விவேகானந்தருக்கு உதவியது யார்?

1893 செப்டம்பர் திங்கள் அமேரிக்கா சிகாகோ நகரில்  உலக சமயப் பேரவை மாநாடு நடைபெற்றது.   உலகும் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்னர். இந்தியாவிலிருந்து சுவாமி விவேகானந்தர் அவர்களும் சமயப் பேரவையில் கலந்து கொண்டார்கள். இந்தியாவின் பெருமையை உலக அரங்கிலே ஒளிவீசச் செய்தார்கள்.

“சிகாகோவில் நடைபெறவிருக்கும் உலக மாநாட்டில் சுவாமிஜி கலந்து கொள்ளும்படி மைசூர் மகராஜா தான் ! முதலில் சுவாமிஜியை கேட்டுக் கொண்டார்” என்பதை திரு. சுந்தரராம ஐயர் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் உண்மை, என்று 1984 ஜூன் ஓம்சக்தி இதழில் பக்.23ல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கூறப்பட்டுள்ளது,
“பல பத்திரிக்கைகள் அவரை பற்றிய தெளிவாக செய்திகள் வெளியிட்டுள்ளதை காண முடிகிறது. அதே சமயம் அவரைப் பற்றிய விரிவான செய்திகளைப் பத்திரிக்கைகளிலிருந்து பெற முடியவில்லை. திரு. சுந்தரராம ஐயர் மூலமாக நாம் தெரிந்து கொள்ளும் ஒரு உண்மை” என்று ஓம்சக்தி இதழ் அதே பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


மைசூர் மகராஜா தான் முதலில் கேட்டுக் கொண்டார் என்ற உண்மையை எடுத்துக் காட்டிய ஐயர் அவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. சுவாமிஜி அவர்களுக்கு வழிப் பயணத்திற்கு பொருள் உதவியவர் யார் என்ற ஐயரின் வாய் மொழிக்கு மக்களும் உடந்தையாக வேண்டுமா?
எனவே வரலாற்றுப் புரட்டுகளுக்கெல்லாம் உண்மையான சான்றுகள் எடுத்துக் காட்ட வேண்டியது எமது கடமையாகிறது.
“சுவாமிஜி! நீங்கள் சிகாகோ மாநாட்டிற்குப் போகிறீர்களா? நீங்கள் மேலை நாடு போகவேண்டும். இந்து மதத்தின் பெருமையை அவர்களுக்கு விளக்குங்கள். தெய்வீக அருளின் சக்தியை தெரிந்து கொள்ள தவறிவிட்டார்கள் அவர்கள்” – போர்பந்தர் முதல்மந்திரி.
“சுவாமிஜி! என் எளிய உதவியைத் உங்கள் சிகாகோ பயணத்திற்காக ஏற்க வேண்டும்” – கேத்ரி மகராஜா.
“ஆனால் நான் இன்னும் முடிவு செய்யவில்லை” – சுவாமிஜி.

பிறகு மானம் உறுதிப்பட்டது.  எதிர்பாராத இடங்களில் எல்லாம் உதவி கிடைத்தது என்று 1985 பூந்தளிர் மே 10 பக்.17ல் விவேகானந்தர் இதழ் எண் 15ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தெந்த இடம்? ஏன் குறிப்பிடப்படவில்லை? உதவிகள் கிடைத்திருக்கலாம் ஆனால்….!
உதவிய வல்லகளை வெளியிட்டிருந்தால் பாராட்டுக்குரியதாகும்.  அவர்களையெல்லாம் மறைத்து குறிப்பிட்ட ஒருவரை மட்டும் அறிமுகம் செய்வது நன்றி மறந்த செயலுக்கு ஒப்பாகுமல்லவா?
வரலாற்று அறிஞர் ம.போ.சி. அவர்கள் கூறுகிறார்.

“சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா நாட்டில் சிகாகோ நகரில் நடந்த சர்வத மத மாநாட்டிற்கு பேருதவி புரிந்து அவரை வழியனுப்பி வைத்தனர் சென்னை வாசிகள். இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி அரசர் அவர்களும் பேருதவி புரிந்தார். சுவாமிகள் திரும்பிய பின்னும் அவர்க்கு வரவேற்பளித்து  ஆர்வம் காட்டியது சென்னை” என்று “விடுதலைப் போரில் தமிழகம்” என்னும் தமது நூலின் பக்.103 பகுதி 1ல் குறிப்பிட்டுள்ளார்.
சுவாமிஜி அவர்களுக்குப் பேருதவி புரிந்தார் பாஸ்கர சேதுபதி என்று உண்மையை எடுத்துக்காட்டிய ம.போ.சி அவர்களுக்கு, முதன் முதலில் வரவேற்பளித்தது யார்? எங்கே நடந்தது என்பது தெரியாமல் இருக்க முடியாது. சென்னைவாசிகள் என்பதை செந்தமிழ் பிறக்கும் சேது நாடு என்று குறிப்பிட்டிருந்தால் சிறப்புடையதாக இருந்திருக்கும்.
இதோ, சுவாமிஜி என்ன சொல்கிறார்.
“உலக சமயப் பேரவையில் கலந்து கொள்ள வேண்டும் என்று,  தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, சமயப் பேரவையில் கலந்து கொள்ள வேண்டும் என்று என்னை வலியிறுத்தி, இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வலியனுப்பியவர் இப்பாஸ்கர  சேதுபதி அவர்களேயாவர்”.

இராமநாதபுரம் மாவட்ட சுவடி பக்.109 ல் மேலும் கூறுகிறார்:
“இதுவரை வெளியுலகு அறியாது சாதாரண துறவியாக இருந்த என்னை உலகறிய உலக ஞானியாக மாற்றியவரும் இப்பாஸ்கர  சேதுபதி அவர்களேயாவர். இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது.

இந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால் அதன் சிறப்பனைத்திற்கும் பாத்திரமானவர் சேதுபதி” என்று தமது அருகில் இருந்த சேதுபதி அவர்களை சுட்டிக்காட்டிப் பேசியவர் சுவாமி  விவேகானந்தர் அவர்கள்.-[பாம்பன் வரவேற்பில் சுவாமி பேசியது.

வெற்றித் தூண் கல்லில் பதியவைக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் மண்டபத்திலும் உள்ளது]
அமெரிக்கா சென்று  இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்து வெற்றி விருதுகளுடன் தாயகம் திரும்பினார் விவேகானந்தர்.
கல்கத்தாவில் மிகப்பெரிய வரவேற்புக்குழு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆனால். சுவாமி விவேகானந்தர் அவர்கள் நேராக கொழும்பு சென்றார். அங்கிருந்து இராமேஸ்வரம் வந்தார். வரவேற்றார் சேதுபதி அவர்கள்.
காரணமென்ன?
நான் முதன் முதலாகச் சேதுபதி அவர்களைச் சந்தித்து நன்றி தெரியப்படுத்திய பின் தான் வருவேன் என்று சொன்னார்கள்.  கப்பல் பாம்பன் வந்தது. சேதுபதி ஒரு படகில் சென்று சுவாம்ஜியை சந்தித்தார்.

சுவாமிகள் தரையில் கால் வைக்கும் முன் தமது தலையில் முதல் கால் வைத்து கிழே இறங்க வேண்டுமாறு பாஸ்கர சேதுபதியவர்கள் மண்டியிட்டு அடிபணிந்தார். இதை மறுத்து விட்டார் விவேகானந்தர். கையை தலையில் வைத்து இறங்கினார்.

அதன் பின்னர் சேதுபதி அவர்கள்  தமது பீட்டன் வண்டியில் ஏற்றினார். சுவாமிஜியை வண்டியில் அமரச் செய்து குதிரைக்குப் பதிலாக தாமே வண்டியை இழுத்துச் சென்றார். இதற்க்கு சான்று உண்டு  இன்றும்.
அதன் பின்னர் தான் பாம்பனில் வெற்றித் தூண் நிறுவப்பெற்றது  “சிலோஹம்! சிவோஹம்!!” என்று முழங்கினார் சுவாமிஜி.

பேச்சு முழுவதும் இராமேஸ்வரம் கோவில் கிழக்கு வாயிலில் கல்லில் பொறித்திருக்கிறது.  சேதுபதிக்கு இராமேஸ்வரம் கோவில் உட்பட 47 கோவில்களும், 28  சத்திரங்களும் உண்டு.

எந்தக் கால வெள்ளத்தாலும் சேதுபதி அவர்களின் சிறப்புகளை அறப்பணிகளை மறைக்கவோ, வரலாற்றை அழிக்கவோ முடியாது என்பது மக்கள் கண்ட உண்மை.
இதை மறைத்து, “குழந்தைகளின் மன வளர்ச்சிக்கும் அறிவு முதிர்ச்சிக்கும் மருந்து பூந்தளிர்”  என்று தவறான கருத்தை இளையோர் உள்ளங்களில் புதுத்துவது முறையன்று. தவறான கருத்துக்கு இடம் கொடுப்பது வரலாறு அன்று! புரட்டு ஆகும்.

புரட்டர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டிய கடமையை தவறவிட்டு விட்டது பூந்தளிர் என்பது தான் உண்மை.
Ramanathapuram was the first place to be visited by Vivekanandar after his historic trip to the United States. Sethupathy accorded a royal welcome to the saint at Pamban.  Then Vivekananda toured in kingdom and delivered speeches at Pamban, Ramanathapuram, Paramakudi and other places – Ramnad Dist Gazattier Page.110

வரலாற்றுச் சிறப்புமிக்க உலகச் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய சுவாமிஜி அவர்கள் முதன் முதலில் சேதுநாடு வந்தார், சேதுபதியைக் கண்டார் என்று இராமநாதபுரம் மாவட்ட சுவடி பக்.110 கூறுகிறது.
இந்த பாஸ்கர சேதுபதி அவர்கள் தான் மதுரை வடக்கு வெளி வீதியில் “சேதுபதி உயர்நிலைப் பள்ளி”யைத் துவக்கி ஏராளமான உதவிகளும் செய்தவர்.
இவருடைய வரலாறு இலண்டன் பழைய இந்திய மாளிகையில் இராமநாதபுரம் இராஜ பாஸ்கர சேது மன்னர் என்று இருக்கிறது.
…..
This entry was posted in சேதுபதிகள் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *