முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை – 4

மதுரை ஆடிவீதி திருவள்ளுவர் கழகத்தில் தேவர் ஆற்றிய திருக்குறள் சொற்பொழிவின் இரண்டாம் பகுதி:
” …. அறிஞர் பெருமக்களே! இந்தத் திருவள்ளுவர் கழகத்தில், குறிப்பாக உங்கள்முன் உரையாற்றுவதை அடியேன் பெறற்கரிய பெருமையாக க் கருதுகின்றேன். திருவள்ளுவப் பெருந்தகை அருளிய 1330 அருங்குறளும் ஒரு பெரிய அரிய அறிவுக் கடலாகும். திருக்குறளுக்குப் பல விரிவுரைகள் வந்துள்ளன. இன்னும் பல வந்துகொண்டே உள்ளன. வேறு எந்தக் காவியத்துக்கும் இத்தனை உரைகள் வந்ததில்லை. இரண்டு வரிப் பாவிலே பல புதுமைகளைப் புகுத்தி உரையாசிரியர்களையும், ஏனையோரையும் திக்கு முக்காடச் செய்கிற பெருமை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு. தமிழ்நாட்டில் ஒரு குறள் பற்றிய கருத்து அடிக்கடி பேசப்பட்டு வருகிறது.
“தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

பி. இரத்தினவேலு தேவர்

திருச்சிராப்பள்ளி நகர வளர்ச்சிக்கு வித்திட்ட பெரியோர்கள் பலரில் நகராட்சித் தலைவராயிருந்த பி. இரத்தினவேல் தேவர் அவர்கள் முதன்மையானவர். 1883 ஆம் ஆண்டு பிராச்சிலையில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையாரை இழந்தவர். எஸ்.பி.ஜி. பள்ளியிலும் பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

பொது வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தேவர் 1924 ஆம் ஆண்டு நீதிக்கட்சி வேட்பாளராகத் திருச்சிராப்பள்ளி நகரமன்ற உறுப்பினருக்குப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். பின்னர் நகரமன்றத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந் தெடுக் கப்பட்டார். 1924இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Continue reading

Posted in பி. இரத்தினவேலு தேவர் | Tagged | Leave a comment

மூக்கறுப்புப் போர்

கி.பி. 1656ல் 70 வயதாகி இருந்த திருமலை நாயக்கரை; மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன், மதுரை நாட்டிற்கு கம்பையா என்பவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று வந்தான் மிகக் கொடியவன். மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்கள் புகுந்து ஆண் பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனப்பி வைத்தான். அதோடு நிறுத்தாமல் கொள்ளையும் அடித்தான். சிக்கியவர்களை வெட்டிக் கொலைகளும் செய்தான். இதை அறிந்த திருமலை மன்னர், தன்னரசு நாட்டுத் தலைவர் திருமலை பின்னத்தேவருக்கும், இராமநாதபுரம் சேதுபதிக்கும் தன் மனைவி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைக் கண்டவுடன் தாமதியாமல் தன் படைகளுடன் வந்து மதுரை படைகளையும் ஒன்று சேர்த்து கடும் போர் செய்த மைசூர் படைக்கு பெரிய சேதத்தை உண்டாக்கி விரட்டியடித்து விட்டு மதுரையைக் காத்தார். இந்த போரில் இரு தரப்பினரிலும் உயிர் விட்டவர்கள் அதிகம்.

Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

முத்துராமலிங்கதேவர் மரணம்

அனைத்துக்கட்சியினர் அஞ்சலி :

தேவர் சமூகத்தின் மாபெரும் தலைவரும், நேதாஜியின் நண்பரும், சிறந்த பேச்சாளருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் தமது 56_வது வயதில் காலமானார்.

கடந்த 2 ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த தேவர், முதலில் மதுரை ஆஸ்பத்திரியிலும் பின்னர் வேலூர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார். சிறுநீரகக் கோளாறுக்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று வேலூர் டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர். ஆனால் தேவர் மறுத்துவிட்டார்.

மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர் வீட்டில் தங்கி, நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார்.

உடல் நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி, 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார்.
கடைசி விருப்பம்
Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தேவர் பற்றி நீதிபதி பேட்டி


சென்னை ஐகோர்ட் நீதிபதியாக 1965-75 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர் கிருஷ்ணசாமி ரெட்டியார்,’கம்பீரமான நீதிபதி’ என்று பெயரெடுத்தவர்.

தமிழக அரசியலில் அப்போது மட்டுமல்ல; இப்போதும் பரபரப்பாக பேசப்படுவது. முதுகுளத்தூர் கொலை வழக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உட்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தேவருக்கு எதிராக ஆஜராக வக்கீல்கள் பயந்தனர்.

ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வீடு தேடி வந்தார். “அவசர விஷயம். முதல்வர் பக்தவச்சலம் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னார்” என்றார். போனேன்,”முதுகுளத்தூர் வழக்குக்கு அரசு வக்கீலாக போக எல்லாரும் பயப்படறாங்க நீங்தான் ஆஜராகணும்னு காமராஜர் விரும்பறார்” என்றார்.

சரின்னு சொல்லி வந்துட்டேன். ‘என்னிக்கோ போகப்போற உயிர் தானே’னு நெனச்சிட்டே, வழக்கு நடக்கும் புதுக்கோட்டைக்கு போய் இறங்கினேன். சாயந்திர நேரம் போலீஸ் பாதுகாப்போடு வாக்கிங் போனேன். எதிரே இருநூறு, முன்னூறு பேரு கூட்டமா வந்தாங்க நடக்கிறது நடக்கட்டும்’னு நெனச்சு. நடந்தேன்.

அப்போது, சுமார் எழுபது வழக்குகள்ல கைதாகி ஆயிரத்து 200 பேர். சிறையில் இருந்தாங்க. அவங்கலோட உறவினர்கள்தான் என் எதிரே வந்தவங்க அருகே வந்ததும் தலைக்கு மேல கைய தூக்கி கும்பிட்டாங்க.

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தலித் மக்களுக்காக பசும்பொன்தேவர்


சூரியனையும், சந்திரனையும், மி்ன்மி்னிப்பூச்சிகளைப் பாவித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது பாரதி, வ.உ.சி., தேவர், அம்பேத்கார் போன்ற தேசியத்தலைவர்களை சாதியத் தலைவர்களாகச் சொல்வது.

தலித் மக்களுக்கான ஆலயப் பிரவேசம் நடத்த ராஜாஜி மந்திரிசபை சுதந்திரப் போராட்டவீரர் வைத்திய நாதய்யர் வழியாக முயன்றபோது, வெளியில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.செய்வதறியாது திகைத்துப் போயிருந்த அய்யரவர்களுக்கு “தேவரை அணுகுங்கள்” என்கிற ஆலோசனை ராஜாஜியிடமி்ருந்து கிடைத்தது.அப்பொழுது தேவரவர்களுக்கும் ராஜஜிக்கும் அரசியல் ரீதியாக முரண்பட்டு இருந்தாலும், இக்காரியத்தில் தேரரவர்கள் உதவ முன் வந்தார்.

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | Leave a comment

சுதந்திர இந்தியாவில் தேவர்

1945 ஆம் ஆண்டு இரண்டாவது உலகப்போர் முடிந்து இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மருர்து சகோதரர்கள் பிறந்த ஊராகிய நரிக்குடி முக்குளம் என்ற ஊரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் புளிச்சிகுளம் என்ற தேவருக்கு மட்டும் பாதியப் பட்ட கிராமத்தில் தெய்வீகத் திருமகன் தேவர் 1946 ஆம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை தங்கி இருந்தார். அந்த சமயத்தில் அவர் அரசியல் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பொது அது சம்பந்தமாக கூட ஏதும் பேசாமல் மௌனம் காத்தார்.

Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

நேதாஜி பற்றிய ஆச்சரிய தகவல்

நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில
இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா
பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை
உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார். பிஸ்வாஸும் முகர்ஜியும் நேதாஜி பற்றிய மர்மங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

”நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?”

”ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இதனை உறுதிபட அமெரிக்கா தெரிவித்துவிட்டது. தைவான் நாட்டு அரசும், ”தன் நாட்டு எல்லைக்குள் அன்று அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை” என்று கூறிவிட்டது. ஜப்பான் அரசும், ”சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயரிலோ இச்சிரோ உக்குடா (நேதாஜிக்கு சூட்டிய புனைபெயர்) என்ற பெயரிலோ எவரும் இறந்து சுடுகாட்டில் எரிக்கப்படவில்லை” என்று தெரிவித்துவிட்டது.
Continue reading

Posted in நேதாஜி | Tagged | 8 Comments

தமிழ்ச் சமூகத்தில் மறவர் சாதி

சொல்கதைகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார்.

மேற்கண்ட இரு தகவல்களும் நமக்குச் சொல்வது என்னவெனில் ராமநாதபுரம் பகுதியே ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி. அங்கிருந்து புலம் பெயர்ந்தே இவர்கள் அருகிலிருந்த திருநெல்வேலிச்சீமை போன்ற பிற பகுதிகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பதே. மறவர்கள் எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் தங்கள் தலைவர் எனும் மரியாதையை மன்னர் சேதுபதிக்கே அளித்து வந்தனர் என்பதை ‘மறப்பாட்டு’ சொல்கிறது. சண்டையிடும் இனமாக மறவர் பற்றிய முதல் குறிப்புகளைக் ‘குல வம்சம்’ தருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாண்டியர்களோடு மரபு உரிமை பற்றிய தகராறில் கொண்டையம்கோட்டை மறவர்கள் பங்கேற்றது பற்றியும் ‘குலவம்சம்’ பேசுகிறது. சேதுபதி மன்னரின் தலைமையின் கீழ் இருந்த மறவர்கள், மதுரை பாண்டிய மன்னனைச் சார்ந்தே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Continue reading

Posted in மறவர் | Tagged | 5 Comments

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் பிரபாவதி தேவி தம்பதிகளின் 9வது குழந்தையாக 23/1/1897 ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்).

லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், “ஐ.சி.எஸ்” பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

Continue reading

Posted in நேதாஜி | Tagged | Leave a comment