குலத்தோர் இந்திர மரபினர் என்பது கட்டுக்கதையே:

மேலும் மறவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த முதல் குடிமக்கள் என்று எட்கர் தார்ஸ்டன் கூறியுள்ளார். ஆனால் இந்திரன், அகலிகை ஆகிய ஆரியர் இருவர் சேர்க்கையால் தோன்றிய இனம் (கள்ளர்,மறவர்,அகமுடையர்) என்று சொல்வது இவர்களை இழிவுபடுத்துவதற்காகவே சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.முக்குலத்தோர் மூவேந்தருக்குமான முதல் படைவீரராய் திகழ்ந்து அந்த வேந்தர் சூடிய பட்டங்களை சூடுவது இயற்கையே.ஆனால் இவர்களை இந்திர மரபினர் என்று கூற எந்த இதிகாச ஆதாரமோ அல்லது இலக்கிய அதாரமோ கிடையாது.

முக்குலத்தோரை இந்திர மரபினர் என கூறுவது கிராமத்தில் கானப்படும் நையாண்டி கதைப்போல

“மலடி மகன் முயல் கொம்பேறி சந்திர மண்டலத்துக்கு தாவினான்”

என்ற கதையில் எந்த அளவு உன்மையையோ அந்த அளவு தான் இந்த உன்மையும்.நம்மை கேலிப்பேச்சுக்கும்,வக்கிரப்பேச்சுக்கும் ஆளாக்கும் இது போல கதைகளை பொய்யாக்க வேண்டும்.சங்க இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் நம் புகழ் எவ்வளவோ இருக்கும் பொழுது இந்த மாதிரி அர்த்தம் பொருத்தமற்ற கட்டுக்கதைகளை உடைத்து நம் இனத்தின் மரியாதையை காப்பாற்றவேண்டும்.

This entry was posted in தேவர், தேவர்கள் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *