இடம்: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்திலுள்ள ஓசனூத்திலிருந்து பசுவந்தனை செல்லும் சாலையிலுள்ள கீழமங்கலத்தின் வடபுறத்தில், தொடக்கப் பள்ளிக்கு அருகிலுள்ள கிணற்றங்கரையில் உள்ள கல்வெட்டுத் தூண்.
காலம்: கி.பி. 1162 முதல் கி.பி. 1177 வரை திருநெல்வேலி, கன்னியாகுமரிப் பகுதிகளை ஆண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியராகலாம்.
செய்தி: முதுகுடி நாட்டு மங்கலமான உத்தமபாண்டியநல்லூரில் முதுகுடி நாட்டீச்சுவரமுடைய நாயனார் பூசைக்குரிய தர்ப்பைப்புல் பறித்துக் கொள்வதற்காக இவ்வூரின் நிலங்களுக்கு உரியவர்கள் வசம் அல்லது ஊர் நிர்வாக சபையார் வசம் காசு (அச்சு) வழங்கப்பட்டது. கல்வெட்டின் பிற்பகுதி சிதைந்துள்ளது.
குறிப்பு: * – குறியிடப்பட்டால் அந்த எழுத்து கல்வெட்டு பொறித்தவரின் அவசரத்தால் அல்லது பிழையால் பொறிக்காமல் விடப்பட்ட எழுத்து எனப் பொருள்படும்.
“…” – இவ்வாறு புள்ளிகள் வைக்கப்பட்டால் எழுத்துகள் படித்தறிய இயலாவண்ணம் சிதைந்துவிட்டன எனப் புரிந்துகொள்க.
கல்வெட்டு வரிகள்
1 ஸ்வஸ்திஸ்ரீ கோற்சடை
2 யபந்மரான
3 திரிபுவனச் சக்கர
4 வ[ர்*]த்திகள்[ஸ்ரீ]குலை
5 சேகரதேவற்[கு*] யா
6 ண்டு இரண்டாவது முது
7 குடிநாட்டு மங்க
8 லமான [உ]த்தமப
9 [¡]ண்டிய[ந]ல்லூர்
10 நாயனார் முதுகுடி ந
11 ¡ட்டீச்சுரமுடைய
12 நாயன[¡*]ற்கு இவ்
13 வூரில் புல்லுப் ப
14 ரித்து கொள்ள வீ
15 … தேசித் திருவ
16 … நல்லூர் அச்சு ஒ
17 [ன்று]க்கு மூன்று….