இளவேலங்கால் பாண்டியர் மறவர்கள் கல்வெட்டு

 

திருநெல்வேலியிலுள்ள பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகள் கல்வெட்டு வடுகப்படையுடன் வந்த வெங்கலராசனுக்கும் பாண்டியன் வெட்டும் பெருமாளுக்கும் இடையே நடந்த போர். இதன் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதை அரசு ஆவணகாப்பகமே வெளியிட்டுள்ளது.

1544 ஆம் ஆண்டில் விஜநகர மேலாதிக்கத்தை எதிர்த்து திருவனந்தபுரம் அரசர்கள்,திருவாடானை பாண்டியர்கள்(அஞ்சுக்கொத்து மறவர்கள்), தென்பரதவர்கள், போகலூரை சார்ந்த ஜெயதுங்க தேவர்(சேதுபதி) கலகக்கொடி உயர்த்தினர். விஜயநகர மன்னன் சதாசிவராயன் தனது உறவினனும் தளபதியுமான விட்டலராயனை(வெங்கலராஜன்) படையோடு அனுப்பினான். அப்பொழுது திருவனந்தபுரம் அரசனும்,கயத்தாற்றில் ஆண்டுவந்த பாண்டியனும் ஒப்பந்தம் செய்து கொண்டு தெண்காசி விஜயநகர மன்னனுடன் உறவுடையதாக இருந்தது. இவர்களிருவரையும் கலகக்காரர்களாக கருதி தென்பகுதிக்கு வந்தான் வித்தலராயன்.முதலில் திருவாடானை அஞ்சுகொத்து பாண்டிய மறவர்களை ஒடுக்கினான்.பின்பு தூத்துக்குடி பரதவர்களை ஒடுக்கினான். 

பின்பு திருவனந்தபுரம் அரசன் உன்னி கேரளவர்மனை ஒடுக்கினான்.பின்பு கயத்தார் பாண்டியனை ஒடுக்க தெண் பகுதிக்கு வந்தான். அப்போது நடந்த போரில் வடுக படையுடன் வந்த வெங்கலராஜனான விட்டலராயனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்த போரில் விஜய நகர தளபதி தோற்றான் எனவே கூறலாம்.கன்னடிய தளபதி விட்டலராயனுக்கும் வெங்கல ராஜனுக்கும் இடையே நடந்த போர் பற்றிய கல்வெட்டு கயத்தார் ‘இளவேலங்கால் கல்வெட்டு’ குதிரையுடன் ஒருவனும் காலாட்படையுடன் ஒருவனும் சண்டையிடுவதாக சிற்பம் ஒன்று உள்ளது. இதுவே சாட்ச்சியாகும்.

போரில் வடுக படையை எதிர்த்து போரிட்ட வீர மறவர்கள் ஆயிரக்கணகானோர் இறந்தனர். இதில் தளபதிகளான பத்து கொண்டையங்கோட்டை மறவர்களுக்கு பாண்டியன் நடுகள் எடுத்துள்ளான். இந்த கொண்டையங்கோட்டை மறவர்களுடன் பாண்டிய மன்னனின் பெயரும் அவனது வம்சப்பெயரும் தமிழக் தொல்லியல் துறையில் ஆவனமாக உள்ளது.

இந்த பத்து கொண்டையங்கோட்டை மறவர் தளபதிகளின் பெயர்கள் பின்வருமாறு: 300. முதல் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “போவாசி மழவராய சிறுவனான குண்டையங்கோட்டை மறவன் வடுக படையுடன் வந்த வெங்கலராஜன் குதிரையை குத்தி பட்டான்” 301. இரண்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டயங்கோட்டை மறவரில் சிவனை மறவாத தேவர் மகன் பெருமாள் குட்டி பிச்சான் காலாட்போரில் பட்டான்”

 

302. மூன்றாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டையங்கோட்டை அஞ்சாதகண்ட பேரரையரும் போரில் பட்டான்” 303. நாண்காம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டயங்கோட்டை மறவரில் சீவலவன் வென்றுமுடிகொண்டான் விசயாலயத்தேவன் மகனான விசயாலயத்தேவன் போரில் பட்டான் ” 304. ஐந்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டயங்கோட்டை மறவரில் அரசுநிலை நின்ற பாண்டிய தேவரின் புத்திரனான செல்லபெருமாள் இராமகுட்டி குதிரையை குத்திப் போரில் பட்டான்”

305. ஆறாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “ராசவேங்கை, பகந்தலை ஊரை சார்ந்தவன் தொண்டைமானின் மகன் குதிரைபடையுடன் பட்டான்” 306. ஏழாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டயங்கோட்டை மறவரில் பிரியாதான் தொண்டைமான் மகனான பிழைபொருத்தான் பகந்தலை ஊரை சார்ந்தவன்”

307. எட்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டயங்கோட்டை மறவரில் அஞ்சாதான் இராமேத்தி போரில் பட்டான்” 308. ஒன்பதாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “பெயர் தெரியவில்லை” 309. பத்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டயங்கோட்டை மறவரில் இளவேலங்கால் ஆண்டார் மகன் ஆள்புலித்திருவன் வெங்கலாராஜ வடுக போரில் பட்டான்”

இவர்கள் பாண்டிய வீரர்கள் அல்ல பாண்டியரின் தளபதிகள் இளவேலங்காலை சேர்ந்தவர்கள்.

நன்றி : திருநெல்வேலி அரசு அருங்காட்சியக்கம் தமிழக தொல்லியல் துறை

This entry was posted in கல்வெட்டு, தேவர், மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *