Category Archives: வரலாறு

செம்பி நாட்டு மறவர்களே இலங்கையை ஆண்ட சோழரின் வழியினர்

 கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் 1055- ஆம் ஆண்டில் எழுதபட்ட இராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தியில் சோழபாண்டியன்,சோழகங்கன்,சோழகேரளன்,சோழ அயோத்திராஜன்,சோழ கனகராஜன்,சோழ கன்னங்குச்சிராஜன்,சோழ வல்லபன் என சோழ மரபினர் பலரை பல்வேறு பகுதிகளில் ஆள நியமித்ததாக மெய்கீர்த்தி கூறுகின்றது.   இலங்கையிலும் தொடர்ந்த இப்பாரம்பர்யத்திலே சோழமரபினருக்கு வன்னிபங்கள் என்ற காடு சூழ்ந்த வவுனிய என்ற மட்டகளப்பு பிரதேசங்களை … Continue reading →

Posted in சேதுபதிகள், சோழன், மறவர், வரலாறு | Tagged | 1 Comment

விஜய நகர விட்டலராய நாயக்கர் வெங்கலராஜ நாடார் ஆன கதை.

வரலாறு என்பது இட்டு கட்டுவது அன்று, இயந்து காட்டுவது அன்று, திரிப்பது அன்று, சரடுவிடுதல் அன்று உண்மையை வெளிப்படுத்துவது ஒன்றே வரலாறு ஆகும். அது நிலை மெய்யின் சான்றே  தமிழ் கருத்தின் பொருளின் படி கதை விடுதலும் திரித்தலும் இல்லாத ஒன்றை இருப்பது போன்றும் இருப்பதை வேறு விதமாக கட்டுகதை புரிவதும் வரலாறு ஆகாது. தமிழக … Continue reading →

Posted in வரலாறு | Tagged | Leave a comment

திருச்சி வரலாறு

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுற்றுலா சிறப்பில் தமிழகம் தன்னிகரில்லா பெருமைகளை பெற்று விளங்குகிறது. இங்கு ஆயிரக்கணக்கில் எழுந்துள்ள கோயில்கள், உயர்ந்து நிற்கும் கம்பீரமான கோபுரங்கள், கலையெழில் கொஞ்சும் மண்டபங்கள், நீண்ட நெடும் பிரகாரங்கள், அழகுமிகு சிற்பங்கள், வண்ணமிகு திருவிழாக்கள் அனைத்தும் தமிழகத்தின் காலச்சார பெருமைகள். வரலாறு, மொழி, கலை, இலக்கியம், ஆன்மீகம், வேளாண்மை, பண்பாடு, பழமை, … Continue reading →

Posted in வரலாறு | Tagged | Leave a comment

மலேசியத் தமிழர் வரலாறு

  மலேசியத் தமிழர் வரலாறு 7, 8ஆம் நூற்றாண்டுகள் முதற்கொண்டே பழந்தமிழருக்கு மலாயாவுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு மலாயாவில் கடாரம் எனும் பெயரில் நிலப்பரப்பை உருவாக்கி ஆட்சி செய்துள்ள வரலாறு உண்டு. தொடக்க காலத்தில் வணிகத் தொடர்புகளின் பொருட்டுதான் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்(Kedah) … Continue reading →

Posted in வரலாறு | Tagged | Leave a comment

சிலம்பத்தின் வரலாறு!

சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் … Continue reading →

Posted in வரலாறு | Tagged | Leave a comment

தஞ்சை கீழை நரசிம்மர் வரலாறு

தஞ்சையில் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கு பின்னாலும் வரலாறு புதைந்து கிடக்கின்றது. பார்பதற்கு சாதாரணமாய் தோன்றும் இந்த கோயிலுக்கு பின்னும் அப்படி ஒரு வரலாறு உள்ளது. கி.பி 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “விஜயலாயச் சோழன்” என்கிற மன்னனால் புத்துயிர் பெற்று தஞ்சையை மீட்ட சோழர்கள், பின் மெல்ல மெல்ல வளர்ந்து ராஜ ராஜன், ராஜேந்திரன் போன்ற … Continue reading →

Posted in வரலாறு | Tagged , | Leave a comment

சூரக்குடி பொன்னரசு கண்ட விஜயாலயத்தேவர்

நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் பேரவை ========================================================= சூரைக்குடி விஜயாலயத்தேவரின் வம்சத்தை சேர்ந்த https://www.facebook.com/groups/532904683520538/ கொண்டையன் கோட்டை தலைவன் வம்சம் திருநெல்வேலியில் காணும் தலைவனார் வம்சத்தோடு தொடர்புடையவர்கள் வாலும்,வேலும் கொண்டு வீரம் மனதில் கொண்டு சிரம் நிமிர்ந்து நின்று எதிர்த்து நிற்கும் எப்படையும் அழித்து நிற்கும் இப்படையும் கொண்ட எம்குடி கேரள சிங்கவள  மது … Continue reading →

Posted in சிவகிரி ஜமீன், மறவர், வரலாறு | Tagged , | 4 Comments

இளையன்புதூர் செப்பேடுகள்

இளையன்புதூர் செப்பேடுகள் எனப்படுபவை கி.பி.726 ஆம் ஆண்டு முற்கால பாண்டிய அரசனான அரிகேசரி பராங்குசன் மாறவர்மனின் 36 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட செப்பேடுகள் ஆகும்.இந்த செப்பேடுகள் மதுரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இந்த செப்பேடுகள் மூலம் முற்கால பாண்டியர் வரலாறு குறித்த செய்திகள் கிடைத்துள்ளன. மொழி மற்றும் வடிவமைப்பு : கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளில் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன. தொடக்கத்திலும், முடிவிலும் வடமொழில் … Continue reading →

Posted in வரலாறு | Tagged | Leave a comment

கொடுமணல்-ஒரு தொல் நகரம்

கொடு மணல்: திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களின் எல்லை பகுதிக்கு அருகில் உள்ள கொடுமணல் கிராமம் ஒரு தொல் பழங்கால தகவல் சுரங்க கொத்து.இந்த தொல் நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுகள்,ஆராய்ச்சிகள்,அதன் அடிப்படையிலான கருது கோள்கள்,முடிவுகள் நமக்கு ஒரு உவப்பான மேலும் தகவல்பூர்வமான பழந்தமிழர் நாகரீகம் பற்றிய சித்திரத்தை அளிக்கின்றன.இந்த தொல் நகரம் நமக்கு சொல்லும் செய்திகளையும்,அது வரலாற்றின் … Continue reading →

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பந்தல்குடி வரலாறு

இவ்வூர் அருப்புக்கோட்டை வட்டத்துப் பந்தல்குடி உள்வட்டத்தில் அருப்புக்கோட்டை எட்டையபுரம் சாலையில் அருப்புக்கோட்டையிலிருந்து 9கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. பந்தல் என்பது உயரமான தூண்களைக் கொண்ட கல் மண்டபத்தைக் குறிப்பதாக அமையும். இத்தகைய மண்டபம் பழங்காலத்தில் கோயில் திருவிழாக்களில்,இறைவன் எழுந்தருளுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.நாளடைவில் இங்கு குடியிருப்பு தோன்றியதால் இஃது பந்தல்குடி ஆயிற்று எனலாம். மேலும் பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சியை மீண்டும் … Continue reading →

Posted in வரலாறு | Tagged | Leave a comment