Author Archives: குவைத் பாண்டியன்

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

நெடுஞ்செழியன் கி.பி 160 முதல் 200 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். வட நாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் “ஆரியப்படை” கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான் இப்பாண்டிய மன்னன். பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி “சேரர்” “சோழர்” பலரையும் வென்றவனும் ஆவான். … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பாண்டிய மன்னனின் உயிரைக் காத்த மகேசன்

பல ஆண்டுகளுக்கு முன்பு வீரபாகு என்ற மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். இவன் இரவில் தலைநகரை காவல்காக்கும் பொறுப்பையும் ஏற்று இருந்தான். குறிப்பாக, வெளியூர் செல்பவர்களின் வீடுகளை கூடுதலாக காவல்காத்து வந்தான். ஒருநாள் வழக்கம்போல் வீரபாகு பாண்டியன் காவல் பணியில் இருந்த போது, வெளியூர் சென்ற அந்தணர் ஒருவர் நள்ளிரவில் வீடு திரும்பினார். அவரை … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , , | Leave a comment

மாவீரர் வாண்டாயத் தேவன் வரலாறு

கொல்லங் கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். முதற்போர் இவர் பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள். ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. … Continue reading →

Posted in வாண்டாயத் தேவன் | Tagged , | 1 Comment

சோழரின் கீழ் தென்னகம்

இந்திய வரலாற்றைச் சமூகப் பொருளியல் பின்னணியில் பகுத்தறிந்து ஆய்வு செய்யும் முதன்மையானவர்களில் பேராசிரியர் எ.சுப்பராயலுவும் ஒருவர். தென்னிந்திய வரலாற்றை ரசனைப் பூர்வமான கலைக்கோட்பாடு, சமயப் பின்னணியில் கணிக் காமல் சமூகப் பின்னணியின் காரணியான பொருளி யலை அறிவதில் தலைப்பாடாக உழைக்கிறவர். வெவ்வேறு வரலாற்று அறிஞர் குழுக்களிடையே ஓர் இணைப்புப் பாலமாக இயங்கிவருகிறவர். எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன்வேலுதட், ராஜன் … Continue reading →

Posted in சோழன் | Tagged , | Leave a comment

சமூக நினைவுகளும் வரலாறும்

                                                                             சமூக நினைவுகளும் வரலாறும் ஆ.சிவசுப்பிரமணியன் சமூகத்தின் வரலாறு என்பது பல்வேறு வகைமைகளாகப் பார்க்கத்தக்கது. இதில்  பண்பாட்டு வரலாறும் ஒன்றாகும். பண்பாட்டு வரலாற்று வரைவிற்கான தரவுகளில்  ஒன்றாக ‘சமூக நினைவு’ அமைகிறது. பீட்டர் பர்க் என்பவர் ‘சமூக நினைவாக  வரலாறு’ (History as social memory) என்று இதைக் குறிப்பிடுவார். ஒரு  குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு … Continue reading →

Posted in சேதுபதிகள் | Tagged , | 1 Comment

பாண்டியன் திராவிடனா?

மஹாபாரதத்தில் சஞ்சயன் விவரித்த பாரதவர்ஷத்தின் தென் பகுதி நாடுகளில், திராவிடம், கேரளம், சோள தேசம் என்னும் பெயர்களைக் காண்கிறோம். இவற்றுள் கேரளமும், சோள தேசமும் தொடர்ந்து அதே பெயரால் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் திராவிட தேசம் என்னும் பெயரில் ஒரு நிலப்பகுதி சங்க நூல்களிலும், பிற்காலத் தமிழ் மன்னர்கள் குறித்த விவரங்களிலும் காணப்படவில்லை. அதே போல … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , | 1 Comment

ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர்

தமிழ்நாட்டிலுள்ள சாதிகளில் ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர் சாதியும் ஒன்று. இது முக்குலத்தோர் என அழைக்கப்படும் “கள்ளர்” “மறவர்” “அகமுடையர்” சாதிகளில் மறவர் சாதியின் உட்பிரிவுகளில் ஒன்றாகும்.

Posted in மறவர் | Tagged | 8 Comments

ஆதித்த கரிகாலச் சோழன் கொலை

பரசுராமன் சூளுரையும் ஆதித்த கரிகாலன் கொலையும் சோழப் பேரரசன் முதலாம் இராசராசன் கி.பி.985இல் முடிபுனைந்திருக்கிறான். முடி புனைந்து சில ஆண்டுகளுக்குள்ளாகவே சேர நாட்டிலிருந்த காந்தளூர்ச் சாலையைத் தாக்கி வெற்றி பெற்றிருக்கிறான் என்பது அவனது மெய்க்கீர்த்தியால் நமக்குத் தெரிய வருகிறது. அவன் அவ்வாறு விரைந்து காந்தளூர்ச் சாலையைத் தாக்குவதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். … Continue reading →

Posted in சோழன் | Tagged | Leave a comment

தமிழில் சாதி நூல்கள் (19, 20 ஆம் நூற்றாண்டு)

`சாதியம் என்பது இந்தியச் சமூக அமைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வருகின்ற வாழ்க்கை முறையாகும். இந்தியச் சமூக அமைப்பில் சாதிகள் தோன்றிய காலம் எது என்று வரையறுப்பது ஆய்வாளர்களிடம் விவாதப் பொருளாகவே உள்ளது. தொழில் பிரிவினையே சாதிகளாக மாறி வந்தன என்றும், நான்கு வர்ணங்களே சிதைந்து சாதிகளாயின என்றும், நிலவுடை மைக் காலகட்டமே சாதிகளின் தோற்றத்திற்கு … Continue reading →

Posted in வரலாறு | Tagged , | Leave a comment

ஜல்லிக்கட்டு

ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.

Posted in மறவர் | Tagged | Leave a comment