பராங்குசன் பாண்டியன் -கி.பி. 710-765

 

பராங்குசன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.ரணதீரன் மகனான இவன் தனது பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான்.மாறவர்மன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்த இவன் தேர்மாறன் எனவும் முதலாம் இராசசிம்மன் எனவும் அழைக்கப்பட்டான்.

 

பொருளடக்கம் :
  • 1 பராங்குசன் ஆற்றிய போர்கள்
    • 1.1 நந்திவர்மனுடனான போர்
    • 1.2 கொங்கு நாட்டுப் போர்
  • 2 சைவ சமயப் பணிகள்

பராங்குசன் ஆற்றிய போர்கள் :

நந்திவர்மனுடனான போர் :

கி.பி.710 ஆம் ஆண்டு ஆட்சி ஏறிய பராங்குசன் சோழ நாட்டையும்,தொண்டை நாட்டையும் ஆண்டு வந்த பல்லவ மன்னனான நந்திவர்மன் மீது பகை ஏற்பட்ட காரணத்தினால் குழும்பூர்,நெடுவயல்,பூவலூர்,கொடும்பாளுர்,பெரியலூர் ஆகிய ஊர்களில் போர் செய்தான் பராங்குசன்.பாண்டி நாட்டைப் பிடிக்க எண்ணிய நந்திவர்மனும் படையுடன் வந்தான் இதனை அறிந்த பராங்குசனும் வட எல்லையிலேயே நந்திவர்மனைத் தோற்கடித்தான்.நென்மேலி,மண்ணை ஆகிய இடங்களில் போர் நடைபெற்றது.இப்போரில் நந்திவர்மன் பராங்குசனைத் தோற்கடித்தான் என திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார்.இத்தகவலை கச்சிப்பரமேச்சுர விண்ணகரப் பதிகம் மற்றும் நந்தியின் உதயேந்திரச் செப்பேடு இரண்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது.

கொங்கு நாட்டுப் போர் :

கொங்கு நாட்டின் மீது படையெடுத்த பாண்டியன் பராங்குசன் கங்க அரசனை வென்று அவன் மகள் பூதசுந்தரியை மணந்தான்.கொங்கு வேந்தர்கள் பராங்குசனிற்குக் கப்பம் கட்டினார்கள் என வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

 

சைவ சமயப் பணிகள் :

கொங்கு நாட்டிற்குப் படையெடுத்து போரில் வென்ற பராங்குசன் காவிரி ஆற்றில் அமைந்திருந்த கொடுமுடிக்கு வருகை புரிந்தான்.சிவபெருமானை வணங்கி பொன்னும,பொருளும் காணிக்கையாக அளித்தான்.இக்குறிப்பானது வேள்விக்குடிச் செப்பேட்டில் கொடுமுடி மகுடி ஈசனை வணங்கினான்.சைவ சமயத்தைப் போற்றியவன் கோயில் பணிகள் செய்தான்.கொடுமுடி ஈசனுக்குப் பொன்னும்,பொருளும் ஈந்தான்.மனைவி பூதசுந்தரியோடு கொடுமுடியில் பலநாள் தங்கினான்.கொடுமுடியும் இவனது ஆட்சியில் இருந்தது அதனால்தான் இத்தலம் திருப்பாண்டிக் கொடுமுடி எனப்பெயர் பெற்றது என பராங்குசனின் சிவபக்தியினைப் பற்றி வேள்விக்குடி செப்பேட்டிலும்,கொடுமுடிக் கல்வெட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பராங்குசன் தன பாட்டனைப்போலவே இரணியகர்ப்பததானங்களும்,துலாபாரதாங்களும் செய்தான்.இறையனார் களவியல் மேற்கோள் பாடல்கள் இவனைப் புகழ்ந்து பாடின! வீரமும்,பெருமையும்,புகழும் உடையவனாகத் திகழ்ந்தான் பராங்குச பாண்டியன்.

This entry was posted in பாண்டியன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *