கற்பக விநாயகம் ..
தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் நூலில், அவர் பிறந்த உத்தமதானபுரம் உருவான வரலாற்றைச் சொல்லி இருக்கிறார்.
தஞ்சையை ஆண்ட மகாராஜா, பல ஊர்களையும் சுற்றிப்பார்த்து வரி வசூல்களை சரி பார்த்து விட்டு, இந்த ஊரின் அருகில் ஒரு மரத்தடியில் தமது பரிவாரங்களுடன் தங்கினாராம். அப்போது நண்பகல். நல்ல வெய்யில். மதிய சாப்பாடு முடிந்து விட்டது. உண்ட உணவு சீரணமாக தாம்பூலம் தரித்துக் கொண்டாராம். அதன் பிறகுதான் நினைவுக்கு வந்தது.
இன்று என்ன திதி என வந்தவர்களிடம் கேட்டார். (சில நாட்களில் வெற்றிலை போடக்கூடாது. அவ்வாறு போட்டால் அது சாஸ்திர விரோதம் என்பது கருத்து) வந்தவர் எவரிடமும் சரியான பதிலைக்காணோம். அவ்வூரில் வேதம், சோதிடம் பழுதறக்கற்றவர்களை அழைத்து வருமாறு பணித்தார். இக்கலைகளில் வல்லவர்கள் வந்தனர். அவர்களிடம் இதைக் கேட்டார். அவர்கள் சொன்னார்கள் ‘ஆம் ராஜா! இன்று நீங்கள் தாம்பூலம் தரிக்க உகந்த நாளில்லை.
Continue reading →