Daily Archives: 27/01/2012

ஆதித்த கரிகாலச் சோழன் கொலை

பரசுராமன் சூளுரையும் ஆதித்த கரிகாலன் கொலையும் சோழப் பேரரசன் முதலாம் இராசராசன் கி.பி.985இல் முடிபுனைந்திருக்கிறான். முடி புனைந்து சில ஆண்டுகளுக்குள்ளாகவே சேர நாட்டிலிருந்த காந்தளூர்ச் சாலையைத் தாக்கி வெற்றி பெற்றிருக்கிறான் என்பது அவனது மெய்க்கீர்த்தியால் நமக்குத் தெரிய வருகிறது. அவன் அவ்வாறு விரைந்து காந்தளூர்ச் சாலையைத் தாக்குவதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். … Continue reading →

Posted in சோழன் | Tagged | Leave a comment

தமிழில் சாதி நூல்கள் (19, 20 ஆம் நூற்றாண்டு)

`சாதியம் என்பது இந்தியச் சமூக அமைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வருகின்ற வாழ்க்கை முறையாகும். இந்தியச் சமூக அமைப்பில் சாதிகள் தோன்றிய காலம் எது என்று வரையறுப்பது ஆய்வாளர்களிடம் விவாதப் பொருளாகவே உள்ளது. தொழில் பிரிவினையே சாதிகளாக மாறி வந்தன என்றும், நான்கு வர்ணங்களே சிதைந்து சாதிகளாயின என்றும், நிலவுடை மைக் காலகட்டமே சாதிகளின் தோற்றத்திற்கு … Continue reading →

Posted in வரலாறு | Tagged , | Leave a comment

ஜல்லிக்கட்டு

ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.

Posted in மறவர் | Tagged | Leave a comment

பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் தமிழ்ப்புலமை

தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அறியாதார் யாருமிருக்க முடியாது. 50, 60 வயதைக் கடந்தவர்களுக்கு அவரது தேசீயமும் தெய்வீகமும் நன்றாகவே தெரிந்திருக்கும். இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு ஜாதித் தலைவராகவே தெரியும் (உபயம் — ஓட்டு வங்கியை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்ட குறுகிய புத்தி அரசியல் கட்சிகள் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு திராவிடக் கட்சிகள்.) … Continue reading →

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , , | 1 Comment