Author Archives: குவைத் பாண்டியன்

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்

ராமநாதபுரம் : ஊழல் செய்த தனது மருமகனின் தலையை வெட்டி நல்லாட்சிக்கு 16 ம் நூற்றாண்டில் வித்திட்டவராக திகழ்கிறார் மன்னர் விஜயரகுநாத சேதுபதி.தமிழகத்து மூவேந்தர்களுக்கு பின் 13ம் நூற்றாண்டு இறுதியிலிருந்து சுதந்திர காலம் வரை தமிழ், இறையாண்மை, தர்மங்களை பண்பாடு மாறாமல் பாதுகாத்து வந்தவர்கள் சேதுபதி மன்னர்கள்.

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

அழிந்து வரும் மன்னர் காலத்து அரண்மனைகள்

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட அரண்மனைகள் பல இன்று அழிந்து வருவதால் இதனை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயநகரப்பேரரசு காலத்திலும்,மதுரை நாயக்கர் ஆட்சியிலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளித்தல் சிறப்பாக நடந்தது. 1502 ல் போர்த்துக்கீசியர்கள் வருகைக்குப்பின் கிழக்கு கடற்கரையில் இஸ்லாமியர்கள் வசமிருந்த முத்துகுளித்தல் மற்றும் கடல் … Continue reading →

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

நெஞ்சம் மறப்பதில்லை: பாரம்பரியம் காக்கும் ஜமீன்

உயர்ந்து நிற்கும் மதில்கள், உள்ளுக்குள் அரசு அலுவலகங்கள், காரை பெயர்ந்த நிலையிலும், காலம் கடந்தும், சரித்திரத்தை தனக்குள் தக்கவைத்துக்கொண்ட பாரம்பரிய கட்டடங்கள். நவீனம் புகுந்த நிலையிலும், தன்னுள் பழைமையை பறைசாற்றத் துடிக்கும் பெரிய அறைகள் என கம்பீரம் குறையாமல் காட்சியளிக்கிறது ராமநாதபுரம் ஜமீன் அரண்மனை. தென் தமிழகத்தில் பிரிக்கப்படாத பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதியை … Continue reading →

Posted in சேதுபதிகள் | Tagged , | Leave a comment

வீரமங்கை ராணி வேலு நாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார். இளமை 1730லஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல … Continue reading →

Posted in வேலு நாச்சியார் | 1 Comment

மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்

இராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்களில் ‘கிழவன் சேதுபதி’ சிறப்பானவன். அவன் வரலாற்றை திரு மீ.மனோகரன் எழுதியிருக்கிறார். அதில் பிரிட்டோ பாதிரியார் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. தென் மாவட்டங்களில் மதமாற்றம் எப்படி நடந்தது என்பதற்கு இந்த வரலாறு ஒரு எடுத்துக்காட்டு. இனி பிரிட்டோ பாதிரியார் பற்றி படியுங்கள். பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய … Continue reading →

Posted in மறவர் | Tagged | Leave a comment

13ம் நூற்றாண்டு கொங்குசோழர் கல்வெட்டு:பழநி கோவில் தூணில் கண்டுபிடிப்பு

பழநி:கடந்த 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குசோழ கல்வெட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:பழநி பெரியநாயகியம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் கோவிலில், தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவில் முன் மண்டப தென்புறத் தூணின் வட பகுதியில், வழக்கில் உள்ள தமிழ்மொழியின் முன்னோடி வடிவத்தில் 20 வரிகளைக் கொண்ட கல்வெட்டு … Continue reading →

Posted in சோழன் | Tagged | Leave a comment

கீழமங்கலம் கல்வெட்டு

இடம்: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்திலுள்ள ஓசனூத்திலிருந்து பசுவந்தனை செல்லும் சாலையிலுள்ள கீழமங்கலத்தின் வடபுறத்தில், தொடக்கப் பள்ளிக்கு அருகிலுள்ள கிணற்றங்கரையில் உள்ள கல்வெட்டுத் தூண். காலம்: கி.பி. 1162 முதல் கி.பி. 1177 வரை திருநெல்வேலி, கன்னியாகுமரிப் பகுதிகளை ஆண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியராகலாம். செய்தி: முதுகுடி நாட்டு மங்கலமான உத்தமபாண்டியநல்லூரில் முதுகுடி நாட்டீச்சுவரமுடைய நாயனார் … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

ராஜராஜ சோழனின் பாட்டி வீடு திருக்கோவிலூர் :கல்வெட்டு ஆதாரம் கண்டுபிடிப்பு

ராஜராஜ சோழனின் பாட்டி ஊரான, திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறையில், ராஜராஜன் இக்கோவிலுக்கு தானமாக வழங்கிய பொருட்கள், அவரது தாயின் வீரம் குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் இக்கல்வெட்டு இடம்பெற உள்ளது. ஆன்மிகம், கலை, இலக்கியம், வீரம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவன் … Continue reading →

Posted in சோழன் | Tagged | Leave a comment

மூன்றாம் இராசேந்திர சோழன் கல்வெட்டு

இக்கல்வெட்டுக் கிரந்தஎழுத்தில் உள்ளது. எனவே இதன்பொருள்மட்டும் இங்கே கொடுக்கப்படுகின்றது. “எல்லா உலகத்திற்கும் ஒப்பற்ற வீரனும், வாட் போரில் வன்மை மிக்கவனும், வீர ராக்ஷஸன் எனப் போற்றப்படுபவனும், லங்காராம என்னும் பெயருடையானும், மநுகுலத்தை உயர்த்தியவனும், அஞ்சத்தக்கப் போர்க்களத்தில் பகைவர்க்குச் சூறாவளியும், சோழர் குடிக்கு நேரும் தாழ்வினைத் தவிர்க்கும் தனி வீரனும், மூன்று ஆண்டுகள்… தரித்த முடிகளை யுடையவனும், … Continue reading →

Posted in சோழன் | Tagged | 1 Comment

சோழர் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது

கரூர்  அருகே, சோழர் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் கழக உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:உத்தம சோழன் ஆட்சி, 975 யுவ ஆண்டு, 31ம் தேதி எழுதப்பட்ட வட்டெழுந்து கல்வெட்டு, கரூர் அருகே சணப்பிரட்டியில் கண்டெடுக்கப்பட்டது.

Posted in சோழன் | Tagged | Leave a comment