இந்நாளில் சொக்கம்பட்டி ஜமீன் என்று அழைக்கபட்டது அன்றைய வடகரை பாளையம் ஆகும்.இது நெல்லை சீமையில்ல் அமைந்துள்ள பாளையமாகும்.
இவர்கள் மூதாதயர்கள் பெரிய குலசேகர பாண்டிய மன்னன் தெண்காசி நகரத்தினை ஆண்டு வரும்போது செம்பி(சோழ)நாட்டை துறந்து வந்தவர்கள். இவர்கள் பாண்டிய அரசனைக் கண்டு தன் வீரத்தால் மகிழச் செய்து ‘செம்புலி’ என்ற பட்டமும் பெற்று செம்புலி சின்னனைஞ்சாத்தேவர் (அ) சின்னனைஞ்சா தலைவனார் என்று அழைக்கபட்டார்.முதல் பட்டம்(கி.பி.1391-1431) முதல் வடகரை பாளையம் அமைத்து தொடர்ந்து பலர் பட்டத்துக்கு வந்தனர்.பின் குமார சின்னனைஞ்சா தேவர்(கி.பி. 1750-1760) வடகரை பாளயக்காரரானார் இவர்கள் மறவர் இனத்தில் உப்புக்கோட்டை மறவர் இனமாக திருநெல்வேலி சீமையில் அறியப்படுகின்றனர்.(சேற்றூர் ஜமீன் வித்துவாண்கள் மு.ரா.கந்தசாமிக்கவிராயர்,பி.சி.சி.பாண்டியன் எழுதிய’திருநெல்வேலி ஜில்லாவின் வடகரையாதிக்கத்தின் சரித்திரம்’ வால்யும் 2,1916,பக்.29 & எம்.செந்தூர் பாண்டியன்,வடகரை மறவர்கள்,ஆவண அமுதம்,சென்னை, அக்-டிஸ்.1992,பக்.13).
கேரள நாட்டுடன் எல்லை போர்கள்:
இவர்களது பாளையம் இன்றைய கேரள எல்லைகளுக்கு அருகில் இருந்ததால் கேரள நாட்டினருக்கும் இப்பகுதி பாளையத்தாருக்கும் இடையில் போர்கள் பல மூண்டுள்ளது.இவர் ஆய்நாட்டின் மீது படையெடுத்து அதனை வெண்றுள்ளார்.வேணாடு என்று அழக்கப்படும் திருவேனாட்டின் மீது படையெடுத்து அதனை வென்று “திருவொன்நாட்டை கொள்ளை கொண்ட மகராஜா திருவொன்னாத தேவர்” என சிறப்பு பட்டம் சூடியுள்ளார். திருவிதாங்கூர் மீதும் பல முறை படையெடுத்து அதனை பல முறை சூறையாடி திரிந்த இம்மக்களை கண்டு “பாண்டிப்படா” என்று கேரள மக்கள் அச்சத்தோடு அழைப்பது வழக்கம்.1759 திருவிதாங்கூர் வடகரை பாளயக்காரர்களால் சூரையாடப்பட்டது.
திருவிதாங்கூர் மன்னரின் கோபம்:
நெற்கெட்டான் செவ்வல் பாளயக்காரர் பூலித்தேவருக்கு மிகவும் உறுதுணையாகயிருந்து வரும் வடகரைப் பாளையக்காரரின் பகுதிகளுக்கு பதினைந்து மைல் தொலைவில் திருவிதாங்கூரின் மன்னரின் பகுதிகள் இருந்தன.வடகரைப் பாளயக்காரர் திருவிதாங்கூர் பகுதிக்குள் செங்கோட்டை கணவாய் வழியாக அடிக்கடி சென்று தாக்குத்லைத்தொடுத்து,பொருட்களைக் கவர்ந்து,மக்களுக்கு இன்னலும் விளைவித்து வந்தார். கேரளத்து ஆண் மக்கள் வீரத்திலே தொய்வு என்பதாலும், எல்லை தாண்டி பாண்டி மக்கள் உடல் பலமிக்கவர்கள் என்பதால் எதிர்த்துப் போரிட முடியாது என உனர்ந்தார். எனவே,வடகரைப் பாளையத்தை ஒடுக்க திருவிதாங்கூர் அரசர் காலத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தார்.
எதிரிக்கு எதிரி நன்பன்:
சின்னனைஞ்சா தேவர் வெள்ளையருக்கு எதிராக போராடி வரும் பூலித்தேவருடன் நெருக்கமாக இருந்தார். பூலித்தேவருடன் சேர்ந்துகொண்டு கும்பெனி பகுதியிலும் வடககரைப் பாளையக்காரர் கும்பெனிக்கு எதிராக செயல்பட்டு வருவதால் வெள்ளையர் ஏஜெண்ட் கம்மந்தான் கான்சாகிப் அதனை அடக்க முடிவு செய்தார்.எனவே கான்சாகிப் திருவிதாங்கூர் மன்னரை சந்தித்து பேசி இருவரும் பூலித்தேவருக்கும் வடகரைப்பாளையக்காரருக்கும் எதிராக செயல்பட தீர்மானித்தார்கள். எனவே இருவரும் கூடி ஒரு செயல் திட்டம் வகுத்தனர்.
செங்கோட்டையில் கூடிய பெரும் படை:
1759- அக்-6.ல் 1400 குதிரைப்படையுடனும் 18 பவுன்ட் சக்திவாய்ந்த 4 பீரங்கிகளுடனும், திருவிதாங்கூர் மன்னனின் ஆதரவுடன் படைநடத்தி வடகரை கோட்டையை கான்சாகிப் தாக்கினார். அக். 10ம் தேதி வடகரையை தோற்கடித்து வடகரை பாளையத்தைக் கைப்பற்றினான். இதில் சின்னனைஞ்சா தேவர் தோற்கடிக்கப்பட்டு நெற்கட்டாஞ்செவ்வலுக்கு சென்று தஞ்சமானார்.அடுத்து பூலித்தேவன் கோட்டையைப் பிடிப்பது யூசுப்கானின் வீரத்திற்கும் ஆங்கிலேயர்களின் வருவாய்க்கும் அவசியமாகியது. எனவேஆட்களும்.ஆயுதங்களும் திரட்டப்பட்டன. இதன் மூலம் வடகரைப்பாளையக்காரரின் பகுதிகள் ஆங்கிலேய அரசுக்கு கான்சாகிப் மூலம் கிடைது.
Victories over the Anglo-Nawabi forces helped the revolt spread to other polygars. [3] See also: Polygar [edit] Decline and end of vadakkarai Zamin After 1760, General yousuf khan began a systematic campaign, taking the forts of the major confederates one by one.
சொக்கம்பட்டி ஜமீனின் கோயில் திருப்பனிகள்:
17, 18 ஆம் நூற்றாண்டு வடகரையை ஆண்ட சின்னப் பட்டம் இராஜகோபாலத்தேவர் 1669-1721 மற்றும் பெரியசாமிசின்னனைஞ்சா தேவர் இவர்கள் இருவரின் திருவுருவச்சிலைகளும் குற்றாலம் நகரில் உள்ள சிவன் கோயிலில் உள்ள திருமுண்கற்றூனில் அமைக்கபட்டுள்ளது.அதன் மேலே உள்ள வாசகத்தில் ” துவஜஸ்தமத்தில் உள்ள மண்டபம் கட்டி, சித்திரை செப்பு சபை வேய்ந்தும், முகப்பு மண்டபம் கட்டி,பெரிய ஐந்து திருதேர்கள் செய்தும் கொடுத்து திருப்பனியாற்றிய வடகரை ஆதிக்கம் 1) இராஜகோபாலத்தேவர் 2) பெரியசாமிசின்னனைஞ்சா தேவர் என கல்வெட்டு உள்ளது.
பிற்காலத்தில் சொக்கம்பட்டி:
இவ்வாறு நீண்ட பாரம்பரியம் கொண்ட சொக்கம்பட்டி பல கவிஞர்களையும் தமிழ் புலவர்களையும் ஆதரித்துள்ளது. பிற்பாடு இது ஊற்றுமலை ஜமீனுட்ன் இனைக்கபட்டது.
செய்தி விபரம்:
சேற்றூர் ஜமீன் வித்துவாண்கள் மு.ரா.கந்தசாமிக்கவிராயர்,பி.சி.சி.பாண்டியன் எழுதிய’திருநெல்வேலி ஜில்லாவின் வடகரையாதிக்கத்தின் சரித்திரம்’ வால்யும்2,1916,ப்க்.29 & எம்.செந்தூர் பாண்டியன்,வடகரை மறவர்கள்,ஆவண் அமுதம்,சின்னை, அக்-டிஸ்.1992,பக்.13
ராபர்ட் ஓர்ம் முற்கூரிய நூல்,பாகம் 2,…………
மருதநாயகம் என்ற கான்சாகிப் நூல்-திவான்……………
2 Responses to வடகரை ஆதிக்கம் – சொக்கம்பட்டி ஜமீன்