அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்)

 #அம்பொன்நாட்டு_தேவர்கள்#அம்பனேரி_மறவர்கள்
மதுரை கோச்சடை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வில்லாயுதமுடைய அய்யனார் , முத்தையா சுவாமி திருக்கோயில். இருளாண்டி தேவர் மகன் கட்டமுத்துத்தேவர் சக்கரவர்த்தி ஜாதி என்று அம்பனேரி மறவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் .கோச்சடை முத்தையா கோயில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் கோயில் 10 தேவர் வகையறா குலதெய்வம் கோயில் . 1 :- கருப்பையாத் தேவர் வகையறா 2 :- கட்டமுத்துத் தேவர் வகையறா 3 :- இருளாண்டித் தேவர் வகையறா 4 :- மாயாண்டித் தேவர் வகையறா 5 :- காசித் தேவர் வகையறா 6:- சுப்பையாத் தேவர் வகையறா 7 :- துரைசாமித் தேவர் வகையறா8 :- குருநாதத் தேவர் வகையறா9 :- சாமிநாதத் தேவர் வகையறா 10 :- முத்துத் தேவர் வகையறா .

மனுடவியல் ஆய்வாளர் #LouisDumont (French Anthropologist) தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மறவர்களை ஆராய்ந்து அவர்களது வாழ்வியல் மற்றும் பழமை பற்றி பல ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளார் தென்காசி மற்றும் நெல்லை பகுதிகளிள் சில அக்காலத்தில் கிளுவை நாடு என்றே அழைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடபட்டுள்ளது.அக் கிளுவை நாட்டில் உள்ள மறவர்கள் வரலாறு மற்றும் பிரிவுகளை அவர் ஆய்வாக தொகுத்துள்ளார் அப்பிரிவுகள் யாதெனில் 1-அம்பனேரி மறவர்2-கொண்டையன் கோட்டை மறவர்3-செம்பநாட்டார் மறவர்4-அனில்கோட்டை மறவர் 5-கொத்தாலி மறவர்

இதில் குறிப்பாக நாம் அம்பநாடு அம்பனேரி மறவர்கள் பற்றியும் அவர்களது வாழ்வியல் மற்றும் வரலாற்றை பற்றியும் காண்போம் ஏனெனில் இவர்களை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்பில்லை !!. அம்பொன்நாடு(அம்பநாடு) என்பது பண்டைய காலத்தில் வைகை ஆற்றங்கரை ஒட்டி (கோச்சடை) மதுரையை தலைமையாக கொண்டு இயங்கிய நாடு அங்கு ஆதிக்கம் செலுத்தி வாழ்ந்த மறக்குடிகளே அம்பனேரி (அம்பொன்நாட்டு) மறவர்கள் இவர்கள் உப்புகோட்டை என்ற கோட்டை முறையை சார்ந்தவர்கள் என்றும் இவர்களும் #பாண்டியர்கள்_மரபு வழித்தோன்றலாவே ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.இவர்கள் கொத்து மற்றும் கிளை வழி 8 கொத்தும் 8 முதல் 16கிளைகள் இருந்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது அவை யாதெனில்(1)சென்னல் கொத்து-(சுத்தமான நீரில் வாழ கூட மீன் )(2)வட்டி கொத்து(3)காடை கொத்து(4)கருணண் கொத்து (5)மண்ணாதி கொத்து (6)உசுபு கொத்து(7)வன்னி கொத்து (8)பொது கொத்துமேலும் கி.பி 13 நூற்றாண்டு இறுதியில் பாண்டியர்கள் தென்காசிக்கு நகர்ந்த போது அதை தொடர்ந்து அம்பனேரி மறவர்களும் அங்கு நகர்ந்ததாகவும்,பண்டைய ஊத்துமலை பகுதிகள் மற்றும் பல பகுதிகள் இவர்கள் ஆதிகத்திலும் ஆட்சியிலும் பல நூற்றாண்டு இருந்துள்ளதாகவும் பிற்காலத்தில் அவைகளிள் கொண்டையன்கோட்டை மறவர்கள் ஆதிக்கம் செலுத்தியதாக ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் சில தகவல்களுடன் அடுத்த பதிவில் காண்போம் #Reference Anthropology On The Marchசங்க கால மறவர் மறவர் கதைப்பாடல்

**அன்புடன்**விக்னேஸ் தேவன்

This entry was posted in தேவர், மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *