மூலம்:
ஆசிரியர் பட்டாபிராமனின் -தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் இலக்கனம்.
பெருங்கற்காலப் புதைகுழியாகவே பதுக்கையைக் கருத வேண்டும். நினைவுக் கற்களாகப் பதுக்கையைக் கருதக்கூடாது. நடுகற்களின் முதற்கட்டமே பதுக்கை. இதன் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு.கல் ஒன்றைப் பதுக்கையில் நடுவது நடுகல்லின் இரண்டாம் கட்டமாகும். கி.மு 300லிருந்து கி.பி. 200 வரையிலான காலத்தில் இது நிகழ்ந்திருக்கும். ‘நட்ட போலும் நடா நெடுங்கல்’ என்ற அகநானூற்றுப் பாடல்வரி (269:7) நடுகல்லின் மூன்றாவது கட்ட மாகும். கைவிடப்பட்டு இறந்த மறவர் நினைவாகக் கல் நடப்படுகிறது. இதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து இரண்டாவது நூற்றாண்டு ஆகும்.நான்காவது வளர்ச்சி நிலையில் கல்லின் உயரம் குறைந்து வீரர் உருவம் பொறிக்கப்பட்ட நடுகற்கள் உருவாகின்றன. இதன் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு ஆகும். வீரரின் உருவம் மட்டுமின்றி எழுத்துக்களும் நடு கற்களில் பொறிக்கப்பட்டதை ‘எழுத்துடை நடுகல்’ என்று அகநானூறு (53) குறிப்பிடுகிறது. தொல்காப்பியரும் நடுகல் நடும்போது,
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
Continue reading
