நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் பேரவை
=========================================================
கொண்டையன் கோட்டை தலைவன் வம்சம் திருநெல்வேலியில் காணும் தலைவனார் வம்சத்தோடு தொடர்புடையவர்கள் வாலும்,வேலும் கொண்டு
வீரம் மனதில் கொண்டு
சிரம் நிமிர்ந்து நின்று
எதிர்த்து நிற்கும் எப்படையும் அழித்து நிற்கும் இப்படையும் கொண்ட எம்குடி கேரள சிங்கவள மது நேம நாட்டு கொண்டையன் கோட்டை தலவான்களே ….
அவ்வுலகமானாலும் இக்கலியுகம் ஆனால் நம் வீரம் மாறாது… நம் சிறப்பு அழிந்து போகாது…
எத்தொழிநுட்பம் வந்தாலும் அதிலும் நம் பெயர் பொறிக்கபட வேண்டும் என்பதற்காக நம் நாட்டிற்காக நான் உருவாக்கி ஒரு சிறு காட்சி தொகுப்பு
காரைக்குடி அருகே வ.சூரக்குடி என்ற ஊர் உள்ளது இது இன்று சிற்றூராக இருப்பினும் 13-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை காணாடு,சூரக்குடி,இராஜேந்திரமங்கலம்கோட்டையூர், மேலூர், கண்ணனூர், தெற்காட்டூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சோழர் மற்றும் பாண்டியருக்கு கீழ் சிற்றரசாக விளங்கியுள்ளது.இதை ஆண்டவர்.இதை மறவர் இனத்தை சார்ந்த பொன்னரசு கண்ட விஜயாலயத்தேவர் என்பவர் ஆண்டு வந்துள்ளார்.
[திரு எஸ்.இராமச்சந்திர ஐயர்(நாடார் சரித்திர ஆய்வாளர்) அவர்கள் கவனத்திற்கு தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. இவ்விசயாலத் தேவ வம்சத்தவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வலங்கை வாழவந்த விசயாலயத் தேவர் என்றே பட்டம் புனைந்தனர்.சாத்தூர்ப் பகுதியிலுள்ள ஏழாயிரம் பண்ணை வன்னியர் (கள்ளர்) வரலாறு பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது.இதைப்போல் அழகாபுரி ஜமீன் பள்ளி(வன்னியர்) இனத்தை சார்ந்தது என்று பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது. வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும். எஸ். இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 600113
திரு இராமச்சந்திரன் அவர்களுக்கு தாங்கள் மறவர் இணத்தவர் சிற்றரசுகளான சூரைக்குடி,ஏழாயிரம் பன்னை முதலிய இனத்தவர்களை வன்னியர் கள்ளர் இனத்தவர்கள் என்றும்.அழகாபுரி ஜமீனை பள்ளி(வன்னியர்) என தங்கள் வலங்கைமாலை கட்டுரையில் கூறியிருந்தீர்கள்.மறவர் இனத்தவரை கள்ளர் என்று கூறுவதில் தவறில்லை ஏனெனில் கள்ளர்கள் சகோதர இனமே.மாற்றாரை பற்றி வரலாறு எழுதினால் முதலில் வரலாறை புரிந்து எழுத வேண்டும்.ஒரு வரலாறை பொய்யாக கூட கதை விடலாம் திரித்து கூறக்குடாது என்பதில் கவனம் தேவை. உதாரனமாக “புழுக்கை சானார்” எண்ற பிரிவினரை “புலி கை சான்றோர் வீரர்கள்” என்று எழுதிகிறீர்கள் அது கூட நியாம் தான் தங்கள் இனத்தை எப்படி வேண்டுமானாலும் புகழலாம்.ஆனால் மாற்றாரை பற்றி கூறும் போதும் தாங்கள் இப்படி செய்கிறீர்கள்.உதாரனமாக கள்ளர் சான்றார்,பள்ளி சான்றார்,பார்ப்பான சான்றார் என்று கூறுகிறீர்கள்.கள்ளர் இனத்தவருக்கு 2000-க்கு மேல் பட்டங்கள் இருப்பதாக தெரிகிறது.அவர்கள் ஏன் உங்களை தேடி வந்து இந்த சான்றார் பட்டத்தை சூடவேண்டும் என தெரியவில்லை.இதைப்போல் பிராமனர்கள் தான் ஜாதிய அடுக்கில் உயர்ந்தவர்கள் என கூறுகின்றார்கள்.அவர்கள் ஏன் இந்த சான்றார்பட்டத்தை சூட வேண்டும் மனநோயா?.பாண்டிய வன்னான்,பாண்டிய அம்பட்டர் போன்ற ஜாதியர்கள் உண்டு.பாண்டிய என்ற அடைமொழியை வைத்து அவர்கள் பாண்டியர்கள் என கூற முடியுமா.அதைப்போல் தான் கள்ளசான்றார்,பள்ளி சான்றார்,பார்ப்பானசான்றார் என்பது கள்ளர்,பள்ளி,பிராமனரிடம் பனிபுரிந்த சான்றார்கள் நன்றியின் பேரில் வைத்துகொண்ட முன்பட்டமே தவிர இவர்கள் கள்ளர்,பள்ளி,பிராமன இனத்தவர்கள் கிடையாது.அவர்கள் சான்றார் இனத்தவரே.இதைப்போலத்தான் பாண்டிய சான்றான்,மலையமான் சான்றான்,நாடாள்வ சான்றான்,தளவாய் சான்றான் என்பது அவர்களிடம் உதவிக்கு பனியமர்ந்த சான்றார்களே தவிர அவர்கள் வேறு இனத்தவர்கள் கிடையாது சுத்தமான சான்றார் இனத்தவர்களே.சான்றார் என்ற பெருமைக்குரிய?பட்டம் உங்கள் இனத்தை தவிர யாருக்கும் இருக்காது.அதை வேறு இனத்தவருக்கு சூட்டி மகிழ வேண்டாம்.
எனவே மாற்று இனத்தவரை பற்றிய அரைவேக்காட்டு தனமான் ஆராய்ச்சி ஆபத்தை தரும் என எச்சரிக்கிறேன்.”சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே (புறம்:312)” என புறநானூறு கூறுகிறது.ஆனால் “சானார்களை சான்றோர் ஆக்குவது எனது கடனே” எனக்கூறும் உங்களை உங்கள் கடமையை செவ்வனே செய்யுமாறு கூறிவிட்டு நமது வரலாறை கான்போம்.]
நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும் பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும் குறிக்கும்.
தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும்.
எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.
அரைவேக்காட்டு தற்க்குறித்தனமான வரலாற்று ஆய்வாளர்களின் சுயநல ஆய்வுகள் கூறுவது போல் ஏழாயிரம் பன்னை,அழகாபுரி,வ.சூரக்குடி(காரைக்குடி அருகில்) ஜமீண்கள் வேறு இணத்தவர்கள் ஜமீனல்ல. அவர்கள் தூய மறவர் பரம்பரை சார்ந்த தொல்குடி மன்னர்கள்.இதற்க்கு பல ஆதாரங்கள் உள்ளன.
உதாரனமாக எழாயிரம்பன்னை,அழகாபுரி ஜமீனகள் வன்னியர் பட்டம் உள்ள மறவர் இனம் என நிக்கோலஸ் டிரிக்க்சும்,கால்டுவெல்லும் திருநெல்வேலி மானுவலில் கூறுகிறார்கள்.
இதைப்போல் வ.சூரக்குடி என்ற சிற்றரசு வன்னியர் பட்டம் கொண்ட மறவர் இனத்தவரான விஜயாலத்தேவர் என்பர் ஆண்டது.இவர்கள் மறவர் இனத்தின் உட்பிரிவான வன்னிய மறவர் என்ற இனத்தை சார்ந்தவர்கள். இது 12-16ஆம் நூற்றாண்டு காலத்தில் புதுக்கோட்டைக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசமான் கானாடு,ஒளிநாடு,இராஜேந்திரமங்கலம்,ஒளிநாடுக்கு தலைநகராக இருந்துள்ளது.இது கானாடு,கோனாடு மறவர் அரையர்களையும் வெள்ளாளர்களையும் குடிமக்களாய் கொண்டது.இவரை பற்றி 40-க்கும் மேற்ப்பட்ட கல்வெட்டுகள் திருமயம்,விராச்சிலை பகுதியில் உள்ளதாக 40-கல்வெட்டையும் ஆராய்ந்த சுப்புராயுலு மற்றும் “புதுக்கோட்டை வரலாறு எழுதிய வீ.மானிக்கம். தம் நூலில் கூறுகிறார்.
கி.பி(1219)
I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம்
ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு…….திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் மாங்குடி மறவன் அவையன் சாத்தன் (அதளையூர் நாட்டுப்) பேரரையன்……………………….
இது இன்றைய சிவகங்கை மாவட்டம் அருகில் உள்ளது. இவர் இன்னும் இவ்வூரிலே வாழ்கிறார் ஊரின் பெரியதனக்காரராகவும் (அம்பலம்) ஆக உள்ளார். இவரது முன்னோர்களில் ஒருவரான பொன்னன் விஜயாலத்தேவர் மதுரை மீனாட்சி அம்மன் மேல் பக்தி கொண்டவர் தினமும் மதுரைக்கு குதிரையில் சென்று வழிபடுவானாம். தன் வயதான காலத்தில் சென்று வழிபட இயலாததால் வ.சூரக்குடியிலும்,முறையூரிலும் மீனாட்சி அம்மன் கோயில் கட்டி வழிபட்டான். இன்றும் அந்த கோயிலும் முதல் மரியாதை பெறும் குடும்பமாக வாழ்கின்றனர்.இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாகும்.
இவரை பற்றி கல்வெட்டு செய்திகளில் சில,
திருமையம் கல்வெட்டுகள்
சூரைக்குடி அரசு விசயாலத்தேவர்:
அதலையூர் நாட்டு சூரைக்குடி அரசு விஜயாலயத்தேவர்கள் அகஸ்தீஸ்வரர் கோவில் கல்வெட்டில் சூரைக்குடி தொண்டைமானார் என தன்னை குறிப்பிட்டுள்ளான். இவன் ஆண்ட பிரதேசம் அதலையூர் நாடு சூரைக்குடி பின்னாளில் வன்னியன் சூரைக்குடி என பெயர் வந்தது. மேலும் இவரது இனத்தை பற்றிய குறிப்புகளில்:
” மாங்குடி மறவன் அவையன் சாத்தன் அதலையூர் நாட்டு பெரைய்நு(பேரரையன்” என குறித்துள்ளான் அதலையூர் நாடாள்வான்(நாட்டுபேரரயன்).
மேலும் அறந்தாங்கி தொண்டைமான்,அன்பில் அஞ்சுகுடி அரையர்,சூரைக்குடி அரையர் இம்மூவருமே தொண்டைமான் வம்சமே.
சொரி வன்னிய சூரியன்: விஜயாலயன் தன்னை கடம்பன் எட்டி(வியாபாரி) எனவும் சாத்தன் எனவும் குறிப்பிட்டு கொள்கிறான். மேலும் சொரி வன்னிய சூரியன் என பெயர் கொண்டுள்ளான். பதினெட்டு வன்னியரை புறம் கண்டான் எனவும் பட்டம் உள்ளது.
“சொரி வன்னிய சூரியன்” என்ற இதே பட்டம் “சொரி முத்து வன்னியன்” என்ற பட்டம் சேதுபதிகளுக்கும் உள்ளது. இதற்க்கு இராகவ அய்யங்கார் “சொரி முத்து வன்னியர்” என்றால் கடலில் தோன்றும் சூரியன் என திரையன் என அர்த்தம்.
இப்போது புதிதாக விஜயாலையனை கோறும் கூட்டத்தினர் வன்னியர் என்ற வார்த்தை வைத்து கோறுகின்றனர். அவர்களுக்கு ஒரே ஒரு ஆதாரம் மட்டும் கேட்கிறோம். “சொரி வன்னியன்” என்ற பெயர் அவர்களிடம் எந்த பட்டயத்திலாவது அல்லது கல்வெட்டுகளில் இருந்தால் நாங்கள் விஜயாலத்தேவரை கோரவே இல்லை. நெடு நாளைக்கு முன்னரே இந்த கருத்தை எதிர்பார்த்தோம் அப்போது வைத்தூர் பல்லவராயரை கோரி விஜயாலத்தேவனின் மீது பழியை போட்டு பல்லவராயரை கோரிய கூட்டம் இன்று சூரைக்குடி அரையனை கோறுவது வினோதம்.
சொரிமுத்து வன்னியர்,18 வன்னியர் கண்டன் என்னும் பெயர் சேதுபதிகள்,விஜயாலயத் தேவர்,அறந்தாங்கி தொண்டைமான் மூவருக்குமே இந்த பட்டம் உள்ளது. அறந்தாங்கி தொண்டைமானும் தங்களை செயதுங்கராயன் என குறிப்பிடுகிறார் ஆக சேதுபதி விஜ்யாலயத் தேவர் தொண்டைமான் மூவரும் மறவரே.
விஷ்ணுகோயில் வளாகத்திலிருந்து முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பதினான்கு கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெறாத ஒரு கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 22ன் இரண்டாம் பிரிவில் பதிவாகியுள்ளது. நான்கு கல்வெட்டுகள் திருமதி நா. வள்ளியால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதினொரு கல்வெட்டுகள் கள ஆய்வின்போது இக்கட்டுரையாசிரியர்களால் கண்டறியப்பட்டவை. சுப்புராயுலு 36 திருமையம் கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளார்.
இதே கோயில் வளாகத்திலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட வீரவிருப்பண்ண உடையாரின் கி. பி. 1399ம் ஆண்டுக் கல்வெட்டு28 சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவர், இவ்வளாகத்தில் பெருமாளைப் புதிதாக எழுந்தருளச் செய்தமை பற்றிக் குறிப்பிடுவதால், அக்கால கட்டத்தில் நின்றருளியதேவரின் திருமுன் படிக்கட்டின் புறச்சுவராக இருந்த பெருந்தேவிக் கல்வெட்டு அகற்றப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு.
அதே சுவரிலிருந்து கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, சொக்கநாராயண நல்லூர் எனும் பெயரிலமைந்த ஊரைச் சொக்க நாராயணரான விசையாலயதேவர் மெய்யத்து இறைவனுக்குத் தேவதானத் திருவிடையாட்டமாகத் தந்ததாகக் கூறுகிறது. பெருமளவிற்குச் சிதைந்தும் தொடர்பற்றும் காணப்படும் இக்கல்வெட்டின் காலத்தைப் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.30
மண்டபத்தின் மேற்குச் சுவரில் வீரவிருப்பண்ண உடையார் ஆட்சிக்காலத்தே விபவ ஆண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு,34 கானநாட்டு நாட்டார், கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுத் தேனாற்றுப்போக்குச் சூரைக்குடியைச் சேர்ந்த திருமேனியழகியாரான விசையாலைய தேவரிடம் ஐந்தாயிரம் பணம் பெற்றுக்கொண்டு நிலம் விற்ற தகவலைத் தருகிறது. ‘மாக்கல விலைப் பிரமாணம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் கையெழுத்தாளர்களின் ஊர்களாகக் கோட்டையூர், மேலூர், கண்ணனூர், தெற்காட்டூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. கானநாட்டுப் படைப்பற்றுகளுள் ஒன்றாகச் செங்குன்றநாடு விளங்கியதையும் நாட்டு மரியாதி எனும் வரியினத்தையும் இவ்ஆவணம் வழி அறியமுடிகிறது.
அதே சுவரில் கி. பி. 1452ல் வெட்டப்பட்டுள்ள அரசர் பெயரற்ற கல்வெட்டினால்35 கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுச் சூரைக்குடிச் செண்பகப் பொன்னாயினாரான பராக்கிரம பாண்டிய விசையாலையதேவர், மெய்யத்து மலையாளரான விஷ்ணு பெருமானுக்குச் செண்பகப் பொன்னாயன் சந்தி அமைக்க வாய்ப்பாகப் புலிவலத்திருந்த தம் வயலான செண்பகப் பொன்னாயநல்லூரில், ஏற்கனவே தரப்பட்டிருந்த தேவதானத் திருவிடையாட்ட இறையிலி போக எஞ்சியிருந்த நிலப்பகுதியைக் கோயிலுக்குக் கொடையாகத் தந்த தகவலை அறியமுடிகிறது.
அதே சுவரில் கி. பி. 1669 தைத்திங்களில் வெட்டப்பட்டுள்ளஅரசர் பெயரற்ற மற்றொரு கல்வெட்டு,36 திருமலைச் சேதுபதி காத்த தளவாய் ரகுநாத நரேந்திரனுக்குப் புண்ணியமாக, அழகிய மெய்யருக்கு உதயகாலத்தில், ‘ரகுநாத அவசரம்’ என்னும் பெயரில் கட்டளையமைத்து, அதை நிறைவேற்ற வாய்ப்பாக ஊர் ஒன்றளித்த வானரவீரன் மதுரை சோலையப்பப் பிள்ளையான கங்கையராயர் பிள்ளையின் கொடையை எடுத்துரைக்கிறது.
கானநாட்டுக் கோட்டையூர்ப் புரவில் அநாதி தரிசாய்க் காடாக இருந்த புதுவயல், வலையன் வயல் உள்ளிட்ட நிலப்பகுதிகளை விலைக்குப் பெற்று அவற்றை வளமாக்கி, அந்தப் பகுதிக்கு ரகுநாதபுரமென்று பெயரிட்டுத் திருவாழிக்கல் நடுவித்துக் கோயிலுக்களித்த பிள்ளை, அறக்கட்டளையைக் காப்பாற்றும் பொறுப்பைக் கோட்டையூர் ஊரவரிடம் அளித்துள்ளார். சோதிடம், வைத்தியம் செய்வார்களுக்கு இந்நில வருவாயில் பங்கிருந்ததெனக் கருதுமாறு கல்வெட்டமைப்பிருந்த போதும், சிதைந்துள்ள வரிகள் தெளிவு காண இயலாது தடுக்கின்றன. குடிவாரம், மேல்வாரம், கடமை முதலிய வரியினங்களும் கல்வெட்டில் சுட்டப்பட்டுள்ளன.
அதே சுவரில் அதே ஆண்டுத் தைத்திங்களில் வெட்டப்பட்டுள்ள மற்றொரு கல்வெட்டு,37 பல சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறது. விஷ்ணுகோயில் ஸ்ரீபண்டாரரும் நிருவாகமும் இணைந்து வானரவீரன் மதுரை சோலையப்பப் பிள்ளையான கங்கையராயருக்கு இக்கோயில் திருவிடையாட்டமான மலுக்கன் வயக்கலை, திருக்கோகர்ணம் மின்னல் என்று அழைக்கப்பட்ட பணம் முந்நூறுக்கு விற்றனர்.
இரகுநாத நரேந்திரனுக்குப் புண்ணியமாக அழகியமெய்யருக்கு உதயகாலத்தில் ரகுநாத அவசரக் கட்டளையைச் சோலையப்பப்பிள்ளை தொடர்ந்து நடத்திவர அநுமதிக்கும் இந்த ஆவணம், அவருடைய நிருவாகத்திற்குக் கட்டளையாகக் கோயிலில் மூன்று படிச் சோறு பெற்றுக்கொள்ள அநுமதித் திருப்பதுடன், மலையப்பெருமாள் வீட்டுக்குத் தெற்கிலும் வேங்கைக் குளக்கரைத் திருவீதிக்கு வடக்காகவும் உள்ள மனையைக் கொள்ளவும் வழியமைத்துள்ளது.
சூரைக்குடி அரையன் விஜயாலயத்தேவன் விஜயாலயன் என்னும் பெயர் சோழர்களை நினைவுபடுத்துவதால் சோழர் எனவே கருதுவோம். விஜயத்தேவன் என்பதும் விஜயராயர் என்பது வணிக குழுவை தலைமை தாங்குபவன் என பொருள் படும். மேலும் அவையன் சாத்தன் நாட்டான் என்பது சாத்து வணிகர் தலைவன் என்பதேயாகும். மேலும் விஜாயலத்தேவனை பற்றி மறைக்கப்பட்ட கல்வெட்டும் அவன் வம்சமும் இது தான்.
I.P.S.(452) திருமய்யம்,நெய்வாசல் அகஸ்தீஸ்வரமுடையார் கோவில் வீரபாண்டியத் தேவரின் கல்வெட்டு:
“தேனாற்று போக்கு ஆதளையூர் நாட்டு சூரைக்குடி அரையன் பெரியனான தொண்டைமானார்”
நன்றி:
அறந்தாங்கி தொண்டைமான் செப்பேடுகள்: புலவர் செ.இராசு
புதுக்கோட்டை வரலாறு: உயர்.திரு.ஐயா.வீ.மாணிக்கம் அவர்கள்
இதில் சூரைக்குடி அரையனான பெரியனான தொண்டைமானாருக்கு பாண்டியன் காவல் பொருப்புகளும் சில வரிகளையும் நிமித்தகளையும் வழங்குகிறார்.
அறந்தாங்கி தொண்டைமானும்,அன்பில் தொண்டைமானும் சூரைக்குடி தொண்டைமானும் மறவர்களே.
தொண்டைமானை புகழும் பெரும்பாணாற்றுபடை
“மறவர் மறவ தொண்டையோர் மருக”.
திரையனாகிய சோழரின் இளவலான தொண்டை வேந்தன் மறவனே.
கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம். இக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, ‘ஓ ங்காரநாதத்து வேதமங்கலம்’ என்னும் அகரத்தை அமைத்தார்.
பன்னிருவரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இவ்வகரத்தின் உறுப்பினர்களுக்கு சர்வமான்ய தன்மதானமாகத் தர நிலம் தேவைப்பட்டது. ஒருவருக்கு ஏழு மா நிலமெனப் பன்னிருவருக்கு எண்பத்து நாலு மா நிலந்தர விரும்பிய விசையாலய தேவர், அதற்கான நிலத்தைத் தமக்கு விலைக்குத் தர வேண்டும் என்று கானநாடான விருதராஜ பயங்கர வளநாட்டு நாட்டவரையும் அந்நாட்டுப் படைப்பற்றான செங்குன்றூர் நாட்டவரையும் கேட்க, கானநாட்டு நாலூர் நிலப்பகுதி இறையிலிக் காராண்மையாக விற்கப்பட்டது
கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம். இக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, ‘ஓ ங்காரநாதத்து வேதமங்கலம்’ என்னும் அகரத்தை அமைத்தார்.
பன்னிருவரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இவ்வகரத்தின் உறுப்பினர்களுக்கு சர்வமான்ய தன்மதானமாகத் தர நிலம் தேவைப்பட்டது. ஒருவருக்கு ஏழு மா நிலமெனப் பன்னிருவருக்கு எண்பத்து நாலு மா நிலந்தர விரும்பிய விசையாலய தேவர், அதற்கான நிலத்தைத் தமக்கு விலைக்குத் தர வேண்டும் என்று கானநாடான விருதராஜ பயங்கர வளநாட்டு நாட்டவரையும் அந்நாட்டுப் படைப்பற்றான செங்குன்றூர் நாட்டவரையும் கேட்க, கானநாட்டு நாலூர் நிலப்பகுதி இறையிலிக் காராண்மையாக விற்கப்பட்டது
இவ்ஆவணத்தில் கோட்டையூர் உலகளந்த சோழக் கானநாட்டு வேளார், மேலூர் முனையதரையர், கண்ணனூர் காலிங்கராயர், தெற்காட்டூர் வாணாதராயர், முனியந்தை உலகேந்திய வேளான், ஆதனூர் உகனையூர் சேதியராயர், யானூர் உடையார், மருங்கூர் சுந்தரபாண்டியக் கானநாட்டு வேளார், மெய்யம் சுந்தரத்தோள் நம்பி, இளஞ்சாற்குச் சேதியராயர் ஆகிய நாட்டார்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இவர்களுடன் ஊர்க் கணக்குகளாக, விரையாச்சிலை ஊர்க் கணக்கு வைரக்கொழுந்து, செங்குன்றூர் நாட்டுக்குச் சமைந்த ஊர்க் கணக்குக் கானநாட்டுக் கணக்கு அழகியநாயன், மற்றோர் ஊர்க் கணக்கு அடைக்கலங்காத்தான் ஆகிய மூவர் கையெழுத்திட்டுள்ளனர். திருவரங்கம் கோயிலைச் சுற்றிப் பல அகரங்கள் உருவானமையைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். அது போல் மெய்யத்து வளாகத்தில் கி. பி. 1399ல் ஓங்காரநாதத்து வேத மங்கலம் என்ற அகரம் சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரால் பன்னிருவரைக் கொண்டு உருவாக்கப்பட்டமை வரலாற்றிற்குப் புதிய வரவு.
புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளைக் கண்ணுற்றபோது, வீரவிருப்பண்ண உடையாரின் கல்வெட்டுகள் இந்தப் பகுதியில் பரவலாகக் காணப்படுவதை அறியமுடிந்தது. திருவிளாங்குடிக் கல்வெட்டில் அரியண உடையாரின் மகனாகக் குறிக்கப்படும் வீரவிருப்பண்ணரின் கி. பி. 1417ம் ஆண்டுக் கல்வெட்டு, மேலப்பனையூர் ஞானபுரீசுவரர் கோயிலில் உள்ளது.40 சூரைக்குடி விசையாலயதேவர் வீரவிருப்பண்ணரின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர் போலும்! மெய்யத்திலேயே அவரது வழித்தோன்றலான சொக்கநாராயண விசையாலயரின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.41 அவற்றுள் ஒன்று புதிதாகக் கண்டறியப்பட்டதாகும்
சுந்தரபாண்டியன் மண்டபத் தூணொன்றிலிருந்து படியெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு, பாடல் கல்வெட்டாக அமைந்துள்ளது. இறைவனை, ‘மெய்யம் அமர்ந்த பெருமாள்’ என்றும் ‘மணஞ்சொல் செண்பக மெய்யர்’ என்றும் கொண்டாடும் இக்கல்வெட்டின் முழுப் பொருளை அறியக்கூடவில்லை. மண்டபத்தின் கிழக்குப் படிக்கட்டுகளுக்கான தென்புறப் பிடிச்சுவரில் உள்ள கல்வெட்டு, ‘இ ந்தப் படியும் சுருளும் வீரபாண்டியதரையர் தன்மம்’ என்கிறது. எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டுகளைப் பதினான்காம் நூற்றாண்டினவாகக் கொள்ளலாம்.42
கோயில் வளாகத்தின் கிழக்குச் சுற்றிலுள்ள சேனைமுதலியார் திருமுன்னில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளுள் ஒன்று, கேரளசிங்க வளநாட்டுச் சூரைக்குடிச் சொக்க நாராயணரான விசையாலயதேவரும் திருநெல்வேலிப் பெருமாளான சுந்தரபாண்டிய விசையாலயதேவரும்கானநாட்டுத் தேவதான பிரமதேயமான திருமெய்யத்தில் எழுந்தருளியிருக்கும் மெய்யத்து மலையாளரின் திருவிழாவிற்கு முதலாகப் ‘பச்சை வினியோகம்’ எனும் வரியினமாய் வந்த பணம் முந்நூற்று முப்பத்துமூன்றையும் வழங்கிய தகவலைத் தருகிறது.43
இவ்வாறு விஜயாலய்த்தேவரை பற்றி பல அரிய கல்வெட்டுகளும் அரசாண்ட வரலாறும் இங்கு நிறைய இருக்கின்றன.
அதே சுவரில் கி. பி. 1461ல் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டொன்றால்,44 அதலையூர் நாட்டு நியமப்பற்றுச் சூரைக்குடி அவையாண்டாரான சுந்தரபாண்டிய விசையாலய தேவர், மெய்யத்து மலையாளருக்கு, தம்முடைய பெயரால், தம்முடைய பிறந்த நாளில், ‘சுந்தரபாண்டிய விசையாலய தேவன் சந்தி’ என ஒன்றமைத்து, அது போழ்து தளிகை படைக்கவும் திருமாலை, திருப்பரிவட்டம் முதலாயின சாத்தவும் வாய்ப்பாக, கானநாட்டுப் படைப்பற்றான இளஞ்சார்ப் புரவில், சுந்தரபாண்டிய நல்லூரைத் திருவிடையாட்டமாக்கிக் கோயிலுக்கு சர்வமானியமாக அளித்த செய்தியைப் பெறமுடிகிறது.
திருமுன்னின் முகமண்டப உட்சுவரில் காணப்படும் பராக்கிரம பாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு அவருடைய மெய்க்கீர்த்தியைத் தருவதுடன், இக்கோயிலில் அவர் பெயரால் உருவாக்கப்பட்ட பராக்கிரம பாண்டியன் சந்தியை வெளிச்சப்படுத்துகிறது. ‘திருமெய்ய மலையாளன்’ என்றழைக்கப்பட்ட நின்றருளிய தேவருக்கான சிறப்புப் பூசையாக அமைக்கப்பட்ட இச்சந்தியை நிறைவேற்ற வாய்ப்பாக மஞ்சக்குடிப் பற்றிலிருந்த சாத்தனூர், கோயிலுக்குக் கொடையாகத் தரப்பட்டது
நன்றி.புதுக்கோட்டை மாவட்ட வரலாறு:வீ.மானிக்கம்………….புதுக்கோட்டை கல்வெட்டுகள்..சுப்புராயலு குறிப்புகள் 27. கே. வி. செளந்தரராஜன், மு. கு. நூல், ப. 103; பெரும்பிடுகுப் பெருந்தேவி, கோயிலைப் புதுப்பித்துக் கொடையளித்த செய்திகளைக் குறிப்பிடும் கல்வெட்டு, என்று எழுதும் ஜெ. ராஜாமுகமது, அக்கல்வெட்டின் அடிப்படையில், ‘குகை இக்காலத்திற்கு முன்பே இருந்திருக்கவேண்டும்’ என்றும் எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் இக்கல்வெட்டு குடைவரைக் கோயிலிலேயே இருப்பதாகவும் பெருந்தேவியே குடைவரையைக் குடைந்து அமைத்ததாகவும் எழுதியுள்ளனர். மு. கு. நூல், ப. 186. 28. New Indian Eகpress, 30. 5. 2006. 29. IPS: 439; என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 154. 30. The Hindu, 17. 8. 2003. 31. IPS: 735. 32. IPS: 459; என். சேதுராமன், மு. கு. நூல், ப. 194. 33. IPS: 460. 34. IPS: 685. 35. IPS: 792. 36. IPS: 872. 37. IPS: 873. 38. IPS: 967. 39. IPS: 687. 40. IPS: 692. 41. IPS: 764. 42. தினமணி, 5. 8. 2003. 43. IPS: 764. 44. IPS: 800. 45. IPS: 893. 46. IPS: 923. 47. தினமணி, 5. 8. 2003. 48. The Hindu, 17. 8. 2003. 49. தினமணி, 5. 8. 2003. 50. மேற்படி. 51. இது திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற தலம் என்று குறிப்பிடும் ஜெ. ராஜாமுகமது, அடைப்புக்குறிகளுக்குள் பெரிய திருமொழி என்று வேறு எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. திருமங்கையாழ்வார் தம் பெரிய திருமடலிலும் ஓரிடத்தில் இத்தலத்தைக் குறிப்பிடுவது இங்குக் கருதத்தக்கது. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி, ஆகியோர், ‘இ ச்சிற்பக் காட்சி இக்குடைவரையைப் பெரிதும் அழகு செய்கின்றது. இதனைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். இவ்விறைவனைத் ‘திருமேய மலையாளன் எனக் குறிக்கிறார்’ என்றெல்லாம் எழுதியுள்ளனர். மு. கு. நூல். ப. 240. 52. திருமங்கையாழ்வார் 1206, 1524, 1660, 1760, 1852, 2016, 2674 (126) நாலாயிர திவ்யப் பிரபந்தம், ப. 799.