பொன்னியின் செல்வன் -8

                                            பொன்னியின் செல்வன் – பாகம் 1

அத்தியாயம் 8: பல்லக்கில் யார்?

ற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தெளிவாக விழவில்லை.

சம்புவரையர் உரத்த குரலில், ” பழுவூர் மன்னர் கேட்டதற்கு நாம் மறுமொழி சொல்ல வேண்டாமா? தலைக்குத் தலை பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆகிறது? இரவு மூன்றாம் ஜாமம் ஆரம்பமாகி விட்டது. அதோ சந்திரனும் வந்து விட்டது” என்றார்.

“எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. என்னைப் போல் இன்னும் சிலருடைய மனத்திலும் அது இருக்கலாம். பழுவூர்த் தேவர் கோபித்துக் கொள்வதில்லையென்றால், அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன்!” என்று முன்னால் ஒரு தடவை பேசிய கம்மல் குரல் சொல்லிற்று.

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-7

பொன்னியின் செல்வன் – பாகம் 1

 

அத்தியாயம் – 7: சிரிப்பும் கொதிப்பும்

பொன்னியின் செல்வன் கதை நிகழுமிடங்கள்….

ரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான்.

அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக் கூட்டத்தில் நடக்கப் போவதை அறிந்து கொண்டே தீரவேண்டும்! இங்கேயே உட்கார வேண்டியதுதான். இதைக் காட்டிலும் வசதியான இடம் வேறு கிடையாது. ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும் அவனைப்பற்றி நமக்கு என்ன கவலை?

 

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-6

பொன்னியின் செல்வன் – பாகம்: 1

 

அத்தியாயம்-6 நடுநிசிக் கூட்டம்  


குரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கந்தமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார் யார் என்பதைப் பெருமிதத்துடன் எடுத்துக் கூறினான்.
பழுவேட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந்தார்; மும்முடிப் பல்லவரையர் வந்திருந்தார்; தான் தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார் முதலியோரை இன்னின்னார் என்று கந்தமாறன் தன் நண்பனுடைய காதோடு சொல்லிப் பிறர் அறியாதபடி சுட்டிக்காட்டித் தெரியப்படுத்தினான். இந்த பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல; எளிதாக ஒருங்கு சேர்த்துக் காணக்கூடியவர்களுமல்ல. அநேகமாக ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள்; அல்லது குறுநில மன்னருக்குரிய மரியாதையைத் தங்கள் வீரச் செயல்களினால் அடைந்தவர்கள். ராஜா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அரையர் என்று வழங்கி வந்தது.

 

Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , , | Leave a comment

மறவர் நாடு

இப்போது இராமநாதபுரம் மாவட்டமாக உள்ள பகுதி மற்றும் சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதி பாண்டிய நாட்டின் கீழ்த்திசைப் பகுதியாக இருந்தது. இந்த நிலப்பரப்பு மறவர் நாடு என்றும் அழைக்கப்பட்டது. மறவர் நாடு பாண்டிய பேரரசி…ன் ஆட்சிக்குள் அடங்கிய பகுதியாகவே எப்போதும் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மறவர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அன்றும் சரி, இன்றும் சரி பாண்டியகள் என்றே சாதாரணமாக அழைக்கப்படுகின்றார்கள். சாதாரணப் பொது மக்களும் பெருமையோடு தாங்களுக்குப் ‘பாண்டியர்” என்று பெயர் வைத்துக் கொள்கின்றார்கள். மறவர் நாடு பிற்காலத்தில் ‘சேதுநாடு” என்றழைக்கப்பட்டது. ‘சேது” என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு புராண காலச் செய்தி ஒன்று உள்ளது. ‘சேதுநாடு” என்று அழைக்கப்படும் இன்றைய இராமநாதபுரம் இராமாவதாரத்தோடு பெரிதும் இணைத்துப் பேசப்படுகிறது.

இராவணனின் நாடாக இருந்த இலங்கைத் தீவுச் சீதாதேவி சிறை அடைக்கப்பட்டிருப்பதை அனுமார் வழியாக தெரிந்து கொண்ட இராமபிரான் அங்கு செல்ல வேண்டிச் சுக்கீரவனின் வானரப் படைகளைக் கொண்டு பாலம் அமைத்தார். அந்தப் பாலத்திற்குத் திருவணை என்றும் ‘சேது” என்றும் பொருள் உள்ளது. அந்தப் புனிதமான பாலத்திற்கு சேதுவிற்கு பொருத்தமான காவலர்களை நியமிக்க நினைத்தாராம் இராமபிரான். அச்சமயம் அந்த பகுதியில் வீரத்தோடு விளங்கிய மறவர்குலத் தலைவர் ஒருவரை நியமித்தார். அவருக்கு சேதுபதி என்று பெயராகி வந்ததாம்.

 

Continue reading

Posted in மறவர் | Tagged , , , , , , , , | Leave a comment

சோழரும் சாதியமும்

சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. “முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று ‘தீண்டாச்சேரி’ என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது – கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் ‘தீண்டாதார்’ எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் ‘சேரிகள்’, அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு” அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.

பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாக செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்

Posted in சோழன் | Tagged | Leave a comment

கா. காளிமுத்து தேவர்

கா.காளிமுத்து(K. Kalimuthu ) அதிமுக அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தமிழக சட்டமன்ற பேரவைத்தலைவராக 2001 முதல் 2006 வரை பணியாற்றியுள்ளார்

குடும்பம் :

விருதுநகர் மாவட்டம் கமுதி அருகே உள்ள ராமுத்தேவன்பட்டி கிராமத்தில் 14-7-1942 ந்தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் காளிமுத்து. தாயார் பெயர் வெள்ளையம்மாள்.காளிமுத்துவுக்கு பொன் பாண்டி, குமாரவேல், ரவிச்சந்திரன், நல்லதம்பி, வீரபாண்டி என்ற 5 சகோதரர்களும், வாணி என்ற சகோதரியும் உள்ளனர்.காளிமுத்துவின் முதல் மனைவி நிர்மலா. அவர்களுக்கு டேவிட் அண்ணாத்துரை, ராஜன் என்ற மகன்களும், புனிதா, ரோஷி, வேதா என்ற மகள்களும் உள்ளனர்.2-வது மனைவி மனோகரி. இவர்களுக்கு மணிகண்டன், அருள்மொழிதேவன் என்ற மகன்களும், அருணா, கயல் விழி என்ற மகள்களும் உள்ளனர்.

மதுரை தியாகராஜ கல்லூரியில் எம்.ஏ.தமிழ் பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

 

Continue reading

Posted in வரலாறு | Tagged , | Leave a comment

அம்பேத்கரும்,இம்மானுவேலும்:

சிறிது நாட்களுக்கு முன் மதுரையில் திரு.அம்பேத்கர் மற்றும் இம்மானுவேல் சிலைகள் உடைக்கப்பட்டதை நாம் அறிவோம்,அம்பேத்கர் அவர்கள் நான் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்,மிகச்சிறந்த போராளி,அவர் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்தார்.சரி அது யாரு பக்கத்தில் இம்மானுவேல்.

முதலில் இம்மானுவேல் சார்ந்த தேவேந்திரர் என்று தன்னை அடையாளப்படுத்தும் இந்த பள்ளர்கள் முக்குலத்தோர்,வன்னியர்,கவுண்டர் இன மன்னர்கள் ஆண்ட காலத்தில் ஆந்திராவில் இருந்து விவசாயக்கூலிகளாக அழைத்துவரப்பட்டனர்.

 

Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , , , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

நமது முன்னோர்கள் மன்னராக இருக்கட்டும்.ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக இருக்கட்டும். ஆனால் அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது. தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள். அவர்களுக்காக தன் உயிரையும் கொடுத்தவர்கள் …. அவர்கள் தியாகம் என்றும் அவர்கள் புகழை அழியவிடாது … அது கடைசி தேவனின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை அழிக்கவும் முடியாது ….

தேவனின் வீரம் என்பது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் போற்றுதலுக்கு உரியது ….இது நமது முரட்டுத்தனத்தின் குறியீட அல்ல. நாம் முட்டாள்காளாக வாழ்ந்து விவேகமற்ற செயல்களும் செய்தவர்கள் அல்ல. அவர்களின் ஆளுமை சுருங்கி இருந்ததே தவிர அவர்களின் எண்ணங்களில் இன்றைய அரசியல் தலைவர்கள் போல் எந்த சுருக்கமும் இல்லை.

 

Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | 1 Comment

நாடார்கள் மூவேந்தர்கள் வழித்தோன்றல்களா?

நாடார்கள் மூவேந்தர்கள் என்று பொய்யான வரலாற்றுக்கு அடித்தளமிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிக்கை தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தேவர் பேரவை பொதுச்செயலாளர் திரு முத்தையாத்தேவர் வெளியிட்ட அறிக்கை :-
“மத்திய பாடத் திட்டமான சிபிஎஸ்இ 9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் குறித்து அவதூறாக கூறப்பட்டுள்ளதை உடனே நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்துள்ள கடிதத்தில் ” நாடார்கள் சேர சோழ பாண்டியர்களின் வழித்தோன்றல்கள் ” என்ற வார்த்தையை நாகூசாமல் பயன்படுத்தயுள்ளார்.

சேர சோழ பாண்டியர்கள் என்று அழைக்கப்பட்ட தேவர்களாகிய நாங்கள் ஆண்டதற்கான சான்றும், அதன் வாரிசுகள் என்று எங்கள் போரில் தோல்வியுற்று ஓடிய மேலைநாடுகளின் குறிப்புகளும் கூறும்பொழுது தமிழக முதல்வர் வரலாறு புரியாமல் இப்படியொரு வாசகத்தை கூறியிருப்பது மிகவும் வருந்த தக்கதாகவும் , கண்டிக்கத் தக்கதாகவும் உள்ளது போஸ்டரில் படம்போட, வீர வசன வாசகம்போட ஆளில்லாததால் சேர சோழ பாண்டியர்களை பயன்படுத்தும் சிலர்களை கண்டுகொள்ளாது தமிழர் வரலாற்றை சிதைக்கும் இந்த அரசு இப்போது நேரடியாக தானும் களமிறங்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

எங்கள் இனத்திற்கு தமிழக அரசு செய்துவரும் துரோகங்கள் இன்னும் தொடருமானால் செல்வி ஜெயலலிதா அவர்கள் விளைவுகளை விரைவில் அனுபவிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

Posted in இணையம் | Tagged , | 1 Comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

எதற்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல,
அந்த எமனையும் அஞ்ச வைப்பவர்களே நாங்கள்.

ஓடி ஒளிபவர்கள் நாங்கள் அல்ல,
எவனையும் ஓட வைப்பவர்களே நாங்கள்..

பதுங்கி நிற்பவர்கள் நாங்கள் அல்ல,
பதிங்கினாலும் பின் பாயுபவர்களே நாங்கள்..

காசு,பணத்திற்காக வாழ்பவர்கள் நாங்கள் அல்ல,
மானம் ,ரோசத்திற்க்காக மடிந்து போனவர்கள் நாங்கள்.

அடுத்தவனை ஒழித்து வாழ்பவர்கள் நாங்கள் அல்ல,
தஞ்சமென வந்தோருக்காக உயிரையும் விட்டவர்கள் நாங்கள்..

அடுத்த மதத்தை ஒழிக்க நினைப்பவர்கள் நாங்கள் அல்ல,அவர்களுக்கு ஆலயங்கள் கட்டிக்கொடுத்த மருது வம்சம் நாங்கள்.

அடுத்த ஜாதியை ஒழிக்க நினைப்பவர்கள் நாங்கள் அல்ல,அவர்களுக்கு எல்லாம் கொடுத்து வாழ வைத்த பூலித்தேவன் வம்சம் நாங்கள்..

பெண்களை அடக்குபவர்கள் நாங்கள் அல்ல, பெண்மையை போற்றும் வேலு நாச்சியார் வம்சம் நாங்கள்..

ஆட்சிக்காக,அதிகாரத்திற்காக வாழ்ந்தவர்கள் நாங்கள் அல்ல,கொள்கைக்காக வாழ்ந்த மூக்கையா தேவர் வம்சம் நாங்கள்.

தாழ்த்தப்பட்டவர்களை வாட்டி வதைப்பவர்கள் நாங்கள் அல்ல,அவர்களின் உரிமைக்காக வாகை சூடியவர்கள் நாங்கள்..

தாழ்த்தப்பட்டவர்கள் ஏறு பிடிக்க காரணம் நாங்கள் அல்ல,அவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஏறு வாங்கிக்கொடுத்தவர்கள் நாங்கள் ..

தாழ்த்தப்பட்டவர்கள் பட்டினியாய் கிடப்பதை வேடிக்கைபார்த்தவர்கள் நாங்கள் அல்ல,அவர்களுக்கு பின்பக்கம் பழைய சோறாவது போட்டவர்கள் நாங்கள் ..

தேவர் அய்யாவை மனிதனாக பார்ப்பவர்கள் நாங்கள் அல்ல, தேவர் அய்யாவை தெய்வமாக வணங்குபவர்கள் நாங்கள்..

சட்டத்திற்கு பணிபவர்கள் நாங்கள் அல்ல, சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள்..

யாரிடமும் நன்றியை எதிர்ப்பார்பவர்கள் நாங்கள் அல்ல,அனைவரிடமும் மரியாதையை எதிர்ப்பார்ப்பவர்கள் நாங்கள்..

கலப்பு திருமணம் செய்து ஜாதியை மாற்றுபவர்கள் நாங்கள் அல்ல ,சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கண்ணியத்தோடு வாழ்பவர்கள் நாங்கள் ..

கும்பிடு போடுபவர்கள் நாங்கள் அல்ல, தலைநிமிர்ந்து நடப்பவர்கள் நாங்கள்..

யாரையும் ஏமாற்றுபவர்கள் நாங்கள் அல்ல, பலருக்கு ஏணியாய் இருந்து ஏமார்ந்து போனவர்கள் நாங்கள் ..

ஜாதி வெறியர்கள் நாங்கள் அல்ல, ஜாதி பற்று உள்ளவர்கள் நாங்கள் ..

யாரையும் அடிமைப்படுத்தியவர்கள் நாங்கள் அல்ல, அனைவரையும் அரவணைத்து ஆண்டவர்கள் நாங்கள் ..

மற்ற ஜாதிகளிடம் வசை பாட்டு வாங்குபவர்கள் நாங்கள் அல்ல .. மற்ற ஜாதிகள் எங்களை புகழ்ந்து பாடும்படி வாழ்ந்தவர்கள் நாங்கள்

எக்குலமும் போற்றும் எங்கள் முக்குலம்..

உங்கள்
தேவர் இனத்தின் போராளி
V.K.C.K.K. மேகநாதன் தேவர்

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment