Monthly Archives: July 2013

வரகுணன் பாண்டியன் -கி.பி. 792-835

வரகுணன் கி.பி. 792 முதல் 835 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.இரண்டாம் இராசசிம்மனின் மகனான இம்மன்னன் இவன் பாட்டன் பெயரான சடையவர்மன் என்ற பெயரை சிறப்புப்பெயராகப் பெற்று சிறப்புற்றவன்.முதல் வரகுணப் பாண்டியனுமான வரகுணனைக் “கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன்” என சின்னமனூர் செப்பேட்டில் இவனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.நந்திவர்மன் சோணாட்டை ஆட்சி செய்த பொழுது வரகுணப் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

இரண்டாம் இராசசிம்மன் பாண்டியன் -கி.பி. 790-792

இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 முதல் 792 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னனாவான்.இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன் இராசசிம்மன் நெடுஞ்சடையன் என அழைக்கப்பெற்ற பாண்டிய மன்னன் பராந்தகனுடைய மகனாவான்.இவனது ஆட்சியில் எப்போரும் நிகழவில்லை இத்தகைய காரணங்களினால் இவனைப் பற்றிய வரலாறுகள் செப்பேடுகள்,பட்டயங்கள் எவற்றுள்ளும் குறிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பராந்தகன் பாண்டியன் -கி.பி. 765-790

பராந்தகன் கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் நெடுஞ்சடையன் என்ற அடைமொழியினைப் பெற்றவன். கங்க அரசன் மகள் பூதசுந்தரி இவன் தாயாவாள் கி.பி. 765 முடிசூடிக் கொண்ட இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றவன். இவனைப் பற்றிய தகவல்கள் வேள்விக்குடிச் செப்பேடுகளிலும், சீவர … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பராங்குசன் பாண்டியன் -கி.பி. 710-765

  பராங்குசன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.ரணதீரன் மகனான இவன் தனது பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான்.மாறவர்மன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்த இவன் தேர்மாறன் எனவும் முதலாம் இராசசிம்மன் எனவும் அழைக்கப்பட்டான்.   பொருளடக்கம் : 1 பராங்குசன் ஆற்றிய போர்கள் 1.1 நந்திவர்மனுடனான … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

ரணதீரன் பாண்டியன் -கி.பி. 670-710

ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான். ரணதீரன் ஆற்றிய போர்களும் பெற்ற பட்டங்களும் : ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

அரிகேசரி பாண்டியன் -கி.பி. 640-670

அரிகேசரி கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஆவான்.பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மகனான இவன் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டான்.கி.பி.640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றான்.திருவிளையாடல் புராணத்தில் இவனைச் சுந்தர பாண்டியன்,கூன் பாண்டியன் போன்ற பெயர்களினால் அழைத்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   அரிகேசரி … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

செழியன் சேந்தன் பாண்டியன் -கி.பி. 625-640

செழியன் சேந்தன் கி.பி. 625 முதல் 640 வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான்.அவனி சூளாமணியின் வழித்தோன்றலும் ஆவான்.சடையவர்மன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த இவனே இப்பட்டத்தினை முதன் முதலில் பெற்றவனும் ஆவான்.இம்மன்னனது பெயரால் இவன் ஆட்சியில் கொங்கு நாடு இருந்தது.இவன் பெயரால் அமைந்த ஊர்தான் கொங்கு நாடான கொல்லிக் கூற்றத்துச் சேந்தன் மங்கலம் ஆகும்.இவன் காலத்தில் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

அவனி சூளாமணி பாண்டியன் -கி.பி. 600-625

அவனி சூளாமணி கி.பி.600 முதல் – 625 வரை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான்.பாண்டிய மன்னர்கள் சடையவர்மன்,மாறவர்மன் என்ற பெயர்களை தம் பெயர்களிற்கு முன்னர் சூட்டுக் கொள்வது வழக்கம் அஃது போலவே அவனி சூளாமணியும் தன் பெயரை மாறவர்மன் அவனி சூளாமணி என அமைத்துக் கொண்டான்.பாண்டியன் கடுங்கோனின் மகனாவான் இவன் என்று வேள்விக்குடிச் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

கடுங்கோன் பாண்டியன்-கி.பி. 575-600

இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. முத்தொள்ளாயிரம் என்னும் நூல் கடுங்கோன் என்னும் பெயரால் பாண்டிய மன்னன் ஒருவனைச் சுட்டுகிறது. [1] வேறு சான்றுகள் கடுங்கோனைப் பற்றிக் கிடைக்காததால் இவனை வரலாற்றுக்கு முந்தைய தொல்பழங்காலப் பாண்டியர் பட்டியலில் ஒருவனாகக் கொள்ளலாம். ‘கடுங்கோ’ என்னும் பெயருடன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் அரசனும், பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

நம்பி நெடுஞ்செழியன்

நம்பி நெடுஞ்செழியன் கி.பி. 170 முதல் 180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பேரெயின் முறுவலார் இம்மன்னனைப் பற்றிப் பாடியுள்ளார். அதில் “செய்தக்க எல்லாப் செய்தவன். இறந்துவிட்டான்! புகழ் கொண்டான். இவனை இடுகாட்டில் புதைத்தால் என்ன? சுட்டால் என்ன?’ என இப்புலவர் வருந்திக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. நம்பி நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டியர் மரபில் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment