பராங்குசன் பாண்டியன் -கி.பி. 710-765

 

பராங்குசன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.ரணதீரன் மகனான இவன் தனது பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான்.மாறவர்மன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்த இவன் தேர்மாறன் எனவும் முதலாம் இராசசிம்மன் எனவும் அழைக்கப்பட்டான்.

 

பொருளடக்கம் :
  • 1 பராங்குசன் ஆற்றிய போர்கள்
    • 1.1 நந்திவர்மனுடனான போர்
    • 1.2 கொங்கு நாட்டுப் போர்
  • 2 சைவ சமயப் பணிகள்

பராங்குசன் ஆற்றிய போர்கள் :

நந்திவர்மனுடனான போர் :

கி.பி.710 ஆம் ஆண்டு ஆட்சி ஏறிய பராங்குசன் சோழ நாட்டையும்,தொண்டை நாட்டையும் ஆண்டு வந்த பல்லவ மன்னனான நந்திவர்மன் மீது பகை ஏற்பட்ட காரணத்தினால் குழும்பூர்,நெடுவயல்,பூவலூர்,கொடும்பாளுர்,பெரியலூர் ஆகிய ஊர்களில் போர் செய்தான் பராங்குசன்.பாண்டி நாட்டைப் பிடிக்க எண்ணிய நந்திவர்மனும் படையுடன் வந்தான் இதனை அறிந்த பராங்குசனும் வட எல்லையிலேயே நந்திவர்மனைத் தோற்கடித்தான்.நென்மேலி,மண்ணை ஆகிய இடங்களில் போர் நடைபெற்றது.இப்போரில் நந்திவர்மன் பராங்குசனைத் தோற்கடித்தான் என திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார்.இத்தகவலை கச்சிப்பரமேச்சுர விண்ணகரப் பதிகம் மற்றும் நந்தியின் உதயேந்திரச் செப்பேடு இரண்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

ரணதீரன் பாண்டியன் -கி.பி. 670-710

pandian012

ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான்.

ரணதீரன் ஆற்றிய போர்களும் பெற்ற பட்டங்களும் :

ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது. படையெடுத்துச் சென்ற இவன் முதலில் சேர நாட்டை வென்றான். பின்னர் சோழ நாடு, கொங்கு நாடு, கருநாடகம் அனைத்தினையும் வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும் மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான். சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

அரிகேசரி பாண்டியன் -கி.பி. 640-670

pandian012

அரிகேசரி கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஆவான்.பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மகனான இவன் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டான்.கி.பி.640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றான்.திருவிளையாடல் புராணத்தில் இவனைச் சுந்தர பாண்டியன்,கூன் பாண்டியன் போன்ற பெயர்களினால் அழைத்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அரிகேசரி ஆற்றிய போர்கள் :

அரிகேசரி என்னும் இவன் பெயர் இவன் மேற்கொண்ட போர்களின் வெற்றியினைப் பறை சாட்டும் விதமாக அளிக்கப்பெற்ற பட்டம் ஆகும்.சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரை முற்றுகையிட்டு அங்கு ஆட்சி செய்து வந்த மணிமுடிச் சோழனை போரில் வெற்றி பெற்றான்.வெற்றிப்பரிசாக மணிமுடிச் சோழனது மகள் மங்கையர்க்கரசியினை மனைவியாகப் பெற்றான் அரிகேசரி.மங்கையர்க்கரசி பாண்டிய நாட்டின் அரசியாக முடிசூடிக்கொண்டாள்.தனைத்தொடர்ந்து அரிகேசரி படையெடுத்து சேர மன்னனொருவனோடு போர் செய்து வெற்றியும் பெற்றான்.பரவரை புடைத்தான்;பாழி,செந்நிலம் குறுநில மன்னர்களை வென்றான்.திருநெல்வேலியையும் வென்றான் என இவனை ஆற்றிய போர்களைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேடு கூறுவது குறிப்பிடத்தக்கது.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

செழியன் சேந்தன் பாண்டியன் -கி.பி. 625-640

pandian012

செழியன் சேந்தன் கி.பி. 625 முதல் 640 வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான்.அவனி சூளாமணியின் வழித்தோன்றலும் ஆவான்.சடையவர்மன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த இவனே இப்பட்டத்தினை முதன் முதலில் பெற்றவனும் ஆவான்.இம்மன்னனது பெயரால் இவன் ஆட்சியில் கொங்கு நாடு இருந்தது.இவன் பெயரால் அமைந்த ஊர்தான் கொங்கு நாடான கொல்லிக் கூற்றத்துச் சேந்தன் மங்கலம் ஆகும்.இவன் காலத்தில் சீனநாட்டு யாத்ரீகனான ‘யுவான்சுவாங்’ தமிழகத்திற்கு வந்து காஞ்சி நகரில் சென்று பாண்டிய நாட்டிற்குச் சென்றிருந்தான்.மேலும் அவன் செழியன் சேந்தனைப் பற்றித் தனது குறிப்பில் “பாண்டியன் சேந்தன் இறந்து விட்டான் பாண்டி நாடு பஞ்சத்தால் வாடுகிறது’ என்று குறித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடு

சிலைத்தடக்கைக் கொலைக் களிற்றுச் செழியன்

மண் மகளை மறுக்கடித்த வேந்தர் வேந்தன்

செங்கோல் சேந்தன்

என்று குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

அவனி சூளாமணி பாண்டியன் -கி.பி. 600-625

pandian012

அவனி சூளாமணி கி.பி.600 முதல் – 625 வரை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான்.பாண்டிய மன்னர்கள் சடையவர்மன்,மாறவர்மன் என்ற பெயர்களை தம் பெயர்களிற்கு முன்னர் சூட்டுக் கொள்வது வழக்கம் அஃது போலவே அவனி சூளாமணியும் தன் பெயரை மாறவர்மன் அவனி சூளாமணி என அமைத்துக் கொண்டான்.பாண்டியன் கடுங்கோனின் மகனாவான் இவன் என்று வேள்விக்குடிச் செப்பேடு பின்வரும் வரிகளின் மூலம் கூறுகின்றது. “குறுநில மன்னர்களை அடக்கியவன்,குறும்புகளை அழித்தவன்.செங்கோல் ஓச்சியவன்.உலகம் முழுதையும் வெண்கொற்றக் குடைநிழலில் தங்க வைத்தவன்.மானத்தைக் காத்தவன் மரபிலே வந்தவன்.ஒடுங்கா பகை மன்னர்களை ஒடுக்கியவன்.வீரமும்,ஈரமும் புகழும் உடையவன்” .இப்படிக்கூறும் இப்பாடல் வரி அவனி சூளாமணியின் தந்தையையும் இவனையும் குறித்துப் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.உலகத்திற்கே சூளாமணி போன்றவனாகத் திகழ்ந்தான் இவன் என்பது குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

கடுங்கோன் பாண்டியன்-கி.பி. 575-600

pandian012

இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. முத்தொள்ளாயிரம் என்னும் நூல் கடுங்கோன் என்னும் பெயரால் பாண்டிய மன்னன் ஒருவனைச் சுட்டுகிறது. [1] வேறு சான்றுகள் கடுங்கோனைப் பற்றிக் கிடைக்காததால் இவனை வரலாற்றுக்கு முந்தைய தொல்பழங்காலப் பாண்டியர் பட்டியலில் ஒருவனாகக் கொள்ளலாம்.

‘கடுங்கோ’ என்னும் பெயருடன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் அரசனும், பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ என்னும் புலவர்களும் காணப்படுகின்றனர்.

கடுங்கோன், கடுங்கோ என்னும் பெயர்களை எண்ணும்போது முதல் இரண்டு தமிழ்ச்சங்கங்கள் இருந்த குமரிக் கண்டத்தில் சேர சோழ பாண்டியர் பாகுபாடு இல்லை எனக் கொள்ள இடமுண்டு.

ஆயின் குமரிக்கண்டத் தமிழர் பாண்டியர் எனத் தகும்.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

நம்பி நெடுஞ்செழியன்

pandian012

நம்பி நெடுஞ்செழியன் கி.பி. 170 முதல் 180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பேரெயின் முறுவலார் இம்மன்னனைப் பற்றிப் பாடியுள்ளார்.

அதில் “செய்தக்க எல்லாப் செய்தவன். இறந்துவிட்டான்! புகழ் கொண்டான். இவனை இடுகாட்டில் புதைத்தால் என்ன? சுட்டால் என்ன?’ என இப்புலவர் வருந்திக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

நம்பி நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டியர் மரபில் தோன்றிய மாவீரன். இவன் உக்கிரப் பெருவழுதியின் தூதுவனாகக் கானப்பேரெயில் அரசனிடம் சென்றான். தூது பயன் தரவில்லை. போர் மூண்டது. போரில் தன் அரசனுக்காகப் போரிட்டு மாண்டான். இவன் போர்க்களத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து, பேரெயில் முறுவலார் என்னும் புலவர் இவனது புகழைப் பாடியுள்ளார்,

புலவர் பேரெயில் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இது கானப்பேரெயில் எனப் பெயர் பெற்றிருந்த ஊர்.உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் இவ்வூரில் போரிட்டு அதனைத் தனதாக்கிக் கொண்டான். எனவே நம்பி நெடுஞ்செழியன் இந்தப் போரில் மாண்டவன் எனலாம்.

இவனைப் பற்றிய குறிப்புகள் :

  • தோளில் காப்பு அணிந்திருந்தான். தலையில் பூச் சூடியிருந்தான். சந்தனம் பூசிக்கொண்டிருந்தான்.
  • பகைவரைப் பூண்டோடு அழித்தவன்.
  • நண்பர்களுக்கு உயர்வளித்தவன்.
  • வலியவர்களை வணங்கமாட்டான். மெலியவர்களை ஏளனப்படுத்த மாட்டான்.
  • யாரிடமும் இரக்கமாட்டான். தன்னிடம் இரந்தவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்காமல் அனுப்ப மாட்டான்.
  • தேரிலும், யானைமீதும் உலா வருவான்ய
  • பாணர்களின் பசியைப் போக்கி, அவர்கள் மகிழ குளிர்பானங்கள் (தீம் செறி தசும்பு) தருவான்.
  • ஐயம் தோன்றாதபடி தெளிவாகப் பேசுவான்.

அடிக்குறிப்பு :

  1. தொடிஉடைய தோள் மணந்தனன்

    கடி காலில் பூச் சூடினன்

    தண் கமழும் சாந்து நீவினன்

    செற்றோரை வழி தடித்தனன்

    நட்டோரை உயர்பு கூறினன்

    வலியர் என வழி மொழிபவன்

    மெலியர் என மீக்கூறலன்

    பிறரைத் தான் இரப்பு அறியலன்

    இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்

    வேந்துடை அவையத்து ஒங்குபுகழ் தோற்றினன்

    வருபடை எதிர் தாங்கினன்

    பெயர் படை புறங்கண்டனன்

    பாண் உவப்ப பசி தீர்த்தனன்

    செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்

    இடுக ஒன்றோ?சுடுக ஒன்றோ

    படுவழிப் படுக இப்புகழ் வெய்யோன் தலையே!

    —(புறம் – 239)
Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி

maravar

பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.

இவனும் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்பவனும் புகார் அரண்மனையில் நண்பர்களாகக் கூடியிருந்தபோது, புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கண்டு இன்று போல் என்றும் ஆட்சியிலும் கூடியிருக்க வேண்டும் எனப் பாடியுள்ளார். இப்படிக் கூடியிருந்தால் பிற அரசர் நாட்டுக் குன்றங்களிலெல்லாம் சோழனின் புலி, பாண்டியனின் கயல் ஆகிய இரண்டு சின்னங்களையும் சேர்த்துப் பொறிக்கலாம் என்கிறார்.

வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி கி.பி. 160 முதல் 170 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனின் நண்பன். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவரால் இம்மன்னன்

தமிழ் கெழுகூடல் தண்கோல் வேந்தே!

இருபெருந்தெய்வம் போல் இருவிரும் உள்ளீர்!

இன்றே போல் நும்புணர்ச்சி

—(புறம் – 58)

பாடப்பட்டுள்ளான்.

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

குறுவழுதி

maravar

குறுவழுதி கி.பி. 150 முதல் 160 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.பெரும் பெயர் வழுதியின் இளவல் ஆகலாம்.

இவரது பெயர் குறுவழுதியார் என்றும் [3] என்றும், அண்டர் மகன் குறுவழுதியார் [4] என்றும், அண்டர் மகன் குறுவழுதி [5] [6] என்றும், பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பெயர்களில் ‘ஆர்’ விகுதி இல்லாத பெயர்கள் இவரை பாண்டிய அரசர் எனக் கொள்ளத் தூண்டுகின்றன.

பருவம் அடைந்த பெண்ணிடம் தோன்றும் அடையாளங்கள் இவை என இவர் கூறும் அடையாளங்கள் மனத்தில் கொள்ளத்தக்கவை.

பொருளடக்கம் :
  • 1 பெயர் விளக்கம்
  • 2 குறுவழுதி ஒரு புலவர்
    • 2.1 பாடல் தரும் செய்திகள்
      • 2.1.1 பழந்தமிழ்
  • 3 அடிக்குறிப்பு

பெயர் விளக்கம் :

அண்டர் என்னும் சொல் குதிரைமீது ஏறி ஆனிரை மேய்த்த இடையரைக் குறிக்கும். இவர் இடையரின் பெருங்குடி மகனாய் விளங்கியவர் என்பது இவரது பெயரால் தெரியவருகிறது. இதில் வரும் ‘மகன்’ என்னும் சொல் முறைப்பெயர் அன்று. ஆண்மகன், பெருமகன், திருமகன் போன்ற சொற்களில் பின்னொட்டாக அமைந்துள்ள மகன் என்னும் சொல்லைப் போன்றது. வழுதி என்னும் சொல் பாண்டிய அரசர்களின் பெயர்களில் ஒன்று.
Continue reading
Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்

maravar

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி. 140 முதல் 150 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நக்கீரர் இம்மன்னனைப் புகழ்ந்து

“நாஞ்சில் நாடான், அன்னக் கொடியோன், சோழன், சேரன் ஆகிய நால்வர்க்கும் கூற்றுவன் நீ! இகழுநரை அடுவதால் முருகனை ஒத்தாய்! நினக்கு ஒப்பார் இல்லை! இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈவாய்! யவனர் நன்கலம் தந்த தண்கமல்தேறல் நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்பர்.ஒங்குவாள் மாறனே! வெங்கதிர்ச் செல்வன் போலவும், தண்கதிர் மதியம் போலவும் நின்று நிலைப்பாய் உலகமோடு!” எனப் புறம்-56 இல் பாடியுள்ளார் நக்கீரர்.

மதுரை மருதன் இளநாகனார் இம்மன்னனைப் புகழ்ந்து

“நெடுந்தகை! நீ நீடுவாழிய! ஞாயிறு அன்ன வெந்திறல் ஆண்லையும்,திங்கள் அன்ன தண் பெருஞ்சாயலும்,வானத்தன்ன வண்மையும் உடையவனாக உள்ளாய்! கறை மிடற்று அண்ணல் பிறைநுதல் பெருமான் போல வேந்து மேம்பட்ட பூந்தார் மாறனே! கொல்களிறும்,கவிமாவும்,கொடித்தேரும்,புகல் மறவரும் என நான்குடன் மாண்ட சிறப்புடையோய்! அறநெறிமுதற்றே அரசின் கொற்றம்” என புறம்-55 இல் பாடியுள்ளார் மருதன் இளநாகனார்.

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment