ஆன்மீக தலைவர்களாலும், மேதைகளாலும் போற்றி பாராட்டப்பட்ட பசும்பொன் தேவர் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக சிறப்பு மிக்க, பெரும் செல்வாக்கு , அளப்பரிய நில உடமைகளை கொண்ட சிறந்த சீரிய குடும்பத்தில், 1980 – ம் வருடம் அக்டோபர் மதம் 30-ம் நாள் ( கீலக வருடம் ஐப்பசி மாதம் 15-ம் நாள் கந்த சஷ்டி திதியில் பூராட நட்சத்திரத்தில்) பசும்பொன் கிராமத்தில் பிறந்தார்.
ஆதியில் பசும்பூன் என்று அழைக்கப்பட்ட கிராமம்தான் இன்று கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமம் . இந்த கிராமத்தில்தான் மண் ஆசை – பெண் ஆசை – பொன் ஆசை இல்லாத தேவர் அவர்கள் , திரு . உக்கிரபாண்டித் தேவருக்கும் திருமதி இந்திராணி அம்மையாருக்கும் ஒரே மகனாக பிறந்தார்
தேவர் அவர்களின் வம்சாவழி மிகவும் சிறப்பு மிக்கது . இதோ
திரு . முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தந்தை திரு உக்கிரபாண்டித் தேவர் .
திரு உக்கிரபாண்டித் தேவர் அவர்களின் தந்தை திரு.வெள்ளைசாமித் தேவர் (இவரை சிறை மீட்டா தேவர் என்றும் அழைக்கபடுவார்) .
திரு.வெள்ளைசாமித் தேவர் அவர்களின் தந்தை திரு. முத்துராமலிங்கத் தேவர்(இவர் ஆதி முத்துராமலிங்கத் தேவர் என்று அழைக்கபடுவார்).
திரு ஆதி முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தந்தை திரு சிறை மீட்டா தேவர் (இவர் ஆதி சிறை மீட்டா தேவர் என்று அழைக்கபடுவார்). இவர்தான் இன்று நாம் வணங்கி போற்றும் தெய்வீக திருமகன் திரு முத்துராமலிங்கத் தேவரின் வம்சாவழி தலைவர் . இதில் சிறப்பு என்னவென்றால் இக்குடும்பத்தின் வாரிசாக ஒருவர் மட்டுமே பிறந்து வம்சகொடி தழைத்துள்ளது.
பலகோடி மக்களின் தன்நீகரற்ற தலைவர் திரு பசும்பொன் ஐயா அவர்கள் இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், ஏழை எளிய மக்களின் துயர்த்துடைக்கவும் அரும்பாடுபட்டவர். தன் வாழ்வையே அர்ப்பணித்த அந்த மாபெரும் தலைவரின் சொல்படி செயலில் நடத்தி காட்டுவோம்
மனிதனும் தெய்வமாகலாம் அவனுடைய நடத்தையால் என்பதை நிரூபித்து காட்டியவர் தேவர் பெருமான் அவர்கள், காவி உடுத்திய துறவி விவேகனந்தர் என்றால் காவி உடுத்தாத கடவுள் பசும்பொன் தேவர். அறியாதவர்க்கு தேவர் ஜாதி, புரியாதவர்க்கு தேவர் மனிதன், ஏழைகளுக்கு தேவர் தலைவர், முற்றும் துறந்த முனிவருக்கு தேவர் துறவி, தேவரை நினைத்து வணங்குவோருக்கு அவர் கடவுள்
“வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் ”
—-திரு உ . முத்துராமலிங்கத்தேவர்
…..
9 Responses to தெய்வீகத்திற்கு உயிரையும் தேசியத்திற்கு உடலையும் அர்ப்பணித்த , தெய்வத்தின் மனித வடிவம் திரு உ . முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்கை குறிப்பு :