திருவிதாங்கூர் மறவர் படை

Travancore Maravar Army – A historical views with evidences

==============================================

மார்த்தாண்ட வர்மா

திருவிதாங்கூர் சமஸ்தானம்  மார்த்தாண்ட வர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது.மிகவும்திறமையானவரும் ராஜதந்திரியான அரசர் மார்த்தாண்ட வர்மா தொடர்ந்து பல்வேறு போர்களில்வென்று கன்னியாக்குமரி முதல் கொச்சி வரை சமஸ்தானத்தை விரிவுபடுத்தியவர்.(1)

ஆரம்பகாலத்தில் திருச்சி நாயக்க மன்னருடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு நாயக்கர் படையையும்கர்நாடக நவாபின் படைகளையும் பெற்று மன்னர் ஒரு படையை நிர்மாணித்து இருந்தார்.

ஆனால் அது அதிக காலம் நீடிக்க வில்லை நாயக்கர்கள் பல்வேறு காரணங்களால் மன்னருக்குஎதிராகவே கலகம் செய்தனர்.(2)

நவபின் படைகள் இன்னும் ஒரு படி மேலே சென்று மன்னரின் அமைச்சர்களையே கைது செய்தனர்.(3)

திருச்சி நாயக்கர் படை தன் செல்வத்தை அழித்து வருவதை உணர்ந்த மன்னர் நாயக்கர் படைபிரிவைமுற்றிலுமாக கலைத்துவிட்டு ஒரு பெரும் மறவர் படையை நிர்மாணித்தார்.(4)

தன்னாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து பெருமளவில் மறவர்கள் சேர்க்கப்பட்டனர். இது திருவிதாங்கூர்படையில் புதியதொரு சகாப்தத்தை ஏற்ப்படுத்தியது.(5)

குறுகிய காலகட்டதிலேயே பெரும் அளவில் நன்கு போர் பயிற்சி உடைய மறவர்கள் படையில்சேர்க்கப்பட்டனர். (6)

மறவர்கள் நாய்க்கர் போல் அல்லாமல் மன்னருக்கு விசுவாசமனவராய் இருந்தனர். மிகுந்த ஒழுக்கம்உடையவராகவும், அதித போர் திறமையுள்ளவராகவும் மறவர்கள் திகழ்ந்ததால் மன்னர் அவர்களைஎல்லைப்பகுதிகளில் நிலைக்கொண்டிருக்கச்செய்தார்.(7)

நாயக்கர் படை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து வெளியேறுமாரு ஆணையிடப்பட்டுமறவர்கள் நிலையான இராணுவமாக ஆக்கப்பட்டனர். (8)

மார்த்தாண்ட வர்மருக்கு முன் அரசாண்ட அரசரின் வாரிசுகள் அவருக்கு எதிராக கலகம் செய்தனர்.எட்டு வீட்டு பிள்ளைமார் மற்றும் மடம்பினர் ஆகிய கிளர்ச்சி அமைப்புகள் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்(9)

அரசர் பல நவீன ஆயுதம் தாங்கிய (Fire – arms) மறவர் படைப்பிரிவுகள் மற்றும் கோட்டைகள் உருவாக்கிகிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தினார்.(10)

( எட்டு வீட்டு பிள்ளை என்ற நாயர்களின் கிளர்ச்சி அமைப்பை அடக்க திருவிதாங்கூர் அரசருக்குபெரிதும் உதவியர் சிங்கம்பட்டி மன்னர். சிங்கம்பட்டி மன்னரின் மகன் தலமையில் பெரும் மறவர் படைஒன்று திருவிதாங்கூர் சென்று மிக திறமையாக போர் செய்தது. இந்த போரில் சிங்கம்பட்டி மன்னரின்மகன் வீர சொர்கம் அடைகிறார். சிங்கம்பட்டி சமஸ்தானத்தை கவுரவிக்கும் வகையில் பல்வேறுவிதமான விருதுகளும் பரிசுகளும் திருவிதாங்கூர் மன்னரால் சிங்கம்பட்டி மறவர்களுக்குவழங்கப்பட்டது. இந்த போரில் பங்கேடுத்த பல்வேறு மறவர் குடும்பங்கள் இன்றும் சிங்கம்பட்டிசமஸ்தானத்திற்க்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்)

காயம்குளம் அரசர் மற்றும் அவரது உறவினரான கொல்லம் அரசரும் சேர்ந்து கொண்டு திருவிதாங்கூர்சமஸ்தானத்தின் பகுதிகளை தாக்கினர்.(11)

பல்வேறு போர்களுக்கு பின்னும் காயம்குலம் படைகளை வீழ்த்தமுடியாத நிலையில் அரசர் மீண்டும்ஒரு பெரும் மறவர் படைப்பிரிவை நிர்மாணித்தார். இந்த படைப்பிரிவுக்கு தலைமை வக்கித்தவர்திருக்கருங்குடி காவல் தலைவரான பொன் பாண்டிய தேவர்.(12)

1000 நபர்கள் அடங்கிய குதிரைப்படையை பொன் பாண்டி தேவர் தலமை

தாங்கினார்.(13)

தொடர்ந்து நடைபெற்ற போரில் டச்சுக்காரர்கள் காயம்குலம் அரசர்க்கும் கொச்சி அரசர்க்கும் உதவினர்.டச்சுகரகள் வடக்கு பகுதியில் முழுவதும் வீழ்த்தப்பட்டனர். மொத்தபடையும் வடக்கில் இருக்கும்போது எதிர்பாரத விதமாக தெற்கில் டச்சுபடைகள் தக்கினர் குளச்சல் உள்ளிட்ட பகுதிகள் அவர்கள்வசம் சென்றது. மன்னர் மீண்டும் தெற்கு நோக்கி படைகளை நகர்த்தினார் குளச்சல் யுத்தத்தில் டச்சுபடைகள் முழுவதும் வீழ்த்தப்பட்டது.(14)

இறுதியாக டச்சுக்காரர்கள் தங்கள் வசம் இருந்த சிறு அரசர்களை மார்த்தாண்ட வர்மரின்ஒப்படைத்தனர். மறவர்களை அடித்தளமாக கொண்ட மார்த்தாண்ட வர்மரின் இராணுவத்தைடச்சுக்காரர்கள் தவிர்க்க முடியாததாக எண்ணினார். (15)

கொல்லம் போரில் திருவிதாங்கூர் படைகளை தடுத்து நிறுத்திய ஒரு பெரும் முதலையை ஒரு மறவர்தளபதி வெட்டி வீழ்த்தியது பற்றி ஒரு குறிப்பு ஒரு வரலாற்று நூலில் கூறப்படுகிறது. தொடர்ந்துமுன்னேரிய அந்த மறவர் தளபதியின் உதவியல் திருவிதாங்கூருக்கு பெரும் வெற்றி கிடைக்கிறது.கொச்சி அரசனின் தலையை வெட்டிய அந்த தளபதி போர் முடிந்த பின் கொச்சி அரசரின் தலையைதிருவிதாங்கூர் மன்ன்ர் முன் போடுகிறார்.இந்த 

செயலுக்கு அரசரால் பெரும் சன்மானம் வழங்கப்படுகிறது. அந்த தளபதியின் வம்சாவழியினர் இன்றுவரை அந்த சாலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். (16)

தனக்கு சிக்கல் ஏற்படும் போது தொடர்ச்சியாக மறவர் படையை ஏற்படுத்தினார் அரசர் மார்த்தாண்டவர்மா. மறவர்களின் குதிரை படை அனைத்து போரிலும் முக்கிய பங்கு அற்றியது.இதன் மூலம்தன்னுடைய ராணுவத்திற்கு பலமுல்ல அடித்தளத்தை அமைத்தார் மார்த்தாண்ட வர்மா.(17)

(பொன் பாண்டி தேவர் இன்றும் மக்களால் வழிபடப்பட்டு வருகிறார். கடுக்கரை என்னும் ஊரில்அவருக்கு கோவில் உள்ளது. அயினூட்டு தம்புரான் சுவாமியாக காட்சியளிக்கிறார்? ( இது குறித்தகூடுதல் விவரம் தேடப்பட்டு வருகிறது)

கேரள அரசாங்கம் இது பற்றி பல நூல்களில் ஆவனப்பட்டுத்தி உள்ளது. அவர்கள் காவல்துறையின்அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே குறிப்பிட்டு உள்ளனர்.

http://keralapolice.gov.in/kerala-police/history/police-in-ancient-kerala

 

நம்மவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா குளச்சலில் இருந்த பொன் பாண்டித்தேவரின் சமாதியைஅப்புறப்படுத்தி உள்ளனர். நம்மவர்களிடம் வேறு எதை எதிர்பார்ப்பது??

இன்றய மெட்ராஸ் ரெஜிமெண்ட் (Madras Regiment) திருவிதாங்கூர் படையில் இருந்துஉருவாக்கப்பட்டது தான். நாயர்கள் மட்டும் இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறார்கள். மறவர்கள்?

இழந்தது ஆயிரம் அதில் இதுவும் ஒன்று.

அடிக்குறிப்புகள்:

==================

1,4,9,10,11,14)The Travancore state manual by Travancore (India) – V. Nagam Aiya

2,5,7,8,12)Military Under Marthanada Varama and Rama Varma

3,6,13,15)Malabar And The Dutch by K. M. Panikkar

16)Saints, Goddesses and Kings: Muslims and Christians in South Indian Society, 1700-1900 Susan Bayly

நன்றி: திரு.கார்த்திக் தேவர்

This entry was posted in தேவர், தேவர்கள், மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *