சங்க இலக்கியத்தில் மறவர்கள்

சங்க இலக்கியத்தில் பல இடத்தில் போர்மரபினராகவும்

வேந்தர் மரபினராக காட்சியளிக்கும் மறவர்களை பற்றிய

குறிப்புகள்.

சங்க இலக்கியத்தில் மறவர்கள்

அகநாநூறு

13 தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்,

முனைதிரை கொடுக்கும் துப்பின், தன்மலைத்

தெறல் அருமரபின் கடவுட் பேணிக்

குறவர் தந்த சந்தின் ஆரமும்,

இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்  5

திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் –

குழியில் கொண்ட மராஅ யானை

மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது,

வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,

வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்-

-பெருந்தலைச் சாத்தனார்(அகம்:13:5)

பொருள்:

தன்னுடைய தென்கடலிலே பிறந்த முத்தினை கொத்தாகயுடைய அந்த

ஆரத்தை அணிந்தவன்; பகைவர் பணிந்து திறைக்கொடுக்கும்

ஆற்றலினையுடையவனும்,தன்னுடைய பொதிய மலையினிடத்தே கோயில் கொண்டிருப்பவனும்,பிறரால் வெற்றி கொள்ளப்படுவதற்கு அரியவனுமாகிய முருகக் கடவுளின் வழிப்பாட்டுக்கு குறவர்கள் தந்த சந்தன ஆரத்தை அனிந்தவன்; அத்தகைய பெருமையுடைய இரண்டு

ஆரங்களையும் அழகுற அணியும், திருமகள் விரும்பும் மார்பினையுடைய

மறவனாகிய தெண்திசையின் காவலன் பாண்டியன் ஆவான்.

ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,

வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத்-

தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை

நுழைநுதி நெடுவேல், குறும்படை மழவர்

முனைஆத் தந்து முரம்பின் வீழ்த்த  5

வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்

வல்ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்;

நடுகல் பீலி சூட்டித்; துடிப்படுத்துத்,

தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்(அகம்:)

பொருள்:

வெட்சி மறவர்களை(மழவர்) வீழ்த்திய கரந்தை வீரர்கள்(மறவர்கள்) அவர்களின் ஆனிரைகளை மீட்டு வருகின்றனர். இந்த வெற்றிக்கும் தம் வலிய

ஆண்மைக்கும் அறிகுறியான மணற் குன்றின் மேலுள்ள நடுகல் தெய்வத்தை வழி படுகின்றனர். துடியை முழக்கி தோப்பிக் கள்ளோடு

 செம்மறிக் குட்டியைப் பலி கொடுத்தனர். இப்படிப் பட்ட புலால் நாறும் காட்டு வழியில் என் மகள் செல்லத்துணிந்தனள்……

என்பதாக அந்தப் பாடல் நீண்டுசெல்கிறது.

போரில் வென்ற மறவர் கூட்டம் அந்தப் போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுப்பது, வழிபாடு செய்வது, அந்த நடுகல் வழிபாட்டில் தோப்பிக் கள்ளை வைத்து வணங்குவது பற்றிய குறிப்புகள் இந்தப் பாடல்வழிப் பெறப்படுகிறது. போரில் இறந்த வீரனுக்கு நடுகல் எடுப்பதும், நடுகல் வழிபாட்டில் ‘கள்’ வைத்து வணங்குவதும் பண்டைத் தமிழர் வழக்கு. வழிபட்ட பின்னர் அந்தக் கள்ளைக் குடித்து விட்டு ஆடும் ஆட்டத்தை ‘உண்டாட்டு’ என்கிறது நமது புறப் பொருள் இலக்கண நூல்கள். இதன் எச்சம்தான் இன்றைக்கும் தமிழக கிராமத்து வழக்கிலிருக்கும் தெய்வவழிபாடும் அந்த வழிபாட்டில் மதுவை (சாராயம்) வைத்து வழிபடுவதுமாகும்.

77 ,

வானவன் மறவன், வணங்குவில் தடக்கை,  15

ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன்

பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த

திருந்துஇலை எஃகம் போல,

அருந்துயர் தரும், இவள் பனிவார் கண்ணே! (அகம்:77:15)

வெல்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் பொய்யா வாய்வாள் புனைகழல் பிட்டன் மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன் – ஆலம்பேரி சாத்தனார் – அகம் 143

மலை கெழு நாடன் கூர்வேல் பிட்டற் குறுகல் ஓம்புமின் – உறையூர் மருத்துவன் தாமோதரனார் – புறம் 170

வானவன் மறவன் வணங்குவில் தடக்கை ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன் – மருதன் இளநாகனார் அகம் 77 வடமவண்ணக்கன் தாமோதரனார் புறம் 1

பொருள்:

பிட்டன் சங்க காலச் சிற்றரசர்களில் ஒருவன். குதிரைமலைப் பகுதி இவன் நாடு.இவன் வேல் வீரன்.

வானவர் எனப்படும் சேரர்களின் படைத்தலைவனாக இவன் விளங்கினான். நறவு என்னும் இன்னீரை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி காண்பவன் இவன். இவனது வேலைக் கண்டு பகைவர்கள் நடுங்கினார்களாம். இவன் வயது முதிர்ந்த காலத்தில் சமணத் துறவியாக மாறி ஆறுநாட்டான் மலையிலுள்ள சமணர் குகையில் வாழ்ந்ததைப் புகழூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

சோழர் மறவன் பழையன்:

326 விழவிற் செலீஇயர் வேண்டும் வென்வேல்

இழையணி யானைச் சோழர் மறவன்

கழை யளந்து அறியாக் காவிரிப் படப்பைப்  10

புனன்மலி புதவிற் போஒர் கிழவோன்

பழையன் ஓக்கிய வேல்போற்

பிழையல கண்ணவள் நோக்கியோர் திறத்தே!  13(அகம்:326:10)

பொருள்:

ஊரலாகிய அழகுடைய தேமலையும், பெரும் போர் செய்யும் குளிர்ந்த கண்களையும், பெருந் தோளையும், சிறிய நெற்றியையும் உடைய நின் இளம் பரத்தை அழகில் சிறந்தவள். எனவே எம் பெருமானே, பழையன் என்பான், வெற்றியுடைய வேலையும் அணிகலன் புணைந்த யானையையும் உடைய சோழ மன்னனின் படைத்தலைவன் இம்மறவன்; ஒடக்கோலால் ஆழத்தை அளந்தறியாத காவிரிக் கரையினைச் சார்ந்த தோட்டங்களை உடையவன்; நீர் நிறைந்து ஓடும் மதகுகளைப் பெற்றவன்; போர் என்ற ஊர்க்குத் தலைவன்.

105 சில்பரிக் குதிரை, பல்வேல் ழினி  10

கெடல்அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,

கனைஎரி நடந்த கல்காய் கானத்து

வினைவல் அம்பின் விழுத்தொடை மறவர்

தேம்பிழி நறுங்கள் மகிழின், முனைகடந்து

வீங்குமென் சுரைய ஏற்றினம் தரூஉம்  15

முகைதலை திறந்த வேனிற்

பகைதலை மணந்த பல்அதர்ச் செலவே?  17(அகம்:105:15)

பொருள்:

சிலவகைச் செலவினையுடைய குதிரை களையும், பல வேற்படையினரையும் உடைய, கெடுதலில்லாத வலிமை பொருந்திய எழினி(அதியமான்) என்பவன் ஏவிவிட்ட தொழிலை முடிப்பதற்காக, மிக்க எரிபரந்து கிடக்கும் பாறைகளும் கொதிக்கும் கானத்திலே, போர்த்திறம் வாய்ந்த அம்பின் கை குறிதப்பாது உடைய

தொடுத்தலையுடைய மறவர்கள்(அதியமான் மறவர்கள்), பிழிந்த தேனாற் சமைத்த நறிய கள்ளினை உண்டு, அம் மகிழ்ச்சியினாற் பகைவரின் போர்முனைகளை எளிதாக வென்று

43. பிறப்பும் சிறப்பும்!

பாடியவர்: தாமப்பல் கண்ணனார்,

பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.

திணை : வாகை. துறை: அரசவாகை.

குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு எறிந்தானைச் , ‘சோழன் மகன்

அல்லை’ என, நாணியுருந்தானை அவர் பாடியது.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்,

தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்,

கால்உண வாகச், சுடரொடு கொட்கும்

அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத்,

தன்னகம் புக்க குறுநடைப் புறவின்

தபுதி யஞ்சிச் சீரை புக்க

வரையா ஈகை உரவோன் மருக!

நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்

தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,

கொடுமர மறவர் பெரும! கடுமான்

கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:

‘ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்

பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது

நீர்த்தோ நினக்கு?’ என வெறுப்பக் கூறி,

நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,

நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;

‘தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!

இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும்’ எனக்

காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,

யானே பிழைத்தனென் ! சிறக்கநின் ஆயுள்;

மிக்குவரும் இன்னீர்க் காவிரி

எக்கர் இட்ட மணலினும் பலவே!(புறம்:43)

உரை:

கிள்ளிக்குத் தம்பி, நீ புறவின் பொருட்டுத் துலை புக்கவன் வழித்தோன்றல்; நின் முன்னோர் சான்றோர்க்கு நோய் செய்யார்;

வார்கோல் என்னும் வளரியை தாங்கிய மறவர்களின் பெருமானாகிய

தலைவன். இச் செயல் நினக்குத் தகுவதோ? நின் பிறப்பில் ஐயமுடையேன்” என்று கூறக் கேட்டு, நாணியிருந்த மாவளத்தான் செய்கைச் சிறப்பைக் கண்டு வியந்து, “யான் செய்த பிழையை மனங் கொள்ளாது, நீ செய்ததையே நினைந்து நாணி யிருந்தது. பிழைத்தாரைப் பொறுப்பது நுங்கள் குடிகக்கு இயல்புகாண் என்பதைக் காட்டுகிறது. பிழை செய்தவன் யானே; நீ காவிரி மணலினும் பல்லாண்டு வாழ்க” எனப் பாராட்டுகின்றார்.

380. சேய்மையும் அணிமையும்!

தென் பவ்வத்து முத்துப் பூண்டு

வட குன்றத்துச் சாந்தம் உரீ இ.

. . . . . . . ங்கடல் தானை,

இன்னிசைய விறல் வென்றித்,

தென் னவர் வய மறவன்,

மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து,

நாறிதழ்க் குளவியடு கூதளம் குழைய,

தேறுபெ. . . . . . . . த்துந்து,

தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்;(புறம்:380)

உரை:

தென்னவர் படைத்தலைவனான மறவர்களில் சிறந்தவனான

நாஞ்சில் பொருநன்.

179. பருந்து பசி தீர்ப்பான்!

பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.

பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்

திணை: வாகை துறை: வல்லாண் முல்லை


ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென,

ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை

மலர்ப்போர் யார்?’ என வினவலின் மலைந்தோர்

விசிபிணி முரசமொடு மண்பல தந்த

திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்,

படை வேண்டுவழி வாள் உதவியும்,

வினை வேண்டுவழி அறிவு உதவியும்,

வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து

அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்,

தோலா நல்லிசை, நாலை கிழவன்,

பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்

திருந்துவேல் நாகற் கூறினர், பலரே.(புறம்:279)

உரை:

திருமகள் விரும்பு மார்பினை உடைய பாண்டியன்

மறவனான நாலை கிழவன் நாகன்.

வினைவேண்டின் அறிவு உதவியும். படைவேண்டின்

வாள் உதவியும் செய்து வந்த வேந்தன்.

104. யானையும் முதலையும்!

பாடியவர்: ஔவையார்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை: வாகை. துறை: அரசவாகை.


போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை;

ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்

தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்

ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ

நுண்பல் கருமம் நினையாது,

‘இளையன்’ என்று இகழின், பெறல் அரிது, ஆடே.(புறம்:104)

உரை:

தியமானே! மறவனே! நுமக்கு நாங்கள் அறிவிப்போம். ஊரின் கண்

உள்ள நீர் சுனையில் யானையின் காலை கடித்த முதலையை

கொன்று யானையை காத்த இறைவனது கருமத்தை நினையாதே

உன்னை வெல்வது அரிது. ஆதலால் …

53

விழுத்தொடை மறவர் வில்இட வீழ்ந்தோர்  10

எழுத்துடை நடுகல் இன்நிழல் வதியும்

அருஞ்சுரக் கவலை நீந்தி, என்றும்,

‘இல்லோர்க்கு இல்’ என்று இயைவது கரத்தல்

வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்

பொருளே காதலர் காதல்;

‘அருளே காதலர்’ என்றி, நீயே. (அகம்:53:10)

பொருள்:

வலிய தொடையை கொண்ட கரந்த போர் மறவரால் வீழ்த்தபட்டவர்கள் நடுகல்லாக காட்சியளிக்கின்றனர்.

மன்றுநிறை பைதல் கூறப், பல உடன்

கறவை தந்த கடுங்கான் மறவர்

கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ,

முதுவாய்ப் பெண்டின் செதுகாற் குரம்பை,

மடமயில் அன்னஎன் நடைமெலி பேதை  15

தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்,

‘வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்

சேக்கோள் அறையும் தண்ணுமை

கேட்குநள் கொல்?, எனக் கலுழும்என் நெஞ்சே! (அகம்:)

பொருள்:

இப்படி அச்சம் தரும் காட்டைக் கடந்து செல்கிறாள். அங்கே கன்றுகளைக் காணாமல் கறவை மாடுகள் வருந்தும்படி, கறவை மாடுகளை மறவர்கள் கவர்ந்து செல்வர். அவர்கள் ஓட்டிச் சென்ற மன்றில் தம் கன்றுகளைக் காணாமல் கறவை மாடுகள் சோக்கத்துடன் காணப்படும்.

இப்படிக் கறவைமாடுகளைக் கவர்ந்து செல்லும் மறவர்கள் வாழும் ஊர் அது. அந்தச் சிற்றூரில் இரவு வேளையில் ‘கல்’ என்று ஒரே அமைதி. அங்கே ஒரு குடில் (குரம்பை). சிவப்பு வண்ணம் பூசிய பந்தல்-காலில் (செதுக்கால்) கட்டியிருக்கும் குடில். அங்கிருக்கும் மூதாட்டியர் (முதுவாய்பெ பெண்டிர்) என் மகளை வாழ்த்துவர். அங்கே என் மகளை, மயில் போல் நடந்து மெலிந்த என் மகளை, அவன் தன் தோளில் கிடத்தித் தூங்கவைப்பான். அப்போது அவள் தூங்காமல் கிடப்பாளோ?

வேட்டுவக் கள்வர்கள் காளை மாடுகளைக் கவர்ந்துவர, வரிந்து கட்டிய தண்ணுமையை முழக்கும் ஒலியைக் கேட்டுக்கொண்டிருப்பாளோ? என் நெஞ்சம் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

நல்அமர்க் கடந்த நாணுடை மறவர்

பெயரும் பீடும் எழுதி யதர்தொறும்

பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்  10

வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்

மொழிபெயர் தேஎம் தருமார், மன்னர்

கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன

உவல்இடி பதுக்கை ஆள்உகு பறந்தலை,

‘உருஇல் பேஎய் ஊராத் தேரோடு  15

நிலம்படு மின்மினி போலப் பலஉடன்

இலங்கு பரல் இமைக்கும்’ என்ப – நம்

நலம்துறந்து உறைநர் சென்ற ஆறே!  18(அகம்)

பொருள்:

நெல்லி மரங்களையுடைய இடங்களில் இருளிலே கடுகிச் சென்று கூரிய முனையையுடைய பற்களையுடைய அம்பினையும் குறிபார்க்கும்

பார்வையினையுமுடைய வராய், தமது நிரையை மீட்க வேண்டி உக்கிரமான போரிலே வீழ்ந்துபட்ட மானமிக்க மறவர்களது பெயரையும் பெருமையையும் பொறித்து பாதைகளிலே மயிற்றோகை யணிந்து விளங்கும் நடுகற்கள் என்பது பாடற்பொருள். இங்கே நிரைமீட்கும் போரும் அதிலே தமது உயிரை யிழந்தவரும் கூறப்படுகின்றனர். அத்தகையோருக்கே நடுகல் உரியது.

மறவர் தொன்றுஇயல் சிறுகுடி (அகம்:53:10)

பொருள்:

மறவர் தமது பழங்குடி முறைமையால் தோன்றிய

விளர்ஊன் தின்ற வீங்குசிலை மறவர்  10

ஒழிஊன் கலிகெழு மறவர் காழ்க்கோத்து ஒழிந்ததை(அகம்)

பொருள்:

ஊன் உன்ற வில்லுடைய மறவர்.

284 தினைகள் உண்ட தெறிகோல் மறவர்,

விதைத்த வில்லர், வேட்டம் போகி,

முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்  10

காமர் புறவி னதுவே- காமம்

நம்மினும் தான்தலை மயங்கிய(அகம்284:10)

அம்மா அரிவை உறைவின் ஊரே.

பொருள்:

“தினைகளை உண்ட வளரியுடைய மறவர்கள் அந்த காடுகளை கொழுத்தி வரகை விதைத்தனர்”

297 பானாட் கங்குலும், பெரும்புன் மாலையும்,

ஆனா நோயொடு, அழிபடர்க் கலங்கி,

நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,

என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்;

இருங்கவின் இல்லாப் பெரும்புன் தாடிக்,  5

கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென,

மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்

பெயர்பயம் படரத் தோன்றுகுயில் எழுத்து(அகம்:294:5)

பொருள்:

மறவர்கள் தங்கள் அம்புகளைக் கூர்தீட்ட இந்த நடுகற்களைப் பயன்படுத்தினர். இச்செயலாலும் உப்பு வணிகர்களின் வண்டிகள் மோதினமையாலும் நடுகற்கள் பல சிதைந்தன. இச்சிதைவு அவற்றில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களையும் பாதித்தன. இச்சிதைந்த நடுகற்களை எதிர்கொண்ட வழிச்செல்வோர், இவற்றை வணங்கி மகிழ்ந்தாலும் சிதைவின் காரணமாக இவற்றில் எழுதியிருந்த செய்தியின் பொருள் புரிந்துகொள்ள முடியாமல் சென்றனர்.

எயினர் வேறு மறவர் வேறு:

318 மணிவாய்க் காக்கை மாநிறப் பெருங்கிளை

பிணிவீழ் ஆலத் தலங்குசினை ஏறிக்

கொடுவில் எயினர் குறும்பிற் கூக்கும்

கடுவினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்

படுபிணங் கவரும் பாழ்படு நனந்தலை  5(அகம்:318:5)

பொருள்:

வளைந்த வில்லினையுடைய எயினரது குறும்பிற்கு, ஊக்கத்துடன் படைகொண்டு எழுகின்ற கொடுந் தொழிலினை யுடைய மறவர்கள், வில்லிட்டு எய்தலால் இறந்து வீழ்ந்தோ ருடைய பிணங்களைக் கவர்ந்து உண்ணுகின்ற தன்மையினை யுடைய, பாழ்பட்டுக் கிடக்கின்ற அகன்ற பாலையினிடத்திலே

363கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்ப

பொலஞ்செய் காசிற் பொற்பத் தாஅம்

அத்தம் நண்ணி அதர்பார்த் திருந்த

கொலைவெங் கொள்கைக் கொடுந்தொழின் மறவர் (அகம்:363:10) 10

பொருள்:

கொலையாகிய வெம்மையான கோட்பாட்டினை உடையவர் கொடுந்தொழிலோரான மறவர்கள். அவர்கள், காட்டுப் புறத்தை அடைந்து, ஆறலைப்பதனைக் கருதியவராக, வழிவருவாரைப் பார்த்தவாறு இருப்பர். அவ்வழியே செல்லும் வணிக மாக்களின் அரிய மார்பிலே வேலினால் எறிந்து அவர்களைக் கொல்வர்.

377 கோடை நீடலின் வாடுபுலத்து உக்க

சிறுபுல் உணவு நெறிபட மறுகி

நுண்பல் எறும்பி கொண்டளைச் செறித்த

வித்தா வல்சி வீங்குசிலை மறவர்(அகம்:377)

பொருள்:

கொடிய வில்லையுடைய மறவர்.

387 நல்லிசை நிறுத்த நாணுடை மறவர்

நிரைநிலை நடுகற் பொருந்தி இமையாது  15

இரைநசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி

சிறிய தெற்றுவ தாயிற் பெரிய

ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்

நின்றாங்குப் பெயரும் கானம்

சென்றோர் மன்னென இருக்கிற் போர்க்கே.  20

பொருள்:

போரில் வென்ற மறவர் கூட்டம் அந்தப் போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுப்பது, வழிபாடு செய்வது, அந்த நடுகல் வழிபாட்டில் தோப்பிக் கள்ளை வைத்து வணங்குவது பற்றிய குறிப்புகள் இந்தப் பாடல்வழிப் பெறப்படுகிறது. போரில் இறந்த வீரனுக்கு நடுகல் எடுப்பதும், நடுகல் வழிபாட்டில் ‘கள்’ வைத்து வணங்குவதும் பண்டைத் தமிழர் வழக்கு.

புறநானூறு

31. வடநாட்டார் தூங்கார்!

பாடியவர்: கோவூர்கிழார்.

பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.

திணை :வாகை. துறை : அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.

சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய அச்சத்தால் துஞ்சாக் கண்ணர் ஆயினமை.

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,

இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை

உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,

நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்

பாசறை யல்லது நீயல் லாயே;

நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்

கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;

போர்’ எனில் புகலும் புனைகழல் மறவர்,

‘காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;

செல்வேம் அல்லேம்’ என்னார்; ‘கல்லென்

விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,

குண கடல் பின்ன தாகக், குட கடல்

வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப,

வலமுறை வருதலும் உண்டு’ என்று அலமந்து

நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,

துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.(புறம்:30)

உரை:

சோழன் நலங்கிள்ளியின் வென்றி நலத்தைச் சிறப்பித்து, “வேந்தே, நீ நல்லிசை வேட்டம் வேண்டிப் பாசறையில் இருப்பதற்கே விழைகின்றாய்; நின் யானைப் படை, பகைவர் அரண்களைச் சிதைத்தும் அடங்காவாய் மைந்துற்று நிற்கின்றன; போரெனிற் புகலும் நின் மறவர், பகைவர் நாடு காடிடையிட்டு நெடுந் தூரத்திலுள்ளதெனவறிந்தும் செல்லுதற் கஞ்சார்; இவ்வாற்றால், குணகடற் கரையையுடைய நீகுடகடல் அடைந்து பின் அங்கிருந்தே வடபுலம் நோக்கி வருவாயெனநினைந்து, வடபுலத்தரசர் இரவெல்லாம் உறக்கமின்றிக் கிடக்கின்றனர்” எனப் பாடிப் பாராட்டுகின்றார்.

68. மறவரும் மறக்களிரும்!

பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்; சோழன் நலங்கிள்ளி.

திணை: பாடாண். துறை: பாணாற்றுப்படை.

உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்

கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது,

சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,

ஈங்குஎவன் செய்தியோ? பாண ! பூண்சுமந்து,

அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து

மென்மையின் மகளிர்க்கு வணங்கி,வன்மையின்

ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை,

புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்

சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்

மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்,

உட்பகை ஒருதிறம் பட்டெனப், புட்பகைக்கு

ஏவான் ஆகலின், சாவோம் யாம் என,

நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்,

தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்

கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகத்த

நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை

நெடுனகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்

உறந்தை யோனே குருசில்;

பிறன்கடை மறப்ப நல்குவன், செலினே!(புறம்:68)

உரை:

சோழன் நலங்கிள்ளி உறையூரின்கண் இருக்கையில், கோவூர் கிழார் சென்று அவனைக் கண்டார். அவன் உயர்ந்த பூண்களை யணிந்து மகளிர் பால் மென்மையுடையனாய் இனி திருப்பதும், அவன் மெய்-வன்மையால் வீரராகிய ஆடவர் அவனைப் பணிந் தொழுகுவதும், சோழ நாட்டு மன்பதைகட்குத் தான் உயிரெனக் கருதிப் பேணுவதும், அவனுடைய சோழ நாட்டு  மறவர் போர்த்தினவு கொண்டு செம்மாப்பதும் நேரிற் கண்டு வியந்தார். சோழனும் அவர்க்கு மிக்க பொருளைப் பரிசிலாக வழங்கினான். இச் செய்தியை இவர் இப்பாட்டின்கண் பாண னொருவதற்குக் கூறும் முறையில் வைத்துக் கூறுகின்றார்.

93. பெருந்தகை புண்பட்டாய்!

பாடியவர்: ஔவையார்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை : வாகை. துறை: அரச வாகை.

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

சென்று அமர் கடத்தல் யாவது? வந்தோர்

தார்தாங் குதலும் ஆற்றார், வெடிபட்டு,

ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்

நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்,

காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார்

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி,

‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த

நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! என

வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ;

வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து

அண்ணல் யானை அடுகளத் தொழிய,

அருஞ்சமம் ததைய நூறி, நீ

பெருந் தகை! விழுப்புண் பட்ட மாறே.(புறம்:93)

உரை:

அதியனான பெருந்தகாய், உன் போரில் நூறி விழுப்புண் பட்டவாற்றால்நின்னோடு எதிர்த்து வந்தோர் தாம் பீடின் மன்னர் விளிந்த யாக்கை தழீஇ நீள் கழன் மறவர் செல்வுழிச் செல்கென வாள் போழ்ந் தடக்கலும் உய்ந்தனராதலின், இனி நின்னோடு டெதிர்ப்பா ரின்மையின் முரசு முழங்கச் சென்று அமர் கடத்தல் யாவதெனக் கூட்டுக. சென்றமர் கடத்தல் யாவதென்றதனானும் வாள் போழ்ந் தடக்கலு முய்ந்தன ரென்றதனானும் வந்தோர் பட்டமை விளங்கும்.

97. மூதூர்க்கு உரிமை!

பாடியவர்: ஔவையார்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை : பாடாண். துறை: இயன் மொழி.

மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர்

பொலம் பைந்தார் கெடப் பரிதலின்,

களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;

அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப்

பொலந் தும்பைக் கழல் பாண்டில்(புறம்:97)

அதியமான் நெடுமான் அஞ்சிக்குத் திறைசெலுத்தற்குரிய வேந்தர்சிலர் அதனைச் செலுத்தாது போர்க்குச் சமைந்திருப்பதை ஒளவையார் அறிந்தார். அவர்கட்கு உண்மை யறிவித்தற்கும், அதுவே வாயிலாக அதியமானைப் பாராட்டுதற்கும் எண்ணி, இப்பாட்டினைப் பாடியுள்ளார். இதன்கண், “நெடுமான் அஞ்சி யேந்திய மறவர்களின் வாள் போரில் உழந்து உருவிழந்துள்ளது; வேல் மடை கலங்கி நிலை திரிந்துளது; களிறுகள் பகைவர் களிற்றுத் திரளொடு பொருது தொடி கழிந்துள்ளன; குதிரைகள் போர்க்களக் குருதியிற் றோய்ந்து குளம்புகள் மறுப்பட்டுள்ளன; அவன் பகைவர் எறிந்த அம்புகளால் துளையுண்ட கேடயத்தை யேந்தியுள்ளான்;இவற்றால் இவனைப் பகைத்துப் பொரக் கருதியவர் உய்ந்து போதல் இல்லை; ஆதலால், உங்கள் மூதூர் உங்கட்கு உரித்தாகல் வேண்டின், அவனுக்குரிய திறையைச் செலுத்தி யுய்மின்; மறுப்பீராயின், அவன் ஒருகாலும் பொறான்; யான் சொல்லு மிதனைக் கேளீராயின்; உங்களுடைய உரிமை மகளிர் தோளைப் பிரிந்து மடிதல் திண்ணம்; இதனை யறிந்து போர்செய்தற்கு நினைமின்” என்று பாடியுள்ளார்.

174. அவலம் தீரத் தோன்றினாய்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.

பாடப்பட்டோன் : மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்.

ணை: வாகை. துறை: அரச வாகை.

இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி

மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்,

பொய்யா நாவிற் கபிலன் பாடிய,

மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்

செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட

எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,

அருவழி இருந்த பெருவிறல் வளவன்

மதிமருள் வெண்குடை காட்டி, அக்குடை

புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந!.(புறம்:174)

உரை:

பெரிய காவிரியினையுடைய நல்ல நாட்டினது துயரங்கீட்ப் பொய்யாத

நாவினையுடைய கபிலனால் பாடப்பட்ட பெரிய மலையிடத்து,விரைய

போரை விரும்பும்  மறவரை யுடைய  தலைமையினையுடைய முள்ளூரின் கண்,மலை உச்சியில் இருந்த பெரிய வெற்றியுடைய சோழமன்னனின் வென்குடையை தோற்றுவிக்க.

259. புனை கழலோயே!

பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார்

திணை: கரந்தை துறை: செருமலைதல் (பிள்ளைப் பெயர்ச்சியுமாம்).

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது,

இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த

வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்,

செல்லல், செல்லல் ; சிறக்க நின், உள்ளம்;

முதுகுமெய்ப் புலைத்தி போலத்

தாவுபு தெறிக்கும் ஆன்மேல் ;

புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே!(புறம்:259)

உரை:

வலிய வில்லினை ஏந்திய மறவர்கள்.

260. கேண்மதி பாண!

பாடியவர்: வடமோதங்கிழார்

திணை: கரந்தை (பாடாண் திணையுமாம்) துறை: கையறுநிலை செருவிடை வீழ்தல்;

கையறு நிலையுமாம்; பாண்பாட்டுமாம்; பாடாண் பாட்டுமாம்.

வைஎயிற்று உய்ந்த மதியின், மறவர்

கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்

நிரையடு வந்த உரைய னாகி,

உரிகளை அரவ மானத், தானே(புறம்:260)

உரை:

தன்னுடைய ஊரின் கண் மிக்க நிரையை மறவர்கள் தங்கள் பகைவரை

கொன்று நிரையை மீட்டு வந்த ஒருவன் இறந்து தேவருலகம் சென்றான்

அவன் உடல் அம்பால் சலித்து வீழ்ந்து கிடந்த அந்த உயர்ந்த கீர்த்தி

பெற்ற மறவனது நடுகலில் மயில் பீலியை சூடி இருந்தது.

270. ஆண்மையோன் திறன்!

பாடியவர்: கழாத்தலையார்

திணை: கரந்தை துறை: கையறுநிலை

மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை

இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்

வென்றிதரு வேட்கையர், மன்றம் கொண்மார்,

பேரமர் உழந்த வெருவரு பறந்தலை.

விழுநவி பாய்ந்த மரத்தின்,

வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.(புறம்:270)

உரை:

போர் முரசு கொட்டியவுடனே மறவர்கள் வெற்றி பெற வேண்டுமென்ற

விருப்பத்தால் போர்களத்தில் கோடாரியால் வெட்டபட்ட

மரத்தை போல் போர் புரிந்து மடிந்து கிடந்தனர்.

345. பன்னல் வேலிப் பணை நல்லூர்!

பாடியவர்: அடைநெடுங் கல்வியார் பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.

திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.)

தெறல் மறவர் இறை கூர்தலின்,

பொறை மலிந்து நிலன் நெளிய,

வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,

—————————————————————-

கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர்,

குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு

கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்

இன்ன மறவர்த் தாயினும், அன்னோ !

என்னா வதுகொல் தானே-

பன்னல் வேலிஇப் பணைநல் லூரே!(புறம்:345)

உரை:

யானை அனைப்பதால் சோலைகள் கலங்கின;மறவர் போர் புரிவதால்

இரக்கம் மலிந்தன;…………….

இத்தகை நெடுவேல் தாங்கிய மறவர் தங்கியிருக்கும் ஊர்.

369. போர்க்களமும் ஏர்க்களமும்!

பாடியவர்: பரணர்.

பாடப்பட்டோன்: சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்.

திணை: வாகை. துறை: மறக்களவழி.

இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்,

கருங்கை யானை கொண்மூவாக,

நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த

வாள்மின் நாக, வயங்குடிப்பு அமைந்த(புறம்:369)

உரை:

சேரர் படையில் தங்கம் பூண்ட கொம்புடைய யானையும்,சபதம்

செய்யும் மறவர் வீசும் வாள் மின்னலாக குருதி கொள்ளும் முரசு…

373. நின்னோர் அன்னோர் இலரே!

பாடியவர்: கோவூர்கிழார்.

பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்.

திணை: வாகை. துறை: மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்.,

வஞ்சி முற்றம் வயக்கள னாக,

அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக்

கொண்டனை பெரும! குடபுலத்து அதரி;

பொலிக அத்தை நின் பணைதனற . . . ளம்!(புறம்:373)

உரை:

வஞ்சி மாநகரில் அஞ்சாத மறவர்கள் ஆட்போர் புரிந்து

அழித்த சோழர் பெருமகனே!.

399. கடவுட்கும் தொடேன்!

பாடியவர்: ஐயூற் முடவனார்

பாடப்பட்டோன்: தாமான் தோன்றிக்கோன்

திணை: பாடாண் துறை: பரிசில் விடை

‘அறவர் அறவன், மறவர் மறவன்,

மள்ளர் மள்ளன்,தொல்லோர் மருகன்,

இசையிற் கொண்டான், நசையமுது உண்க’ என,(புறம்:399)

உரை:

காவிரி கிழவன் கிள்ளி வளவன் அறம் புரிந்த அந்தனருக்கு

அந்தனன். மறம் புரிந்த மறவர்க்கு மறவன். உழவு செய்யும் மள்ளனுக்கு

மள்ளன். தொல்குடியில் பிறந்தவன்.

400. உலகு காக்கும் உயர் கொள்கை!

பாடியவர்: கோவூர் கிழார்.

பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.

திணை: பாடாண். துறை: இயன்மொழி.

பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ;

மறவர் மலிந்ததன் . . . . .

(புறம்:400)

உரை:

பகைவரை வெல்லும் பசியுனை உடைய

மறவர்களை உடையோன்.

227. நயனில் கூற்றம்!

பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார்.

பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.

திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,

குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய,

நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்

வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்

நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்

வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி(புறம்:227)

உரை:

கிள்ளிவளவனின் ஒளியுடைய வாளினை உடைய மறவரும்,

யானையும்…………

351. தாராது அமைகுவர் அல்லர்!

பாடியவர்: மதுரைப் படைமங்க மன்னியார்

திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி

படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்,

கொடிநுடங்கு மிசைய தேரும், மாவும்,

படைஅமை மறவரொடு, துவன்றிக் கல்லெனக்,

கடல்கண் டன்ன கண்அகன் தானை(புறம்:351)

உரை:

நால்வகை படையுடன்,மறவர்களோடும் வெற்றியினையுடை

முரசுடை வேந்தரே.

274. நீலக் கச்சை!

பாடியவர்: உலோச்சனார்

திணை: தும்பை துறை: எருமை மறம்

நீலக் கச்சைப் பூவார் ஆடைப்,

பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்

மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே,

தன்னும் துரக்குவன் போலும்-ஒன்னலர்

எ·குடை வலத்தர் மாவொடு பரத்தரக்,

கையின் வாங்கித் தழீஇ,

மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே;

உரை:

பெருந்தகை மறவன் நீல ஆடை அனிந்து யானை மீது வேலை

எறிந்தான். இதனால் வேல் இழந்தவனின் மார்பு மீது எதிரி

வேல் வந்து பாய்ந்தது. அப்போது அந்த வேலை எடுத்து

போர் செய்யும் வீரத்தை கண்டு வியந்தனர் அனைவரும்.

332. வேல் பெருந்தகை உடைத்தே!

பாடியவர்: விரியூர் கிழார்

திணை: வாகை துறை : மூதின் முல்லை

பிறர்வேல் போலா தாகி, இவ்வூர்

மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே;

இரும்புறம் நீறும் ஆடிக், கலந்துஇடைக்

குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;

மங்கல மகளிரொடு மாலை சூட்டி,

இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்,

தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,

மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,

இருங்கடல் தானை வேந்தர்

பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே.

உரை:

இவ்வூர் மறவன் வேல் பெருந்தகையுடையது. புழுதி

படிந்த சிறு குடிலின் கண் கிடக்கும். மங்கல மகளிரோடு மாலை

சூட்டி யாழ் தெருவில் திரிந்து செல்லும் கடல் போல் பரந்த

சேனைகளையுடைய வேந்தரின் யானை  எதிரே செல்லுதல் தவிராது.

முத்தொள்ளாயிரம்:

முத்தொள்ளாயிரம் : பலம் மிகுந்த பாண்டியன்

– என். சொக்கன்

பாடல் 108

நறவுஏந்து கோதை நலம்கவர்ந்து நல்கா

மறவேந்தன் வஞ்சினயான் அல்லன் துறையின்

விலங்காமை நின்று வியன்தமிழ்நாடு ஐந்தின்

குலக்காவல் கொண்டுஒழுகும் கோ

பாண்டியனைக் காதலிக்கும் ஒரு பெண், அவன் தன்னைச் சந்திக்க வரவில்லையே என்று கவலை கொண்டு, தன்னுடைய காதல் தோற்றுவிட்டதாகவும், அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்றும் பலவிதமாய் ஊகித்துக்கொண்டு, ஏகத்துக்குப் புலம்பிக்கொண்டிருப்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம்.

அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்து, அவளுக்கு ஆறுதல் சொல்கிறது இந்தப் பாடல் !

தேன் நிரம்பிய மலர்களைத் தொடுத்து, மாலையாக அணிந்த பெண்ணே, நான் சொல்வதைக் கேள்’, என்று அவளை அழைத்து, ஆதரவாய்ப் பேசத்துவங்குகிறது பாடல், ‘உன் காதலனைச் சாதாரண ஆள் என்று நினைத்துவிட்டாயா ? உன்னுடைய நலனையெல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிடுகிற ஆள் என்று எண்ணிவிட்டாயா ? அது தவறு, அப்படியெல்லாம் நீயாக ஏதும் கற்பனை செய்துகொள்ளாதே

அவன் நிச்சயமாய் உன்னைக் கைவிடமாட்டான்’, என்று உறுதி சொல்கிறது பாடல், ‘அவன் பெண்களை ஏமாற்றுகிற ஆள்  இல்லை, ரொம்ப நல்லவன், ஒழுக்க நெறி தவறாமல் ஆட்சி செய்கிற மறவாள் அரசன், தமிழ்நாட்டின் ஐந்து பகுதிகளையும் முறைப்படி காவல் காக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அரசன் அவன்.

மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்

காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் – கண்டக்காற்

பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ

நாணோ டுடன்பிறந்த நான்!

பொருள்:

உலகை வென்ற மறவனான போர் மாறனை கண்டால் ஆயிரம் சொல்லுவேன்

கலித்தொகை

4  வலி முன்பின், வல்லென்ற யாக்கைப் புலி நோக்கின் –

சுற்றுஅமை வில்லர், சுரி வளர் பித்தையர்,

அற்றம் பார்த்து அல்கும் – கடுங்கண் மறவர் தாம்

கொள்ளும் பொருள் இலர் ஆயினும், வம்பலர்,

துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின்,

புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை,

வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின்,

உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி;

உரை:

மறவர்கள் வலிமை மிகுந்த கட்டான உடலினர்; கருத்து

சுருண்ட மயிரினர்;கொடும் புலியின் பார்வை போன்று பிறர்பால்

அச்சம் விளைக்க பார்ப்பவர்.கொடுமையே உருவானவர்;வழியில் வருபவர்களை தாக்கி அவர்களுக்கு புண்களை பரிசாக தரும் வெம்மையுடைய பாலை நிலத்தவரின் கொடிய காட்டு வழி இது. இதில் சென்று பொருள் தேடி மீள என்னுகின்றாய்.

5  பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை

மாஅல் யானையொடு மறவர் மயங்கித்

தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ்சுரம்,

இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச்

சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்,

நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்

ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக்,

கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம்?

நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே;

உரை:

யானைகளும் மறவரும் அவ்வறு மனம் போனபடி திரிதலால் அவர்கள்

செய்யும் கொடுமைக்கு தப்புவது கடினமாகும். வெம்மையான கொடுஞ்சினம் உடைய அவர்கள் செய்யும் தொழிலே தனி வகையானது. வழியில் வருபவர்களை தாக்கி அவர்களுக்கு புண்களை பரிசாக தரும் வெம்மையுடைய பாலை நிலத்தவரின் கொடிய காட்டு வழி இது. இதில் சென்று பொருள் தேடி மீள என்னுகின்றாய்.

15  அரிமான் இடித்தன்ன, அஞ்சிலை வல்வில் புரிநான், புடையி

புறங்கண்டல் அல்லால் இனைபடை தானை

அரசரோடு உறினும் கனைதொடை நாணும்,

கடுந்தொடி ஆர்ப்பின் எருத்து வலிய எறுழ்

நோக்கு இரலை மருப்பின் திருந்து

மறிந்துவீழ் தாடி உருத்த கடுஞ்சினத்து

ஓடா மறவர் பொருள் கொண்டு

புன்செயின் அல்லதை அன்போடு அருள்

புறம் மாறிய ஆரிடை அத்தம்.-”கடுங்கோ சேரமான்”.(கலித்தொகை)

பொருள்:

சேனையணிகள் சூழ,அரசனே பெரும்படையுடன் வந்தாலும் அஞ்ச மாட்டர்கள்.சிலை மரத்தால் செய்த வலிமை மிகுந்த வில்லை வளைந்து அதிலே முறுக்கமைந்த நாண் கயிற்றைப் பூட்டுவர், அவர் மீது கணைதொடுப்பது தம் வீரத்துக்கு தகுதியற்றது என்று வெட்கம் கொண்டு நாணை தெறித்து ஒலி எழுப்புவர். சிங்கக் குரலைக் கேட்டு விலங்கினம் சிதறி ஓடுவதுபோல் அவ்வொலிகேட்டே அரசரோடு வந்த பெரும் படையினரும் பின் முதுகுகாட்டி ஓடுவர். அத்தகைய கொடிய ஆற்றல்கொண்டவர்,பாலை நில காட்டிலே வாழும் மறவர்கள். அவர்கள் ஆராவாரமாக வருவது கடிய துடியின் ஒலியோடு கேட்கும். வன்மைகொண்ட பார்வையும் வலி மிகுந்த கழுத்தும் உடைய கலைமானின் கொம்புகலைப் போல,அவர்களது மீசை முறுக்கொண்டு திருகித் தாழ்ந்து தொங்கும். வெம்மையான கொடுஞ்சினம் உடைய அவர்கள் செய்யும் தொழிலே தனி வகையானது. வழியில் வருபவர்களை தாக்கி அவர்களுக்கு புண்களை பரிசாக தரும் வெம்மையுடைய பாலை நிலத்தவரின் கொடிய காட்டு வழி இது. இதில் சென்று பொருள் தேடி மீள என்னுகின்றாய்.

104

தாள் எழு துணி பிணி, இசை தவிர்பு இன்றித் தலைச் சென்று,

தோள் வலி துணி பிணி, துறந்து இறந்து எய்தி, மெய் சாய்ந்து

கோள் வழுக்கித் தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது,

மீளும் புகர் ஏற்றுத் தோற்றம் காண்- மண்டு அமருள்

வாள் அகப்பட்டானை ‘ஒவ்வான்’ எனப் பெயரும்

மீளி மறவனும் போன்ம்.

உரை:

ஏறு தழுவும் ஆற்றலும் ஆசையும் உடையவனாதலால்,அந்த முறையராது சென்ற ஒருவன்,புகர் நிற ஏற்றை தழுவ முயன்று இயலாது சாய்ந்து புன்பட்டு வீழ்ந்தவனை கண்ட எருதின் தோற்றமானது. வாள் போரில் அகப்பட்ட ஒருவனை கூட”என் நிலைக்கு தகுதியற்றவன் இவனை கொல்லேன்” என கூறும் மறவர்

தலைவன் போல் அல்லவா உள்ளது.

குறுந்தொகை

283. பாலை – தலைவி கூற்று

உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்

இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச்

சொல்லிய வன்மை தௌியக் காட்டிச்

சென்றனர் வாழி தோழி யென்றும்

கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்

ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த

படுமுடை பருந்துபார்த் திருக்கும்

நெடுமூ திடைய நீரில் ஆறே.

-பாலை பாடிய பெருங்கடுங்கோ.

பொருள்:

தோழி!  தம்முடைய முன்னோரால் தேடி வைக்கப்பட்ட பொருளைச் செலவு செய்து அழிப்பவர்கள் செல்வம் உடையவர்கள் என்று உலகத்தாரால் கருதப்பட மாட்டார்கள்.  தாமாக ஈட்டிய பொருள் இல்லாதார், மூதாதையோரின் பொருளின் பயனைத் துய்த்து வாழ்தல், இரத்தலைக் காட்டினும் இழிவானது என்று, மனவலிமையோடு, நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறி,  நம் தலைவர் பொருள்தேடச் சென்றார். எப்பொழுதும் கூற்றுவனைப் போன்ற, கொலைத் தொழிலைச் செய்யும் வேலை உடைய மறவர், வழியில் தங்கி இருந்து (மறைந்திருந்து), வழிப்போக்கர்களைக்  கொன்றதனால் உண்டான புலாலைப் பருந்துகள் எதிர்நோக்கித் தங்கி இருக்கின்ற,  நெடிய பழைய இடத்தை உடைய, நீர் இல்லாத பாலை நிலத்து வழிகளிலே, தலைவர் சென்றார். அவர் வாழ்வாராக!

297. குறிஞ்சி – தோழி கூற்று

அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர்

    வைவார் வாளி விறற்பகை பேணார்

    மாறுநின் றிறந்த ஆறுசெல் வம்பலர்

உவலிடு பதுக்கை ஊரின் தோன்றும்

கல்லுயர் நனந்தலை நல்ல கூறிப்

உரை: மேல் விளிம்பை இழுத்துக் கட்டிய கொடிய வில்லையுடைய மறவர்களின் கூர்மையான நீண்ட அம்பின் வலிய பகையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளாமல், எதிரே நின்று இறந்த வழிப்போக்கர்கள்மீது,  தழையை இட்டுவைத்த குவியல்கள், ஊரைப்போலத் தோன்றுகின்ற, மலைகள் ஓங்கி உயர்ந்த அகன்ற பலை நிலத்தில், நல்ல சொற்களைக் கூறித் தலைவன் உன்னை உடன்போக்கில் அழைத்துச் செல்வதுதான் அவன் செய்யத்தக்க செயல் என்று, அவன்  உணர்வதற்கு முன்னர், நான் அதை  உறுதியாக உணர்ந்தேன்.

331. பாலை – தோழி கூற்று

நெடுங்கழை திரங்கிய நீரி லாரிடை

ஆறுசெல் வம்பலர் தொலைய மாறுநின்று

கொடுஞ்சிலை மறவர் கடறுகூட் டுண்ணும்

கடுங்கண் யானைக் கான நீந்தி

இரப்பர்கொல் வாழி தோழி நறுவடிப்

பைங்கால் மாஅத் தந்தளி ரன்ன

நன்மா மேனி பசப்ப

நம்மினுஞ் சிறந்த அரும்பொருள் தரற்கே.

-வாடாப் பிரபந்தனார்.

உரை: தோழி, நீ வாழ்க! நல்ல மணமுள்ள வடுவையும், பசுமையான அடிப்பக்கத்தையும் உடைய மாமரத்தின் அழகிய தளிரைப் போன்ற நல்ல மாமை நிறமுள்ள மேனி பசலை அடையுமாறு, நம்மைக் காட்டிலும் அவருக்குச் சிறந்ததாகத் தோன்றுகின்ற பொருளைக் கொண்டுவரும் பொருட்டு, நெடிய மூங்கில் உலர்ந்து வாடிய,  நீர் இல்லாத, கடத்தற்கரிய இடத்தில், வளைந்த வில்லையுடைய மறவர்கள், எதிர்த்து நின்று, வழிப்போக்கர்கள் அழியும்படி, அவர்களிடம் உள்ள பொருள்களைக் கொள்ளையடித்துக் கூடியுண்ணும், கொடிய  யானைகள் திரியும் காட்டைக் கடந்து, தலைவர் பிரிந்து செல்வாரோ? செல்ல மாட்டார்.

மதுரைகாஞ்சி

இதில், மதுரையின் பல சிறப்புகளையும், விழாக்களையும் சொல்லும் கவிஞர்,

பெருமாளுக்கு உரிய திருவோண விழாவை,

பண்டைய தமிழ் மக்களும், மதுரை மறவர்களும் கொண்டாடுவது பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறார்!

…மறவர்கள் ஓண விழாவில் மகிழ்ந்து திரிதல்)

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்

மாயோன் மேய ஓண நன்னாட்…591

கோணந் தின்ற வடுவாழ் முகத்த

சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை

மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்(அவுணரைக் கடந்து வெற்றி கொண்ட மாயோன், பொன்மாலை அணிந்துள்ள அவன் தோன்றிய ஓண நன்னாளில்.

..ஊர் விழா எடுக்க,

வடுக்கள் உள்ள முகம் கொண்ட மறவர்கள், சேரியில் வீர விளையாட்டுகளில் ஈடுபட)

மாறா துற்ற வடுப்படு நெற்றிச்

சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்

கடுங்களிறு ஓட்டலிற் காணுநர் இட்ட

நெடுங்கரைக் காழக நிலம்பரல் உறுப்பக்(மதுரைகாஞ்சி)

(வளைந்த பூக்கள் கொண்ட மாலைகள் தரித்து, மறக் கூட்டம், களிறு ஓட்டம் முதலியன செய்ய…யானைக்கு முன்னே ஓடிய வீரர்கள்….

வேகமாக ஓடும் யானையை அடக்க, நெருஞ்சி முள் போல் கொத்துள்ள கப்பணம் என்னும் கருவியை, காழகம் என்னும் நீல ஆடையில் சுற்றி, நிலத்தில் பரவ, கால் பொதுக்கி, யானைகள் ஒரே இடத்தில் நிற்கின்றன…

அப்படியே கேரள ஓணம் திருவிழாக் காட்சி போலவே இருக்கு-ல்ல?)

வீரர்கள் மன்னனை வாழ்த்துதல்

வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து 725

ஒன்னா ரோட்டிய செருப்புகல் மறவர்

வாள்வளம் புணர்ந்தநின் தாள்வலம் வாழ்த்த(மதுரைகாஞ்சி)


மறவர் என்போர் படைவீரர். செழியனின் படைவீரர்களுக்குப் போர் என்றால் கொள்ளை ஆசை. பகைவர் தாக்கும்போது அவர்கள் ஆற்றில் வரும் வெள்ளத்தைக் கல்லடுக்கிக் கட்டப்பட்ட கலிங்கு அணை தடுத்து நிறுத்துவது போலத் தடுத்துத் திரும்பி ஓடும்படி செய்தவர்கள். ‘வாள்வலம்’ என்பது வாளால் போர்புரியும் திறமை. ‘தாள்வலம்’ என்பது ஊக்கத்துடன் செயலாற்றும் திறமை. இரண்டும் கொண்ட இத்தகைய மறவர் செழியனின் வாள்வலத்தையும் தாள்வலத்தையும் வாழ்த்தினர்.

சிறந்த வீரர் முதலியோரைக் கொணர மன்னன் பணித்தல்

வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின்

மாதாங் கெறுழ்த்தோள் மறவர்த் தம்மின்

கல்லிடித் தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின் 730

நல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின்

கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த

மாக்கண் முரசம் ஓவில கறங்க

எரிநிமிர்ந் தன்ன தானை நாப்பண்

பெருநல் யானை போர்க்களத் தொழிய 735

விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்

புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை

நீர்யார் என்னாது முறைகருதுபு சூட்டிக்

காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப்

பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து 740

வானத் தன்ன வளநகர் பொற்ப

நோன்குறட் டன்ன ஊன்சாய் மார்பின்

உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்

நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த

புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற் 745

பெருற்செய் ஆடவர்த் தம்மின் பிறரும்

யாவரும் வருக ஏனோருந் தம்மென

அம்பு ஏந்திய மார்பினர்- கோட்டை வெற்றியில் புண் பட்ட செல்வர் தன் யானை வீழ்ந்த பின்னரும் தாக்கி வென்ற குரிசிலர் பேருதவி புரிந்த ஊக்கத்தார் யானை கவர்ந்துவந்த பெருஞ்செய் ஆடவர் மற்றும் பிறர் ஆகியோருக்கெல்லாம் அவைக்கு வந்ததும் முதல் பணியாக விருது வழங்கிச் சிறப்பு செய்தான். யாவரும் வருக. அழைக்கப்படாத ஏனோரும் வருக. யான் அழைக்காவிட்டாலும் தாமே வருக. – என்று வரவேற்றுச் சிறப்புச் செய்தான். மறவர்- பகைவரின் வில்லைக் கவர்ந்து, அவர்கள் முன்பு எய்த அம்புகளை மார்பிலே தாங்கி ‘மா’ என்னும் வெற்றித் திருமகளைத் தோளிலே சுமந்துகொண்டிருப்பவர்கள். எயில் உழந்த செல்வர் ‘இட்டுவாய்’ என்பது கிட்டம் ஆகும்படி சுட்ட செங்கல். அகழியானது, மேட்டு நிலத்தில் கல்லை உடைத்தும், பள்ள நிலங்களில் கிட்டமாக்கிய செங்கலை இட்டும் அமைக்கப் பட்டிருந்தது. அகழியை அடுத்து மதில். அகழியைத் தாண்டி மதிலில் ஏறும்போது துன்புற்ற வீரர் செல்வர். (மதுரைகாஞ்சி)

நற்றினை:

நற்றிணை 18, பொய்கையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல

வருவர் வாழி தோழி மூவன்

முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்

கானல் அம் தொண்டிப் பொருநன் வென் வேல்

தெறல் அருந் தானைப் பொறையன் பாசறை  5

நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்

திரை தபு கடலின் இனிது கண்படுப்ப

கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்

தடாஅ நிலை ஒரு கோட்டன்ன

ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே.  10

உரை:

தோழி தலைவியிடம் கூறியது

“சேரன் பொறையன் தனது எதிரியான மூவன் என்பவனை வெல்ல

படை திரட்டி செல்கிறான். அப்போது அவனது பல்லை உடைத்து அவனை

துன்புருத்திகிறான்”. இந்த கொடுமைகள் பல செய்த அவனது மறவர்கள்

உறங்க முடியாமல் தவித்தனர்.

நற்றிணை 33, இளவேட்டனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

படுசுடர் அடைந்த பகுவாய் நெடு வரை

முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை

புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து

கல்லுடை படுவில் கலுழி தந்து

நிறை பெயல் அறியாக் குறை ஊண் அல்லில்  5

துவர் செய் ஆடை செந் தொடை மறவர்

அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை

இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்

வல்லுவம் கொல்லோ மெல் இயல் நாம் என

விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி  10

நல் அக வன முலைக் கரை சேர்பு

மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே.

நற்றிணை 48, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

அன்றை அனைய ஆகி இன்று உம் எம்

கண் உள போலச் சுழலும் மாதோ

புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ

வைகுறு மீனின் நினையத் தோன்றி

புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை  5

கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்

வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது

அமர் இடை உறுதர நீக்கி நீர்

எமர் இடை உறுதர ஒளித்த காடே.

நற்றிணை 86, நக்கீரர், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

அறவர் வாழி தோழி மறவர்

வேல் என விரிந்த கதுப்பின் தோல

பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்

கடும் பனி அற்சிரம் நடுங்க காண்தகக்

கை வல் வினைவன் தையுபு சொரிந்த  5

சுரிதக உருவின ஆகிப் பெரிய

கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை

நல் தளிர் நயவர நுடங்கும்

முற்றா வேனில் முன்னி வந்தோரே.

நற்றிணை 148, கள்ளம்பாளனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்

நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம்

தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே

நெடுங்கயம் புரிந்த நீர் இல் நீள் இடை

செங்கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி  5

வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது

கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின்

இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து

செங்கண் இரும்புலிக் கோள் வல் ஏற்றை

உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும்  10

அருஞ்சுரம் இறப்ப என்ப

வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே.

சிலப்பதிகாரம் முழுவதும் வரும் கரந்தை மறவர்கள்.

சிலப்பதிகாரத்தில் மறவர்களை வேட்டுவரியை காட்டிலும் வேந்தர் சூழ் படைகளிலே அதிகமாக விளக்கியுள்ளனர்.

மறவர்களை பற்றி புகார் நகரில் கரிகால் வளவனுடன் இந்திரவிழா தொடங்கி கொற்றவை பலியில் கடந்து மதுரை பாண்டியன் இறந்து மதுரை காவலை விட்டு மறவர்கள் நீங்கியது வரை அதன் பின்பு சேரன் செங்குட்டுவனுடன் சென்று ஆரியவேந்தரை வென்று  கண்ணகிக்கு சிலை எடுத்து இமயத்தில் வில் பொறித்தது வரை மறவரின் குறிப்புகளை வெளியிடுகின்றோம்.

கல்வெட்டுகளிலும் பிற்கால சரித்திர குறிப்புகளிலும் மறவர்கள் வேட்டையை குலதொழிலாக செய்ததில்லை.

வளரி என்னும் ஆயுதம் மறவர்,கள்ளர் மட்டுமே பயன்படுத்தும் ஆயுதம் .இது வேட்டைக்கும் போருக்கும் பயன்பட்டதே தவிர மறவர்கள் போரையும் காவலையும் தவிர வேறு தொழில் செய்ததில்லை

கரந்தை மறவர் பற்றிய குறிப்புகள்:

கரிகால் சோழனுடன் இந்திரவிழா கொண்டாடிய மறவர்:

5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை

பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்

பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்

நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,

கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்

நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்

ருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்

பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்

முந்தச் சென்று முழுப்பலி பீடிகை

வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்

பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக் 80

யானைவீரரும்  தேர்வீரரும் மறவரும் சூழ்ந்தனர் பட்டின விழாவான இந்திரவிழாவுக்கு.

25. காட்சிக் காதை

தரும வினைஞருந் தந்திர வினைஞரும்

மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்கெனப்

பிண்ட முண்ணும் பெருங்களிற் றெருத்தின்

மறமிகு வாளும் மாலைவெண் குடையும்

புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப்

வாள் ஏந்திய மறவர்கள் காக்கும் பாண்டியன் அரண்மனை.

ஆடியல் யானையும் தேரும் மாவும்

பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பிற்

பாடி யிருக்கைப் பகல்வெய் யோன்றன்

இருநில மடந்தைக்குத் திருவடி யளித்தாங்கு

அருந்திறல் மாக்கள் அடியீ டேத்தப் 90

யன்னைபடையும் பீடுகெழு மறவர்களும் ஒன்று சேர்ந்தனர்.

கச்சை யானைக் காவலர் நடுங்கக்

கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக

ஆளழி வாங்கி அதரி திரித்த

வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தித்

தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி

கச்சை யானைக் காவலர் நடுங்க – கழுத்திடு கயிற் றினையணிந்த யானைகளையுடைய அரசர்கள் நடுங்குமாறு, கோட்டுமாப் பூட்டி-கோட்டினையுடைய களிறுகளை எருதாகப் பூட்டி, வாள் கோலாக – வாளே கோலாக, ஆள் அழி வாங்கி அதரி திரித்த – ஆளாகிய போரை இரங்கவிட்டுக் கடாவிட்ட, வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி – வாளாகிய ஏரினை யுடைய உழவனாகிய செங்குட்டுவனது போர்க்களத்தை வாழ்த்தி, தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி – வீர வளை யணிந்த பெரிய கைகளை அசையுமாறு தூக்கி, முடியுடைக் கருந்தலை முந்துற ஏந்தி – முடியணிந்த கரிய தலையை முற்பட ஏந்திக்கொண்டு, கடல்வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ் இலங்கையில் எழுந்த சமரமும் கடல்வணன் தேர்ஊர் செருவும் பாடி – கடல் போலும் நீல நிறமுடைய கண்ணன் கடலின் வயிற்றைக் கலக்கிய போரும் கடலை அகழியாகவுடைய இலங்கையிற் புரிந்த போரும் பாண்டவர்பொருட்டுத் தேரூர்ந்த போரும் ஆகிய மூன்றையும் பாடி, பேரிசை முன்தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி – பெரும் புகழுடைய முதல்வனை முன்றேர்க் குரவையிலே பாடி வாழ்த்தி, பின்தேர்க் குரவை பேய் ஆடு பறந்தலை – பின்றேர்க் குரவையிலே பேய் ஆடுகின்ற மறக்களத்தில்;

தரும வினைஞருந் தந்திர வினைஞரும்

மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்கெனப்

பிண்ட முண்ணும் பெருங்களிற் றெருத்தின்

மறமிகு வாளும் மாலைவெண் குடையும்

புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப்

றஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து

இறைஞ்சாக் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு

மறையோ ரேந்திய ஆவுதி நறும்புகை

நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்

கடக்களி யானைப் பிடர்த்தலை யேரினன்

யானை வீரரும் இவுளித் தலைவரும்

வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத்

தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்

வானவன் போல வஞ்சி நீங்கித்

தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும் 80

அழற்படு காதை

காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்

வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து

கோமகன் கோயிற் கொற்ற வாயில்

தீமுகங் கண்டு தாமிடை கொள்ள

காழோர் வாதுவர் கடுந்தேர் ஊருநர் வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து – பரிக்கோலினராய யானைப்பாகரும் குதிரைப்பாகரும் விரையுந் தேர்ப்பாகரும் வினை வாய்த்த வாள் வீரரும் தம்முட் கலந்து மிக்கு,கோ மகன் கோயில் கொற்ற வாயில் – மன்னனது அரண்மனையின் வெற்றியினையுடைய வாயிலின்கண், தீ முகம் கண்டு தாம் மிடைகொள்ள – எரியின் திறத்தினை நோக்கி வந்து நெருங்க ;

மதுரை எரியும் போது மதுரையை விட்டு நீங்கி மறவர்கள்.

இமயத்தில் வெற்றிகொடி நாட்டின சேரன் செங்குட்டுவனும் மறவரும்:

சேரனே மறவர் மன்னன் தான் மறவர்களே சேரனோடு இமயத்தில் கன்னகிக்கு கல்லெடுத்து. மறவரோடு வஞ்சியை நீங்கி சென்றான் வானவன்.

நீர்ப்படைக் காதை

[இமயத்தினின்றும் கொண்ட பத்தினிக் கல்லைக் கனக விசயரு டைய முடியின் மீதேற்றிச் சென்று கங்கையாற்றில் முறைப்படி நீர்ப்படை செய்து அதன் தென்கரை சேர்ந்து, ஆரிய மன்னர்களால் ஆங்கண் அழகுற அமைக்கப்பெற்ற பாடியின்கண் செங்குட்டுவன் சேனையுடன் தங்கி, போரிலே வீரங்காட்டித் துறக்கமுற்றோரின் மைந்தர்களுக்கும், பகைஞர்களை வென்ற வீரர்களுக்கும் பொன்னாற் செய்த வாகைப் பூவினை யளித்துச் சிறப்பித்திருந்தனன். இருந்தவன் , கங்கையாடி அங்குப் போந்த மாடலனால் கோவலன் வரலாற்றையும், அவன் கொலையுண்டமை கேட்டுப் புகார் நகரிலிருந்த அவன் தந்தை யும் கண்ணகி தந்தையும் துறவுபூண்டதும், இருவர் தாயரும் உயிர் துறந்ததும் முதலியவற்றையும் நெடுஞ்செழியன் துஞ்சிய பின் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் பாண்டி நாட்டை ஆட்சி செய்து வருவதனையும் சோழனது செங்கோல் திரிபின்றி விளங்குவதனையும் கேள்வியுற்று, அவனுக்குச் தன் நிறையாகிய ஐம்பது துலாம் பொன் தானஞ்செய்து. தன்னாற் பற்றுக்கோட் பட்ட கனக விசயரைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு நீலன் முதலிய கஞ்சுக மாக்களை யேவித் தானையுடன் புறப்பட்டுச் சென்று , தன்னைப் பிரிந்து துயிலின்றி வருந்தியிருக்கும் கோப் பெருந் தேவியின் நெகிழ்ந்த வளை மகிழ்ச்சியாற் செறியும்படி வெண் கொற்றக் குடை நிழற்ற யானைமீ திவர்ந்து வஞ்சி நகரத்திற் புகுந்தனன்]

அழற்படு காதை

அரைச பூதத்து அருந்திறற் கடவுளும்

செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்

மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்

அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன்

மடிந்தோர் மைந்தரும் அணிந்தோரும் பொலிந்த மைந்தரும் கலங்கொண்டோரும் வாண் மறவரும் வருகவென அழைத்துக் கொடுத்தென்க. வாகைப் பொலந்தோடு அளித்தல் வீரர்களின் வீரச் செய்கையைப் பாராட்டியதற்கு அடையாளமாக அளிக்கும் சிறப்பாகும். கொடுக்குநாளைப் பெருநாளென்றார். அமயம் பிறக்கிட-பொழுது போதாதாம்படி. இனி, பிறந்த நாள்வயிற் கொடுக்கும் பொழுது பின்னாகும்படி யென்றுரைத்தலுமாம்.

செந்நிறப் பசும்பொன் புரையு மேனியன் – சிவந்த நிறமுடைய ஒட்டற்ற பொன்னையொத்த மேனியையுடையோ னாய், மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசு முடி ஒழிய அமைந்த பூணினன் – நிலை பெற்ற சிறப்பினையும் மறம் பொருந்திய வேலினையுமுடைய அரசர்க்குரிய தலைமை அமைந்த முடி தவிரப் பூண்ட கலன்களையுடையனாய், வாணிக மரபின் நீள் நிலம்

மறவேல் மன்னவன்(செங்குட்டுவன்) மறவரோடு போரிட்டு மாய்ந்த  மன்னர்கள் பலரை கடந்து இமயம் சென்றனர்.

நீர்ப்படைக் காதை

நிறஞ்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து

புறம்பெற வந்த போர்வாண் மறவர்

நிறம் சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து – உருச் சிதைந்த கவசத்தோடே மார்பின்கண் புண் மிகப்பெற்று, புறம் பெற வந்த போர் வாண் மறவர் – பகைவர் புறத்தைக் கண்ட வளவிலே மீண்ட போரிற் சிறந்த வாள் வீரரும்.நிறம் இரண்டனுள் முன்னது வடிவு ; பின்னது மார்பு.

நீர்ப்படைக் காதை

நாள்விலைக் கிளையுள் நல்லம ரழுவத்து

வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்

நாள் விலைக் கிளையுள் – தம் வாழ்நாளை விலையாகத் தரும் மறவருள், நல்அமர் அழுவத்து – நல்ல பொரு களப் பரப்பிலே, வாள் வினைமுடித்து மறத்தொடு முடிந்தோர் – வாளாற் செய்யும் வினையனைத்தையும் செய்து முடித்து வீரத்தோடு பட்டோரும் ;

நாள்விலைக் கிளை – அரசனளித்த செஞ்சோற்றுக்கும் சிறப்புக்கும் விலையாகத் தம் வாழ்நாளைத் தரும் மறவர். கிளையுள் எனபதனை இடைநிலை விளக்காகக் கொண்டு முன்னும் பின்னுங் கூட்டுக.

கிளைகள் மறவரில் மட்டுமே கானப்படும் என்பது இங்கு நோக்குக

நீர்ப்படைக் காதை

10

செறிகழல் வேந்தன் றென்றமி ழாற்றல்(தமிழ் ஆற்றல்)

அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்

செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக

உயிர்த்தொகை யுண்ட வொன்பதிற் றிரட்டியென்று

யாண்டும் மதியும் நாளுங் கடிகையும்

ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள

வருபெருந் தானை மறக்கள மருங்கின்

ஒருபக லெல்லை யுயிர்த்தொகை யுண்ட

செங்குட் டுவன்றன் சினவேற் றானையொடு

செறிகழல் வேந்தன் – செறிந்த வீரக் கழலையுடைய சேரவேந்தன், தென்றமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னரை – தமிழன் ஆற்றலை அறியாது பொருத ஆரியவர சரை, செயிர்த் தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த்தொகை உண்ட – கொல்லுந் தொழிலையுடைய கூற்றுவனது தொழில் மிகுமாறு உயிர்க்கூட்டத்தை யுண்ட போர்கள், ஒன்பதிற்று இரட்டியென்று யாண்டும் மதியும் நாளும் கடிகையும் ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள – பதினெட்டாகிய யாண்டிலும் திங்களிலும் நாளிலும் நாழிகையிலும் முடிந்தன வென்று கடல்சூழ்ந்த உலகத்தோர் கூட்டியெண்ண, வருபெருந்தானை மறக்கள மருங்கின் – பெரிய சேனைகளோ டெதிர்ந்த போர்க்களத்திலே, ஒரு பகல் எல்லை உயிர்த்தொகை உண்ட செங்குட்டுவன் – ஒரு பகற் பொழுதினுள்ளே உயிருண்ட செங் குட்டுவன் ;

வேந்தனாகிய செங்குட்டுவன் எனக் கூட்டுக. தமிழாற்றல் – தமிழ் வேந்தரின் ஆற்றல், தமிழ் மறவரின் ஆற்றல், தமிழ்நாட்டினரின் ஆற்றல். செயிர் செற்றம் ; துன்பமுமாம். செயிர்த்தொழில் – செயிரை விளக்குந் தொழில். உண்ட – உண்டனவாகிய போர்கள் ; வினைப்பெயர். ஞாலம் ஆண்டு முதலியவற்றுடன் ஒன்பதிற்றிரட்டியைக் கூட்டிப் போர்கள் அவற்றில் முடிந்தனவென் றெண்ண ; தேவாசுர யுத்தம் பதினெட்டாண்டிலும், இராம ராவண யுத்தம் பதினெட்டு மாதத்திலும், பாண்டவ துரியோதன யுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவனும் கனகவிசயரும் செய்த யுத்தம் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தனவென் றெண்ண வென்க

அழற்படு காதை

மறவெங் களிறு மடப்பிடி நிரைகளும்

விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன

மற வெங்களிறும் மடப்பிடி நிரைகளும் – வலி மிக்க கொடிய ஆண்யானைகளும் இளம் பெண்யானை வரிசைகளும், வினைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன – விரையும் செல வினையுடைய குதிரைகளும் மதிற்புறத்தே சென்றன ;

கால்கோள் காதை5

முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித்

தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு

மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்டச்

சிறப்பூண் கடியினஞ் செங்கோற் கொற்றத்து

அறக்களஞ் செய்தோன் ஊழி வாழ்கென

மறக்கள முடித்த வாய்வாட் குட்டுவன

முடித்தலை அடுப்பில் பிடர்த்தலைத் தாழி-முடி சூடிய தலையாகிய அடுப்பில் யானையின் தலையாகிய தாழியில் தொடித்தோள் துடுப்பில் துழைஇய ஊன்சோறு – தொடி யணிந்த தோளாகிய துடுப்பினால் துழாவி அடப்பட்ட ஊனாகிய சோற்றை, மறப்பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட-மறம் பொருந்திய பேய் மடையன் பதமறிந்து உண்பிக்க, சிறப்பூண் கடியினம் செங்கோற் கொற்றத்து அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க என-சிறந்த உணவினையுண்ட பேயினங்கள் முறை வழுவா வென்றியினாலே அறக்களஞ் செய்தோன் ஊழிதோறும் வாழ்க என வாழ்த்த. மறக்களம் முடித்த வாய்வாட் குட்டுவன்- போர்க்களச் செய்கையை முடித்த தப்பாத வாளினையுடைய செங்குட்டுவன்;

கால்கோள் காதை

தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து

வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்

ஊழி வாழியென் றோவர் தோன்றக்

சேரனாகி மறவாள் வேந்தன் போரை முடித்து கணக விஜயரை வென்ற செய்தி.

தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து – பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தன் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற – போர்த் தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு ஓவர்கள் தோன்ற

கால்கோள் காதை

75 மாகதப் புலவரும் வைதா ளிகரும்

சூதரும் நல்வலந் தோன்ற வாழ்த்த

யானை வீரரும் இவுளித் தலைவரும்

வாய்வாண் மறவரும் வாள்வல னேத்தத்

தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்

வானவன் போல வஞ்சி நீங்கித

மாகதப் புலவரும் வைதாளிகரும் சூதரும் நல்வலம் தோன்ற வாழ்த்த – சூதரும் மாகதரும் வேதாளிகரும் நல்ல வெற்றி விளங்குமாறு வாழ்த்த, யானை வீரரும் இவுளித் தலை வரும் வாய்வாள் மறவரும் வாள் வலன் ஏத்த – யானை மறவரும் குதிரை வீரரும் கூரிய வாட் படையினையுடைய போர் வீரரும் வாளின் வென்றியை வாழ்த்த, தானவர் தம்மேல் தம்பதி நீங் கும் வானவன் போல வஞ்சி நீங்கி – அவுணர்மீது தம் பதியின் நீங்கிச் செல்லும் இந்திரனைப்போல வஞ்சிப் பதியினின்றும் நீங்கி;

3,கால்கோள் காதை

200

சிலைத்தோ ளாடவர் செருவேற் றடக்கையர்

கறைத்தோன் மறவர் கடுந்தே ரூருநர்

வெண்கோட் டியானையர் விரைபரிக் குதிரையர்

மண்கண் கெடுத்தவிம் மாநிலப் பெருந்துகள்

சிலைத்தோள் ஆடவர் செருவேல் தடக்கையர் – வில்லினைத் தோளிற்கொண்ட வீரர் போர்புரியும் வேலினைக் கையிற்கொண்ட வீரர், கறைத்தோல் மறவர்-கரிய கிடுகினைத் தாங்கிய வீரர், கடுந்தேர் ஊருநர் – கடிய செலவினையுடைய தேரினைச் செலுத்துவோர், வெண்கோட்டு யானையர் விரைபரிக் குதிரையர் – வெள்ளிய கொம்புகளையுடைய யானையைக் கடாவு வோர் விரைந்த செலவினையுடைய குதிரையைத் தூண்டுவோர்.

3,கால்கோள் காதை

205 தோளுந் தலையுந் துணிந்துவே றாகிய

சிலைத்தோண் மறவர் உடற்பொறை யடுக்கத்து

எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம்

பறைக்கட் பேய்மகள் பாணிக் காடப்

208

தோளும் தலையும் துணிந்து வேறாகிய – தோள்களும் தலையும் துணிபட்டு வெவ்வேறாகிய, சிலைத்தோள் மறவர் உடற் பொறை அடுக்கத்து – வில்லைத் தோளிற் கொண்ட வீரர்களின் உடற்பாரமாகிய குன்றுகளில், எறி பிணம் இடறிய குறை உடற் கவந்தம் – வெட்டுண்ட பிணத்தால் இடறப்பட்ட தலை யற்ற உடலினையுடைய கவந்தங்கள், பறைக்கண் பேய் மகள் பாணிக்கு ஆட – பறைபோன்ற பெரிய கண்களையுடைய பேய் மகளின் தாளத்திற்கிசைய ஆட

12. அழற்படு காதை

காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்

வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து

கோமகன் கோயிற் கொற்ற வாயில்

தீமுகங் கண்டு தாமிடை கொள்ள

காழோர் வாதுவர் கடுந்தேர் ஊருநர் வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து – பரிக்கோலினராய யானைப்பாகரும் குதிரைப்பாகரும் விரையுந் தேர்ப்பாகரும் வினை வாய்த்த வாள் வீரரும் தம்முட் கலந்து மிக்கு,கோ மகன் கோயில் கொற்ற வாயில் – மன்னனது அரண்மனையின் வெற்றியினையுடைய வாயிலின்கண், தீ முகம் கண்டு தாம் மிடைகொள்ள – எரியின் திறத்தினை நோக்கி வந்து நெருங்க

பதிற்றுபத்து:

சேரர்களையும் மறவர்களையும் புகழும் நூல் பதிற்றுபத்து.

பாட்டு – 22

அமர்க்(கு)எதிர்ந்த புகல்மறவ ரொடு 20

துஞ்சுமரம் துவன்றிய மலர்அகன் பறந்தலை

ஓங்குநிலை வாயிதூங்குபு தகைத்த

வில்லிசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக்

உரை:

, “முன்ப, சேரல், நீ பிறர்க்கென வாழ்தியாகலான், நின் மறங்கூறு குழாத்தர் நின் போர் நிழற் புகன்று எமக்கு இல்லை யென்னார் எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “இனி இதற்குப் பிறவாறு கூட்டி வேறு பொருள் உரைப்பாரு முள” ரென்றும் கூறுவர். ”இதனாற் சொல்லியது, அவன் கொடைச் சிறப்பும், அவன் வென்றிச் சிறப்பும் உடன்கூறியவா றாயிற்று. அம் மறவரது கொடைக் குக் காரணம் அவன் வென்றியாகலின், துறை வாகை யாயிற்று.”


பெயர் – தொடர்ந்த குவளை (2)

துறை – செந்துறைப் பாடாண்பாட்டு

தூக்கு – செந்தூக்கு

வண்ணம் – ஒழுகு வண்ணம்

பாட்டு – 28

~~~~~~~~

திருவுடைத்(து) அம்ம பெருவிறல் பகைவர்

பைங்கண் யானைப் புணர்நிரை துமிய

உரம்துரந்(து) எறிந்த கறைஅடிக் கழல்கால்

கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப

இளைஇனிது தந்து விளைவுமுட்(டு) உறாது 5

உரை:

இவர்களை ஊதைக் காற்றன்றிப் பிற எவ்;வுயெரும் எச்செயலும் நடுங்குவித்தல் இல்லை யென்பது தோன்ற “சிலையுடை மறவர் ஊதையிற் பனிக்கும் நறவு” என்றார். அவ் வூதையும் புணரியும் மங்குலும் கலந்து வந்தல்லது பனிக்கு மாற்ற லுடைத் தன் றென்பதும் உரைத்தவாறு காண்க. பழையவுரைகாரரும், “மறவர் கட லூதையிற் பனிக்கும் நறவெனக் கூட்டி ஆண்டு வாழும் மறவர் கடலூதையால் மட்டும் நடுங்கும் நற வென்க, ” என்றும், “நறவு ஓர் ஊர்” என்றும், “துவ்வா நறவு வெளிப்படை” யென்றும் கூறுவர்.

பெயர் – வெண்கை மகளிர் (6)

துறை – வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு

தூக்கு – செந்தூக்கு

வண்ணம் – ஒழுகு வண்ணம்

பாட்டு – 30

பெரும்சமம் ததைந்த செருப்புகல் மறவர்

உருமுநிலன் அதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து

பெருஞ்சோ(று) உகுத்தற் கெறியும்

கடுஞ்சின வேந்தேநின் தழங்குகுரல் முரசே.

உரை:

வேந்தரும் வேளிரும் அஞ்சி நடுங்க, முரசிற்குப் பலியிட்டு, பெருஞ்சமம் ததைந்த செருப்புகல் மறவர்க்குப் பெருஞ்சோறு வழங்குவது குறித்து நின் முரசு முழங்குகிறதெனப் பல் யானைச் செல்குழு குட்டுவன், தன் வீரர்க்கு வழங்கும் பெருஞ் சோற்றுப் பெருவிருந்து இப் பாட்டின்கட் பொருளாக இருத்தலின், இது பெருஞ்சோற்று நிலை என்னும் துறையாயிற்று.

பாட்டு – 36

~~~~~~~~~

வீயா யாணர் நின்வயி னானே

தாவா(து) ஆகு மலிபெறு வயவே

மல்லல் உள்ளமொடு வம்(பு)அமர்க் கடந்து

செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று

பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன் 5

யானை பட்ட *வாள்மயங்கு கடும்தார்*

துறை: களவழி

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

பெயர்: வாண்மயங்கு கடுந்தார்

உரை:

மாவும் களிறும் தேரும் மறவரும் என்ற நாற்படையுடன் சென்று பறந்தலை கடந்து அகப்பா வெறிந்த வெல்போர்க் குட்டுவன் என இயையும். ஒடு, எண்ணொடு. உளை, தலையாட்டம்; குதிரையின் இரு செவிகட்கு மிடையே நெற்றியிற் கிடந்து அழகு செய்வது. உளை யென்பது பிடரி மயிருககும் பெயராய் வழங்கும்;

பாட்டு – 37

~~~~~~~~~

துளங்குடி திருத்திய *வலம்படு வென்றி*யும்

மாஇரும் புடையல் மாக்கழல் புனைந்து

மன்எயில் எறிந்து மறவர்த் தாணஇத்

தொல்நிலைச் சிறப்பின் நின்நிழல் வாழ்நர்க்குக் 10

கோ(டு)அற வைத்த கோடாக் கொள்கையும்

நன்றுபொ஢(து) உடையையால் நீயே

வெந்திறல் வேந்தேஇவ் வுலகத் தோர்க்கே.

உரை:

மிளை, காடு. கரந்திருந்து தாக்கும் மறவரும் பல்வகைப் பொறி களும் உடைய காடாதலின், “கடிமிளை” யென்றும் இடங்கரும் கராமும் முதலையும் சுறவும் பிறவும் இனிது வாழ்தற்கேற்ற ஆழமுடைமைபற்றிக் “குண்டுகிடங்” கென்றும் விதந்தோதினார். கவணும் கூடையும் தூண்டி லும் துடக்கும் ஆண்டலை யடுப்பும் சென்றெறி சிரலும் நூற்றுவரைக் கொல்லியும்,தள்ளி வெட்டியும், அரிநூலும், பிறவும் கொண்டு, ஏனை வீரரால் காவல் வேண்டப்படாத நொச்சி மதில் “நிரைப்பதணம்” எனப்பட்டது. அகப்பா வென்பது சீரிய அரணமைந்த தோரிடமாகும். இஃது உம்பற்காட்டைச் சேர்ந்தது. குட்டுவன் உம்பற் காட்டை வென்று கொண்ட காலத்து இங்கே யிருந்து, தன்னை யெதிர்த்த பகைவரை வென்று இதனைத் தனக்குரித்தாகக்கொண்டான்.

துறை: வாகை

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

பெயர்: ஏவல் வியன்பணை

—–

பாட்டு – 40

~~~~~~~~~

போர்நிழல் புகன்ற சுற்றமொ(டு) ஊர்முகத்(து)

இறாஅ லியரோ பெருமநின் தானை

இன்இசை இமிழ்முர(சு) இயம்பக் கடிப்பிகூஉப்

புண்டோ ள் ஆடவர் போர்முகத்(து) இறுப்பக்

காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல் 5

வந்(து)இறை கொண்டன்று தானை அந்தில்

களைநர் யார்இனிப் பிறர்எனப் பேணி

மன்எயில் மறவர் ஒலிஅவிந்(து) அடங்க

ஒன்னார் தேயப் பூமலைந்(து) உரைஇ

வெண்தோடு நிரைஇய வேந்(து)உடை அரும்சமம் 10

உரை:

அறத்திற் றிரியா மறவரைப் பேணிய கோட்பாட்டை, ” கோடாக் கொள்கை” யென்பா ராயினர். கோடற வைத்த கோடாக் கொள்கை யென்பதற்குப் பழையவுரைகாரர், “கொடுமை யறும் படிவைத்த பிறழாக் கொள்கை” யென்பர். எனவே, பகைமன்னர்க்குரிய மறவரைக் கொணர்ந்து, நின் னிழல் வாழும் சான்றோராகிய மறவர்க்குக் கொடுமை செய்தற் கேதுவாகிய பகைமை அவர் நெஞ்சில் நிகழாத வண்ணம் போக்கினை யென்றும், அதனால் கொள்கை பிறழா யாயினை யென்றும் கூறினாருமாம்.

ஐ ந் தா ம் ப த் து

~~~~~~~~~~~~~~~~~~

பாடப்பட்டோ ன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

பாடியவர்: காசறு செய்யுட் பரணர்

பாட்டு – 41

~~~~~~~~~

புணர்பு஡஢ நரம்பின் தீம்தொடை பழுனிய

வணர்அமை நல்யாழ் இளையர் பொறுப்பப்

பண்அமை முழவும் பதலையும் பிறவும்

கண்அறுத்(து) இயற்றிய தூம்பொடு சுருக்கிக்

காவில் தகைத்த துறைகூடு கலப்பையர் 5

கைவல் இளையர் கடவுள் பழிச்ச

மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு

வரைசேர்(பு) எழுந்த *சுடர்வீ வேங்கைப்*

பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்

மாஇருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச் 10

சேஎர் உற்ற செல்படை மறவர்

தண்(டு)உடை வலத்தர் போர்எதிர்ந் தாங்கு

வழைஅமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்

சேஎர் உற்ற செல்படை மறவர்

தண்(டு)உடை வலத்தர் போர்எதிர்ந் தாங்கு

வழைஅமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்

மழைபெயல் மாறிய கழைதிரங்(கு) அத்தம்

ஒன்(று)இரண்(டு) அலபல கழிந்து திண்தேர் 15

வசைஇல் நெடுந்தகை காண்குவந் திசினே

தாவல் உய்யுமோ மற்றே தாவாது

வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்

முர(சு)உடைப் பெருஞ்சமத்(து) அரசுபடக் கடந்து

வெவ்வர் ஓச்சம் பெருகத் தெவ்வர் 20

மிள(கு)எறி உலக்கையின் இருந்தலை இடித்து

வை(கு)ஆர்ப்(பு) எழுந்த மைபடு பரப்பின்

எடுத்தே(று) ஏய கடிப்(பு)உடை வியன்கண்

வலம்படு சீர்த்தி ஒருங்(கு)உடன் இயைந்து

கால்உளைக் கடும்பிசிர் உடைய வால்உளைக் 25

கடும்பா஢ப் புரவி ஊர்ந்தநின்

படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே.

உரை:

முன்பொருகால் இச் களிறு புலியொடு பொருது வெற்றிபெற்ற தென்றறியலாம். வேங்கைப் பூக்கட் குப் பின்னே மலைப்பக்கத்துத் துறுகல் நின்று வேங்கையின் தோற்றத் தைத் தோற்றுவித்த தென்பது “வரைசேர் பெழுந்த சுடர்வீ வேங்கை” யென்பதனாற் பெறுதும். “வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளை யின் தோன்றும்” (குறுந். 47) என்றும், “அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ தாய துறுகல், இரும்புலி வரிப்புறம் கடுக்கும்” (புற. 202) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. அக் களிற்றின் சினமிகுதி தோன்ற, “வாங்கிப் பிளந்து” என்றார். பிளந்த வேங்கைச் சினையைச் சென்னியிற் கொண்டு செல்லும் அக் களிறு தண் டேந்திச் செல்லும் போர் மறவரை நினைப்பித்தலின், “செல்படை மறவர் தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு” என்றார். செல்படை யென்று கொண்டு இடிபோல மின்னிப் புடைக்கும் படை யென்றும் கூறுவர். *சேஏர், திரட்சி. களிறு பிளிறும் என்றதற்கு ஏற்ப உவமைக்கண் ஆரவாரித்தல் பெற்றாம். “உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையைக், கறுவுகொண் டதன்முதல் குத்திய மதயானை” (கலி.38) எனப் பிறரும் கூறுதல் காண்க.மைபடு பரப்புப் போல எடுத்தேறு ஏவிய வியன் கண்ணையுடைய முரசு சேர்த்தியுடன் ஒருங்கு இயைந்து முழங்க, அவ் வெடுத்தேறு முழக்கங் கேட்ட ஒன்றுமொழி மறவர், பெருஞ் சமத்து அரசுபடக் கடந்து, வெவ்வர் ஒச்சம் பெருகவும், தெவ்வர் இருந்தலை யிடித்து அழிக்கவும், புரவி யூர்ந்த நின்னுடைய பனிக் கடல் பிசிருடைய உழந்த தாள் தாவல் உய்யுமோ உரைப்பாய் என்றவாறாயிற்று. எடுத் தேறு, முன்னெறிப் படையினை யெறிதல். முன்னேறியும் பக்கங்களில் ஒதுங்கியும் போருடற்ற வேண்டுதலின், அவற்றைப் படைவீரர் அனை வரும் ஒருமுகமாகச் செய்வது குறித்துத் தானைத் தலைவர் பணிக்கும் உரை அவ் வீரர் செவியிற் படாமையின், அதனை முரசு முழக்கால் அறிவிக்கும் இயல்பை, “எடுத்தே றேய கடிப்புடை வியன்கண்” என்றும், அம் முழக்கின் குறிப்புவழி யொழுகி வெற்றி பெறுதலால், வெற்றி முழக்கும் உட னெழுதலின், “வியன்கண் வலம்படு சீர்த்தி ஒருங்குட னியைந்து” என்றும் கூறினார்.

துறை: இயன்மொழிவாழ்த்து

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

பெயர்: பேர்எழில் வாழ்க்கை

பாட்டு – 49

~~~~~~~~~

யாமும் சேறுக நீயிரும் வம்மின்

துயிலுங் கோதைத் துளங்(கு)இயல் விறலியர்

கொளைவல் வாழ்க்கைநும் கிளைஇனி(து) உணீஇயர்

களிறுபரந்(து) இயலக் கடுமா தாங்க

ஒளிறுகொடி நுடங்கத் தேர்தி஡஢ந்து கொட்ப 5

எஃகுதுரந்(து) எழுதரும் கைகவர் கடும்தார்

வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து

மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்

வலம்படு குழூஉநிலை அதிர மண்டி

நெய்த்தோர் தொட்ட *செங்கை மறவர்* 10

உரை:

பகைவர் மார்பிற் செலுத்தி யழுத்திய படையினைப் பறித்தலால் வழியும் குருதி படிந்து சிவந்த கையினை யுடைய மறவர் எனப் பழையனுடைய வேரரது மாண்பு தெரித்தற்கு “நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்” என்றார். இவ்வாறே பழைய வுரைகாரரும், “பகைவ ருடலில் தாங்கள் எறிந்த வேல் முதலிய கருவிகளைப் பறிக்கின்ற காலத்து அவருடைய உடலுகு குருதியை யளைந்து சிவந்த கையையுடைய மறவர் என்றவாறு” என்றும், “இச்சிறப்பானே இதற்குச் செங்கை மறவரென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். இத்தகைய சிறப்பமைந்த வீரரையும் குட்டுவன் தானை வென்று மேம்பட்டதென அவன் வெற்றியை விளக்கினா ரெனவறிக.

இச்செங்கை மறவர் குட்டுவன் வீரரால் புண்பட்டு வீழ்ந்தாராக, அவர் மார்பினின் றொழுகிப் பெருகிய குருதிப் பெருக்கினைச் சிறப்பித்தற்கு, “மறவர் நிறம்படு குருதி நிலம் படர்ந்தோடி, மழைநாட் புனலின் அவல் பரந்தொழுக” என்றார். இவ்வாறே, “கடும்புனல் கடுப்பக் குருதிச் செம்புனல் போர்க்களம் புதைப்ப” (பெருங். 1: 46: 68-9) என்று கொங்கு வேளிரும், “ஒண் குருதி-கார்ப்பெயல் பெய்தபின் செங்குளக் கோட்டுக்கீழ், நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற” (கள. 2) என்று பொய்கையாரும் கூறுதல் காண்க. வீரரே யன்றி மாவும் களிறும் பட்டு வீழ்தலின், “பாழ்பல செய்து” என்றார். பொருவார்க்கு மறத்தீக் கிளர்ந்தெழச் செய்தற்கு முரசு படைநடுவண் முழங்குவதாயிற்றென வறிக.

துறை: ஒள்வாள் அமலை

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

பெயர்: வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி

பாட்டு – 57

~~~~~~~~~

ஓடாப் பூட்கை மறவர் மிடல்தப

இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக்

குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே

துணங்கை ஆடிய வலம்படு கோமான்

மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச் 5

செல்லா மோதில் *சில்வளை விறலி*

உரை:

போரில் வெற்றிபெற்ற சேரமானாகிய வேந்தன் , மாலை. குருதி புடையலும் கழலும் சிவப்பப் பனிற்றும் என்க. “பனிற்றுதல் தூவுதல்” என்றுரைத்து, “பனிற்றுவது புண்பட்ட வீரருடல் எனக் கொள்க” என்பர் பழையவுரைகாரர். எனவே மறவர் மிடல் தபுதலால், புண்பட்ட அவர் அவருடல் குருதியைத் தெறித்துத் தூவுமென்பது கருத்தாயிற்று. கள மென்றது கங்கையிடைச் சேரியென்புழிப் போலப் பாசறைமேல் நின்றது

துறை: செந்துறைப்பாடாண்பாட்டு

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

பெயர்: மாகூர் திங்கள்

பாட்டு – 60

~~~~~~~~~

கொல்வினை மேவற்றுத் தானை; தானே

இகல்வினை மேவலன் தண்டாது வீசும்

செல்லா மோதில் பாண்மகள் காணியர்

மிஞிறுபுறம் மூசவும் தீம்சுவை தி஡஢யா(து)

அரம்போழ் கல்லா *மரம்படு தீம்கனி* 5

அம்சே(று) அமைந்த முண்டை விளைபழம்

ஆறுசெல் மாக்கட்(கு) ஓய்தகை தடுக்கும்

மறாஅ விளையுள் அறாஅ யாணர்த்

தொடைமடி களைந்த சிலைஉடை மறவர்

பொங்குபிசிர்ப் புணா஢ மங்குலொடு மயங்கி 10

உரை:

சிலையுடைய மறவர், தாமேந்தும் சிலை அம்பு தொடுக்காது, மடிந்திருத்தலை வெறுத்துப் போர்வேட்டுத் திரியும் செருக்குடைய ரென்றற்கு, “தொடை மடி களைந்த சிலையுடை மறவர்” எனப்பட்டனர். இவர்களை ஊதைக் காற்றன்றிப் பிற எவ்;வுயெரும் எச்செயலும் நடுங்குவித்தல் இல்லை யென்பது தோன்ற “சிலையுடை மறவர் ஊதையிற் பனிக்கும் நறவு” என்றார். அவ் வூதையும் புணரியும் மங்குலும் கலந்து வந்தல்லது பனிக்கு மாற்ற லுடைத் தன் றென்பதும் உரைத்தவாறு காண்க. பழையவுரைகாரரும், “மறவர் கட லூதையிற் பனிக்கும் நறவெனக் கூட்டி ஆண்டு வாழும் மறவர் கடலூதையால் மட்டும் நடுங்கும் நற வென்க, ” என்றும், “நறவு ஓர் ஊர்” என்றும், “துவ்வா நறவு வெளிப்படை” யென்றும் கூறுவர்.

துறை: செந்துறைப்பாடாண்பாட்டு

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

பெயர்: ஏமவாழ்க்கை

————–

பாட்டு – 69

~~~~~~~~~

மலைஉறழ் யானை வான்தோய் வெல்கொடி

வரைமிசை அருவியின் வயின்வயின் நுடங்கக்

கடல்போல் தானைக் கடுங்குரல் முரசம்

கால்உறு கடலின் கடிய உரற

எறிந்துசிதைந்த வாள் 5

இலைதொ஢ந்த வேல்

பாய்ந்(து)ஆய்ந்த மா

ஆய்ந்துதொ஢ந்த புகல்மறவரொடு

படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்

துறை: முல்லை

வண்ணம்: ஒழுகுவண்ணம்

தூக்கு: செந்தூக்கு

பெயர்: நிழல்விடு கட்டி

பாட்டு – 82

~~~~~~~~~

பகைபெரு மையின் தெய்வம் செப்ப

ஆர்இறை அஞ்சா வெருவரு கட்டூர்ப்

பல்கொடி நுடங்கும் முன்பின் செறுநர்

செல்சமம் தொலைத்த *வினைநவில் யானை*

கடாஅம் வார்ந்து கடும்சினம் பொத்தி 5

வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந்(து) இயல

மறவர் மறல மாப்படை உறுப்பத்

தேர்கொடி நுடங்கத் தோல்புடை ஆர்ப்பக்

காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை

இன்ன வைகல் பல்நாள் ஆகப் 10

உரை:

இவ்விளஞ்சேரல் இரும்பொறை சோழ வேந்தன் ஒருவன்பால் மாறாச் சினங்கொண்டான். அதனால் தன் தானைத்தலைவரை நோக்கி, “உடனே விரைந்து சென்று பொருது சோழனைக் கைப்பற்றிக் கொணர்ந்து என்முன்னே நிறுத்துக” வெனப் பணித்தான். பணியேற்றுச் சென்ற சேரர் படைக்கு நிற்றலாற்றாமல் சோழன் படைமறவர் தாம் ஏந்திய வேலைப் போர்க்களத்தே.

Thanks :Project Madurai.

This entry was posted in மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *