சேதுபதியின் கல்வெட்டுகள்

 

சேகரிப்புகள்: உயர்.திரு.ஐயா S.M.கமால் அவர்கள்.


திருவுடை மன்னரை கண்டால் திருமாலை கண்டோம் என சேது யாத்திரையின் பூர்த்தியே சேதுமன்னரை தரிசிப்பதாகும்.சேதுவை ஸ்தாபித்த ராமனின் அடியானாக கருதப்படும் ரவிகுல “செயதுங்க” செம்பியனாம் சேது மன்னரின் கல்வெட்டுகள் இராமநாதபுரம் சிவகங்கை,புதுக்கோட்டை,திருநெல்வேலி,இலங்கை என பரவலாக கிடைக்கின்றது.



ஐயா கமால் அவர்கள் சேதுபதிகளின் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் தன் வாழ்நாளில் சேகரித்தவர். அதை அரசாங்கங்களின் என் பெற்று பதிவு செய்தவர் இவரே. அவருக்கு எங்களின் நன்றியை கானிக்கையாக்கின்றோம்.



சேதுபதியின் கல்வெட்டு 14-ஆம் நூற்றாண்டு முதல் கிடைப்பதான் ஸ்வெல்ஸ்  மற்றும் ஹக்சிலி மற்றும் போர்ச்சுகீசிய ஆவனங்கள் கூறுகின்றது.


மொத்தம் சேது மன்னர்கள் மற்றும் இரானியரின் கல்வெட்டு 37 கண்டறியப்பட்டுள்ளன. சில கல்வெட்டுகள் மட்டும்.


இராமேஸ்வரம் கோவில் கல்வெட்டுகள் 14-ஆம் நூற்றாண்டு பல ஊர்களை தானம் செய்துள்லார்.

 

 

 

 

 

 

 

காட்டுபாவா இஸ்லாமிய பள்ளிவாசல் வருடம்(1404-1576) ஆக இருக்கலாம்.


இராமேஸ்வரம் ஆஞ்சினேயர் கோவில் கல்வெட்டு(1467)


திருக்கோஷ்ட்டியூர் கோவில் இராஜ சூரிய தேவர் கல்வெட்டு:


ராங்கியம் மறவனேந்தல் கல்வெட்டு(1467)

முத்துபேட்டை முத்துசல்லாபம் கல்வெட்டு

களுவன் குடி “சத்திய வாக்கிய சேதுபதி” கல்வெட்டு:

இதில் பாண்டியர் காலத்தில் வரும் காங்கேயர் காங்கேய சேர்வைக்காரராக வருகின்றார்.

பூலாங்குடி “ரவி குல அரசியார் ராணி மங்களேஸ்வரி நாச்சியார்” கல்வெட்டு

 

 

 

 

 

 

 

 

 

 

 

மொத்த மன்னர்களின் கல்வெட்டு:



நன்றி பல:

 சேகரிப்புகள்:

சேதுபதிகள் கல்வெட்டு

உயர்.திரு.ஐயா S.M.கமால் அவர்கள்.

Posted in சேதுபதிகள், மறவர் | Tagged , , | Leave a comment

தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி

பகை வேந்தருக்கு உரிமையான நாட்டகத்தே புகுந்து மண்ணினைக் கைக்கொள்ள முயல் கின்ற செயல் வஞ்சி படலம் எண்கினறது.பிறரது நாட்டை அடிமைப்படுத்த தம் நாட்டை காக்க உறுதிமிக்க மறவர்கள் ஆற்றும் செயலே வஞ்சியாகும்.இதில் பெருவஞ்சி,கொற்றவள்ளை,மாராயவஞ்சி,மழபுழவஞ்சி,கொடிவஞ்சி,..என பல வஞ்சிகள் உள்ளன. 

பெருவஞ்சி:

“முன் அடையார் வளநாட்டை பின்னருமுடன்று எரிகொளீ இயன்று”(புறப்பொருள் வென்பாமாலை:21) பகை மன்னரது வலிகுறைந்த போயின நிலையிலும்,தன் முன்னே வந்து பணிந்து சேராதாராக,அவரது வளமிக்க நாட்டினை வஞ்சி வேந்தன் பின்னரும் கோபித்தவனாக அவனது நாட்டை எரியூட்டி அழிப்பது பெருவஞ்சி ஆகும்.
பாசறை நிலை:
“மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லம் மறந்துறப்பவும் பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை யிருந்தன்று”(புறப்பொருள் வென்பாமாலை:20)
நிறை மதியினை போன்ற தனது கொற்றக்கு குடையின் பகை மன்னரை எல்லம் தம் மறத்தின் கன் பனியவைத்த மறவேந்தனான பாண்டியன் தன் பாசறையை விளக்குவது பாசறை நிலை.
Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment

திருவாடானை பாண்டியர்கள்

                                      (அஞ்சுகொத்து மறவர்கள்)

உ.மீனாட்ச்சி துனை
“காரார் குழலி பவள செவ்வாய்ச்சி
கயல்விழிச்சி,மாறாத காலம் தானை சாய்தவள்
திரிசூலி மீனாள் பாரேழ் பலசேர் மறமன்னர்
போற்றும் பைரவி யாழ்”-கொற்றவை மீனாட்சி

“மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து”(அகம்:27)

“மறம்கெழு தானை அரசருள்ளும்
அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர்
புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்”(அகம்:338)

“திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்”(அகம்:142)

“திருவீழ் நுன்பூன் பாண்டியன் மறவன்”(புறம்:179)”

அச்சுதராயர் விஜயநகர அரசராக இருந்தார். அப்போது விஸ்வநாத நாயக்கர் மதுரை மண்டலேஸ்வரராக இருந்த காலம் அனேகமாக (1534-1534)  ஆக இருக்கலாம்.

(மதுரை ஆண்ட அஞ்சுக்கோட்டை நாடாள்வான் )

திருவாடானை பாண்டியன் அஞ்சுகோட்டை நாட்டு அம்பலம்

http://thevar-mukkulator.blogspot.in/2014/03/blog-post_17.html

 

 

கி.பி.12 ஆம் நூற்றாண்டின் அஞ்சுகோட்டை நாடாழ்வார் கல்வெட்டு :

 

இடம் –இராமனாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டம்,ஆனந்தூர் அருகில் உள்ள அருள்மிகு திருவாளுவ ஈசுவரன் கோயில் நுழைவாயில் நிலையின் மேல் இக்கல்வெட்டு காணப்படுகின்றது. 

செய்தி – 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரியணை தொடர்பாக இலங்கை மன்ன்னுக்கும் சோழ அரசன் இரண்டாம் இராசாதிராசனுக்கும் மூண்ட பெரும்போரில் பங்கேற்ற குறுநிலத் தலைவர்களுள் குறிப்பிடப்பட்ட அஞ்சுகோட்டை நாடாழ்வார்களில் ஒருவரின் மனைவி இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்.இக்கல்வெட்டு சிதைந்துள்ளது.

 

1 . சுவஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவீரபா[ண்டிய]தேவற்குயாண்டு……திருக்கானப்பேர்க்கூற்றத்து 

2 . சாத்தனூர் வாளுவ ஈச்வரமுடைய நாயனார்க்கு திருப்படி மாற்றுள்ளி 

3 . ட்ட நிமந்தங்களூக்குக் காவன் கங்கை கொண்டானான அஞ்சுகோட்டை நாடாழ்வார் தேவி 

4 . …வாளுவநம்பனான மங்கையர்கரசியார் பழையனூர் நாடாழ்வார்களான அரையர்கள் பக்கல் காரா 

நன்றி-ஆவணம்-1993,ப.26

பழையனூர் நாடாழ்வார்:

மேலே சொன்ன திருக்கானப்பேர் கூற்றம் என்பது காளையார் கோவில்  அமைந்த சிவகங்கை மாவட்டம் தான். இதில் பழையனூர் என்பது திருப்புவனம் அருகே உள்ள ஒரு  ஊர். இது பழையனூர் என்பது பழைய பாண்டியனான பழையன் மாறன் என்னும் ஆதி மறவனுடைய ஊர். இன்னும் பழையன் மாறன் என்பவரின் வம்சம் இன்னும் பழையனூரில் வாழ்கின்றனர். அவர்கள் மறவர். வருட திருவிழாவில் கொடைக்கானலில் வாழும் பழியர்கள் மற்றும் வலையர்களால் இன்னும் பழையனூர் மாறன் மறவர் குலத்தினருக்கும் முதல் மரியாதை தருகின்றனர்.

பழையனூர் பத்து அம்பலக்காரர்கள் முதல் மரியாதை வாங்கு கின்றனர். இவர்கள் அனைவரும் செம்பி நாட்டு மறவர்கள். இன்னும் அந்த ஊரில் வாழ்கின்றனர். இவர்களே அந்த கல்வெட்டில் குறிப்பிட்ட பழையனூர் நாடாழ்வார்களான அரையர்கள். இவர்களை இன்றும் கானலாம். வருட சிவராத்திரியில் அந்த பத்து நாட்டம்பலம் வாங்கும் முதல் மரியாதையை கானலாம்.

 

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் முதல் மரியாதை பெறும் மறவர்

நாட்டு அம்பலக்காரர்:

நரசநாயக்கனின் மதுரை படையெடுப்பை  பற்றி அச்சுதராயரின் அப்யுக்தத்தில்

 

“மதுரா மகேசம்  மறவாய தத்வம்” என மதுரை ஆண்ட மானக்கவசன் என்னும் அஞ்சுக்கோட்டை நாடாள்வான் என்னும்  மானக்கவசனை நரசநாயக்கன் துருக்கரின்  உதவியில் வீழ்த்தினான். 

நரச நாயக்கன் மானபூசன் என்னும் மானக்கவசனையும் பஞ்சபாண்டியரையும் வீழ்த்தினான் என குறிப்புகள் உள்ளது.

 

இதன் பிறகும் மானபூசன் பல சாசங்கள் வெளியிட்டன் என வரலாறு கூறுகின்றது.

“மேலும் முன்பு நமக்கு செய்த நன்மையை பாராது நம்மோடு சோர்வு பட்டு இருந்த எழகத்தாரிடமும் மறவ சாமாந்தரான இராச இராச கற்குடி மாராயன் அஞ்சுக்கோட்டை நாடாள்வானையும் வெள்ளாற்றுக்கு வடக்கே போகபன்னி” 

 

என குலசேகரன் கல்வெட்டு  கூறுகின்றது          S.I.I.I.Vol.3,p.212(Tamil nadu Ramanathapuram Inscriptions)

சோழரின் கல்வெட்டில்:

சோழரின் கல்வெட்டிலே அஞ்சுக்கோட்டை நாடாள்வானும் கற்குடி மாறாயனும் மறவர் குலத்தை சார்ந்தவர்கள் என  கல்வெட்டில் குறித்துள்ளனர்.

மதுரையை வாணாதிராயனுக்கு முன்னே ஆண்ட அஞ்சுக்கோட்டை மற்றும் கொற்க்கை பாண்டியனான மானக்கவசனும் மானபூசனும் மறவனே என தெரிகின்றது.

 

நன்றி:

ஐவர் ராசாக்கள் கதை

இராமநாதபுரம் தொல்லியல் துறை

ஆவணம்-தமிழ்நாடு தொல்லியல் துறை

மதுரையை ஆண்டுகொண்டிருந்த துருக்கர்களை விரட்டிவிட்டு நாயக்கர்கள் திரும்பி சென்றுவிடுவார்கள் என நினைத்திருந்த பாண்டிய அரசமரபினருக்கோ அதிர்ச்சி. வந்த தெலுங்கு தளபதிகள் மதுரையில் நிலையாக புதிய அரசை அமைக்கவேண்டுமென விரும்பி அதற்குரிய பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | 1 Comment

பாம்பன் விவேகானந்தர் இல்லம்

உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்,அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் . பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் தொடவேண்டும் என முழங்காலிட்டு அமர்ந்த சேதுபதி மன்னரின் செயலை மறுத்து அவரை ஆரத் தழுவினார் விவேகானந்தர்.

பாம்பன் வரவேற்பு விழாவில் பேசிய விவேகானந்தர், “உலக சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஸ்கர சேதுபதி தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, என்னை கலந்துகொள்ள வலியுறுத்தினார். இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வழியனுப்பினார். இதுவரை வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த என்னை உலகறிய உலக ஞானியாக மாற்றியவரும் பாஸ்கர சேதுபதியே. இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது. இந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால் அதன் சிறப்பனைத்திற்கும் பாத்திரமானவர் சேதுபதி” என்று தமது அருகில் இருந்த பாஸ்கர சேதுபதி மன்னரை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி மகிந்தார் விவேகானந்தர்.

 

Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

“அக்காள் மடம்”, “தங்கச்சி மடம்”

இராமேஸ்வரம் செல்பவர்கள் “அக்காள் மடம்”, “தங்கச்சி மடம்” என்ற இரண்டு ஊர்களைக் கடந்துதான் செல்லவேண்டும். செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படும் இந்த ஊர்களின் பெயர்க்காரணங்கள், கடந்த காலத்தில் யாத்ரீகர்களின்பாலும் , வழிப்போக்கர்களின் பாலும் நம் முன்னோர்கள் எடுத்துக் கொண்ட அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது. முதல் செவிவழிச் செய்தியானது, மன்னர் சேதுபதிக்கு முன்னாள் ஆண்ட பாண்டியன் (சரியான வரலாற்றுக் குறிப்பு இல்லை) பிள்ளை வரம் வேண்டி, எங்கெல்லாம் தேங்காய் சரிபாதியாக இரண்டாக உடைகிறதோ, அங்கெல்லாம் சத்திரம் (வழிப்போக்கர்கள் தங்கி, குளித்து உணவருந்திச் செல்லும் மடம்) கட்டுவதாக வேண்டிக் கொண்டு கடற்கரையோரமாக இராமேஸ்வரம் பயணப்பட, தேங்காய் சரிபாதியாக உடைந்த பதினேழு இடங்களில் (புதுமடம், தொண்டி நம்புதளை, அக்காள் மடம், தங்கச்சிமடம், இராமேஸ்வர கடற்கரை நேர் எதிரே போன்ற இடங்களில்) சத்திரங்களைக் கட்டியதாகச் சொல்லப்பட்டாலும், இதிலிருந்து அக்காள் மற்றும் தங்கச்சி மடங்களின் பெயர் காரணங்களைத் தெரிந்து கொள்ளமுடியவில்லை. மாற்றாக இன்னொரு செவிவழிச் செய்தியானது பெயர் காரணத்தை எடுத்துச் சொல்கின்றது.

clip_image002[6]

இப்பகுதியை ஆண்டுவந்த சேதுபதி மன்னருக்கு இரண்டு மகள்கள் இருந்ததாகவும், அவர்கள் இருவரையும் ஒருவருக்கே திருமணம் செய்து கொடுத்து, மருமகன் கட்டுபாட்டிலே இப்பகுதியை மன்னர் விட்டிருந்ததாராம். அப்பொழுது இராமேஸ்வரம் இராமநாத சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்கள், வத்தையில் ஏறித்தான் பாம்பன் கடலைக் கடந்து இராமேஸ்வரம் செல்ல முடியும். சேதுபதி மன்னரின் ஆணைக்கிணங்க, கட்டணம் செலுத்தாமல் இலவசமாக வத்தையில் பயணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, நீண்ட காலம் இவ்வாறே தொடர்ந்து நடந்து வந்தது.

Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , , | Leave a comment

இராமலிங்கவிலாசம் அரண்மணை !

சேதுபதி வம்ச மன்னர்களில் புகழ் பெற்ற ஒருவரான கிழவன் சேதுபதி என்பவர் 1674 முதல் 1710-ஆம் ஆண்டுகளில் இராமநாதபுரம் பகுதியினை ஆண்டு வந்த போது இராமலிங்க விலாசம் என்ற அரண்மனை கட்டப்பட்டது.

இராமேஸ்வரம் புகைப்படங்கள் - ராமலிங்கவிலாசம் அரண்மனை 

இந்த அரண்மனைக்குள் இருக்கும் மிகப்பெரிய தர்பார் ஹாலில் தான் மன்னர், தனது குடிமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளைத் தீர்த்து வந்தார். தர்பார் செல்லும் வழியிலுள்ள இராஜ குடும்பத்திற்கான குடியிருப்புகள் மிகவும் அற்புதமாக கட்டப்பட்டிருக்கின்றன.

இந்த அரண்மனை சுவர்களில் வரையப்பட்டுள்ள சுவரோவியங்கள் மன்னர் சேதுபதி குடும்பத்தின் இராஜவாழ்க்கையை சித்தரிப்பவையாக உள்ளன. இந்த சுவரோவியங்களில் மராத்தியர்களுடன் செய்யப்பட்ட போர்க் காட்சிகளும் வரையப்பட்டுள்ளன.

இந்த சுவரோவியங்கள் ஐரோப்பிய வியாபாரிகளுக்கும், சேதுபதிகளுக்கும் இருந்த வாணிபத் தொடர்பையும் பிரதிபலிப்பதாக உள்ளன. எனவே இந்த சுவரோவியங்கள் கலைகளின் வளர்ச்சியில் முக்கியமானவையாக உள்ளன.

இந்த அளவு சுவரோவியங்கள் வரையப்பட்டிருப்பதும், அவற்றில் காட்டப்பட்டுள்ள காட்சிகளும் இந்த சேதுபதி அரசர்களின் காலத்தில் கலையும், கட்டிடக்கலையும் இருந்த மகோன்னதமான நிலையைக் காட்டுகின்றன.

Posted in சேதுபதிகள் | Tagged , | Leave a comment

சேதுபதி மற்றும் சிவகங்கை மன்னர்களின் நாணயங்கள்

தமிழக வரலாற்றைக் கணிப்பதற்கும் நிறுவுவதற்கும் கல்வெட்டியல் துறைக்கு அடுத்து நாணயவியல் துறையின் பங்கு கூடுதலானது. அதிலும் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த மூவேந்தர் முத்திரைக் காசுகளும், பெருவழுதி நாணயம், செழியன் காசு போன்ற பாண்டியர் மன்னர்களின் காசுகளும் பெரும்பங்காற்றுவன. மூவேந்தர், குறுநில மன்னர்கள் போன்றோர் வெளியிட்ட நாணயங்கள் மூலம் தமிழக வரலாற்றையும் பொருளாதாரத்தையும், மற்ற மாநில மன்னர்களின் நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்ததைக் கொண்டு இந்தியப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறியலாம். தமிழகத்தில் கிடைத்த வேற்று நாட்டு மன்னர்களின் நாணயங்களையும் கடலோடிகளின் குறிப்புகளையும் கொண்டு பண்டைய இந்தியாவின் பண்டமாற்று முறைகளையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கணிக்க முடிகிறது. பண்டமாற்று முறை முடிவுக்குப்பின் சரியான மாற்றுப் பொருளாகநாணயங்களை ஏற்றுக்கொண்டார்கள். நாணயங்களை தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு என அந்தந்த ஆட்சியாளரின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்தினர். அதைக் காலப்போக்கில் மெருகேற்றி அந்தந்த காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு வடிவமைத்தார்கள்.

மக்களிடையே புழங்கி வந்த நாணயங்கள், வரலாற்றுக் காலத்தை வரையறுக்க உதவும் சான்றுகள் ஆகின்றன. சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்துநாணயங்கள் கண்டறியப்படவில்லை.

சொக்கநாதப் புலவர் இயற்றியதுதான் பணவிடுதூது. இவர்  திருமலை நாயக்கர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், அப்பொழுது சேதுபதியை ஆண்ட விஜய ரகுநாத சேதுபதி மீது பாடப்பட்டதுதான் இப் பணவிடுதூது என்றும் கூறுவர். இந்நூலில் பணத்தின் அதாவது, பல்வேறு காசுகளைப் பற்றிய செய்திகளையும் பெயர்களையும் புலவர்  குறிப்பிட்டுள்ளார். காசு குறித்து 36 சொற்களை அவர் கையாண்டுள்ளார். அவற்றுள் சில வருமாறு:

பொன், தாது, அத்தம், ஆடகம், வெறுக்கை, ஈகை, வேங்கை, சாதரூபம், கல்யாணம், ஏமம், மா, நிதானம், அரி, மாடு, மோகரம், சம்பங்கி, சாணான் காசு, ஈடு, தங்கக்காசு, சந்தமிக் காசு, பெருங்காசு, கருவெருமை நாக்கு, பெருங்கீற்று, சன்னக்கூற்று, வராகன், மாடை, வெட்டு, நாணயம், கோழி விழுங்கல், நண்டுக்கால், ஊணையம், உள்ளான், கீழா நெல்லிக்கொட்டை, சில்லறை, மட்டம், கம்பட்டம்.

Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், தேவர்கள், மறவர் | Leave a comment

திருச்சி வரலாறு

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுற்றுலா சிறப்பில் தமிழகம் தன்னிகரில்லா பெருமைகளை பெற்று விளங்குகிறது. இங்கு ஆயிரக்கணக்கில் எழுந்துள்ள கோயில்கள், உயர்ந்து நிற்கும் கம்பீரமான கோபுரங்கள், கலையெழில் கொஞ்சும் மண்டபங்கள், நீண்ட நெடும் பிரகாரங்கள், அழகுமிகு சிற்பங்கள், வண்ணமிகு திருவிழாக்கள் அனைத்தும் தமிழகத்தின் காலச்சார பெருமைகள்.

வரலாறு, மொழி, கலை, இலக்கியம், ஆன்மீகம், வேளாண்மை, பண்பாடு, பழமை, செழுமை, இயற்கை ஆகிய அனைத்து பெருமைகளையும் உடையது தமிழகம். இத்தகைய பெருமைமிகு தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பது மாநிலத்தில் மத்தியில் உள்ள திருச்சி மாவட்டம் என்றால் அதுமிகையாகாது. திருச்சி மாவட்டம் சுற்றுலாச் சிறப்புகள் பெற்ற தனிப்பெருமை கொண்டதாகும். தமிழகத்தின் சுற்றுலா பெருமைகளில் தனித்தன்மை வாய்ந்த திருச்சி மாவட்டம் புனிதநதி காவிரிக்கரையில் அமைந்த தொன்மையான நகரம். பல்லவ மற்றும்சோழ மன்னர்கள் திருச்சியை ஆட்சிபுரிந்துள்ளனர். இங்கு கோயில் கட்டிடக்கலையும், எழில் நிறைந்த கோபுரங்களும், சிற்பங்களும், இயற்கை வனப்பும் நிறைந்துள்ளது.
Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பூலித்தேவன் வரைபடத்தை கட்டபொம்மன் என்று அடையாளப்படுத்த கூடாது

இன்று சில புத்தகங்கள்(வெளியிடப்பட்டுள்ளது) மற்றும் சின்னத்திரை(மீடியா) மற்றும் பத்திரிக்கைகளிலும் பூலித்தேவனுது வரைபடத்தை கட்டபொம்ம நாயக்கன் என வெளியிடுகின்றார்கள்.

இது ஒரு பிரச்சனையா என கேட்கலாம் ஆனால் இன்று நாம் சாதாரனமாக அனுமதிக்கும் ஒரு செயல் நாளை நமக்கே வினையாகிவிடும். இந்த செயலை நாயக்க இனத்தவர்கள் செய்வது கிடையாது அவர்களுக்கு தெரியும் கட்டபொம்மன் உருவம் எது பூலித்தேவன் உருவம் எது என்று.

இன்று நாம் அனுமதிக்கு விஷயம் நாளைக்கு நம்மையே “வெட்கமில்லாமல் எங்கள் கட்டபொம்மனை பூலித்தேவன் என விளம்பரபடுத்த வெட்கமில்லையா உங்களுக்கு” என்று அந்த இனத்தவர்களும் நம்மை எந்நேரமும் விமர்சனத்துக்காக காத்திருக்கும் இழிசினர்களுக்கும் கேட்கும் நிலை எழலாம்;

 

இந்த படத்தை கட்டபொம்மன் என விளம்பரபடுத்திகின்றனர்.

Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged , | 1 Comment

பூவாலைக்குடியில் 23 மறவர் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.
திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, அந்த மையத்தின் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சாலையிலுள்ள வையாபுரிக்கு அருகேயுள்ளது பூவாலைக்குடி என்னும் சிற்றூர். இங்குள்ள புஷ்பவனேசுவரர் கோயில், கருவறை மட்டுமே கொண்ட முத்தரையர் காலக் குடைவரைக் கோயிலாகும். சோழர் காலத்தில் இக்குடைவரையின் முன் முகமண்டபம் அமைக்கப்பட்டது.
பிற்பாண்டியர் காலத்தில் பெருமண்டபமும், விஜயநகர அரசர்களின் ஆட்சிக் காலத்தில் முன்மண்டபமும் கட்டப்பட்டன. குடைவரைக் கோயிலின் தென்புறத்தில் இரண்டாம் பாண்டியர் கால அம்மன் கோயிலும், வடபுறத்தில் முருகன், பைரவர், சண்டேசுவரர் திருமுன்களும் (சன்னதிகளும்) அமைந்துள்ளன. இக்கோயில் வளாகத்திலிருந்து பதினைந்து கல்வெட்டுகள் ஏற்கெனவே படியெடுக்கப்பட்டுள்ளன.
சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு. நளினியின் தலைமையில் இக்குடைவரையில் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆர்வலர்கள் 23 புதிய கல்வெட்டுகளைக் கண்டெடுத்தனர்.
அவற்றுள் வீரராஜேந்திர சோழர் காலக் கல்வெட்டு, கூடலூர் நாட்டுப் பூவாலைக்குடியைச் சேர்ந்த தென்னவதரையன், இக்கோயிலில் இரவும், பகலும் எரியுமாறு நந்தாவிளக்கு ஏற்றுவதற்காக இருபத்தைந்து பசுக்களைக் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்ததாகக் கூறுகிறது. அப்பசுக்களைத் தம்பொறுப்பில் ஏற்றுக் கொண்ட சுந்தரசோழக் கோன் உரிய நெய் கொண்டு தொடர்ந்து விளக்கேற்ற ஒப்புக்கொண்டார்.
Posted in கல்வெட்டு, சேதுபதிகள், மறவர் | Tagged , | Leave a comment