இளம் பெருவழுதி

pandian012

இளம் பெருவழுதி என்னும் சங்க காலத்து அரசன் கடற்போரிலோ, கடற்கோளிலோ மாய்திருக்க வேண்டும். இவனை கடலுள் மாய்ந்த என்னும் அடைமொழியுடன் அழைப்பர். இவன் தனக்கென் வாழாது பிறற்குரியனாய் இருந்தான் எனவும், ஈகை இரக்கம் போன்ற நற்குணங்கள் பெற்றாவன் என்றும் குறிபிடப்படுகின்றது. இவன் திருமாலிடம் பேரன்புடைய்வனாக இருந்தான் எனவும் தெரிகின்றது. இளம்பெரு வழுதி சங்ககாலப் புலவர்களில் ஒருவனாகவும் திகழ்ந்தான். இவர் பெயரில் 2 பாடல்கள் உள்ளன.புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் வேறு, பரிபாடல் நூலிலுள்ள பாடலைப் பாடியவர் வேறு என்பது அறிஞர்கள் கருத்து. பாடலின் பொருளமைதியே இதற்குக் காரணம்.

பொருளடக்கம் :
  • 1 புறநானூறு 182
    • 1.1 பாடல்
      • 1.1.1 பாடல் தரும் செய்தி
  • 2 பரிபாடல் 15
    • 2.1 செய்தி

புறநானூறு 182 :

பாடல் :

உண்டால் அம்ம இவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர் அன்ன மாட்சி அனையர் ஆகித் தமக்கு என முயலா நோன் தாள் பிறர்க்கு என முயலுயர் உண்மை யானே.

பாடல் தரும் செய்தி :

  • இந்திரர் அமிழ்தம் = தேவாமிர்தம், சாவா மருந்து (கட்டுக்கதை நம்பிக்கை)

அமிழ்தம் பெறினும் பகிர்ந்து உண்ணுபவர், சினம் கொள்ளாதவர், தூங்காமல், அஞ்சாமல் உழைத்துப் புகழுக்காக உயிரையும் தருபவர், உலகையே கூலியாகப் பெறுவதாயினும் சான்றோர் பழிக்கும் செயலைச் செய்யாதவர், முயற்சியைப் பிறர் நலனுக்கு ஆக்குவோர் ஆகிய இவர்கள் வாழ்வதால்தான் உலகம் வாழ்கிறது.

பரிபாடல் 15 :

செய்தி :

  • திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை = கேழ் இருங்குன்று (அழகர் மலை)

அழகர் மலைத் திருமாலை வழிபடுமாறு இந்தப் பாடல் கூறுகிறது. இந்தத் திருமாலின் பெருமை இப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது.

66 அடிகள் கொண்ட இந்தப் பாடலுக்கு மருத்துவன் நல்லச்சுதன் என்பவர் இசை அமைத்து நோதிறம் என்னும் தமிழ்ப்பண்ணால் பாடியுள்ளார்.

This entry was posted in பாண்டியன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *