சேதுபதி செப்பேடுகளில் பல செய்திகளில் பல செய்திகள் வரும் செய்திகள் பல முறை நாம் பார்த்திருந்தால் ஒவ்வொரு நாளும் புது புது செய்திகள் வருகிறது அவை ஒவ்வொன்றும் ஆச்சர்யமாக உள்ளது.
சேதுபதிகளை இராமபிரான் அவதாரம் என்றே புலவர்கள் அழைத்தனர்.
நடுவக்குறிச்சி ஊராட்சி (Naduvakuruchi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை வட்டாரத்தில்
அமைந்துள்ளது.இந்த ஊராட்சி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
ஆனால் இது முற்காலத்தில் 72 பாளையங்களில் ஒன்றான மறவர் பாளையமாக இருந்துள்ளது.இவர்கள் கீழவை நாட்டிலிருந்து வந்த கொண்டையங்கோட்டை, மறக்குலத்தைச் சேர்ந்த தலைவனார் வம்சத்தைச் சார்ந்தவர்கள்
இவர்கள் இங்கு மகட்கொடை கொடுக்க மறுத்து வந்ததாக செவி வழி கதை கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் பாண்டியனின் தளபதிகளாக வந்தவர்கள்.
சிவகிரி ஜமீன்தார்களை மறவர்கள் என்று குறிப்பிட்டுள்ள பத்திர நகல்.
கீழ் கண்ட பத்திர நகல் 1877 ஆகஸ்ட் மாதத்திய நகல் பத்திரம் ஆகும். இது திருநெல்வேலி மேடைத் தளவாய் முதலியார் வகையறாவில் வந்த, அழகப்ப முதலியார் மகன்கள், தளவாய் அ. திருமலையப்ப முதலியார் மற்றும் தீர்த்தாரப்ப முதலியார் ஆகிய இருவரும் சேர்ந்து குற்றாலத்தில் உள்ள குறிஞ்சி பங்களா மற்றும் தோட்டத்தை, சிவகிரி ஜமீன்தார் வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் மகன் சங்கிலி வீர பாண்டிய சின்னத்தம்பி -ஆகிய ” மறவர்களுக்கு” எழுதிக் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.
வாணர் என்றாலே மாவலி வம்சத்தோர் என்றே பொருள்.மாவலியின் குரு சுக்கிரச்சாரியர் என்னும் பார்க்கவரே ஆவார்.மாவலி சேர அரசர்.அசுரனாக அவரைக் கூறுதல் கட்டுக்கதையே.திராவிட அரசர்களையே புராணங்கள் அசுரன் எனக்கூறுகிறது. மாவலி வழி வந்த சேர வம்சமே வாணர்கள்.ஆதலால் தான் இன்றைக்கும் மாவலியின்பேரன் வாணன் தங்களை வாணாதிராயன் என்றும் சேரர்கள் வானவன் அல்லது வாணர். வான வரம்பன் = மலைகளை எல்லைகளாக உள்ள சேரன்r வானவர் குலத்து குறுநில மன்னர்களாக பிற்கால மலையமான்கள்.வானாதிராயர் வானராயர்-மலைராயர் வானகோவரையர்-மலை கோமான் வானவிச்சாதிர நாடாழ்வான் போன்ற மலையர் குலத்து பிற்கால மக்கள் மகதை என்கின்ற ஆத்தூர் பகுதியே ஆண்டனர்.சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை வாணர்களான வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்கள் ஆத்தூர் அருகில் உள்ள அகழியூரைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்டனர். சேரர் நாடு என்று அழைக்கபடும் கேரளாவில் ஓனம் நன்னாளில் சேர அரசன் மாவலி என்ற மகாபலி மக்களை கான வருவதாக நம்பிக்கை. அதன் திருவிழாவே திருவோணம். பிற்கால வாணர்கள் பலர் தங்களை வேட்வதிரையர்,குறும்பகோலர்,மறவர்,மலையமான்,சுருதிமான்,வன்னியன்,முத்தரையர் என்ற பல பெயரில் அழைக்கபட்டனர். வாணர் என்ற அரசர்கள் ஒரே சாதியர் அல்லர்.ஒரு காலத்தில் சோழரையும்,கங்கரையும்,பாண்டியரையும் வாணர் வீழ்தினர் என சிலர் கூறுவர். தென்காசி பாண்டியன் இறந்தவுடன் மாவலிக்கு பாண்டிய பட்டம் கட்டினர் என்றும் கயத்தாறு வெட்டும் பெருமாள் “வெட்டு மாவலி” வம்சத்தினர் என்பது ஒரு சிலரின் கருத்து. ஒரு காலத்தில் கங்க மன்னனுக்கு கட்டுபட்டு வாழ்ந்த வாணர் தங்களை “மகாபலிகுல சத்திரியர்” என கூறுவதாக கங்க மன்ன செப்பேடு கூறுகிறது.
பல்வேறு சமூகத்தவரும் தங்களை மூவேந்தர் பரம்பரை என்றும் பாண்டியர் பரம்பரை என தங்களுக்கு ஜாதிய தற்பெருமை இல்லை என்று கூறி நடுநிலைவியாதிகள் என்ற ஊடக
நாரவாயர்களையும் விட்டு ஜாதிய தற்பெருமை,ஆண்டஜாதி பீற்றல் என்று தங்கள் ஜாதிய தலைவனை பற்றி ஒரு சுவர் இல்லாமல் அச்சு பதித்து வரும் கூட்டதற்கு நாங்கள் ஜாதிய தற்பெருமை பேசவில்லை
எங்கள் இனத்தின் ஆவணங்களை தான் சேகரித்து வைக்கிறோம்.
பல்வேறு ஆதாரங்கள் வைத்து நாம் தான் பாண்டியர் என்று சொன்னாலும் ஏச்சுகளை ஏவிதான் வருகின்றனர். நாம் மேற்கொண்டு வைக்கும் ஆதாரங்களில் பாண்டியர் வழிதோன்றல்களாக
சிவகங்கை அரசர்,கொண்டையங்கோட்டை மறவர் ,அஞ்சுகோட்டை மறவர்,அம்பனேரி மறவர் மற்றும் சொக்கம்பட்டி ஜமீன் சின்னனஞ்சாத்தேவர் முதலியவர்களை
மறவர் இனத்தில் பல பிரிவுகள் உள்ளன அவற்றில் ஒன்று காரணமறவர். காரணர் என்றால் தலைவன் என அர்த்தம். இவர்களை படைகாரணவர்கள் என்றும் காரண ஆபத்துதவிகள் என்றும் கூறுவர். இவர்கள் பற்றி சில குறிப்புகளில் இராமநாதபுரம் உத்திரகோசமங்கையை அரசியல் காரணமாக காலி செய்து தூத்துகுடி பகுதியில் குடியேறி யுள்ளனர். இவர்களை பற்றிய புத்தகம் அதில் புராண கதைகள் உள்ளது. அதை பதிவேற்றியுள்ளோம்.
மதுரை கோச்சடையில் வாழ்வது அம்பொனேரி மறவர் காரண மறவர் அல்ல. காரணமறவர் தூத்துகுடி பகுதியுள் வாழ்கின்றனர். கார்குறிச்சி மறவர் என்பவரும் காரண மறவரே என தோன்றுகின்றது.
உத்திரகோசமங்கையில் கல் தேர் ஒட்டிய காரண மறத்தி என்னும் “பொன்னாச்சி அம்மன்” பற்றி கதையும் ஆதாரபூர்வமான சுவடியும் இருக்கும் அது காரண மறவர்களை குறிக்கின்றது. இவர்களை சக்கரவர்த்தி மறவர் எனவும் கூறுவர். மதுரை பூர்வீகமான மறவர்களில் இவர்களும் ஒருவர். இதேப்போல் கொற்க்கை என்னும் தூத்துக்குடி பகுதியிலும் பரதவர் அருகே வாழும் இவர்கள் “பொன்னாச்சி அம்மன்” வழிபாடு உள்ளவர்கள். மதுரை பகுதிகளிலே “பொய்சொல்லா பாண்டியன்” மற்றும் “முத்தையா கருப்பையா” என்னும் இரட்டை தெய்வத்தை வழிபடுகின்றனர். இவர்களில் பலருக்கு கிளைகள் அறியாது சிலருக்கும் மட்டுமே கிளை முறைகள் அறிந்தவர்கள் அது…..
சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்குத் தெற்கே ‘இளமக்கள்’ என்ற இளம் மறவர்கள் சமூகத்தவர்கள் வாழ்கின்றனர்.இவர்கள் வாழும் பகுதி ஐந்து நிலைநாடு என அழைக்கபடுகிறது . திருமய நாட்டிற்கே மேற்கில் சேருங்குடி நாட்டிற்கு வடக்கே துவரங்குறிச்சி நாட்டிற்கு கிழக்கே பிரான்மலை பாதைக்கும், ஐந்துமுக நாட்டிற்கும் தெற்கே அமைந்துள்ள் பகுதி ஐந்துனிலைநாடு எனப்படுகின்றது. இந்நாடு சதுர்வேதிமங்கலம்,கன்னமங்கலம், சீர்சேந்தமங்கலம்,வேழமங்கலம் என ஐந்து மங்கலளாகப் பிரிக்கபட்டுள்ளன. ஒவ்வொறு மங்கலத்துக்கும் பல கிராமங்கள் உள்ளன.