பாண்டிநாட்டுத் துறைமுகம்

பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது.

இதற்கு முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சாட்சி. இப்பட்டினங்களால் சங்ககாலப் பாண்டியர்த் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது.

அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்ததை மார்க்கோ போலோவின் காயல்பட்டினம் குதிரை வணிகக் குறிப்புகளை கொண்டும், இபின் பட்டுடாவின் பாண்டியர்-ஏமன் கப்பல்கள் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம். குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்ததைக் கொண்டு அக்காலத்தில் பாண்டியர் உலகிலேயே சிறந்த வணிகத் துறைமுகங்களை பெற்றிருந்தது தெரிகிறது.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பூலித்தேவர் பூழியன்(பூழித்தேவர்) என்ற பாண்டிய மரபினரே

இந்தியாவிலேயே முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன்.வரி வசூலிக்க வந்த அலெக்சாண்டர் கெரான் என்பவனோடு 1755-ம் ஆண்டு பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கம்பெனிப் படையை எதிர்த்த ஒரு இந்தியனின் முதல் போராகும்.

பூலித்தேவர் பற்றிய பூர்வீகம்: 

பூலித்தேவர் பற்றிய பூர்வீகம் பற்றிய பல ஆய்வாளர்கள் முன்னுக்கும் பின்னுக்கும் முரனாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த ஒன்று. 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு மன்னனால் ‘வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர்’ என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்ட நாடே இந்த பூழிநாடு. ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையார் புரம். ஆனால் ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் ஸ்வெல்ஸ் ஆதாரப்பூர்வமான தனது கூற்றில்

தலைமுறை பெயர் ஆட்சியாண்டுகள்
1 வரகுண சிந்தாமணி பூலித்தேவன் 1378 – 1424
2 வடக்காத்தான் பூலித்தேவன் 1424 – 1458
3 வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன் 1513 -1548
4 சமசதி பூலித்தேவன் 1548 – 1572
5 முதலாம் காத்தப்ப பூலித்தேவன் 1572 – 1600
6 இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன் 1600 – 1610
7 முதலாம் சித்திரபுத்திரத்தேவன் 1610 – 1638
8 மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் 1638 – 1663
9 இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் 1663 – 1726
10 நான்காம் காத்தப்ப பூலித்தேவன் 1726 – 1767

“காத்தப்ப பூலிதுரை தேவர்”.இவரது முழு அபிஷேக பெயராக “வரகுனராம சிந்தாமனி ஆபத்துகாத்த பூலித்துரைப்பாண்டியன்”என்பது தான். இந்த 10-வது பூலித்தேவர் தான் நாம் கொண்டாடும் சுதந்திர முழக்கமிட்ட மாவீரன்.

Continue reading

Posted in பாண்டியன், பூலித்தேவன், மறவர் | Tagged | Leave a comment

மூவேந்தரும் ஒரே குடிவழியினர்

Untitled-1

பழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய மன்னர் மரபு பாண்டிய மரபு ஒன்றே. பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.

தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை
மாறன் வழுதி மாறன் திரையன்
மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர்
தமிழ்மூ வரசிவர் தாமா வாரே (ந.வே.வ.பாயிரம்)

மாறன் திரையன் மரபில் வந்தோர் சோழராயினர் இவர்கள் அலைகடலில் நெடுந்தொலைவு
ஆழ்கடலில் பயணம் செய்ததால் திரையர் எனப்பட்டனர். கடல் கடந்த தொலைவிடங்களிலிருந்து நெற்பயிர் கொண்டு வந்து பயிர் செய்ததால் சொல் – சொல்லர் –
சோலர் – சோழர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என கருதப் படுகிறது.

மாறன் வழுதி மரபினர் தொடர்ந்து பாண்டியராகவே நீடித்தனர்.

பாண்டியர் வரலாறு மீட்டமைப்பது

பதிற்றுப்பத்து எட்டு சேர மன்னர்களின் வரலாற்றை அவர்கள் ஆட்சி புரிந்த ஆண்டுக் காலக் குறிப்போடு தெளிவாலக் கூறுகிறது. கா.சு. பிள்ளை அவர்கள் இந்த ஆட்சிக் காலத்தைக கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் முறைப்படி கணித்திருக்கிறார்.

இந்நிலையில் 1920 ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நற்குடி வேளாளர் வரலாறு என்னும் 1035 செய்யுள் கொண்ட பாண்டியர் குடிமரபு கூறும் நூல் பாண்டியர்களின் 201 தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்கு உரியவனுக்குப் பட்டம் கட்டி வந்த வழக்கத்தை இவர்கள் கொண்டிருந்தனர். பாண்டியரின் ஐவகைப் பிரிவில் கொடி என்றும் பிதிர் என்றும் பிரிக்கப்பட்ட வண்ணம் இருங்கோவேள் பிரிவினர் வழி வந்தவர்கள் தொடர்ந்து பட்டம் கட்டிக் கொள்வதைக் கைவிடவில்லை. . இதன் வண்ணம் கி.பி. 1944 இல் இயற்கை எய்திய போற்றியடியா
இருங்கோவேள் 201 ஆவது பாண்டிய மன்னர் மரபின் பட்டம் கொண்டிருந்தார் என அந்நூல் கூறுகிறது.
Continue reading

Posted in மூவேந்தர் | Tagged , , , | Leave a comment

திருவாரூர் அருகே சோழர் காலத்து சிவன் கோவிலில் கி.பி., 912ம் ஆண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு

cholan

திருவாரூர்:

திருவாரூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, மூன்று கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. திருவாரூர் மாவட்டம், சீதக்கமங்கலம் கிராமத்தில், மிகப் பழமையான சோழர் காலத்து சிவன் கோவில் சிதிலமடைந்து உள்ளது.

இக்கோவில் இடிந்து தரைமட்டமாகிக் கிடந்ததால், அப்பகுதியினர், கோவில் பக்கம் செல்ல அச்சப்பட்டு வந்தனர். கோவிலைப் புதுப்பிக்க, முன்னாள் ஊராட்சித் தலைவர் ராமலிங்கம், சிவராமன் உள்ளிட்ட குழுவினர் முயற்சித்தனர். முதற்கட்டமாக, நேற்று முன்தினம் முட்புதர்களை அகற்றி, பழைய கற்களை சரி செய்தனர். அப்போது, பள்ளம் தோண்டியதில், மூன்று கல் தூண்கள் கிடைத்தன.
Continue reading

Posted in கல்வெட்டு | Tagged , | Leave a comment

பந்தல்குடி வரலாறு

இவ்வூர் அருப்புக்கோட்டை வட்டத்துப் பந்தல்குடி உள்வட்டத்தில் அருப்புக்கோட்டை எட்டையபுரம் சாலையில் அருப்புக்கோட்டையிலிருந்து 9கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. பந்தல் என்பது உயரமான தூண்களைக் கொண்ட கல் மண்டபத்தைக் குறிப்பதாக அமையும். இத்தகைய மண்டபம் பழங்காலத்தில் கோயில் திருவிழாக்களில்,இறைவன் எழுந்தருளுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.நாளடைவில் இங்கு குடியிருப்பு தோன்றியதால் இஃது பந்தல்குடி ஆயிற்று எனலாம்.

மேலும் பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சியை மீண்டும் பெறப்போராடிக் கொண்டிருந்த சமயம் பல குறுநில மன்னர்கள் சிற்றூர்கள் பலவற்றை அழித்தார்கள். அச்சிற்றூர்களில் இதுவும் ஒன்று. அவர்கள் அழிவு ஏற்படுத்திய பின்பு அமைதி ஏற்பட்டது. அவ்வமைதிக்குப் பின்னர் கோயில் மண்டபத்தைச் சுற்றி தற்போதைய கிராமம் ஏற்பட்ட காரணத்தால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் செவிவழிக் கதை ஒன்று கூறுகின்றது.

Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

திருக்கோவில் கல்வெட்டுக்கள்

aruppukottai

திருக்கோவில் கல்வெட்டுக்கள்:

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலின் மூலவர் சுவாமி சன்னிதியின் மேற்கு, வடக்கு தெற்குபுற வெளி சுவர்களில் மொத்தம் பதினோரு கல்வெட்டுக்கள் உள்ளன. 1914 ஆம் ஆண்டு தொல் பொருள் துறையினர் இக்கல்வெட்டுக்களை படியெடுத்து வெளியிட்டுள்ளார்கள். இதில் ஒன்பது கல்வெட்டுக்கள் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தவைகளாகும்.

இது தவிர சூரிய புஷ்கரணி தெப்பக்குளத்தின் தண்ணீர் வந்து விழும் மடையின் இரு பக்கங்களிலும் கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்த கல்வெட்டு விபரங்களை தென்னிந்திய கல்வெட்டு சாசன 1914 ஆம் ஆண்டிற்கான அறிக்கை 1962-63 ல் கடித எண் 203/1463/1511 நாள் 11-4-62 ல் இக்கல்வெட்டுக்கள் வ.எ.402 முதல் 412 முடிய எண்ணிடப் பட்டதாக கூறுகிறது. தெப்பக்குள கல்வெட்டிற்கு எண்.510 என்று எண் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continue reading

Posted in கல்வெட்டு | Tagged | Leave a comment

கோட்டூர் (திருக்கோட்டூர்)

ko117

கல்வெட்டு:

இக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் சோழர்களுடையன. இவைகளுள் விளக்குத்தானம், விளக்குப்பணதானம், கோயிலுக்கு நிலதானம், முதலியவைபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்றில் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூரில் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன் என்ற ஒரு பெருமகனார் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இதில் சேக்கிழார் தம்பியாரது பெயர் வருதல் காண்க. திருத்தருப்பூண்டி மடாதிபதி திருமாளிகைப் பிச்சர் பெயர் காணப்படுகிறது.

இத்திருக்கோயிலில் பெயர் குறிப்பிடப்பெறாத பரகேசரி வர்மன் காலத்தது ஒன்று, முதலாம் இராஜராஜ சோழன் காலத்தது ஒன்று, முதற்குலோத்துங்கசோழன் காலத்தன நான்கு, இரண்டாம் இராஜாதி ராஜன் காலத்தன ஐந்து, மூன்றாங் குலோத்துங்கன் காலத்தன நான்கு, மூன்றாம் இராஜராஜன் காலத்தன நான்கு, ஆக சோழமன்னர்களின் கல்வெட்டுக்கள் பத்தொன்பதும், ஒருவயலில் நட்டுவைத்துள்ள தஞ்சை மராட்டிய மன்னருடைய கல்வெட்டு ஒன்றும்,

Continue reading

Posted in கல்வெட்டு | Tagged | Leave a comment

கொல்லங்கொண்டான் பாண்டியன்

pandian012

கொல்லங்கொண்டான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொல்லத்தினையும் சுற்றுப்புறப் பகுதிகளினையும் கைப்பற்றியதனால் ‘கொல்லங்கொண்ட பாண்டியன்’ என அழைக்கப்பட்டான் என திநெல்வேலி சேர மாதேவி கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இம்மன்னன் மலை நாடு, சோழ நாடு, இரு கொங்கு நாடுகள், ஈழ நாடு, தொண்டை நாடு போன்றனவற்றினையும் வென்றான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழ நாடு, நடு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகளில் இவனைப்பற்றிய கல்வெட்டுக்களைக் காணலாம். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனைப் போல இம்மன்னனும் “எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீகுலசேகர பாண்டியன்” என சிறப்பிக்கப்பட்டான். தனது ஆட்சியில் நாடெங்கு அமைதி நிலவ வேண்டும் என்ற காரணம் கருதி தனது தம்பிமார்களை அரசப் பிரதிநிதிகளாக்கினான். போரில் வெற்றி பெற்ற நாடுகளிலிருந்து கைப்பற்றிய பொருள்களைக் கொண்டு நெல்லைக் கோயில் திருச்சுற்று மாளிகையினை கட்டுவித்தான். நெல்லையப்பரிடம் பேரன்பு கொண்ட கொல்லங்கொண்டான் ஆட்சிக் காலத்தில் நான்கு அரசப் பிரதிநிதிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வரகுணராம பாண்டியன் -கி.பி. 1613-1618

pandian012

வரகுணராம பாண்டியன் கி.பி. 1613 முதல் 1618 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். வரகுண குலசேகரப் பாண்டியன் என்ற சிறப்புப்பெயரினையும் வேத விதிப்படி வேள்விகளைச் செய்த காரணத்தினால் குலசேகர சோமாசிரியார் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான். 1748 ஆம் ஆண்டளவில் ஆட்சி செய்த பாண்டிய மன்னனொருவனும் தனது பெயரை வரகுணராம பாண்டிய குலசேகர தேவ தீட்சிதர் என தன்னை வரகுணராம பாண்டியன் பெயரினையும் தனது சிறப்புப்பெயரினையும் இணைத்து வைத்துக்கொண்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டியர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசின் மேலாண்மையில் இருந்தனர்.மேலும் அவர்களுக்குத் திறை செலுத்துபவர்களாகவும் இருந்தனர்.

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

வரதுங்கராம பாண்டியன் -கி.பி. 1588-1612

pandian012

வரதுங்கராமர் எனப் போற்றப்பட்ட பாண்டியன் கி.பி. 1588 முதல் 1612 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் இரண்டாவது மகனுமாவான். அபிராம சுந்ரேசன்,வீரபாண்டியன் போன்ற சிறப்புப்பெயர்களையும் பெற்றிருந்தான்.சடையவர்மன் அதி வீரராம பாண்டியன் காலத்தில் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்த வரதுங்கப் பாண்டியன் ‘வில்லவனை வென்றான்,வல்லம் எறிந்தான்” எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் போல் தமிழில் புலமை பெற்றிருந்தான்.பிரமோத்தர காண்டம்,கருவை கலித்துறை அந்தாதி,கருவை பதிற்றுப்பத்தந்தாதி,கருவை வெண்பா அந்தாதி, கொக்கோகம் ஆகிய நூல்களினைப் பாடிய பெருமையினை உடையவனான இவன் சிவனிடம் பக்தி உடையவனாகத் திகழ்ந்தான்.

மேலும் பார்க்கலாம்

  • புராணம் பாடிய தென்காசிப் பாண்டியர்
Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment