Daily Archives: 11/07/2013

இளம் பெருவழுதி

இளம் பெருவழுதி என்னும் சங்க காலத்து அரசன் கடற்போரிலோ, கடற்கோளிலோ மாய்திருக்க வேண்டும். இவனை கடலுள் மாய்ந்த என்னும் அடைமொழியுடன் அழைப்பர். இவன் தனக்கென் வாழாது பிறற்குரியனாய் இருந்தான் எனவும், ஈகை இரக்கம் போன்ற நற்குணங்கள் பெற்றாவன் என்றும் குறிபிடப்படுகின்றது. இவன் திருமாலிடம் பேரன்புடைய்வனாக இருந்தான் எனவும் தெரிகின்றது. இளம்பெரு வழுதி சங்ககாலப் புலவர்களில் ஒருவனாகவும் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பொற்கைப் பாண்டியன்

பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான். பொற்கை பெற்ற வரலாறு : மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பெரும்பெயர் வழுதி

பெரும்பெயர் வழுதி என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இரும்பிடர்த் தலையார் என்னும் புலவர் புறநானூற்றில் இவனைப் பாடியுள்ளார்.[1] ஈகைக்கடன் பூண்ட கவுரியர் வழிவந்தவன் என இவன் குறிப்பிடப்படுகிறான். புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு இந்தப் பாண்டியனைப் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி எனக் குறிப்பிடுகிறது. கி.பி. 90 முதல் 120 வரை பாண்டிய நாட்டினை … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

மதிவாணன்

மதிவாணன் கி.பி. 60 முதல் 85 வரை முடத்திருமாறனுக்குப் பின்னர் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

முடத்திருமாறன்

முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிக்கோள்களும் செய்திகளும் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பசும்பூண் பாண்டியன்

பசும்பூண் பாண்டியன் என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னன். பூண் என்பது அரசர்கள் மார்பில் அணியும் கவச அணி. பசும்பூண் என்பது பூண் வகைகளில் ஒன்று. பசும்பூண் பாண்டியனின் படைத்தலைவன் அதிகன். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த வாட்போரில் கொங்கர் படை இவனைக் கொன்று ஆரவாரம் செய்தது. பசும்பூண் பாண்டியன் யார் : தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது.மூத்த குடியினன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

நிலந்தரு திருவிற் பாண்டியன்

‘நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து’ தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ‘நிலம் தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்’ எனக் குறிப்பிடப்படுகிறான். இந்த நெடியோன் இரு பெரு வேந்தரும், வேளிரும் சாயும்படி போரிட்டு நிலம் தந்தவன் ‘மண் பல தந்த திரு வீழ் பசும்பூண் பாண்டியன்’ என்பவனின் படைத்தலைவனாக விளங்கியவன் நாலை கிழவன் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுயுள்ளார்.கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment