மறவர் சீமையில் மட்டும் ஆத்திமரம் காணப்படுவது ஏன்?

தமிழ் சாதியரிலே “செம்பியன்” என்ற சோழரின் பெயரை நாட்டு பெயராக சூடும் இனம் எது ஏன்? திருப்புல்லானி ஸ்ரீ ராமனை செம்பிநாட்டான் என்றும் சேது நாட்டான் என கூறும் வழக்கு ஏன்?

சேதுபதி என்ற சேதுகாவலன் செம்பிவளநாடன்,அநபாயன்,ரவிகுலசேகரன்,அகளங்கன்,மனுநீதிமன்னன்,

பரராஜகேசரி என அழைக்கபடுவது ஏன்?

செம்பி நாட்டு மறவரின் தொன்மை கூறும் சோழரின் “அத்திமரம்”.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1756852

http://tamil.thehindu.com/tamilnadu/

 

மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தினர் தெரிவித்துள்ளனர். 
சேர, சோழ, பாண்டியருக்கு, வில், புலி, மீன் சின்னங்கள் இருந்தது போல, போந்தை என்ற பனம்பூ; ஆர் என்ற ஆத்திப்பூ, வேப்பம்பூ ஆகியவையும், மூவேந்தர் அடையாள பூக்களாக விளங்கின. இவற்றில், ஆத்தி மரங்கள் மட்டும், தற்போது குறைந்து விட்டன. 


ஆனாலும், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே உள்ள மேலக்கன்னிசேரி, நிறைகுளத்து அய்யனார் கோவில், ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை, வீரமாகாளி கோவில் உள்ளிட்ட சில கிராம கோவில்களில், ஆத்தி மரங்கள் கோவில் மரங்களாக, பல நுாற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. 


அவற்றை ஆய்வு செய்த, ராமநாதபுரம், தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய தலைவர், வே.ராஜகுரு, செயலர், காளிமுத்து, கமுதி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப் பாண்டியன் ஆகியோர், இம்மரங்களுக்கும், சோழர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து கூறியதாவது: 


சோழர்கள், கிராமங்களை இணைத்து, நாடு, மண்டலம் என்ற பிரிவுகளாக்கி, நிர்வாகம் செய்து வந்தனர். சோழர்களின் ஆட்சியில், ராமநாதபுரம் மாவட்டத்திலும், கீழ்ச்செம்பி நாடு, வடதலைச் செம்பி நாடு, ஏழூர் செம்பி நாடு, மதுராந்தக வளநாடு போன்ற நாடுகள் உருவாக்கப்பட்டன. 
பிற்கால சோழர் ஆட்சியில், வணிகம், நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களுக்காக, ராமநாதபுரம் பகுதியில், சோழநாட்டு மக்கள் குடியேறினர். அப்போது, ஆத்தி மரங்களை, கோவில் மரங்களாக வளர்த்தனர். அவை இன்றும், அவ்வாறே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது, பாண்டிய நாட்டில் உள்ள ஆத்தி மரங்கள், சோழர்கள் விட்டு சென்ற அடையாள சின்னங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மருத்துவச் சிறப்புகள்


தலைவலி, காய்ச்சல், தோல் நோய்கள், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு மருந்தாக, ஆத்தி மர பட்டையும், வலி நிவாரணியாக இலைகளும் பயன்படுகின்றன. வயிற்றுப் புண்ணுக்கு, ஆத்தி பூ மொட்டுகள் மருந்தாகின்றன.


இலக்கியங்களில் ஆத்தி


குறிஞ்சிப்பாட்டில், 67வது மலராக கபிலரும், நலங்கிள்ளி – பெருங்கிள்ளி போரில், இருவரும் ஆத்தி மலர் சூடியதாக, கோவூர் கிழாரும் கூறுகின்றனர். தலைமாலையாக ஆத்தியை சூடிய, கரிகால் வளவனின் அழகை, பொருநர் ஆற்றுப்படை கூறுகிறது. ஆர்க்காடு, திருவாரூர், ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட பல ஊர்கள், ஆத்தி மரத்திற்கும், சோழர்களுக்குமான தொடர்பை உணர்த்துகின்றன.


ஆத்தி மரத்தின் அமைப்பு!


‘பாகினியா ரசிமோசா’ என்ற, தாவரவியல் பெயர் கொண்ட ஆத்தி மரம், கருமை, சொரசொரப்பு, கோணல்மாணலான தண்டு, ஆட்டு குளம்பு போன்ற இலை, வெளிர் மஞ்சள் நிற பூ, தகடு போன்ற திருகலான காய்களை கொண்டிருக்கும். மார்ச், ஏப்ரலில் பூத்து, ஆகஸ்ட் முதல், பிப்ரவரி மாதம் வரை காய்க்கும். 

 

சென்னை:ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம கோவில்களில், தலவிருட்சமாக உள்ள, ஆத்தி மரங்களுக்கும், சோழர்களுக்கும் தொடர்பு இருந்ததாக, ராமநாதபுரம் தொல்லியல்

வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை ஆத்தி மரங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து வளர்ந்து வருகின்றது. இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்ககால தமிழக மூவேந்தர்களில் சேரருக்கு போந்தை எனும் பனம்பூவும், பாண்டியருக்கு வேப்பம்பூவும், சோழருக்கு ஆர் எனும் ஆத்தி மாலையும் குடிப்பூ அடையாளமாக இருந்துள்ளதாக தொல்காப்பியம் கூறுகிறது. ஆத்திப்பூ கண்ணியாகவும் மாலையாகவும் தொடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகே மேலக்கன்னிசேரி நிறைகுளத்து அய்யனார் கோயில் வளாகத்திலும் , சித்தார்கோட்டை வீரமாகாளி கோயிலில் அருகேயும் ஆத்தி மரங்கள் கோயில் மரங்களாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை பல நூற்றாண்டுகள் பழமையான மரங்கள்.

பாரம்பரிய தாவரங்கள் பற்றி ஆய்வு செய்து வரும் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய தலைவர் வே.ராஜகுரு, செயலாளர் காளிமுத்து, ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப் பாண்டியன் ஆகியோர் இதுபற்றிக் கூறியதாவது,

சோழர் தொடர்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழங்கால நாட்டுப் பிரிவுகளில் கீழ்ச் செம்பி நாடு, வடதலைச் செம்பிநாடு, ஏழூர் செம்பி நாடு, மதுராந்தக வளநாடு போன்றவற்றின் மூலம் சோழ நாட்டுடனான தொடர்பு அறியப்படுகிறது. பிற்காலச் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் வணிகம் போன்ற பல காரணங்களுக்காக சோழநாட்டு மக்களின் குடியேற்றம் இப்பகுதிகளில் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் ஆத்தி மரம் இப்பகுதிகளில் வளர்க்கப்பட்டிருக்கலாம்.

வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை ஆத்தி மரங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து வளர்ந்து வருகின்றது. இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

சோழ நாட்டில் இருந்து  வெகுவாக குடியமர்ந்த செம்பி நாட்டு மறவர்களால் கொண்டு வரப்பட்டதே இந்த ஆத்தி மரம் இந்த மரம் இன்றைக்கு தமிழ்நாட்டிலே வெகு குறைவு. பாண்டிய நாட்டில் இராமநாதபுரத்தில் மட்டுமே கானப்படுகிறது.

நன்றி

=====

தமிழ் ஹிந்து

தினமலர் நாளிதல்

This entry was posted in சேதுபதிகள். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *