ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி


வீரமும் மானமும் விஞ்சியவர் தமிழ் மறவர். இவர்களது தொன்மையையும், வாழ்க்கைச் சிறப்பையும் சங்க இலக்கியங்களான அகநானுhறு , புறநானுhறு, நற்றினை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை ஏற்றிப் போற்றுகின்றன. விழுடககொடை மறவர், பினைகழல் மறவர், பெருந்தொடை மறவர் என்பன அந்த இலக்கியங்கள்மறவர்களுக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள்.
எதிரி எமனாக இருந்தாலும் அவனை அழித்து ஒழிப்பவர் மறவர் என, பகை என கூற்றம் வரினும் தொலையான் என்பது மறவர்களுக்குக் கூலித் தொகை கூறும் கட்டியமகும். பத்தாம் நுhற்றாண்டில் சோழர்கள் பெரும் நிலை எய்துவதற்கும், பதின்மூன்றாம் நுhற்றாண்டில் பிற்காலப் பேரரசர்களாகப் பாண்டியர் பெருமிதம் கொள்வதற்கும் அரசப்படையாக நின்று உதவியவர்கள் இந்த மறவர்கள்.

இவர்கள் மிகுதியாகவும் தொகுதியாகவும் வாழ்ந்த நாடு (இன்றைய இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகள்) மறவர் சீமை என வாலாற்றில் குறிக்கப்படுகிறது.


இவர்களது மூத்தகுடிமகனான மறவர் சீமை மன்னர், ” புனித சேது காவலன்” என வழங்கப்பட்டார். கி.பி. பதினைந்தாம் நுhற்றாண்டு முதல் தமிழ்மொழிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் அவர்கள் அளித்துள்ள மகத்தான பங்கு காலத்தால் மறைக்க முடியாதது. அவர்களது வீரம், கொடை, புலமை ஆகியவற்றைப் போற்றும் இலக்கியப் படைப்புகளும் தனிப் பாடல்களும் ஏராளம். அவர்களிடமிருந்து முத்தமிழ் புலவர்களும், கலைஞர்களும் பெற்ற ஊர்களும், மான்யங்களும் இன்னும் மிகுதியானவை.
இத்தகைய புகழுக்குரிய வரலாற்று நாயகர்களான சேதுமன்னர்கள் இந்திய நாட்டு விடுதலை வேள்வியிலும் தங்களது முத்திரையைப் பதித்துச் சென்று இருப்பது நம்மையெல்லாம் வியக்க வைக்கின்றது.
இன்றைக்கு இருநுhற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக வரலாற்றைத் தடம்புரளச் செய்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்ற வணிக நிறுவனம். அப்பொழுது இந்திய nhரரசாக விளங்கிய ஜஹாங்கீரின் அனுமதி பெற்ற இந்நிறுவனத்தினர் குஜராத்திலும், வங்காளத்திலும் தங்களது பண்டகசாலைகளை அமைத்து வாணிபத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மசூலிப்பட்டிணத்திலும், சென்னையிலும் தங்களது நிலைகளை வலுவுடையதாக்கிக் கொண்டனர். அடுத்து, வாணிகத்திற்குப் புறம்பாக உள்நாட்டு பூசல்களிலும் தலையிட்டுத் தங்களுக்குப் பயனளிக்கும் கட்சிக்காரர்களை முழுக்க முழுக்க ஆதரிப்பவர்களாக விளங்கி வந்தனர்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக, அதாவது மதுரை நாயக்க மன்னரது மறைவிற்குப்பிறகு கப்பத்தொகையினை யாருக்கும் கொடுக்காமல் சுயாதீனமாக இயங்கி வந்த தென்னகப் பாளையக்காரர்கள் நவாப்முகம்மதுஅலிக்குக் கப்பத்தொகை கொடுக்க மறுத்தனர்.

அவர்களை அடக்கி ஒடுக்கி அவர்களிடமிருந்து கப்பம் பெறுவதற்குப் பரங்கியரது கூலிப்படை நவாப்பிற்கு உதவியது. இந்த வகையில் நவாப் முகம்மது அலி, கும்பெனியாருக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகை கூடிக் கொண்டே சென்றது. பாளையக்காரக்களைத் தவிர , அப்பொழுது தென்னகத்தில் திருவாங்கூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை ஆகிய பரம்பரைத் தன்னரசுகளும் இயங்கி வந்தன.

இவர்களிடமிருந்தும் கப்பம் பெறும் உரிமை தமக்கு உள்ளது என வலியுறுத்திய நவாப், கும்பெனியாரது படைபலத்தைக் கொண்டு திருவாங்கூர், தஞ்சாவூர், மன்னர்களை இணங்க வைத்தார். புதுக்கோட்டை மன்னர், நவாப்பிற்கும், கும்பெனியாருக்கும் பலவிதத் தொண்டுகளைச் செய்து வந்ததால் அவரிடம் மட்டும் கப்பம் கேட்டு நிர்பந்திக்கவில்லை.
ஆனால் மதுரை நாயக்க மன்னர்களுக்கே திறை செலுத்தாமல் தன்னரசாக இருந்து வந்த மறவர் சீமை மன்னர்களை என்ன செய்வது ? அவர்களுக்குத் திறை செலுத்த ஆணை பிறப்பித்துத் தவணை கொடுத்துப் பணம் செலுத்தக் காத்திருப்பதில் எந்தப் பலனும் இல்லை என நவாப் முகம்மது அலி முடிவிற்கு வந்தார்.

ஆதலால் அவர்களையும் ஆயுத வலிமை கொண்டு அடக்கிக் கப்பத் தொகையினைப் பெற வேண்டும் ! நவாப்பினது மகன் உம்தத்துல் உம்ரா, கும்பெனித் தளபதி ஜோசப் சுமித் ஆகிய இருவரது தலைமையில் திடிரென 29.5.1772 ஆம் தேதி பெரும்படை மறவர் சீமைக்குள் புகுந்து தலைநகரான இராமநாதபுரம் கோட்டையைச் சுற்றி வளைத்தது. இராமநாதபுரம் சேதுபதி மன்னராக இருந்த பன்னிரண்டு வயது நிரம்பிய இளவல் முத்துராமலிங்க சேதுபதிக்காக அவரது தாயார் முத்து திருவாயி நாச்சியாரும் பிரதானிபிச்சப் பிள்ளையும் நிர்வாகத்தை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து நவாப்பின் மகன் உம்தத்துல் உம்ரா, ராணியாருடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ராணியார் ஆற்காடு நவாப்பின் மேலாதிக்கத்தை ஏற்கவும், அவருக்கு அடங்கிக் கப்பம் கட்டுவதையும் மறுத்துவிட்டார். இராமநாதபுரம் கோட்டையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பேய்வாய்ப் பீரங்கிகள் கோட்டை மீது நெருப்பைக் கக்கின. அக்கினி மழையில் நனைந்த கோட்டைச் சுவரின் கிழக்குப்பகுதியில் இரண்டாம் நான் போரில் ஏற்பட்ட பிளவின் ஊடே பரங்கியர் கோட்டைக்குள் புகுந்தனர்.

அரண்மனை வாயிலில்நடைபெற்ற வீரப் போரில் மூவாயிரத்திற்கும் மிகுதியான மறவர்கள் தாயகத்தை காக்கும் தொண்டில் தங்களது உயிரைக் காணிக்கையாகத் தந்தனர் என்றாலும் போப்பயிற்சியும் கட்டுப்பாடும் மிக்க பரங்கியருக்கே வெற்றி கிடைத்தது.
ராணியும் அவரது இருபெண்குழந்தைகள், சிறுவன் சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டுத் திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். சேதுபதி சீமையில் ஆற்காடு நவாப்பின் ஆட்சி, பரங்கியரது பாதுகாப்பில் நடைபெற்றது. குழப்பம் அராஜகம், கலகம் இவைகளுக்கிடையில் கிடைத்தது ஆதாயம் என நவாப் எண்ணினார். என்றாலும் இராமநாதபுரம் சீமையில் தெற்கிலும், வடக்கிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகள் நவாப்பின் நிர்வாகத்தை அலைகழித்து அச்சுறுத்தின.

ஆதலால் இராமநாதபுரம் சீமையின் மீதான தமது பிடிப்பை முழுமையாக இழந்துவிடாமல் தக்க வைத்துக் கொள்ள நவாப், சேதுபதி மன்னருடன் சமரச உடன்பாடு ஒன்றினைச் செய்து கொண்டு சேதுபதி மன்னர் இராமநாதபுரத்தில் தமது ஆட்சுயைத் தொடர கி.பி. 1781 -இல் வழிகோலினார்.
தொன்று தொட்டு மறக்குடி மக்களது தன்னரசாக விளங்கிய சேது நாட்டின் தன்னாட்சி உரிமையைப் பறித்துச் சேதுநாட்டை ஆக்கிரமிதத்துடன், தன்னையும் தமது டும்பதிதினரையும் பத்து ஆண்டுகள் திருச்சிக் கோட்டையில் அரசியல் கைதிகளாக அடைத்து வைத்து, அவல வாழ்க்கையை அனுபவிக்கச் செய்த நவாப்பையும், அவரது ஏவலரான கும்பெனியாரையும் பழிவாங்கச் சேதுபதி மன்னர் துடித்தார். இடைஞ்சல் ஏற்படுத்திய எவரையும் யனை மறப்பது இல்லை அல்லவா?
நாட்டின் பாதுகாப்பை வலுவுள்ளதாக்கினார். திருவாங்கூர் மன்னர் மற்றும் திருநெல்வேலிச் சீமைப் பாளையக்காரர்களுடன் நல்ல நேச உறவுகளைக் கொண்டிஐந்தார். சேதுநாட்டின் நவாப்பின் பேரரசையும், கும்பெனியாரது ஏகாதிபத்திய நிழலையும் படரவிடாமல் தடுக்க, டச்சுக்காரiர்களுடன் உடன்பாடு செய்து கொண்டு அனைறைய போர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பெரிய பீரங்பிகளைத் தயாரிக்கும் ஆயுதச் சாலையை இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள காட்டுப்பகுதியில் தொடங்கினார்.
சேது நாட்டில் இயங்கிய அறுநுhறு தறிகளில் நுhற்று ஐம்பது சேதுபதி மன்னரது குத்தகைக்கு உபட்ட தறிகளாக இருந்தன. புதுச்சேரி பிரஞ்ச்சுக்காரர்களும் தரங்கம்பாடி டச்சுக்காரர்களும், சேது நாட்டின் கைத்தறித் துணிகளை விரும்பி வாங்கி வந்தனர். இதனால் சேதுபதி சீமையில் போர்ட்டோ நோவா பக்கோடா என்ற டச்சுப் பணம் பரவலாக நாணயச் செலவாணியில் இருந்தது. இதற்காக உள்நாட்டுச் சுழிப்பணம் அல்லது சுழிச்சக்கரத்திற்கு மாற்றிக் கொள்ளும் நாணயச் செலவாணி நிலையங்களை இந்த மன்னர் நிறுவியிருந்தார்.
சேதுநாட்டு இஸ்லாமியர் எதிர்க்கரையில் உள்ள இலங்கை மற்றும் கீழ்த்திசை நாடுகளிலும், உள்நாட்டிலும் வாணிபத்தைப் பெருக்கச் சலுகைகளை செய்து கொடுத்தார். சேது நாட்டு சங்கு வங்கத்திற்கும், அரிசி, நெல், இலங்கை, புதுச்சேரிக்கும் அனுப்பப்ட்டன. கேரளத்து மிளகும் கொப்பரையும் சேது நாட்டில் விற்பனையாயின.
சேதுநாட்டு அரிசி, கருப்புக்கட்டி, எண்ணெய், கைத்தறி ஆகியவைகளின் விற்பனைள்கௌ அரசுத்தரப்பில் வியாபாரத்துறை ஒன்று தனியாகச் செயல்பட்டது.
அடிக்கடி சேதுநாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்த வறட்சியை நிரந்தரமாக ஒரீக்க ஒரு திட்டத்தை தீட்டினார். மதுரைச் சிமை வருஷநாட்டில் உற்பத்தியாகி இராமநாதபுரம் சீமையில் நுழைந்து கிழக்குக் கடற்கரையில் சங்கமமாகும் வைகை ஆற்றின் ஒரு பகுதி நீர் வருஷநாட்டு மலையில் உள்ள ஒரு பாறையால் தடுக்கப்பட்டு, கிழக்கே வருவதற்குப் பதிலாக மேற்கே சென்று கேரளக் கடலில் வீணாவதைத் தடுத்து ஆற்றின் முழுநீரையும் மறவர் சீமைக்குள் கொண்டு வருவதற்கான திட்டம் அது.
இவ்விதம் நாட்டின் நலனையும், பொரளாதார முன்னேற்றத்தையும் பெருக்கும் வகையில் இந்த அளம் மன்னர் ஈடுபட்டிருக்கும் காலத்தில் தமிழக அரசியலில் அவர் எதிபாராத திருப்பம் எழுந்தது. இது மனனரது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது மட்டுமல்லாமல், தமிழகத்தின் அரசியலில் வெள்ளைப் பரங்கியரது ஆதிக்கத்திற்கு வலுவான அடித்தளமாக ஏகாதிப வளர்ச்சி உருவாக, அந்தத் ப்பம் திiமாறியது.
ஆற்காடு நவாபின் இறையான்மைக்கு உட்பட்ட தமிழகத்தில், அவரது சலுகைகளை எதிர்பார்த்துத் தங்களது கணிகத்தைத் தொடர்ந்து வந்த வெள்ளையர், கும்பெனியாரிடம் கடனாளியாகிவிட்ட ஆற்காடு நவாப்பிற்கு நிபந்தih விதித்து ஆட்டிவைக்கம் சூத்திரநாயகிவிட்டனர். நவாப்பின் அதிகாரத்தைப் பாளையக்காரர்களிடம் அமல்படுத்தத் தங்களது கூலிப் படையைக் கொடுத்து உதவிய கும்பெனியாருக்கு நன்றிக்கடனாக முதலில் கி.பி. 1783-இல் செங்கை மாவட்டத்தை விட்டுக் கொடுத்தார் நவாப்.

அடுத்து திருநெல்வேலி சீமையில் நிலத்தீர்வை ளை நவாப்பின் சார்பாக வசூலிக்கும் உரிமை பெற்றனர். பின்னர் தென்னகத்தில் நவாப்பிற்குச் செலுத்த வேண்டிய வரவினங்கள் அனைத்தையும் வசூலித்துக் கொள்ளும் உரிமையையும், அதில் ஆறில் ஒரு பகுதியை நவாப்பிற்கு அளித்து விட்டு எஞ்சியதை நவாப்பின் கடக்காக வரவு வைத்துக் கொள்ளும் உரிமையையும் பெற்றனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்க் கோட்டை கொத்தளங்களையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றனர். மேலும் நவாப் அவர்களுக்குச் செலுத்த வேண்டிய பாக்கித் தொகையைத் குறிப்பிட்ட பத்து தவணை நாட்களுக்கு முன்னதாகச் செலுத்த வேண்டும். தவணைப்படி பணம் செலுத்தத் தவறினால் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, நெல்லுhர், வடஆற்காடு, பழநாடு, ஓங்கோல் சீமைகளின் வரி வசூலைக் கும்பெனியாரே மேற்கொள்ளலாம்.

இரண்டாவது தவணையிலும் தாமதம் ஏற்பட்டால் அந்தச் சீமைகளை கும்பெனியாரே நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம் என்ற சலுகைகளையும் பெற்றனர். இவைகளைத் தொடர்ந்து, மறவர் சீமையினை மூன்று ஆண்டுகால வசூலுக்கு ஒப்படைப்பில் பெற்றனர்.
இவையனைத்தும், இருக்க இடம் பிடித்துக் கொண்ட நரி கிடைக்கு இரண்டு டுகளைக் கேட்ட கதையாக முடிந்தது. சிலந்தி வலையில் சிக்கிய ஈ போன்ற இடர்பாடு மிக்க நிலை நவாப்பிற்கு, இதனைத் தமிழகத்தின் துரதிர்ஷ்டம் என்று கூடக் குறிப்பிடலாம் !
தமிழகத்தில் கைத்தறித் துணிகளைக் கொள்முதல் செய்து கப்பல்களில் இங்கிலாந்துக்கு அனுப்பிக் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த கும்பெனியாருக்கு மறவர் சீமையின் கைத்தறித் துணிகள் கண்களை உறுத்தின. லாபக் கற்பனை விரிந்தது.

அவர்களது லாகூர் வர்த்தகப் பிரதிநிதிகள் இராமநாதபுரம் சீமையில் சுற்றுப்பயணம் செய்து கைத்தறி நெசவுத்தறிகளின் எண்ணிக்கை, உற்பத்தி பற்றிய முழுவிவரங்களையும் இரகசியமாகச் சேகரித்தார்கள். அடுத்து, கலெக்டர் லாண்டன் மூலமாக மநவர் சீமையின் அனைத்துத்தறிகளின் நெசவுத்தறிகளை கும்பெனியாரே கொள்முதல் செய்யவிருக்கும் ஏபோகப் பேராசைத் திட்டத்தைச் சேதுபதி மன்னருக்குத் தெரிவித்து ஒப்புதல் கோரினார்.

மன்னர் முற்றாக அந்தத்திட்டத்தை மறுதலித்தடன், வீணாகத் தம்மை அலைக்கழித்தார் என்றும் கலெக்மரது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சேதுபதி மன்னர், கும்பெனியாரிடமும் வெள்ளைப் பரங்கிகளிடமும் மிகுந்த வெறுப்புடன் நடந்து கொள்கிறார் என்றும், ஆதலால் மன்னரது அலுவலர்களது நடவடிக்கைகளிலும் இந்த வெறுப்பு பிரதிபலிக்கின்றது என்றும் அந்த அறிக்கையில் காணப்படுகிறது. மறவர் சீமைத் துணி கொள்முhலில் ஏகபோக உரிமையை நிலைநாட்ட முயன்று தோல்வியுற்ற கும்பெனியார், அடுத்து சேதுபதி சீமையில் தானியங்கனை விற்றுக் கொள்ளை லாபம் பெற முயன்றனர்.

இதற்காக அவர்கள் சேதுபதி சீமையில் தானியங்களை விற்பனை செய்வதில் சுங்கவரி விதிப்பில் இருந்து அவர்களுக்கு விதிவிலக்குக் கோரினர். இதனையும் முற்றாக சேதுபதி மன்னர் மறுத்துவிட்டார். மன்னரது போக்கை, ஆற்காடு நவாப்பிற்கு முறையீடு செய்து, அவரிடமிருந்து மன்னருக்குப் பதிந்துரை ஒன்றையும் அனுப்பி வைக்கச் செய்தனர். சேதுபதி மன்னர் இதனையும் புறக்கனித்தார்.

வெளிநாட்டார் மட்டுமல்ல, உள்நாட்டைச் சேர்ந்தவர்ம் கூட வாணிபத்ல் ஈடுபட்டு ஊதியம் ட்டும் பொழுது நடைமுறையில் உள்ள சுங்கத் தீர்வைகளைச் செலுத்துவதுதானே வழக்கம் ? ஏற்கனவே கைத்தறித் துணியில் ஏகபோக உரிமை பெற முயற்சித்தது போல இப்பொழுதும் மறவர் சீமையில் தங்களது கால்களை வலுவாகப் பதுக்கச் செய்த முயற்சி அது !
இத்துடன் கும்பெனியார் தங்களது முயற்சிகளைக் கைவிட்டு விடவில்லை. துhத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கைத்தறித் துணிகள் மிளகு மற்றும் சரக்குப் பொதிகைகனை ஏற்றிக் கொள்ளும் கப்பல்கள், இராமநாதபுரம் மன்னரது பாம்பன்நீர்வழி வழியே சென்னை துறைமுகத்திற்குச் சென்று வந்தன. பின்னர் அந்தப் பொதிகள் ஆழ்கடல் செல்லும் பெரிய கப்பல்களுக்கு மாற்றப்ப்டடு இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தன.

கும்பெனியாரது இச் சரக்குக் கப்பல்களுக்குப் பாம்பன் துறைமுகத்தில் வரிசைக்கிரமத்தில் நிறுத்தி சுங்கச் சோதனை இடுவதில் இருந்தும், சுங்கத்தீர்வை விதிப்பில் இருந்தும், விலக்கும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் எனக் கும்பேனியார் மன்னரிடம் கோரி இருந்தனர். இந்தக் கோரிக்கையையும் மன்னர் நிறைவேற்றவில்லை.

இதனால் சீற்றமடைந்த கும்பெனிக் கலெக்டர் சேது நாட்டில் தங்களுக்குத் தகுந்த மதிப்பு அளிக்கப்படுவதில்லையென்றும், மன்னரது நிர்வாகம் ஆங்கிலேயருக்குச் சிறிது அளவு கீட வளைந்து கொடுக்காமல் உதாசீனம் செய்து வருகிறது எனவும் தமது அறிக்கையில் முறையீடு செய்து இருந்தார்.
கி.பி. 1794 செப்டம்பர் மாதம் முதல் வாரம், சேதுபதி மன்னருக்கு அவசரக் கடிதம் ஒன்றினைக் கலெக்டர் பவுனி என்பவர் அனுப்பி இருந்தார்.

அது கடிதம் அல்ல. சம்மன்ஸ் – அழைப்பாணை. இராமநாதபுரம் சிவகங்கை கமஸ்தானங்களுக்கான பூசல்கள் பற்றிய விசாரணைக்கு முத்துராமலிங்கப்பட்டினம் சத்திரத்தில் சேதுபதி மன்னர் ஆஜராமாறு அறிவிக்கம் ஆணை. என்ன திமிர் ! வணிகம் செய்து பிழைக்க வந்த கூட்டம் அரசியலைத் தமது உடமையாக்கிக் கொண்டு செய்யும் ஆர்பாட்டத்திற்கு அடிபணிவதா ? இந்த உத்தரவை ஒரு பொருட்டாக மன்னர் எடுத்துக் கொள்ளவில்லையென்பதை அறிந்த கும்பெனி மேலிடம் கடும் சினத்தால் குதித்தது.

ஏனைய பாளையக்காரர்களும் சேதுபதி மன்னரைப் போன்று கும்பெனியாரையும் அவர்களது உத்தரவுகளையும் உதாசீனம் செய்தால் …..! இப்பொழுது சென்னையில் இருந்து கும்பெனி கவர்னர் சேதுபதி மன்னரைத் தொடர்பு கொண்டார். கலெக்டரது சம்மன்களுக்குக் கீழ்ப்படிந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையிட்டார். பலன் இல்லை.
மறவர் சீமையில் இந்த இறுக்கமான சூழ்நிலையில் தலையிட்டு அடங்காப்பிடாரியான சேதுபதி மன்னரைச் சிறையிலிட்டு மறவர் சீமையைத் தமதாக்கிக் கொள்ள நவாப் முயன்றார். திருச்சியில் இருந்த நவாப்பின் மகன் உம்-தத்ல்-உம்ராவைக் கலெக்டர் பவுனியைச் கந்திக்கச் செய்தார். ஆனால் தங்களது ஏகாதிபதியக்குறியில் சிறிதும் தளர்வு இல்லாத கும்பெகியார் முந்திக் கொண்டனர்.

ஏற்கனவே இராமநாதபுரம் கோட்டையில் உள்ள கும்பெனி ஒற்றன் மார்டின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவாறு கும்பெனியாரது உத்தரவுகளை மதித்து நடக்கும் மனோபாவம் சேதுபதி மன்னருக்கு இல்லை என்ற உண்மையைத் தெளிவாகடப புரிந்து கொண்ட கும்பெனித் தலைமை சேதுபதி மன்னர் மீது போர்தொடுத்துச் சேதுநாட்டைக் கைபற்றுவதற்கான இரகசியத் திட்டத்தைத் தீட்டியது.
சேதுபதி மன்னரது ஆயுதக் கிடங்கு, வெடிமருந்து இருப்பு, போர்வீரர் எண்ணிக்கை மற்றும் நாட்டுப்புறங்களில் உள்ள பயிற்சி பெற்ற நாலாயிரம் போர்வீரர்கள், ஆயுதம் ஏந்தக் கூடிய ஆறாயிரம் குடிமக்கள் ஆகியோர் பற்றியும் சிந்தித்துத் தங்களது திட்டத்தை முடிவு செய்தனர். ஆனால் சேதுநாடு முழுவதும் அப்பொழுது வறட்சியின் பிடியில் சிக்கி இருந்ததால் திட்டத்தை அமல்படுத்தாமல் தாமதித்து வந்தனர்.
புத்தாண்டு பிறந்தது.கி.பி.1795 பிப்ரவரி எட்டாம் நாள். உதயதாரகை கிழக்கே பிரகாசித்துக் கொண்டிருந்தது. கும்பெனியாரது பெரும்படை அணிகள் வரிசை வரிசையாக இராமநாதபுரம் கோட்டை வாசலைக் கடந்து மன்னரது அரண்மனையைச் சூழ்ந்து கொண்டன. கோட்டை வாசல் கதவுகளுக்கான சாவிகள் தனபதி மார்டினின் பொறுப்பில் இருந்ததால் கும்பெனியாரது திட்டம் முழுமையாக இரகசியத் திட்டமாக நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்பாகிவிட்டது.

சேதுபதி சீமை வரலாற்றில் வேதனை நிறைந்த பகுதி தொடங்கி விட்டது. மன்னரோ மன்னரது வீரர்களோ எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாத நிலை. கும்பெனியாரின் வஞ்சகத் திட்டம் நிறைவேறியது ! சிங்கத்தை அவனது குகையிலேயே விலங்கிட்டது போல, பாளையங்கோட்டை அணிகளுக்குத் தலைமை ஏற்று வந்த தளபதி ஸ்டீவென்சன் சேதுபதி மன்னரைக் கைது செய்து திருச்சி சிறைக்கு அனுப்பி வைத்தான்.

கலெக்டர் பனியும், தளபதி மார்டினும் அரண்மனையைக் கொள்ளையிட்டு விலை உயர்ந்த அணிமணிகளையும், அரசு கருவூலப் பணத்தையும் கைபற்றினர். அவை பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்தனர். குடிமக்கள் குழப்பம் செய்யாமல் இருக்கக் கோட்டைப் பகுதி எங்கும் பீரங்கி வண்டிகளும் வெடிமருந்துப் பொதிகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
சேதுபதி சீமையில் கும்பெனியாரது நேரடி ஆட்சி. அடங்க மறுத்த மன்னர் அடக்கப்படவில்லை, நீக்கப்பட்டுவிட்டார் என்றாலும் சேதுபதி மன்னரது குடிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கும்பெனியாருக்கு வரி செலுத்த மறுத்தனர். அவர்களது நிலங்களைக் கும்பெனியார் நில அனவை செய்து வரிவிதிப்பு செய்வதையும் எதிர்த்தனர். இந்த அமைதியான எதிர்ப்புகளைக் கலெக்டர் ஜாக்ஸன் வன்முறையில் அடக்கியொக்கினார்.

இதனால் மக்கள் தளர்ந்து விடவில்லை. மன்னர் விடுதலை பெறுவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன. மன்னரது தளபதி மயிலப்பன் சேர்வைக்காரன் என்பவர் மன்னரை திருச்சிக் கோட்டையில் இருந்து தப்புவிக்க முயன்று தோற்றார். பின்னர் மக்களைத் திரட்டி ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை தொடங்கினார். 24.4.1799 தேதியன்று முதுகுளத்துhர், அபிராமம், கமுதி ஆகிய ஊர்களின் கச்சேரிகள் தாக்கப்பட்டு கும்பெனியாரது ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டன.

தானியக் களஞ்சியங்களும், கைத்தறித் துணிக் கிடங்கிகளும் சூறையாடப்பட்டன. இவ்விதம் மக்களைத் திரட்டிக் கும்பெனியாருக்கு எதிராகக் கிளர்ந்த புரட்சியில் பக்கத்து பாளையங்களான குளுத்துhர், காடல்குடி, நாகலாபுரம், பாஞ்சாலங்குறிச்சி மக்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். நாற்பத்து இரண்டு நாட்கள் நீடித்த இந்தக் கிளர்ச்சி கும்பெனியார ஆயுத பலத்தினால் ஒடுக்கப்பட்டது.
கி.பி. 1800-1801-இல் இந்த மக்களது கிளர்ச்சி, சிவகங்கைப் பிரதானிகளது ஊக்குவிப்பினால் மீண்டும் துளிர்த்தது. இப்பொழுது இந்தக் கிளர்ச்சி, இராமநாதபுரம் சீமைப்பகுதிகளில் மட்டுமல்லாமல் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் சீமைகளிலும் பரவியது. கும்பெனியரது சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன், அவர்கள் வருவாய் பெறும் வழிகளும் சிதைக்கப்பட்டன.

அவர்களது ஆயுதப்படை மக்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை அடக்கத் திராணியற்றுத் திகைத்தது. ஆதலால், மிருகபலமும் அசுரப்பண்புகளும் கொண்ட மலேயா, இலங்கைப்படைகள் வரவழைக்கப்பட்டன. மறவர் சீமை மக்களை அவர்கள், ஓநாய்கள் கடித்துக் குதறுவ போலத் தாக்கி அழித்தனர். வீரத்தையும், மானத்தையும் கொண்டு வீறுபெற்றுப் போராடிய மறவர்களது வேலும், வாளும் விளையாட்டுப் பொருளாக வெடிமருந்து வீச்சில் நொறுங்கி அழிந்தன. முடிவு வெற்றி ஆன்ம பலத்திற்கும், ஆருயிர் இலட்சியங்களுக்கம் அல்ல. ஆயுத வலிமைக்கு !
மறவர் சீமையின் மகத்தான மக்கள் புரட்சி இம்முறையும் தோல்வி கண்டது. கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய தளபதி மறிலப்பன் சேர்வைக்காரரையும் மீனங்குடி முத்துக் கருப்பத்தேவைரையும் கும்பெனியாரின் கைக்கூலிகள் வேட்டை நாள்களைப் போலத் தொடர்ந்து சென்று, இறுதியில் அவர்களைப் பிடித்துக் கொடுத்துக் கும்பெனியாரது சன்மானத்தைப் பெற்றனர்.
இனிமேல் மறவர் சீமையில் தங்களை எதிர்ப்பதற்கு வீரமறவர் எவரும் இல்லை என்னும் நிலையை உணர்ந்த கும்பெனியார், மறவரது மகுடமாக விளங்கிய கோட்டைகளை இடித்துத் தரைமட்டமாக்கினர். கர்ணனது கவசக் குண்டலங்களைப் போல மறவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறித்து அழித்தனர். இவற்றிற்கெல்லாம் மேலாக வறட்சியிலும், வறுமையிலும் நைந்து நலிந்த குடிமக்கனைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்தனர்.

இவ்வளவும் செய்தும் கும்பெனித்தலைமைக்கு சேதுபதி மன்னரைப் பற்றிய பயம் நீங்கவில்லை. மீண்டுமொரு கிளர்ச்சி ஏற்பட்டால்….? அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?
இந்த மாபெரும் மக்கள் கிளர்ச்சியின் சூத்திரதாரி திருச்சிக் கோட்டைச் சிறையில் உள்ள சேதுபதி மன்னர் என்பதை கலெக்டர் லுhஷிங்டன் கண்டறிந்தார். சேதுபதி மன்னரை மக்கள் தொடர்பு கொள்ளாத வண்ணம் நீண்ட துhரத்தில் உள்ள நெல்லுhர் அரஷக்கு மாற்றுமாறு குடமபெளித் தலைமைக்குக் கலெக்டர் பரிங்துரைத்தார். சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைமயில் குண்டு துளைக்காத அறையொன்றில் சேதுபதி மன்னர் அடைத்து வைக்கப்பட்டார்.
அங்கும் ஆண்டுகள் பல கழிந்து – கோட்டைச் சவற்றிற்கும், சிறைக் கதவுகளின் பாதுகாப்பு எல்லைக்குள்ளும், இரவு பகல் என்ற பேதமற்ற பெருங்கொடுமையான அந்தச் சிறை வாழ்க்கையை நொடிப்பொழுதில் எண்ணிப்பார்ப்பது இயலாத காரியம். உணர்ச்சிகள் மயக்கப்பட்டு, உள்ளத்தின் நம்பிக்கைகள் நசுக்கப்ப்ட்டு அந்த சிறைவாசத்தில் கழியும் ஒவ்வொருவினாடியும் ஒரு யுகத்திற்கு சமமானது.

ஆடம்பரத்திற்கும் அனைத்துச் சுகபோகங்களுக்கும் உரியவராக இருந்த இந்தச் சேதுபதி மன்னர், இவ்விதம் பதினான்கு ஆண்டுகளைக் கழித்ததே ஒரு புதுமை. பெரும் சாதனை. நாற்பத்து எட்டு ஆண்டுகால ஜீவியத்தில் அருபத்து நான்கு ஆண்டு சிறை வாழ்க்கையில் செல்லரித்த அவரது உடல் ஒடுங்கியது. 23.1.1809 ஆம் தேதி இரவில் அவரது உயிர் பிரிந்து அமரரானார்.
ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தப் புனித பாரத பூமியில் இருந்து அகற்றி ஒழிக்க வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளினை எய்த எத்துணையோ கிளர்ச்சிகளும், போராட்டங்களும் நடத்தப்பெற்றதை வரலாற்றுப் பதிவுகளில் காண முடிகிறது.

கி.பி.1827-இல் வடமாநிலங்களில் நிகழ்ந்த சிப்பாய்களது கிளர்ச்சி, கி.பி. 1827-31 -,ல் கர்நாடக மாநில கிட்டூர் சமஸ்தானத் தன்னுரிமைக்குப் போராடிய கிட்டூர் ராணி சின்னம்மாளது போராட்டம், கி.பி. 1806 -இல் வேலுhர் கோட்டைச் சிப்பாய்கள் வெள்ளையருக்கு எதிராக துhக்கிய கலகக்கொடி, கி.பி.1802-இல் திருவாங்கூர் சமஸ்தானத் தளவாய் வேலுத்தம்பி மேற்கொண்ட கிளர்ச்சி, கி.பி. 1800-இல் கர்நாடகத் தளபதி துhந்தியாவாக் மக்களைத் திரட்டிக் கும்பெனியாருடன் பொருந்திய போர், கி.பி. 1801 -இல் சிவகங்கைப் பிரதானிகள் மருது சகோதரர்களும் ஊமைத்துரையும் கும்பெனியாருக்கு எதிராக மக்களைத் திரட்டிப் பொருந்திய போர்கள், இவைகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது, கி.பி. 1792-95-இல் சேதுபதி மன்னர், கும்பெனியாரது ஆதிக்கப் பேராசைகளை அழித்து ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளும், போர் ஆயுதங்களும் ஆகும்.
திப்பு சுல்தானுக்கு அஞ்சாத கும்பெனியார் சேபதி மன்னரது விடுதலை வேட்டைக்கு அஞ்சினர். குற்றச்சாட்டுக்கள், விசாரணை எதுவும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைத்துக் கொன்றனர்.
இறைவனது சந்நிதானத்தில் இணைந்து ஒளிரும் இலட்ச தீபங்கள் ஒளிபெறுவதற்கு ஒரே ஒரு சுடர்தான் பயன்படுகிறது. அதனைப் போன்று இந்த நாட்டின் விடுதலை வேள்விக்கு – இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் தீரர்களது உள்ளங்களில் உயிரினும் மேலான நாட்டுப் பற்றையும் நலமான சிந்தனைகளையும் புகுத்தி, வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழச்செய்து வெற்றி காண்பதற்கும், சுதந்திர தேவியின் சந்நிதானத்தைச் சுடர்மிகுந்த ஆலயமாக்குவதற்கும் மறவர் சீமையின் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் என்ற அக்கினிக்கொழுந்து பயன்பட்டுள்ளது.
தமது அரிய வாழ்க்கை முழுவதையும், அன்னிய ஆதிக்கக் கனவுகளுக்கு எதிராக, விடுதலை வேள்விக்கு ஆகுதியாக அளித்து, சுதந்திர யாகம் சுடர்விட்டு பொலிய, தியாகியான அந்த இளம் மன்னர் பற்றிய வீர நினைவுகள், அவரது விடுதலை முழக்கம் வருங்காலத் தலைமுறையினர் பிறந்த மண்ணை நேசித்து நாட்டுப்பற்றுடன் வாழ நினைவூட்டும் என்பதில் ஐயமில்லை!
கட்டுரை ஆக்கத்திற்கு துணையான ஆவணங்கள், நுhல்கள்:
1. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பக ஆவணங்கள்
2. சேதுபதி மன்னர் செப்பேடுகள்
3. இராமநாதபுரம் சமஸ்தான மான்யுவல் (ஆங்கிலம்) – ராஜாராம் ராவ்
4. இராமநாதபுரம் சமஸ்தான நிலமானியக்கணக்கு
5. மதுரைச் சீமை வரலாறு – (ஆங்கிலம் ) நெல்சன்
6. மதுரை வரலாறு (ஆங்கிலம் ) – டாக்டர்.கே. இராஜய்யன்
7. மறவர் வரலாறு ( கி.பி. 1700-1800) ஆங்கிலம் டாக்டர் எல். கதிர்வேலு
8. மற்றம் சுவடிள், கல்வட்டுகள்.

……

This entry was posted in சேதுபதிகள் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *