Author Archives: குவைத் பாண்டியன்

உடையார்குடிக் கல்வெட்டு

தமிழக வரலாற்றில் குறிப்பாக சோழர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குவது உடையார்குடி கல்வெட்டாகும். தற்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரம் சிவாலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இச்சாசனம் இடம்பெற்றுத் திகழ்கின்றது. கோஇராஜகேசரிவர்மரின் (முதலாம் இராஜராஜ சோழனின்) இரண்டாம் ஆட்சியாண்டு குறிக்கப் பெற்றுள்ள இச்சாசனத்தினை எபிக்கிராபிகா இண்டிகா தொகுதி 21இல் … Continue reading →

Posted in சோழன் | Tagged | Leave a comment

திருவண்ணாமலை கல்வெட்டு

பதிவுசெய்யப்பெற்ற மொத்தக் கல்வெட்டுக்கள் 119. இவைகளில் பெரும்பாலன சோழர்காலத்தன. திருவிளக்கேற்றல், திருமஞ்சனம், திருநந்தனவனம், திருவமுது, திருவெழுச்சி, அடியார்க்கு அமுதளித்தல் முதலிய பல அறங்களுக்காக நிலம், பொன், கால்நடை முதலியனவற்றை அளித்தமையை அறிவிக்கின்றன. பாண்டியர், பல்லவர், ஹொய்சளமன்னரான வீரவல்லாளதேவர், விஜயநகரத்து ராயர், தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் வணிகர், வேளாளர் முதலியவர்கள் கல்வெட்டுக்களும் காணக்கிடக்கின்றன.

Posted in சோழன் | Tagged | Leave a comment

கல்வெட்டு : கங்கைகொண்ட சோழேச்சரம்

பிற்காலச் சோழர்களில் விசயாலயன் காலம் முதல், முதலாம் இராஜராஜன் காலம் முடிய (கி.பி. 846 – 1014) பத்துத் தலைமுறகைளாகத் தஞ்சாவூர் சோழமன்னர்களின் தலைநகரமாய்த் திகழ்ந்திருந்தது. இத்தஞ்சாவூர் பாண்டி நாட்டின் எல்லகைகு அருகில் இருந்தமையால், தலைநகரம் பாண்டியர்களால் அடிக்கடித் தாக்கப்படும் என்ற காரணம் பற்றியும், அக்காலம் மாதம் மும்மாரிபெய்து கொள்ளிடப்பேராறு வெள்ளப்பெருக்கெடுத்து ஓடினமையால் முதலாம் இராஜேந்திர … Continue reading →

Posted in சோழன் | Tagged | Leave a comment

பாண்டியன் சபையில் கண்ணகி

கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள். அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள்தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த நம்பிக்கையில் கண்ணகி வாதாடினாள்?

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

தமிழ்ச் சங்கங்களின் வரலாறு

நான்கு தமிழ்ச் சங்கங்கள்: பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட அன்பின் மிகுதியாலும், ஆழ்ந்த பற்றுதலாலும் தங்கள் தலைநகரங்களில் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள் என்று பல இலக்கியச் சான்றுகளின் வாயிலாகவும், செப்பேடுகளின் வாயிலாகவும், மன்னர்களின் கல்வெட்டுகள் வாயிலாகவும் நாம் அறிகின்றோம். முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய முப்பெரும் தமிழ்ச்சங்கங்கள் அழிந்து போன … Continue reading →

Posted in வரலாறு | Tagged | Leave a comment

உத்தமசோழபுரம் வரலாறு

வரலாறு : ராவணன் சகோதரன் கரதூசனன், ஆயிரம் ஆண்டு தவம் செய்து அக்னிபிரவேசம் செய்யும் நேரத்தில் “நில்’ என்ற அசரீரி வாக்கு கேட்டு நின்றான். இறைவன் கரதூசனனுக்கு காட்சி அளித்தார். அப்போது இறைவனுக்கு கரதூசனன் பூஜை செய்ததால், “கரபுரநாதர்’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. திரேதாயுகத்தில் கரபுரம் என்றும், கலியுகத்தில் சோழபுரி  என்றும் கூறப்படும் இத்தலத்தின் சிறப்புகள் … Continue reading →

Posted in வரலாறு | Tagged | Leave a comment

சங்க கால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு

இரா.கிருஷ்ணமூர்த்தி தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் 1894 ஆம் ஆண்டு சங்க கால நூலான புறநானூற்றைப் பதிப்பித்தார்.அந்நூலில் சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயர்களும், அவர்களின் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்களின் பெயர்களும் இருப்பதை வரலாற்று ஆசிரியர்கள் கண்டு வியந்தனர். சிலர், இப்பெயர்கள் கற்பனையான பெயர்கள் என்றும், இப்பெயர்களை உறுதி … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged | 3 Comments

பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி !

பூலித்தேவன் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளையர்களின் வரி வசூல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தென்னிந்தியப் பாளையக்காரர்களின் போராட்டத்திற்கு, நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரரான பூலித்தேவன், 1750களில் நடத்திய போராட்டம் முன்னோடியாக இருந்திருக்கிறது. சங்கரன் கோவில் அருகே இருக்கும் இந்தப் பாளையம் அன்று நெல்லைச் சீமையின் போராட்ட மையமாக இருந்தது.

Posted in பூலித்தேவன் | Tagged | Leave a comment

சிவகங்கை அரண்மணை

காலத்தின் எத்தனையோ மாற்றங்களை மீறி இளம் சந்தனக் கலரில் வரலாற்றுத் தடயமாக சில நூற்றாண்டுகளுக்கு முந்திய ஒரு காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது சிவகங்கை அரண்மணை. மூன்று ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கிற அரண்மனையில் உள்ளே கோவில், பெரிய மண்டபம், அந்தப்புர மாடம், சின்ன நீச்சல்குளம் எல்லாம் காலத்தின் சிதைவுடனிருக்கின்றன. சுற்றியுள்ள 18 அடி உயரச் சுற்றுச்சுவரும் விரிசலடைந்து … Continue reading →

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர் | Tagged | Leave a comment

காளையார் கோயில் வரலாறு

கோயில் என்று தமிழில் வெறுமே சொன்னால் அது தில்லையையும், திருவரங்கத்தையும் தான் குறிக்கும். அவற்றை விடுத்து, சிவகங்கைக்கு அருகில் உள்ள காளையார் கோயிலைத் தான், வரலாற்றுத் தாக்கம் ஏற்படுத்தியதாய் நான் சொல்லுவேன். (காளையார் கோயில் என்பது, இன்று கோயிலுக்கும் ஊருக்குமான பெயர். சங்க காலத்தில், கானப் பேரெயில் என்று தான் ஊருக்குப் பெயர் இருந்தது. (கானத்தில் … Continue reading →

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், வரலாறு | Tagged | 2 Comments