காரண மறவர்

கல்தேர் ஓட்டிய காரண மறவர்

உத்திரகோசமங்கையில் கல் தேர் ஒட்டிய காரண மறத்தி என்னும் “பொன்னாச்சி அம்மன்” பற்றி கதையும் ஆதாரபூர்வமான சுவடியும் இருக்கும் அது காரண மறவர்களை குறிக்கின்றது. இவர்களை சக்கரவர்த்தி மறவர் எனவும் கூறுவர். மதுரை பூர்வீகமான மறவர்களில் இவர்களும் ஒருவர். மதுரை நெடுங்குளம்,பனங்காடி,கோச்ச்டை இன்னும் மதுரையில் பல இடங்களில் இருக்கும் மறவர்களில் இவர்கலும் ஒருவர். இதேப்போல் கொற்க்கை என்னும் தூத்துக்குடி பகுதியிலும் பரதவர் அருகே வாழும் இவர்கள் “பொன்னாச்சி அம்மன்” வழிபாடு உள்ளவர்கள். மதுரை பகுதிகளிலே “பொய்சொல்லா பாண்டியன்” மற்றும் “முத்தையா கருப்பையா” என்னும் இரட்டை தெய்வத்தை வழிபடுகின்றனர்.இவர்களில் பலருக்கு கிளைகள் அறியாது சிலருக்கும் மட்டுமே கிளை முறைகள் அறிந்தவர்கள் அது…..

காரன[சக்கரவர்த்தி] மறவர்.

1.தேவன்
2.ராயர்
3.பண்டையோன்
4.பருவச்சான்
5.முருகதினி
6.வளத்தான்

இவர்களை பற்றிய விரிவான வரலாறு விரைவில் பதிவேற்றப்படும். இவர்கள் “படை காரணவர்” களாக மறவர் பாண்டிய படைபற்றில் பனியாற்றிய கல்வெட்டு இரண்டை இங்கு சுட்டுகிறோம்.

க.என் 2/213 ஆண்டு:13-ஆம் நூற்றாண்டு
அரசு:பாண்டியர் அரசன்:கோனேரின்மை கொண்டான்
கோயில்:திருமறைநாதர்
இடம்:திருவாதவூர் மாவட்டம்:மதுரை

செய்தி: இலுப்பை குடி படைப்பற்றில் “படைகாரணவருக்கு” மானியமாக இலுப்பை குடி ஊரை பாண்டியன் வழங்கியுள்ளான்.

கல்வெட்டு:

ஸ்ரீ திருபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் களவழி நாட்டு இலுப்பை குடி காரணவர்க்கு திருவாதவூர் உடையார்திருமறைநாயனார் கோயில் செய்ய பெருமாள் ஆரணதொழு நின்றான இராசகோபால அமுதுபடி சாத்துபடி நின்றருளிபடி………..

படைகாரணவர் என்பது படைதொழில் செய்யும் படைமறவர்கள் காரணவர் என்றால் தலைவன் என அர்த்தம். படைகாரணவர் படைதொழில் பாண்டியர் வேண்டும் பொழுது படை தொழில் செய்பவர்கள் இவர்களுக்கு மானியமாக வழங்கபட்டுள்ளது.

இதேப்போல்
க.என் 10/2013 ஆண்டு:13-ஆம் நூற்றாண்டு
அரசு:பாண்டியர் அரசன்:கோனேரின்மை கொண்டான்
கோயில்:திருமறைநாதர்
இடம்:திருவாதவூர் மாவட்டம்:மதுரை:
செய்தி: படைப்பற்றில் “படைகாரணவருக்கு” மானியமாக பள்ளிகுறிச்சி என்னும் சமணர்படுகை உள்ள ஊரை பாண்டியன் வழங்கினான்.

கல்வெட்டு:
ஸ்ரீ திருபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் பள்ளிக்குறிச்சி படைகாரணவர்க்கு தங்களூர் ஆடிமாதம்…………..

இவ்வாறு பாண்டிபடைப்பற்றில் பொன்னமராவதி விராச்சிலை மறவரகளை பார்த்தோம். இப்போது காரணமறவர் பற்றி பார்க்க போகின்றோம்.
காரண மறவர்களே பாண்டியனின் ஆபத்துதவிகள்(வேளைக்காரர்):
ஆபத்துதவிகளே பாண்டிய மன்னனின் உயிரையும் குடும்பத்தையும் காக்கும் தற்காப்பு படையினர். இவர்கள்
பாண்டியன் உதிர உறவினர்களே இவ்வேலைகளுக்கு அமர்த்துவர்.

கண்டதேவி சுல்த்தான் கல்வெட்டில்:

தம்பிரான் பெருமாள் மீதாகண்ட வேலக்காரரான காரணவரும்…….

…கள்ளர் கருமர் புறத்தார் எங்கள் சத்துருக்கலான அறந்தாங்கி மறவரும்…..

என வரும் கல்வெட்டில் தென்னவன் ஆபத்துதவிகல் காரண மறவர்கள் என அறியப்படுகின்றனர். இவர்கள்
பாண்டியமன்னனின் மெய்காவலர்கள் ஆவர்.

இரு கல்வெடுகளில் “மதுரைக்கு காரணவரான பராக்கிரம பாண்டிய தேவர்” கொற்கை கொற்றவன் காரண சக்கரவர்த்தி என வந்துள்ளது. பாண்டியர்களின் மதுரை கொற்கை வழியினரான இவர்களை பற்றிய நெடிய பதிவை விரைவில் பதிவேற்றுவோம்………………

 

This entry was posted in மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *