ஈழத்தமிழ் வேந்தன் வெடியரசன்

விஷ்ணு புத்திர வம்சமும் வெடியரசன் கோட்டையும் 

 

இலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களை எல்லாம் பல தமிழ் மன்னர்களும் வன்னிமைகளும் ஆண்ட அதேநேரம் அவற்றுக்கெல்லாம் தலைமை அரசாக விளங்கியது யாழ்ப்பாண இராசதானிதான். உண்மையில் யாழ்பாண அரசை பேரரரசாக கொண்டு பிற தமிழர் வாழ் பகுதிகளில் சிற்றரசுகளே நடந்து கொண்டிருந்தன. இது குறித்து நாம் யாழ்பாண இராஜ்ஜியம் எனும் தொடரில் வரும் பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்.

                                                                 

மேலும் இலங்கை தென்னிந்தியாவின் கீழாக அமைந்திருப்பதால் தென்னிந்திய அரசுகளின் படைஎடுப்புக்களுக்கும் ஆட்சிக்கும் அடிக்கடி உட்பட்டு வந்திருக்கிறது என்பது தெளிவு. இதனால் சோழப்பேரரசின் படை எடுப்புக்கள் இங்கு நிகழ்ந்த போது அவர்களுடன் வந்த வெவ்வேறு படைபிரிவுகளும் இங்கு தங்கிவிட நேர்ந்தது. [ கவனிக்க சோழர் படையெடுப்புக்கள் காலத்தால் பிற்பட்டது என்பது அல்ல முற்காலச் சோழர்களின் காலத்திலிருந்து இலங்கை மீதான படையெடுப்புக்கள் நிகழ்ந்ததுடன் அவர்களுக்கும் முந்திய வரலாறையுடைய பாண்டியர்கள் காலத்திலும் இலங்கை மீதான படையெடுப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன ] அவ்வாறு வந்த படைப்பிரிவுகளும் சிற்றரசர்களும் தாங்கள் தங்கியிருந்த இடங்களில் ஆட்சியை அமைத்து வழிநடத்தி வந்தனர்.

 

 

 அப்படி இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் கரையோரப்பிரதேசங்களில் குறிப்பாக காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை போன்ற தீவுப் பகுதிகளில் யாழ்பாண அரசின் கீழ் சிற்றரசாக கரையோரக் காவலை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட அரசுகளுக்கு தலைமை தாங்கியவர்களே விஷ்ணு புத்திரர் வம்சத்தை சார்ந்தவர்கள். [கவனிக்க இவ்வரச மரபினர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகின்ற போதிலும் இல்லை இவர்கள் பிறப்பிலேயே இலங்கையை சார்ந்தவர்கள் என்று கூறி அதற்கு பல புராணங்களில் இருந்து சான்றுகள் கூறப்பட்டுள்ளன மேலும் நாகதீவு, ஏழ்பாலைநாடு எனும் தீவுநாடுகளையும் இலங்கையையும் கருத்தில் கொண்டால் இதுவும் உண்மை எனக்கருத இடமுண்டு.] கரையோரப் பாதுகாப்பை இவர்கள் பொறுப்பேற்றிருந்தபடியால் யாழ்ப்பாண அரசின் பாதுகாப்பில் இவர்களின் பணி அளவற்றதாக இருந்தது. இதன் நிமித்தம் இவர்களால் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட கோட்டைகள் நெடுந்தீவு, காரைநகர், ஊர்காவற்றுரை மற்றும் சில தீவுப்பகுதிகளில் அமைந்திருந்தது. 

– See more at: http://venkkayam.blogspot.in/2012/09/blog-post_12.html#sthash.XcPdtz9S.dpuf

வீர நாராயணன் பற்றிய குறிப்பில் புங்குடுதீவு,அனலைதீவு,காரைதீவு மற்றும் கரம்பொன் பருத்தியடைப்பு அவன் ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததாக உள்ளது. வீர நாராயணனின் சகோதரர்கள் விளங்குதேவன் நைனாதீவையும் ஏரிளங்குரவன் வேலனைத்தீவையும் ஆழ வெடியரசன் நெடுந்தீவை ஆண்டுள்ளான்.

இளம்பூரனார் தொல்காப்பியத்திற்கு உரை எழுதுகையில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதியின் செய்யுளை உவமிக்கின்றார் அதாவது நவகோடி நாராயணன் வணிகன் மகன் வீரன் என்று.

எம்மவர் வீரமும்மிக்கவர்கள் அதுமட்டுமல்ல இரவின் நிலவில் வானத்தில் தோன்றும்56 விண் மீன்களைப் பயன்படுத்தி பாய் மரக்கலங்கள் செலுத்துவதிலும் வல்லவர்கள் அதுமட்டுமன்றி வைத்தியத்திலும்,இயல் இசையிலும் தங்களை வெளிக்காட்டியவர்கள், சிறந்த கல்விமான்களுமாவர்.

வாணிப நோக்கத்துடன் அமைக்கப் பட்ட பாய்மரக் கலங்கள் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலத்திலும் எமது ஊரில் நிமிர்ந்து நிற்கும். பிற ஊர்க் கலங்கள் நீரில் அடித்துச் செல்லாமல் பாதுகாப்புக்காக எமது ஊரிலேயே அடைத்து வைக்கப்பட்டது , அதுமட்டுமன்றி வடக்கில் இருந்து (தமிழ்நாடு) தெற்கு நோக்கி (தமிழீழம்) பயணம் செய்யும் கலன்கள் முதலில் எமது ஊரையே அடையும் என்பதில் எந்தவித ஐயமும் இன்றி தெளிவாக தற்பொழுது பண்டைய தமிழன் பயன் படுத்திய பாய் மரக்கலங்களின் பயணம் காற்றின் உந்துதலுடன் நீரோட்டத்தின் உதவியுடனும் எப்படி அமையும் என ஒரு பரிட்சார்த்தம் செய்யப்பட்டது அதற்காக வடிவமைக்கப் பட்ட பாய்மரக்கலன் ஐ என் எஸ் தரங்கணி எனப் பெயரிடப்பட்டு மும்பை Maritime History Society யின் ஆதரவுடனும் இந்தியக் கடற்படையின் மேற்கு தெற்கு பிரிவுகளின் உதவியுடனும் மும்பை பல்கழைக்கழகத்தின் இளைப்பாறிய பேராசிரயர் பா.அருணாச்சலத்தின் தலைமையில் நாகபட்டினத்தில் இருந்து பயணத்தைத் தொடர்ந்தபொழுது அது வட தமிழீழத்தில் அமைந்த எமது ஊரையே முதலில் அடைந்தது. இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி பருத்தி உற்பத்தி மிகப் பெருமளவில் நடைபெற்றதனாலும் எமது ஊர் பருத்தியடைப்பு எனும் பெயர் கொண்டது.

வீர நாராயணன் ஆட்சியில் இருந்த பொழுது பருத்தியடைப்பின் கரையில் ஒரு கோட்டையைக்கட்டி ஆட்சி நடத்தினான் பின்பு வந்த போர்த்துக்கேயர் அதனை ஆட்சி நடத்தியது மட்டுமன்றி கடலுக்குள் ஒரு கோட்டையையும் அமிநால் டெமென்சிஸ் என்ற போர்த்துக்கேயத்தளபதியினால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஊர்காவற்றுறைக்கு போர்த்துக்கேயர் இட்ட பெயர் மயலவள இச் சொல் துறைமுகம் அல்லது துறைமுக மேடை எனப் பொருள்ப்படும். ஒல்லாந்தர் வசம் ஆட்சி மாறியதன்பின்பாக ஒல்லாந்தர் அதனை இன்றைய வடிவில் கட்டினார்கள் இக் கோட்டையானது பன்றியின் கால்வடிவில் அமைக்கப்பட்டுள்ளது ஒல்லாந்தர் அதற்க்கு இட்டபெயர் ஹீ மென்கில்.இக் கோட்டையானது எதிரி, நாட்டுக்குள் ஊடுருவாமல் கண்காணிக்கும் முக்கிய கேந்திர நிலையமாக ஒல்லாந்தர் பாவித்தனர்,இதனாலேயே காவலூர் என்றும் அழைத்தனர்.இவர்கள்தான் ஊர்காவற்றுறைக்கு லெய்டன் எனப்பெயர் இட்டனர்.ஆனாலும் நம்மவர் அதனை லைடன் தீவு என்று அழைத்தனர் அதுமட்டுமன்றி இக் கோட்டையைக் கட்டுவதற்காக ஒல்லாந்தர் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களில் இருந்தே பூதத்தம்பி என்பவரின் தலைமையில் கற்களைக் கொண்டுவந்தனர்.இக்கோட்டையை எம்மவர்

பூதத்த்தம்பிக் கோட்டை என்றும் அழைத்தனர் பின்னாளில் வந்த பிரித்தானியர் 1795 இல் இக் கோட்டையை சிறைக்கூடமாகவும் மருத்துவ நிலையமாகவும் பாவித்தது மட்டுமன்றி சுங்கப் பரிசோதனை நிலைய

மாகவும் பாவித்தனர்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என்பதற்க்கமைய எத்தனை எதிர்ப்புகளின் மத்தியிலும் சைவத்தைத் தளைத்தோங்க வைத்தவர்கள் நம் முன்னோர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்றும் எமது ஊரில் நிமிர்ந்து நிற்கின்றன சைவ 

ஆலயங்கள்.

யாழ்பாணத்தை பற்றியும் இராமேஸ்வரம்,சேதுபதியிலும் “குகன் வம்சம்” பற்றிய பல செய்திகள் பேசப்படுகின்றன. 

 

சேதுபதி குகன் குலத்தவர் “கருட,அணும கொடியுடையோர்” இதே சின்னம் போல ஈழத்து வெடியரசன் விஷ்னு குலத்தோன் சின்னமும் “கருட,அணும கொடிகளை கொண்டது”. சேதுபதியின் மகளான நீலகேசினாவை மனம்புரிந்த விஷ்னு புத்திரன் வெடியரசன் பற்றிய செய்திகளும் கோட்டைகளும் ஈழத்தில் நிலவுகின்றன

இராமர் அருளிய முதற்சேதுபதி குகன்:

 சோழர்களின் பாண்டிய படையெடுப்பால் காவிரிபூம்பட்டினத்தில் இருந்து நிறைய முக்குலத்தோர் இராமேஸ்வரத்துக்கு இடம் பெயர்ந்தனர். அப்படி வந்தவன் “எல்லாளன்” இவனை “ஏழாரன்” என கூறுவர். ஏழு அரசர்களுக்கு தலைவன் என பொருள் படும். இவனே குகசேனை தலைவர்களுடன் வந்த குளக்கோட்டன் என கூறுவர். இவனது வம்சம் தான் சேதுபதி என வெடியரசன் நூலாசிரியர் கூறுகிறார்.

 

 

முகுளி நாகர்: 

இலங்கையையின் வடபகுதியை ஆண்ட தமிழரசர்களான நாகர்களே முகுளி நாகர் என முற்குகர்(குகன்) என பிற்காலத்தில் மாறினர் என்ற கருத்தும் உண்டு. 

 

யாழ்பாண வைபவமாலை ஒரு புரட்டு: 

 

 

யாழ்பாணத்தை பற்றிய பிற்காலத்தில் எழுதப்பட்டதில் ஒன்று யாழ்பாண வைபவமாலை என்னும் நூலில், இவை யாழ்பாணத்தில் ஏனைய சரித்திரத்தை பொய்யாக்கி தமக்கு தேவையான புது சரித்தரத்தை அவைக்கள புலவரை வைத்து எழுதி கொண்டுள்ளனர்.முதலிமார்கள் பலர் புலவர்கள் அமர்ந்தனர் என்பது குறிப்பிட தக்கது. 

 

 

 

ஆரிய்சேகரன் கட்டியதாக கோவில்கள் பலவும் புரட்டு(பழைய நாகர்வம்ச மன்னர்கள் ஆலயங்கள்) 

 

 

 

போர்த்துகேயரின் ஆளுகைக்கு பின் பல கோவில்களை புனரமைத்தது முற்குகரே இருந்தாலும் பல கோவில்களை குளக்கோட்டன் கட்டியதாகவும் ஆரியசேகரன் கட்டியதாகவும் கூறுவது சுத்த பொய்யாகும். அது பழைய நாகர் வம்சத்தின் சைவ தெய்வங்களாம். 

 

 

 

செந்தமிழ் நாட்டு பொருனர்:

 மகாகவி பாரதியார் முக்குலத்தோர்களை செந்தமிழ் நாட்டு பொருனர் என புகழ்ந்துள்ளார். 

 

கலிங்க வம்சமாகன்:

கலிங்க வம்சத்தவன் மாகன் சேதுபதியில் இறங்கினான். இவனும் குகன் குலத்தோர். இவனது வம்சமும் சேதுகுலம் தான் இவனே யாழ்பாணத்திலும் சேதுவிலும் பிற்காலத்தில் இராஜ்ஜிய ஸ்தாபிதம் செய்து தமிழ்ராட்சியை நிறுவினான் என்பர்.

குகனை வேடுவன் என தவறாக சித்தரிக்கின்றனர்:


 குகனை இராமாயனத்தில் 5 லட்சம் படைவீரர்கள் தலைவன் என கூறுகின்றது. கலிங்கத்தின் மன்னனாகவும் குகன் இடம்பெறுகிறான். அசோகர் படையெடுப்பில் கலிங்கத்தை ஆண்ட காரவேலன் “திரமிள” சங்கமம் என்ற பழந்தமிழ் ஆட்சிப்பீடமாக கலிங்கம் இருந்துள்ளது. சோழரின் ஆளுகைக்குபின் அது தமிழ் தேசமாக மாறியது.குணசிங்கன் மட்டக்களப்பைக் கலிபிறந்து மூவாயிரத்து ஐந்நூறாம் வருஷம் பரபாலித்து வருங்காலம் கலிங்க ஓரிசா தேசத்தை அரசுபுரியும் குகசேனனுடைய புத்திரி உலகநாச்சி என்பவள் கௌதமபுத்தருடைய தசனத்தை எடுத்து நெடுங்கூந்தலுள் மறைவாய் வைத்துக் கைலயங்கிரியில் குகவம்சத்தார் முன் காலத்தில் எடுத்துக் கொண்டுவைத்த சிவலிங்கத்தையும் எடுத்துக்கொண்டு தனது சகோதரன் உலகநாதனுடன் தனது தந்தை குகசேனனிடம் விடைபெற்று வர்த்தகருடைய படகிலேறி மணிபுரத்திலிறங்கி விசயதுவீபத்தில் வந்து மேகவண்ணனைக்கண்டு குலங்கோத்திரமெல்லாம் விளங்கப்படுத்திப் புத்தருடைய தசனத்தைக் கொடுத்தாள். மேகவர்ணனும், புத்தமதத்துக்கு இனி அபாயமில்லையென்று அதிக சந்தோஷங் கொண்டு உலகநாச்சியை நோக்கி உமக்கு வேண்டியதைக் கேளுமென்ன உலகநாச்சியும் அரசனே! இந்த இலங்கையில் காடுசெறிந்து குடிவாழ்வில்லாத கிராமமொன்றீயும்படி வேண்டினள். அதைக்கேட்ட மேகவர்ணன் மட்டக்களப்பை அரசுபுரியும் குணசிங்கன் தனது சிநேகிதனாதலால் ஒரு திருமுகம் வரைந்து அதில் உமது மட்டக்களப்பு, உன்னரசுகிரி இவைகளில் காடுசெறிந்து குடிவாழ்வில்லாத பதி ஒன்று இந்த உலகநாச்சிக்குக் கைலஞ்சமாய் ஈய்ந்து கொடுக்கும்படி வேண்டி உலக நாச்சிக்குக் கொடுக்கும் உபகாரங்களையும், இரத்தினமாலையையும் கொடுத்து மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்தான். அவர்கள் கொங்கு காசி அப்பன்புட்டி வழியாய் வந்து திருமுகத்தைக் குணசிங்கன் கையில் கொடுத்தனர். குணசிங்கனும் திருமுகத்தை வாசித்து சந்ததியுரிமை கொண்டாடி மட்டக்களப்புக்கு வடபாகமாயுள்ள அம்பிலாந்துறைக்கப்பால் மன்னேறிமுனை வளர்ந்து காடுசெறிந்து குடிவாழ்வற்ற பகுதியை நிந்தமாயீந்து ஒரு இடத்தில் குடிகளை அனுப்பி வெட்டித்தூர்த்து மாளிகை உண்டாக்கி உலகநாச்சிக்கீய உலகநாச்சியும் குடிவாழ்ந்து சில காலம் சென்றபின், தனது தம்பி சிவநாதனைத் தந்தையிலிடத்திலனுப்பிக் குகன் குடும்பம் நூற்றாறும், சிறைக் குடும்பம் முப்பதும் எடுப்பித்துக் குகக்குடு;ம்பங்களைத் தன் அருகாயிருத்தி அந்த இடத்தில் ஆலயமியற்றிச் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வணங்கிவந்தனர். இவர்களின் சந்ததிகள் மட்டக்களப்பு, மண்முனை இருபகுதிகளையும் இருநூறு வருஷங்களாக ஆண்டு வந்தனர். பின்பு கலிங்ககுலத்து வங்கலாடன் என்பவன் அரசுக்கு வந்தான்.

 

 

 

 

 

 

சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:

சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.


சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:

குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.

 

 

 

 

 

 

 

 

நன்றி:

நூல்:விஷ்னுபுத்திர வெடியரசன் வரலாறு

உயர் திரு.ஐயா. மு.சு.சிவப்பிரகாசம் அவர்கள்

 

This entry was posted in சேதுபதிகள், தேவர், நாகர்கள், மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *