சோழர் படை

cholan-copy

கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் பெயர்களும் நமக்கு கல்வெட்டுக்களின் மூலம் கிடைத்துள்ளன. இப்படைகளின் இராணுவ வாழ்க்கை முறையைவிட, வீரர்கள் தம் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த பணிகளைப் பற்றித்தான் அதிகமாக அறியக் கிடைக்கிறது.

Continue reading

Posted in சோழன் | Tagged , | Leave a comment

தஞ்சை அருகே கோயிலில் முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

kalvettu

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த அடஞ்சூரில் உள்ள அனந்தீஸ்வரர் கோயிலில் கல்வெட்டு ஆர்வலர்கள் மன்னை ராஜகோபால சாமி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் கண்ணதாசன், பொந்தியாகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், புலவர் ஜெயராமன், அருணாச்சலம் ஆகியோர் ஆய்வு செய்தனர். கோயில் கர்ப்பக்கிரக கதவின் இடது மற்றும் வலது புற கருங்கல் நிலைகளில் காணப்படும் கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

Continue reading

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , , | Leave a comment

மருது பாண்டியர்களின் கோவில் திருப்பணிகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் முகவைக்கு 6 கல் மைல் தொலைவில் அழயான் குளம் என்று ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். மருது சகோதரர்களின் கோயில் பணியில் மிகவும் குறிப்பிடத்தக்கது காளையார் கோயில் பணியாகும். இக்கோயில் பழைய கோபுரத்தின் அருகில் 151 அடி உயரத்தில் ஒரு புதிய ராஜ கோபுரம் கட்டிச் சிறப்பித்துள்ளனர்.

அக்கோபுரத்தைக் கட்டுவதற்கு மானாமதுரையிலிருந்து செங்கற்கள் கொண்டுவரப்பட்டன. அக்கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியும். மானாமதுரையில், கருமலை என்ற இடத்தில் செங்கற்கள் எடுத்து மருது சகோதரர்கள் அக்கோபுரம் கட்டியதன் சிறப்பையும் அருமைப் பாட்டையும் ஒரு நாட்டுப்புறப் பாடல் பின்வருமாறு கூறுகிறது.

Continue reading

Posted in மருது பாண்டியர்கள் | Tagged , | 1 Comment

கள்ளர் குல பட்டங்கள்

கள்ளர்களில் 2018 பட்டங்கள் உள்ளன
அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன் ), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை. தமிழகத்தில் தஞ்சை கள்ளர் குலத்தின் 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்:

1 பாண்டியராயர்,

2 பல்லவதரையர்,

3 பல்லவராயர்

4 சேதிராயர் (சோழனின் கிளைக்குடி)

5 பழுவேட்டரையர்(சோழன் பெண் எடுத்த சேரன் குலம்)

Continue reading

Posted in கள்ளர் | Tagged , | Leave a comment

மாங்குளம் கல்வெட்டு

800px-Mangulam_inscriptionமாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு ஆகும். தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படும் இக் கல்வெட்டு, சங்ககால அரசன் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

இக் கல்வெட்டு 1882 ஆம் ஆண்டு ராபர்ட் செவெல் என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது எனினும், 1906 ஆம் ஆண்டில் கே. வி. சுப்பிரமணிய ஐயரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த அவர் இது பற்றிய விரிவான விளக்கங்களுடன் 1924 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அனைத்திந்திய கீழைத்தேச மாநாட்டின் மூன்றாவது அமர்வில் “பாண்டிய நாட்டின் மிகப்பழைய நினைவுச் சின்னங்களும் கல்வெட்டுக்களும்” என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வாசித்தார்.

நன்றி : தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்

Posted in கல்வெட்டு, பாண்டியன் | Tagged , | Leave a comment

புகழூர்க் கல்வெட்டு

கரூர் மாவட்டம் புகழுரை அடுத்த வேலாயுதம் பாளையம் என்னும் ஊரில் ஆறுநாட்டான்மலை என்னும் குன்று ஒன்று உள்ளது. அந்த குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. மலையின் இடைப்பகுதியில் வடக்குப் பக்கமும் தெற்குப்பக்கமும் இரண்டு குகைகள் உள்ளன. அந்த குகையில் சமணர் படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கையை அமைத்துக் கொடுத்த சேரனைப் பற்றியும் படுக்கையில் இருந்த சமணத்துறவிகள் பற்றியும் அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

‘புகழூர்க் கல்வெட்டு’ என்பது புகழூர் மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். இவ்விடம் பண்டைக்காலத்தில் சேரர்களின் தலைநகரமாக இருந்த கரூரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. இக்கல்வெட்டு கிறித்தவ ஆண்டுக் கணக்கின் தொடக்க காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. சேர மன்னன் இளம் கடுங்கோ என்பவன் சமணத் துறவி ஒருவருக்குக் குகை வாழிடம் ஒன்றைத் தானமாக வழங்கியதைக் குறிக்கவே இக் கல்வெட்டுப் பதியப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த சேர மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது இக்கல்வெட்டுக்கு ஒரு சிறப்பு ஆகும்.

Continue reading

Posted in கல்வெட்டு, சேரர் | Tagged , | Leave a comment

மயிலப்பன் தேவர் { சேர்வை } & நைனப்பன் தேவர் {சேர்வை}

மயிலப்பன் தேவர் { சேர்வை } & நைனப்பன் தேவர் {சேர்வை}

மறவர் சீமை ஒரு பகுதியான முதுகுளத்தூர் நகருக்குத் தென்மேற்கே இருப்பது சித்திரங்குடி என்ற கிராமம். இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்தான் மயிலப்பன் என்பவர். இவர் முகவை சேதுபதி மன்னரின் தளபதியாக இருந்தார். இவர் ‘மயிலப்பன் சேர்வை” என அழைக்கப்பட்டார். கி.பி. 1795ஆம் ஆண்டின் துவக்கத்தில் கம்பெனியார் திடீரென இராமநாதபுரம் அரண்மனையை வளைத்து சேதுபதி மன்னரை கைது செய்தனர். திருச்சிக் கோட்டையில் இருந்து முத்துராமலிங்க சேதுபதியை காவலர்களுக்கு தெரியாமல் தப்பிக்கவைக்க மயிலப்பன் சேர்வை முயன்றார்.

அத்திட்டம் நிறைவேறவில்லை. இராமநாதபுரம் சீமைக்கு திரும்பி வந்து நாட்டுத் தலைவர்களை சந்தித்து, மன்னர் விடுதலை பெறுவதற்கான முயற்சிகளைக் குறித்து ஆலோசித்தார். அப்பொழுது நடைபெற்ற முதுகுளத்தூர் வட்டாரத்தில் கிளர்ந்து எழுந்த மக்கள் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கி நடத்திய வீரபுருசர் இவர்தான் .அப்பொழுது உள்ள காலகட்டத்தில் மருது பாண்டியர்களுக்கு முகவை மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கும் வைகை ஆற்று நீரின் சம்பந்தமாகவும் பல எல்லைப் பிரச்சனைகள் சம்பந்தமாக அவ்வப்பொழுது பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்ற அச்சமயத்தில் மயிலப்பர் சேதுபதியின் அன்புக் கட்டுப்பாட்டிருந்ததினால் மருதுபாண்டியருக்கும் அவருக்கும் பகை உணர்வு இருந்தது.

காலப்போக்கில் மருதுபாண்டியரின் விடுதலை போராட்டத்தை ஆரம்பித்த பொழுது அவரின் உண்மையான குணத்தைப் புரிந்து அவரின் நோக்கத்தை திருச்சிக் கோட்டையில் கைதாகிய முத்துராமலிங்க சேதுபதியிடம் விபரம் சொல்லி மருதுபாண்டியரின் பால் உள்ள கசப்பான நிலையை மறையச் செய்தார். மயிலப்பர், சேதுபதி, மருதுபாண்டியர் இணைந்து செயல்பட்டனர்.

அதற்கு ஆதாரமாக சொல்ல வேண்டுமாயின் கமுதி கோட்டையைத் தகர்த்து அங்குள்ள போராளிகளை விடுதலை செய்ய மருதுபாண்டியர் கொடுத்துதவிய வீரர்கள் மற்றும் போர் ஆயுதங்கள், அந்நாளில் ஆங்கிலேயர்களுக்கு பல வழிகளில் கடுக்காய் கொடுத்த பெரிய போராளி வீரர்கள் இந்த ‘மயிலப்ப சேர்வை”, ‘நைனப்பன் சேர்வையும் பெரியமருதுவும்” நைனப்பன் சேர்வை என்ற வீரமிக்க தளபதி ஒருவர் மருதுபாண்டியர்களின் படையில் இருந்தார். அவரது வீரத்தையும், உடல் வலிமையையும் பற்றிக் கேள்வியுற்ற பெரிய மருது அவர்கள் அதைச் சோதிக்க விரும்பினார்.

Continue reading

Posted in மருது பாண்டியர்கள், மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

உண்மை தொண்டன் என்பவன் யார் ??

ஒரு இயக்கத்தின் கொள்கையை கடைப்பிடித்து ,
அந்த இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்து ,
அந்த இயக்கத்தின் போராட்டங்களில் பங்குக்கொண்டு,
அந்த இயக்கத்தின் பொருளாதாரம் ,சுக துக்கத்தில்
செயல்பாட்டில் ,களப்பணியில் பங்கெடுத்து
பணியாற்றுபவனே உண்மை தொண்டன் .
எந்த ஒரு இயக்கத்திற்கும் நூறு உண்மை தொண்டன்
இருந்தாலே அதன் வளர்ச்சியை எந்த கொம்பனாலும்
தடுக்க முடியாது . ஒரு கெட்ட தலைவனை கூட
நல்லவனாக ,செயல்பாடு உள்ளவனாக மாற்ற
ஒரு உண்மை தொண்டனால் முடியும் .

Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged | Leave a comment

சிவகங்கை வரலாறு

1674 முதல் 1710ம் ஆண்டு வரை ரகுநாத சேதுபதி என்றழைக்கப்படும் கிழவன் சேதுபதி ராமநாதபுரத்தின் 7வது மன்னனாக இருந்தார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் முதலில் ராமநாதபுரமாக இருந்தது. சிவகங்கையிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சோழபுரம் அருகே <உள்ள நாலுகோட்டையை சேர்ந்த பெரிய உடைய தேவர் வீரத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கினார். அவருக்கு சேதுபதி ஒரு பகுதி நிலத்தை வழங்கி 1000 வீரர்களையும் கொடுத்தான். பின்னர் ஆண்ட விஜய ரகுநாத சேதுபதி தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை உடைய தேவரின் மகன் சசிவர்ண தேவருக்கு மணமுடித்து கொடுத்தான்.

மேலும் அவர்களுக்கு நிலங்களையும், 1000 வீரர்களை பராமரிப்பதற்கு தேவையான பொருட்களையும், வரி விலக்கையும் அளித்தார். பிறன்மலை கோட்டை, திருப்பத்தூர், சோழபுரம் மற்றும் திருப்புவனம், தொண்டி துறைமுகம் ஆகிய பகுதிகளுக்கு நிர்வாகியாக நியமித்தார். இதற்கிடையில் கிழவன் சேதுபதியின் மகன் பவானி சங்கரன் ராமநாதபுரத்தை தன்வசம் கொண்டுவந்து 9வது மன்னனான சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதியை கைது செய்தான். பின்னர் பவானி சங்கரன் ராமநாதபுர மன்னனாக முடிசூடி கொண்டு 10வது மன்னனாகினான். 1726ம் ஆண்டு முதல் 1729ம் ஆண்டு வரை இவரது ஆட்சி நடைபெற்றது. இவர் சசிவர்ம பெரிய உடைய தேவரிடம் கொண்ட விரோதத்தால் அவரை நாலுகோட்டை பாளையத்தை விட்டு விரட்டியடித்தார்.

Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர் | Tagged | Leave a comment

தேவனின் வீரம்

தேவன் என்பவன் தன்னுடைய தகுதியை புரிந்தவன்.
தலையில் உள்ள அறிவை உண்ர்ந்தவன்.
வீரமென்ற சொல்லை விவேகம் என்ற சொல்லுக்குள்
அடக்கி வெற்றி பெற்றவன் .
கத்தி, வாளை தூக்கியவர்கள் இன்று புத்தியை மட்டும் தூக்கிப்பிடிக்கிறோம்..
மறுபடி அரிவாளை பிடிக்க எவ்வளவு நேரம் ஆகும் ???

கரிகாலசோழன் ;
சோழ அரசன் (கிமு 5ம் நூற்றாண்டு) கரிகாற்பெருவளத்தான் வட இந்திய மன்னர்கள் அத்தனை பேரையும் வென்று வரிசையாக வென்ற நாடுகளையும் தன்னுடைய ஆளுமைகக்குள் கொண்டு வந்தவன். இறுதியாக இமயத்தில் தமிழர் சின்னத்தை பொறித்து கண்ட வெற்றிகளை சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கியங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. இவர் தான் உலகத்தின் முதல் அணையை உருவாக்கி கல்லணையை காவிரிக்குக் குறுக்கே கட்டியவர்.

Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | 1 Comment