Category Archives: பாண்டியன்

மலையாள முதல் இலக்கண நூல் லீலா திலகம் போற்றும் பாண்டிய மன்னன்

– கி. நாச்சிமுத்து மலையாளத்தில் எழுந்த இலக்கண நூலாகிய லீலா திலகம் கி.பி. 1385 – 1400 – இல் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பேராசிரியர் இளங்குளம் அவர்கள் கணிப்பு. அவர் கருத்துப்படி இந்நூலை எழுதிய ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. இந்நூலில் வேணாட்டுச் சேர உதய மார்த்தாண்ட வர்மன் (1383 – 1444), திருப்பாப்பூர் மூத்த திருவடி … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

கீழமங்கலம் கல்வெட்டு

இடம்: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்திலுள்ள ஓசனூத்திலிருந்து பசுவந்தனை செல்லும் சாலையிலுள்ள கீழமங்கலத்தின் வடபுறத்தில், தொடக்கப் பள்ளிக்கு அருகிலுள்ள கிணற்றங்கரையில் உள்ள கல்வெட்டுத் தூண். காலம்: கி.பி. 1162 முதல் கி.பி. 1177 வரை திருநெல்வேலி, கன்னியாகுமரிப் பகுதிகளை ஆண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியராகலாம். செய்தி: முதுகுடி நாட்டு மங்கலமான உத்தமபாண்டியநல்லூரில் முதுகுடி நாட்டீச்சுவரமுடைய நாயனார் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பாண்டியன் சபையில் கண்ணகி

கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள். அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள்தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த நம்பிக்கையில் கண்ணகி வாதாடினாள்?

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

சங்க கால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு

இரா.கிருஷ்ணமூர்த்தி தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் 1894 ஆம் ஆண்டு சங்க கால நூலான புறநானூற்றைப் பதிப்பித்தார்.அந்நூலில் சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயர்களும், அவர்களின் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்களின் பெயர்களும் இருப்பதை வரலாற்று ஆசிரியர்கள் கண்டு வியந்தனர். சிலர், இப்பெயர்கள் கற்பனையான பெயர்கள் என்றும், இப்பெயர்களை உறுதி … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | 3 Comments

பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

அரியலூர்:அரியலூர் அருகே பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளது.அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி அருகே பொய்யூர் கிராமத்தில் சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை திருப்பணி செய்யும் முயற்சியில், ஊர் மக்கள் ஈடுபட்டபோது, கருங்கல் பலகையில் எழுதப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்தது. அரியலூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

சிங்களவர்களை வென்ற பாண்டிய மன்னன்!

மெக்கன்ஸி சேகரித்த ஒரு வரலாற்று ஆவணம் மெக்கன்ஸி காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வரலாறு (கி.பி.1594-1572-ல் நடந்தவை) ஒரு ஏட்டில் எழுதப்பட்டிருந்தது. அந்த விவரங்களை மெக்கன்ஸி தருகிறார்: அந்த நாளில் பரமக்குடியில் ஒரு பாளையக் காரர் இருந்தார். அவர் பெயர் தும்பிச்சி நாயக்கர். பரமக்குடி பாளையத்திற்கு எதிராக வந்த பல யுத்தங்களில் அவர் வெற்றி … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

நீதி காத்த பாண்டிய மன்னர்கள்

இந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வளர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக விளங்கினர். சங்கம் அமைத்துப் புலவர்களுடன் தாங்களும் உடனிருந்து ஆராய்ந்து இவர்கள் தமிழ் வளர்த்தனர் என்பதைத் தமிழ் உலகம் நன்கறியும்.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

லெமூரியா கண்டம் – பாண்டிய நாடு ஒரு ஆய்வுப்பயணம்

இன்றிலிருந்து சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இது தொடங்குகின்றது. அதாவது கிமு 1000 வது முன்னால் இருந்து என்று வைத்துக் கொள்ளலாம். இந்தியா என்ற துணைக்கண்டம் பெரும் பகுதியாக இருந்தது. இந்தியா என்று இன்று சொல்லப்படும் நிலப்பரப்புக்குக் கீழே தான் லெமூரியா என்ற ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது. இன்றைய இந்திய துணைக்கண்டம் போலவே லெமுரியாவும் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம். வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பாண்டிய மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்

பாண்டிய, சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் (தமிழ் நாட்டில் மலைக் கல்வெட்டுகளிலும், தாமிர தட்டுகளிலும் எழுதப்பட்டவை) 1.1. பராந்தக நெடுஞ்சடையன் (768-815) 1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி. 1.1.1 (01) கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால் நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment