தேவர்தளத்தில் தேட
பிரிவுகள்
- அகமுடையார் (6)
- அழகு முத்துக்கோன் சேர்வை (3)
- இணையம் (14)
- இராமு தேவர் (1)
- ஊற்றுமலை ஜமீன் (5)
- கடம்பூர் ஜமீன் (2)
- கலவரம் (9)
- கல்வெட்டு (32)
- கள்ளர் (15)
- குற்றப் பரம்பரைச் சட்டம் (3)
- சத்திரியர்கள் (4)
- சாதி ஒழிப்பு (2)
- சிங்கம்பட்டி ஜமீன் (3)
- சிவகங்கைச் சீமையின் மன்னர் (10)
- சிவகிரி ஜமீன் (4)
- சிவகிரி ஜாமீன் (1)
- சுரண்டை ஜமீன் (2)
- சேதுபதிகள் (46)
- சேத்துர் ஜமீன் (2)
- சேரர் (10)
- சொக்கம்பட்டி ஜமீன் (3)
- சோழன் (73)
- தலித் (2)
- தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)
- திருக்குறுங்குடி ஜமீன் (1)
- தேவர் (115)
- தேவர்கள் (28)
- தொண்டைமான் (12)
- ந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)
- நாகர்கள் (3)
- நாடார் (4)
- நேதாஜி (5)
- பல்லவர் (1)
- பள்ளர் (4)
- பாண்டித்துரை தேவர் (2)
- பாண்டியன் (107)
- பாரிவேந்தன் (5)
- பாவாணர் (1)
- பி. இரத்தினவேலு தேவர் (1)
- பூலித்தேவன் (13)
- பொன்னியின் செல்வன் (29)
- மணியாச்சி ஜமீன் (1)
- மதுரகவி பாஸ்கரதாஸ் (1)
- மருது பாண்டியர்கள் (11)
- மறவர் (104)
- முத்துராமலிங்க தேவர் (42)
- மூவேந்தர் (7)
- மேகநாதன் தேவர் பதிவுகள் (12)
- வரலாறு (59)
- வல்லம்பர் (2)
- வாட்டாக்குடி இரணியன் தேவர் (1)
- வாண்டாயத் தேவன் (3)
- வினவு (1)
- வீரபாகுதேவர் (1)
- வெள்ளையத்தேவன் (3)
- வேலு நாச்சியார் (8)
பதிவு பெட்டகம்
- July 2026 (2)
- January 2026 (5)
- December 2025 (3)
- November 2025 (2)
- August 2025 (1)
- July 2025 (49)
- April 2019 (1)
- January 2019 (1)
- November 2018 (1)
- August 2018 (9)
- June 2018 (1)
- May 2018 (1)
- March 2018 (1)
- February 2018 (3)
- January 2018 (7)
- December 2017 (6)
- October 2017 (4)
- September 2017 (1)
- May 2017 (2)
- March 2017 (1)
- September 2016 (1)
- August 2016 (2)
- June 2016 (3)
- May 2016 (1)
- April 2016 (2)
- March 2016 (4)
- February 2016 (1)
- January 2016 (1)
- December 2015 (1)
- November 2015 (2)
- October 2015 (1)
- September 2015 (5)
- August 2015 (1)
- July 2015 (2)
- June 2015 (2)
- May 2015 (2)
- March 2015 (6)
- February 2015 (2)
- August 2014 (7)
- July 2014 (24)
- June 2014 (1)
- May 2014 (6)
- April 2014 (2)
- March 2014 (6)
- December 2013 (2)
- October 2013 (6)
- September 2013 (5)
- August 2013 (8)
- July 2013 (73)
- June 2013 (2)
- May 2013 (3)
- April 2013 (23)
- March 2013 (13)
- February 2013 (31)
- January 2013 (26)
- December 2012 (25)
- November 2012 (22)
- October 2012 (4)
- September 2012 (5)
- August 2012 (4)
- May 2012 (1)
- April 2012 (2)
- March 2012 (1)
- February 2012 (1)
- January 2012 (6)
- October 2011 (2)
- September 2011 (11)
- August 2011 (7)
- July 2011 (6)
- June 2011 (4)
- April 2011 (2)
- February 2011 (15)
- January 2011 (105)
- December 2010 (13)
- November 2010 (60)
மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை !
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ?
இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!
இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் .
அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது . இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ? அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ?
சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு . சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் .
Posted in நேதாஜி
Leave a comment
பொன்னியின் செல்வன்-16
பொன்னியின் செல்வன்பாகம் -1
அத்தியாயம் -16
அருள்மொழிதேவன்
இன்றைக்குச் சுமார் (1950ல் எழுதப்பட்டது) 980 ஆண்டுகளுக்கு முன்னால் கோ இராசகேசரிவர்மர் பராந்தக சுந்தர சோழ மன்னர் தென்னாட்டில் இணையில்லாத சக்கரவர்த்தியாக விளங்கி வந்தார். நம் கதை நடக்கும் காலத்துக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் சிங்காசனம் ஏறினார். சென்ற நூறாண்டுகளாகச் சோழர்களின் கை நாளுக்கு நாள் வலுத்து வந்தது. சோழ சாம்ராஜ்யம் நாலா திசையிலும் பரவி வந்தது. எனினும் சுந்தர சோழர் பட்டத்துக்கு வந்த சமயத்தில் தெற்கேயும் வடக்கேயும் விரோதிகள் வலுப்பெற்றிருந்தார்கள். சுந்தர சோழருக்கு முன்னால் அரசு புரிந்த கண்டராதித்தர் சிவ பக்தியில் திளைத்துச் ‘சிவஞான கண்டராதித்தர்’ என்று புகழ்பெற்றவர். அவர் இராஜ்யத்தை விஸ்தரிப்பதில் அவ்வளவாகச் சிரத்தை கொள்ளவில்லை. கண்டராதித்தருக்குப் பிறகு பட்டத்துக்கு வந்த அவருடைய சகோதரர் அரிஞ்சயர் ஓர் ஆண்டு காலந்தான் சிம்மாசனத்தில் இருந்தார். அவர் தொண்டை நாட்டிலுள்ள ‘ஆற்றூரில் துஞ்சிய’ பின்னர், அவருடைய புதல்வர் பராந்தக சுந்தர சோழர் தஞ்சைச் சிம்மாசனம் ஏறினார்.
Posted in பொன்னியின் செல்வன்
Tagged அத்தியாயம் -16, அருள்மொழிதேவன், பொன்னியின் செல்வன்-16
Leave a comment
பொன்னியின் செல்வன்-15
பொன்னியின் செல்வன்பாகம் -1
அத்தியாயம் -15
வானதியின் ஜாலம்
இளையபிராட்டி குந்தவைதேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும் ரதத்தில் ஏறிக் குடந்தை நகரை நோக்கிச் சென்றார்கள் அல்லவா? அதன் பிறகு படகில் இருந்த பெண்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பதை நாம் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும்.
“அடியே, தாரகை!, இந்தக் கொடும்பாளூர்க்காரிக்கு வந்த யோகத்தைப் பாரடி! அவள் பேரில் நம் இளையபிராட்டிக்கு என்னடி இவ்வளவு ஆசை?” என்றாள் ஒருத்தி.
“ஆசையுமில்லை, ஒன்றுமில்லையடி, வாரிணி! நாலு மாதமாக அந்தப் பெண் ஒரு மாதிரி கிறுக்குப் பிடித்தவள் போல் இருக்கிறாள். அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து தொலைக்கிறாள். தாய் தகப்பனார் இல்லாத பெண்ணை நம்மை நம்பி ஒப்புவித்திருக்கிறார்களே என்று இளையபிராட்டிக்குக் கவலை. அதனால்தான், வானதிக்கு என்ன வந்துவிட்டது என்று கேட்கச் சோதிடரிடம் அழைத்துப் போயிருக்கிறார்! ஏதாவது பேய் பிசாசுகளின் சேஷ்டையாயிருக்கலாம் அல்லவா? அப்படியிருந்தால் ஏதாவது மந்திரம் கிந்திரம் போட்டு ஓட்ட வேண்டும் அல்லவா?” என்றாள் தாரகை.
Posted in பொன்னியின் செல்வன்
Tagged அத்தியாயம் -15, பொன்னியின் செல்வன்-15, வானதியின் ஜாலம்
Leave a comment
பொன்னியின் செல்வன்-14
பொன்னியின் செல்வன் பாகம் -1
அத்தியாயம் 14
ஆற்றங்கரை முதலை
குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட அங்கே தான் வசதியான துறைகள் இருந்தன.
குடந்தையிலிருந்து புறப்பட்ட வல்லவரையன், முதலில் அரிசிலாற்றங்கரையை நோக்கிச் சென்றான். வழியில் அவன் பார்த்த காட்சிகள் எல்லாம் சோழ நாட்டைக் குறித்து அவன் கேள்விப்பட்டிருந்ததைக் காட்டிலும் அதிகமாகவே அவனைப் பிரமிக்கச் செய்தன. எந்த இனிய காட்சியையும் முதல் முறை பார்க்கும்போது அதன் இனிமை மிகுந்து தோன்றுமல்லவா? பசும்பயிர் வயல்களும், இஞ்சி மஞ்சள் கொல்லைகளும், கரும்பு வாழைத் தோட்டங்களும், தென்னை, கமுகுத் தோப்புகளும், வாவிகளும், ஓடைகளும், குளங்களும், வாய்க்கால்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன.
ஓடைகளில் அல்லியும் குவளையும் காடாகப் பூத்துக் கிடந்தன. குளங்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் நீலோத்பவமும் செங்கழுநீரும் கண்கொள்ளாக் காட்சியளித்தன. வெண்ணிறக் கொக்குகள் மந்தை மந்தையாகப் பறந்தன. செங்கால் நாரைகள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தன. மடைகளின் வழியாகத் தண்ணீர் குபுகுபு என்று பாய்ந்தது. நல்ல உரமும் தழை எருவும் போட்டுப் போட்டுக் கன்னங்கரேலென்றிருந்த கழனிகளின் சேற்றை உழவர்கள் மேலும் ஆழமாக உழுது பண்படுத்தினார்கள். பண்பட்ட வயல்களில் பெண்கள் நடவு நட்டார்கள். நடவு செய்து கொண்டே, இனிய கிராமிய பாடல்களைப் பாடினார்கள்.
2012 அக்டோபர் 30 தென் மாவட்டப் படுகொலைகள் குறித்து
சமூக வன்முறைக்கு எதிரான உண்மை அறியும் குழு
அமைப்பாளர்: தியாகு
044-2361 0603, 98651 07107.
========================================================================
2012 அக்டோபர் 30 தென் மாவட்டப் படுகொலைகள் குறித்து
அறிக்கை
கடந்த 2012 அக்டோபர் 30ஆம் நாள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூசையை ஒட்டிப் பரமக்குடி வட்டாரத்திலும், மதுரை அருகிலும் நிகழ்ந்த வன்செயல்களில் மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கொடுங்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்செயல்களால் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் ஏற்படுமோ என்ற அச்சம் தலைதூக்கிற்று.
இந்நிலையில் அக்டோபர் 30 வன்செயல்கள் குறித்து இயன்ற வரை உண்மைகளைக் கண்டறிந்து உலகிற்குச் சொல்லவும், எதிர்காலத்தில் இவை போன்ற வன்செயல்கள் நடைபெற விடாமல் தவிர்ப்பதற்கும் தடுப்பதற்குமான முன்மொழிவுகளைப் பரிந்துரைக்கவும் சமூக வன்முறைக்கு எதிரான உண்மை அறியும் குழுவின் சார்பில் சென்ற நவம்பர் 17, 18 நாட்களில் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம்.
பொன்னியின் செல்வன்-13
பொன்னியின் செல்வன் – பாகம் 1
அத்தியாயம் 13
வளர்பிறைச் சந்திரன்
இளவரசிகளின் ரதம் கண்ணுக்கு மறைந்த பிறகு, சோதிடர் வந்தியத்தேவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். தம்முடைய ஆஸ்தான பீடத்தில் அமர்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த அவ்வாலிபனையும் உட்காரச் சொன்னார்; அவனை ஏற இறங்கப் பார்த்தார்.
“தம்பி! நீ யார்? எங்கே வந்தாய்?” என்று கேட்டார், வந்தியத்தேவன் சிரித்தான்.
“என்னப்பா, சிரிக்கிறாய்?”
“இல்லை, தாங்கள் இவ்வளவு பிரபலமான ஜோதிடர் என்னை கேள்வி கேட்கிறீர்களே? நான் யார், எதற்காகத் தங்களிடம் வந்தேன் என்று ஜோதிடத்திலேயே பார்த்துக் கொள்ளக் கூடாதா?”
“ஓகோ! அதற்கென்ன? பார்த்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கு நானே ஜோசியம் பார்த்துக் கொண்டால், தட்சிணை யார் கொடுப்பார்கள் என்றுதான் யோசிக்கிறேன்.”
Posted in பொன்னியின் செல்வன்
Tagged அத்தியாயம் 13, பொன்னியின் செல்வன்-13, வளர்பிறைச் சந்திரன்
Leave a comment
பொன்னியின் செல்வன்-12
பொன்னியின் செல்வன் – பாகம் 1
அத்தியாயம் 12
நந்தினி
கொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா?
ஆழ்வார்க்கடியான் படகில் ஏறியதை ஆட்சேபித்த சைவப் பெரியார், படகு நகரத் தொடங்கியதும், வந்தியத்தேவனைப் பார்த்து, “தம்பி! உனக்காகப் போனால் போகிறது என்று இவனை ஏறவிட்டேன். ஆனால் ஓடத்தில் இருக்கும் வரையில் இவன் அந்த எட்டெழுத்துப் பெயரைச் சொல்லவே கூடாது. சொன்னால் இவனை இந்தக் கொள்ளிடத்தில் பிடித்துத் தள்ளிவிடச் சொல்லுவேன். ஓடக்காரர்கள் என்னுடைய ஆட்கள்!” என்றார்.
“நம்பி அடிகளே! தங்களுடைய திருச்செவியில் விழுந்ததா?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“இவர் ஐந்தெழுத்துப் பெயரைச் சொல்லாதிருந்தால் நானும் எட்டெழுத்துத் திருநாமத்தைச் சொல்லவில்லை!” என்றான் ஆழ்வார்க்கடியான்.
பொன்னியின் செல்வன்-11
பொன்னியின் செல்வன் – பாகம் 1
அத்தியாயம் 11
திடும்பிரவேசம்
இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலேகூட இடம் பெற்றிருக்கும் நகரம், நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்று வழங்கப்பட்டு வந்தது. புண்ணிய ஸ்தல மகிமையையன்றி, ‘குடந்தை சோதிடராலும் அது புகழ்பெற்றிருந்தது. குடந்தைக்குச் சற்றுத் தூரத்தில் தென் மேற்குத் திசையில் சோழர்களின் இடைக்காலத் தலைநகரமான பழையாறை, வானை அளாவிய அரண்மனை மாடங்களுடனும் ஆலய கோபுரங்களுடனும் கம்பீரமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.
பழையாறை அரண்மனைகளில் வசித்த அரச குலத்தினர் அனைவருடைய ஜாதகங்களையும் குடந்தை சோதிடர் சேகரித்து வைத்திருந்தார். அப்படிச் சேகரித்து வைத்திருந்த ஜாதகங்களைப் புரட்டித்தான் கொடும்பாளூர் இளவரசி வானதியின் ஜாதகத்தை அவர் கண்டெடுத்தார். சிறிது நேரம் ஜாதகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு, சோதிடர் வானதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். திரும்ப ஜாதகத்தைப் பார்த்தார். இப்படி மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, வாயைத் திறந்து ஒன்றும் சொல்லுகிற வழியைக் காணவில்லை.
Posted in பொன்னியின் செல்வன்
Tagged அத்தியாயம் 11, திடும்பிரவேசம், பொன்னியின் செல்வன்-11
Leave a comment
பொன்னியின் செல்வன்-10
பொன்னியின் செல்வன் – பாகம் 1
அத்தியாயம் 10
குடந்தை சோதிடர்
குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றாள். சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க, நாயகனைக் காணப் போகிறோம் என்ற குதூகலத்தினால் அவள் உள்ளம் விம்மி உடல் பூரித்தது. இன்னும் சற்றுத் தூரம் சென்றாள், காதலனை அணைத்துக் கொள்ளக் கரங்கள் இரண்டு உண்டாயின. இரு கரங்களை விரித்தவாறு தாவிப் பாய்ந்து சென்றாள். ஆனால் உள்ளத்தில் பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதுமென்று தோன்றவில்லை; அவளுடைய ஆசைக் கரங்கள் பத்து, இருபது, நூறு என்று வளர்ந்தன. அவ்வளவு கரங்களையும் ஆவலுடன் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனை அணுகினாள். இவ்விதம் ஆசைக் கணவனை அடைவதற்குச் சென்ற மணப் பெண்ணுக்குச் சோழ நாட்டுச் செவிலித் தாய்மார் செய்த அலங்காரங்கள்தான் என்ன? அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடைவைகளை உடுத்தினார்கள்? எப்படியெல்லாம் வண்ண மலர்களைச் சூட்டினார்கள்? எவ்விதமெல்லாம் பரிமள சுகந்தங்களைத் தூவினார்கள்? ஆஹா! இரு கரையிலும் வளர்ந்திருந்த புன்னை மரங்களும் கடம்ப மரங்களும் ரத்தினப் பூக்களையும் வாரிச் சொரிந்த அருமையை எவ்விதம் வர்ணிப்பது? தேவர்கள் பொழியும் பூமாரியும் இதற்கு இணையாகுமா?
Posted in பொன்னியின் செல்வன்
Tagged அத்தியாயம் 10, குடந்தை சோதிடர், பொன்னியின் செல்வன்-10
Leave a comment
பொன்னியின் செல்வன்-9
பொன்னியின் செல்வன் – பாகம் 1
அத்தியாயம் 9
வழிநடைப் பேச்சு
பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான். ஒரு பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான். அந்தப் பொல்லாத விஷமச் சுழல் அவனைச் சுற்றிச் சுற்றி வரச் செய்து வதைத்தது. அதே சமயத்தில் கீழேயும் இழுத்துக் கொண்டிருந்தது. சீக்கிரத்தில் வந்தியதேவனுடைய பலத்தையெல்லாம் அந்தச் சுழல் உறிஞ்சிவிட்டது. “இனிப் பிழைக்க முடியாது, சுழலில் மூழ்கிச் சாக வேண்டியதுதான்!” என்று வந்தியத்தேவன் நிராசை அடைந்த சமயத்தில் தெய்வாதீனமாக நதிச் சுழலிலிருந்து வௌிப்பட்டான். வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்க் கரையில் ஒதுக்கிக் காப்பாற்றியது!
Posted in பொன்னியின் செல்வன்
Tagged அத்தியாயம் 9, பொன்னியின் செல்வன்-9, வழிநடைப் பேச்சு
Leave a comment
