Daily Archives: 28/12/2012

பொன்னியின் செல்வன் -24

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 24 காக்கையும் குயிலும் இரவெல்லாம் கட்டையைப் போல் கிடந்து தூங்கிவிட்டுக் காலையில் சூரியன் உதித்த பிறகே வந்தியத்தேவன் துயிலெழுந்தான். விழித்துக் கொண்ட பிறகும் எழுந்திருக்க மனம் வராமல் படுத்திருந்தான். மேலக்காற்று விர்ரென்று வீச, மரஞ்செடிகளின் கிளைகளும் இலைகளும் ஒன்றோடொன்று உராய்ந்து ‘சோ’ என்ற சத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. அந்தச் சுருதிக்கிணங்க, … Continue reading →

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-23

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 23 அமுதனின் அன்னை வேளக்கார வீரர் படை பெரிய கடைவீதியின் வழியாகப் போயிற்று. படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள். ஒருவன் ஒரு பட்சணக் கடையில் புகுந்து ஒரு கூடை நிறைய அதிரசத்தை எடுத்துக் கொண்டு வந்து மற்ற வீரர்களுக்கு விநியோகித்தான்.பிறகு வெறும் கூடையைக் … Continue reading →

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன் -22

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 22 வேளக்காரப் படை முதலில், பல்லக்கின் வெளிப்புறத்திரை – பனை மரச் சின்னம் உடைய துணித் திரை – விலகியது. பின்னர் உள்ளிருந்த பட்டுத் திரையும் நகரத் தொடங்கியது. முன்னொரு தடவை வல்லவரையன் பார்த்தது போன்ற பொன் வண்ணக் கையும் தெரிந்தது. வந்தியத்தேவன் இனி, தான் குதிரை மேலிருப்பது தகாது … Continue reading →

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-21

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 21 திரை சலசலத்தது! ஒரே சமயத்தில் ஒருவனுக்குள்ளே இரண்டு மனங்கள் இயங்க முடியுமா? முடியும் என்று அன்றைக்கு வந்தியத்தேவனுடைய அனுபவத்திலிருந்து தெரிய வந்தது. சோழ வள நாட்டிற்குள்ளேயே வளம் மிகுந்த பிரதேசத்தின் வழியாக அவன் போய்க் கொண்டிருந்தான். நதிகளில் புதுப்புனல் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த காலம். கணவாய்கள், மதகுகள், மடைகளின் … Continue reading →

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment