Daily Archives: 10/08/2013

வழுதி (பாண்டியர்)

வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று. இயல்தேர் வழுதி என்று வடபுல மன்னர் வாடப் போருக்கு எழுந்த பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியும்  தகைமாண் வழுதி என்று பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனும்  போற்றப்படுகின்றனர். கூடல் , மருங்கை , கொற்கை ஆகிய இடங்களில் இருந்துகொண்டு வழுதி அரசர்கள் ஆண்டுவந்தனர். வழுதி பல கோட்டைகளை … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பஞ்சவர்

பஞ்சவர் என்னும் சொல் பாண்டியரை உணர்த்தும். இப்பெயரில் இலங்கையை பொதுக்காலத்திற்கு சற்று முன்னர் ஆண்ட ஐந்து பாண்டியர்களும் குறிக்கப்படுகின்றனர். சங்ககாலத்திலும் பிற்காலத்திலும் பாண்டியரை பஞ்சவர் என்னும் பெயருடன் அழைப்பது மரபாகவே ஆனது. சங்ககாலக் குறிப்புகள் : சிலப்பதிகாரத்தில் வரும் நெடுஞ்செழியனை வாயில்காவலன் ‘பழியொடு படராப் பஞ்சவ வாழி’ என்று வாழ்த்தி விளிக்கிறான். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

கவுரியர்

கவுரியர் என்னும் சொல் பாண்டியரைக் குறிக்கும். கவவு என்னும் உரிச்சொல்லுக்கு அகத்திடுதல் என்பது பொருள். இந்த உரிச்சொல் கவர் என்னும் வினைச்சொல்லாக மாறி, கடல்கோளுக்குப் பின்னர் புதிய நிலப்பகுதியைக் கவவு செய்துகொண்ட (தனதாக்கிக்கொண்ட) அரசர்குடி கவுரியர் எனப்பட்டது. இராமன் இலங்கை வெற்றிக்குப் பின் ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு மறை ஓதி வழிபட்ட கோடி (தனுஷ்கோடி) கவுரியர் எனப் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

தென்னவன்

தென்னர், தென்னன், தென்னவர், தென்னவன், தென்னம் பொருப்பன், தென்னவன் மறவன், தென்பரதவர் போன்ற தொடர்கள் சங்கத்தொகை நூல்களில் தென்னாடு எனப்பட்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியரைக் குறிப்பனவாகவும், அவரோடு தொடர்புடைய மக்களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன. பாண்டிய மன்னர்கள் செழியன், சேய், பஞ்சவன், மாறன், வழுதி என்னும் பெயர்களாலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். ‘தென்’ என்னும் சொல் தென்-திசையைக் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment