பொற்கைப் பாண்டியன்

pandian012

பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான்.

பொற்கை பெற்ற வரலாறு :

மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் “வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்” எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள். வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக்கூறிச் சென்றான். இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான். அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஐயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எண்ணி அவ்வீதியில் அமைந்திருந்த அனைத்து வீட்டுக் கதவுகளினையும் தட்டினான் பாண்டியன்.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பெரும்பெயர் வழுதி

pandian012

பெரும்பெயர் வழுதி என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இரும்பிடர்த் தலையார் என்னும் புலவர் புறநானூற்றில் இவனைப் பாடியுள்ளார்.[1] ஈகைக்கடன் பூண்ட கவுரியர் வழிவந்தவன் என இவன் குறிப்பிடப்படுகிறான். புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு இந்தப் பாண்டியனைப் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி எனக் குறிப்பிடுகிறது.

கி.பி. 90 முதல் 120 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் கரிகாலன் காலத்தில் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றான்.கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்னும் அடைமொழிகளைப் பெற்ற இம்மன்னனை கரிகாலனின் நண்பனாகவிருந்தவன் என இரும்பிடர்த்தலையர் (புறம்-3) இல் போற்றுகின்றார்.

மருந்தில் கூற்றம் என்னும் ஊரை இவன் கைப்பற்றினான். அப்போது அவன் யானையின் கழுத்தில் மணி கோத்துக் கட்டப்பட்டிருந்த கயிற்றின் மேல் இருந்துகொண்டு மருந்தில் கூற்றத்துக் கதவுகளை யானைக்கோட்டால் உடைத்து முன்னேறி வென்றானாம்.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

மதிவாணன்

pandian012

மதிவாணன் கி.பி. 60 முதல் 85 வரை முடத்திருமாறனுக்குப் பின்னர் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் சிறந்த தமிழ் நூல்களினை இயற்றவைத்தும் கல்வி,கேள்விகளில் வல்லவனாகவும் நாடகத் தமிழில் ஈடுபாடு கொண்டவனாவும் விளங்கினான். நாடகத்தமிழ் நூல் ஒன்றினை இயற்றி அதற்கு மதிவாணன் மதிவாணர் நாடகத் தமிழர் எனப் பெயரிட்டான். மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இந்நூலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடக நூல் தந்த மதிவாணன் நான்மாடக் கூடல் நாயகனாக இருந்தான்.

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

முடத்திருமாறன்

pandian012

முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிக்கோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை.

குறிப்பு :

கொல்லிமலைக் குட்டுவனைத் தன் பாடலில் குறிப்பிடும் இவன் கடைச்சங்க காலத்தவன். மேலே தரப்பட்டுள்ள செய்தியில், இறையனார் களவியலுரை அடிப்படையில் காட்டப்பட்டுள்ள முடத்திருமாறன் இவன் காலத்துக்கு முந்தியவன்.
Continue reading
Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பசும்பூண் பாண்டியன்

maravar

பசும்பூண் பாண்டியன் என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னன்.

பூண் என்பது அரசர்கள் மார்பில் அணியும் கவச அணி. பசும்பூண் என்பது பூண் வகைகளில் ஒன்று. பசும்பூண் பாண்டியனின் படைத்தலைவன் அதிகன். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த வாட்போரில் கொங்கர் படை இவனைக் கொன்று ஆரவாரம் செய்தது.

பசும்பூண் பாண்டியன் யார் :

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே பசும்பூண் பாண்டியன் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.

பசும்பூண் பாண்டியன், பசும்பூண் செழியன் என்னும் தொடர்களை ஒப்புநோக்கி இவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே எனத் தெளியலாம்.

Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

maravar

குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது.மூத்த குடியினன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு “பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடுமி என்பது குடுமியான்மலை. இவ்வூரில் இவன் யூபம் நட்டு வேள்வி செய்தான். எனக் கொள்வது வரலாற்று நெறி.
Continue reading
Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

நிலந்தரு திருவிற் பாண்டியன்

maravar

‘நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து’ தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ‘நிலம் தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்’ எனக் குறிப்பிடப்படுகிறான். இந்த நெடியோன் இரு பெரு வேந்தரும், வேளிரும் சாயும்படி போரிட்டு நிலம் தந்தவன்

‘மண் பல தந்த திரு வீழ் பசும்பூண் பாண்டியன்’ என்பவனின் படைத்தலைவனாக விளங்கியவன் நாலை கிழவன் நாகன்

இவற்றைக் காலக் கண்ணில் நோக்கும்போது தெளிவு ஒன்று பிறக்கும்.

  • நிலம் தந்த பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது (கி. மு. 400 அளவில்)
  • நிலம் தந்த நெடியோன் சங்க காலத்தவன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு உதவியவன். நாகன் இவனது படைத்தலைவன். பசும்பூண் பாண்டியன் எனப் போற்றப்பட்டவன்.
“நிலந்தந்த பேருதவிப்” “பொலந்தார் மார்பின்” “நெடியோன் உம்பல்”
—(60-61)

என மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைச்சங்க காலத்து இறுதி அரசனாக இருந்திருப்பான் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.

அடிக்குறிப்பு :

  1.  தொல்காப்பியப் பாயிரம்
  2. உம்பல் = யானை – மதுரைக்காஞ்சி 60-61
  3. மதுரைக்காஞ்சி 55-59
  4. புறநானூறு 179
Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

maravar

வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர்.

பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுயுள்ளார்.கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது.

மூன்று கடல்கள் கூடுமிடம் குமரி முனை. இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. இன்று ஓடும் பறளியாற்றின் தொடர்ச்சி ஆகலாம். இதன் கழிமுகத்தில் இவன் விழாக் கொண்டாடினான். அதனால் இந்த விழா முந்நீர் விழா எனப்பட்டது. [1] காவிரியாற்றுக் கழிமுகத்தில் புகார் நகரத்தில் இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

வடிம்பு, சொல்விளக்கம் :

வடிம்பு என்பது உள்ளங்கால், உள்ளங்கை முதலானவற்றின் விளிம்பு. கை, கால் வடிம்புகளில் (விளிம்புகளில்) குவளைப் பூக்களை நிறுத்தி, மகளிர் பொய்தல் விளையாடினர். நெடுந்தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி மணல் கமழ் மனைதொறும் பொய்தல் அயர மதுரைரைக்காஞ்சி 588 கால் வடிம்பால் (விளிம்பால்) குதிரைகளைத் தட்டி ஓட்டிச் சவாரி செய்தனர். மா உடற்றிய வடிம்பு பதிற்றுப்பத்து 70, கடுமா கடைஇய விடுபரி வடிம்பு புறம் 378 எருமைக் கடாவைக் காளி கால் வடிம்பால் மிதித்தாள். ஏற்றருமை நெஞ்சம் வடிம்பின் இடந்தாள் கலித்தொகை 103-44 என வரும் சொல்லாட்சிகளால் வடிம்பு என்னும் சொல்லின் பொருளை உணரலாம்.

அடிக்குறிப்பு :

  1. முன்னீர் விழவின் நெடியோன் நன்னீர் பஃறுளி மணலினும் பலவே (புறம்-9)

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

தென்னவன்(பாண்டியன்) மறவனே

pandian012
“தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனிதிறை கொடுக்கும் துப்பின்,தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணிக்,
குறவர் தந்த சந்தன ஆரமும்,
இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்
திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்”
-பெருந்தலைச் சாத்தனார்(அகம்:13:5) பொருள்:
தன்னுடைய தென்கடலிலே பிறந்த முத்தினை கொத்தாகயுடைய அந்த
ஆரத்தை அணிந்தவன்; பகைவர் பணிந்து திறைக்கொடுக்கும்
ஆற்றலினையுடையவனும்,தன்னுடைய பொதிய மலையினிடத்தே கோயில்
கொண்டிருப்பவனும்,பிறரால் வெற்றி கொள்ளப்படுவதற்கு அரியவனுமாகிய முருகக் கடவுளின் வழிப்பாட்டுக்கு குறவர்கள் தந்த சந்தன
ஆரத்தை அனிந்தவன்; அத்தகைய பெருமையுடைய இரண்டு
ஆரங்களையும் அழகுற அணியும், திருமகள் விரும்பும் மார்பினையுடைய
மறவனாகிய தெண்திசையின் காவலன் பாண்டியன் ஆவான்.
Continue reading
Posted in பாண்டியன், மறவர் | Tagged , , | 2 Comments

சேர,சோழ,பாண்டியர்கள் கொள்ளையர்களா?அறப்போராளிகளா?

Untitled-1

தன்னைத் தானே கள்ளர்,மறவர்கள் சேர,சோழ,பாண்டியனின் வாரிசுகள் என்று சொல்லிகொள்வதால் கேட்கிறேன். அப்படினா சேர,சோழ,பாண்டியன் திருடனா?கொள்ளையனா? 

என்று கேட்ட புத்திமானுக்கு எங்கள் பதில்.

இன்று புதிதாக மூவேந்தரைக் கோரி வரும் கூட்டத்தினர் எழுப்பும் முதல் கேள்வி மூவேந்தரும் கொள்ளையரா ? திருடரா? என்பது தான்.

இவ்வாறு மதியூகமாக ஐயம் கூறி வரும் உழவர்களான பள்ளர்களும் அறப்போராளிகளான சாணார்களும் எழுப்பும் கேள்வி இது தான். 

இதுவும் அவர்கள் மேல் உள்ள தவறு இல்லை. இடைக்காலத்தில் வந்த புரட்சிமிகுந்த கலாச்சார ஒழுக்கத்தை? கட்டிக்காத்த திரைப்படங்களும் திரைப்பாடல்களும் தான் காரணம் ஏனெனில் இவர்களுக்கு வரலாறு என்பது திரையில் காட்டப்படுவது போன்ற கற்பனைகள் தான். 

எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆர் தான் அதிக படங்களில் மன்னராக நடிப்பார் அவர் ஒரே மனைவியைத் தான் மணமுடிப்பார். வில்லன்(எதிரி) நாட்டு மன்னன் பொறாமை கொண்டு படை எடுத்து வருவான் அப்போது அவனை வன்முறை மிகாமல் எதிரியில் கத்தியை மட்டும் தாக்கி அவனை சிறைப்பிடிப்பாரே ஒழிய எதிரிகளை கொல்லும் வன்முறையை அவர் சினிமாவில் காட்டமாட்டார்.இவர் ஏற்று நடித்த மன்னர் கதாபாத்திரங்களைத் தான் தமிழ் மன்னர்களின் பண்பிற்கே முன்மாதிரியாக அறமும்,காதலும்,வீரமும்,இரக்கத்துக்கு எடுத்துக்காட்டாக மக்கள் நினைத்தனர்.

அதைப்போல வெள்ளாளர் இனத்தை சார்ந்த கவிஞரான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பொதுவுடமைக் கருத்துக்கள் நிரம்பிய கருத்துக்களை தன் பாடலில் கொட்டி “உழைத்து வாழவேண்டும்,ஏர்பூட்டி உழுது வாழ வேண்டும்” போன்ற உழைப்பின் தத்துவத்தை சமுதாயத்தில் விதைத்துள்ளார்.

Continue reading

Posted in மூவேந்தர் | Tagged , , | 1 Comment