போலி விடுதலைப போராளிகள்

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் கான்பது அறிவு”வரலாறு என்பது இட்டுகட்டுவது அன்று இயந்து காட்டுவது அன்று சரடுவிடுவது அன்று கதை விடுவது அன்று உண்மை வெளிப்படும் ஒன்றே வரலாறு ஆகும்.”ஜூலியஸ் சீசர் திருமலை நாயக்கருக்கு அடப்பகாரராக இருந்தார். அலெக்சாண்டர் மன்னன் ஜான்சி ரானியின் ஒற்றன். எலிசபெத் ராணி சென்னையில் பூக்கடை வைத்து இருந்தார்” என்று கூறினால் அது வரலாறு என்று கூறினால் அதை முட்டாள் தனம் என கூறுவார்களா இல்லை மறைந்த வரலாறை கண்டுபிடித்துவிட்டோம் என தம்பட்டம் அடிப்போமா. அந்த மாதிரி வரலாற்று கண்டிபிடுப்புகளை வெளியிட்டால் இதை மட்டும் எப்படி ஏற்க முடியும்.விடுதலை போராட்ட வரலாறு என்பது எண்ணற்ற வீரர்களின் தியாகங்களினாலும் குருதி நீர் பாய்ச்சி வித்திடபட்டது. இப்படி பலர் தன் இன்னுயிரை ஈந்து பெற்ற விடுதலை சரித்திரத்தை எழுதிய ஆங்கிலேயர்கள் தங்கள் குறிப்பில் போராடியவர்களை புரட்சிக்காரன்,திருடன்,முரடன்,கொள்ளைக்காரன் என்று தன் குறிப்பில் ஆவணபடுத்தியுள்ளனர். போராட்டக்காரர்களின் சில சகாக்களையும் முக்கிமானவர்களை தவிர வேறு யாரையும் குறிப்பிடப்படவில்லை.பொதுவில் தனது சாதிக்குக் ஒரு அடையாளம் தேவையென விரும்புவது, ஆசைப்படுவது சாதியத்தை வளர்த்து அதன் மூலம் சுயலாபவேட்டையில் ஈடுபடுவோரின் செயலாக மாறியது ஏன்? ஓட்டுக்காகப் பூசப்படும் போலிப் பூச்சுக்களும், பொய் விளம்பரங்களும் அடிப்படையை தகர்க்க சில விஷமிகள் வரலாற்றை எழுதிகிறோம் என எதிர்கால கலவரங்களுக்கும் மோதல்களுக்கும் வித்திடும் கம்யூனிஸ்டுகளும் திராவிடன்களும் உருவாக்கிய போலி கதாப்பாத்திரங்களும் ஏராளம். இந்த விஷமிகள் அன்று வரலாறுடன் இடைசொருகள்களாக வித்திட்ட போலி விதைகள் எதிர்காலத்தில் ஜாதிய மோதல்களை உருவாக்கபட்ட கற்பனை பாத்திரங்களை நிஜ சரித்திரத்துடன் ஒப்பிட்டு விடை காண்போம். போலியாக உருவாக்கபட்டு இன்று இல்லாத மோதல்களை வலிய உருவாக்கும் சூட்சுமத்தையும் ஆராய்வோம்.ஒரு கொலை செய்த பகத்சிங்,வாஞ்சிநாதன் பற்றி குறிப்புகள் இருந்த போது 100 மற்றும் 1000 உயிர்களை வீழ்த்திய இந்த மாவீரர்கள் பற்றி ஏன் குறிப்புகள் இல்லை என எவரும் கேள்வி கேட்பதில்லை ஏனெனில் இவை இடைக்கால பொதுவுடமை கிருமிகளால் உருவாக்கபட்ட நாவல் கதாப்பாத்திரங்கள்.இப்படி உருவாக்கபட்ட கதாபாத்திரங்கள் சிலவற்றை பார்ப்போம்

 

ஒண்டிவீரன்: 

 

பிளாசி யுத்தத்திற்கு முன் வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கும் அமெரிக்க புரட்சிக்குமுன் ஆங்கிலேயரை முதன் முதலில் எதிர்த்து போராடிய ஆவுடையாபுரம் நெற்கட்டான் செவ்வலை எதிர்த்து போராடிய மாவீரன் பூலித்தேவர். இவரை பற்றிய குறிப்புகள் “திருநெல்வேலி மானுவல்”-கால்டுவெல், திருநெல்வேலி மாவட்டம்- ஸ்டுவர்ட்,அனந்தரங்கம் பிள்ளை டைரி குறிப்புகள். “மிலிட்டரி கன்சுலேஷன் ஆர்காடு நவாப்”,போன்ற 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் உள்ள குறிப்புகளில் கானப்படுகின்றன. இவரது சகாக்கலாக நபிகான் கட்டக்,முகமதியா,மகபூஸ்கான் முதலியவர் குறிப்பிடப்படுகிறார்கள். இதில் இல்லாத கதாப்பாத்திரம் தான் ஒண்டிவீரன்.

ஒண்டிவீரன் பகடை என்னும் அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர் எண்றும் அவர் பூலித்தேவரின் படைத்தளபதியாக இருந்தவர் என்றும் தற்காலத்தில் அவருக்கு சிலை எடுத்து மணிமண்டபம் கட்டி வருடா வருடம் நினைவஞ்சலி செலுத்தபடுகின்றது. இந்த ஒண்டிவீரன் பற்றி ஆங்கிலேய ஏடுகள் எதுவும் இல்லை. ஆனால் இதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் 30 வருடங்களுக்கு முன் (கண்டெடுக்கபட்டது?) என கூறும் “பூலித்தேவன் சிந்து” இதை இயற்றிவர் யார்? என்ற பெயர் தெரியவில்லையாம் ஆனால் கண்டெடுக்கபட்டதாம். (பூலித்தேவன் சிந்து போலிதான்).

இதில் பூலித்தேவரை ஆகா ஓகோ? என புகழ்ந்து அதில் குறிவைத்து ஒண்டிவீரன் கதாபத்திரத்தையும் வென்னிகாலாடி கதாபத்திரத்தையும் சொருகியுள்ளனர்.

ஒண்டிவீரன் என்னும் பெயர் கூட “ஒண்டிபுலி” என்ற கிராமிய பெயரை மாற்றம் செய்து புகுத்தபட்டதாகும். ஒண்டிவீரன் கதாபத்திரம் ஏதும் ஆங்கிலேய கதையில் வரும் கதாபத்திரங்களின் சாகசங்களை இதில் இடைசொருகளாக சொருகி அது நாவல் கதாபத்திரம் போல் அல்லாமல் நிஜகதாபாத்திரம் போல உருவாக்கி அதற்கு நியாமாக பூலித்தேவர் சாதிசமயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற கருத்தை கூறுகிறார்களாம். (மகாபாரத கர்ணன் பரசுராமரை மடியில் வைத்து உறங்கிய போது ஒரு வண்டு துளைத்தது போன்று ஒண்டிவீரன் கையில் ஆனிய அடித்தபோது பேசாமல் இருந்தானாம் இருளில்)

இதன் விளைவு, இன்றைய அருந்ததிய எழுத்தாளர்கள் இன்னும் கொஞ்சம் மேலே போய் . ஒண்டிவீரனே “நெற்கட்டான் செவ்வல்” மன்னன் பூலித்தேவன் அதை அபகரித்து கொண்டார் என எழுதி பூலித்தேவர் அரண்மனை அருகே “ஏய் அது எங்கள் அரண்மனை வெளியேருங்கடா” என கூச்சலிடும் நிலைமைக்கு சென்றுள்ளது.

இதற்க்கு அருந்ததியர் யாரும் காரணமில்லை. ஒருகாலத்தில் ஒண்டிவீரனை பூலித்தேவருன் இனைத்து எழுதியவர்கள் தான் இன்று இந்த புது வதந்திகள் பரப்பி சாதிய மோதல்களுக்கு அடிபோடுகின்றனர்.

நான் கேட்கிறேன் அருந்ததியர் எனப்படும் சக்கிலியர் மதிகா என்னும் பெயரில் ஆந்திரா,கருநாடகா பகுதிகளில் பெரும்பாண்மையாக வாழ்பவர்கள். தமிழகத்தில் நாயுடு சமுதாயம் போன்ற தெலுங்கு சாதிகள் இருக்கும் இடத்தில் மட்டும் வசிக்கும் அருந்ததியர்கள் இத்தனை இடத்தில் எந்த இடத்தில் மண்ணனாக இருந்தார்கள். இவர்கள் நிலைமை என்ன. ஏன் நிலக்கோட்டை ஜமீன்,போடி,விருப்பாட்சி,பாஞ்சாலங்குறிச்சி போன்ற ஜமீனை நாங்கள் ஆண்டோம் என தெலுங்கு நாயுடுகளுக்கு எதிராக போகாதவர்கள் தவ்வி குதித்து நெற்கட்டான் செவ்வலை கோரி எழுதுகின்றனர். ஏனெனில் இதை தூண்டுபவர்கள்

கம்யூனிஸ்டுகளும் திராவிடகட்சி போன்ற தெலுங்கர்களும் வெளிநாட்டு கைகூலிகளாவர். இல்லாத ஒரு கதாபத்திரம் இன்றைக்கு ஏற்படுத்திய தாக்கம் இது தான். இதுபோல கிருஷ்ன தேவராயர் தொடங்கி மதுரை மீனாட்சி ராணிவரை அனைவரை பற்றியும் “இயேசு சபை” பதிவுகள் என்ற போர்த்துகீசியர் ஆவணங்கள் இருக்கின்றன. இதில் திருமலை நாயக்கர் பற்றி “இயேசு சபை” நிறைய கூறுகிறது. இதில் இல்லாத ஒரு கதாபாத்திரம் தான் “மதுரை வீரன்” இதுவும் “காத்தவராயன்” கதாபத்திரமும் “கும்மிபாட்டு” போன்று எழுதபட்டு நாயக்க பெண்களை மணந்து கொல்லபடுகின்றனர். இதை யாரும் கேள்வி கேட்க கூடாது என முடிவில் “சிவமைந்தர்கள்” ஆக கதை எழுதி நாயக்கர் மற்றும் தலித் மோதல்களுக்கு வித்திட்டுள்ளனர் இந்த பொதுவுடமை வாதிகள்.

“பூலித்தேவர் சிந்து” “மாவீரன் பூலித்தேவர்” கதை எழுதிய ந.ராசையா தான் இந்த கதாபத்திரம் ஒண்டிவீரனை அறிமுக படுத்தியவர். இவர்தான் இதற்க்கு காரணம்.

இந்த கதாபத்திரம் பற்றி எந்த குறிப்புகளும் இல்லை இவ்விரண்டு நூல்களை தவிர.

வெள்ளையத்தேவன்: 

 

1800 களில் முடிந்து போன தமிழக ஆயுதபோராட்டம். பிண்பு சுதந்திர போராட்டம் வேறு பாதையில் சென்றது. இந்த இடைகாலத்தில் வேறு எந்த நாடகமும் அரங்கேற்றபடவில்லை ஒரு கூத்து தவிர. “கட்டபொம்மு கூத்து”. ஏனெனில் கட்டபொம்மன் பற்றி நன்கு தெரியும் வெள்ளையருக்கு. ஒரு அந்நிய மன்னன் தமிழகத்துக்கு போராடினான் என கூறுவதால் இதை மட்டும் அனுமதித்தனர்.

இதை திரைப்படமாக வேறு எடுத்ததால் நிறைய கிழவி கிழவர்களுக்கு சேர,சோழ,பாண்டிய மகராசாக்கள் கூட தெரியாது அவர்களுக்கு தெரிந்த ஒரே ராசா கட்டபொம்மு ராசா தான். இவரையே தான் “வீரபாண்டியன்” என கூட நம்பும் காலகட்டமும் இருந்துள்ளது. இப்படம் வந்த பின் “பாஞ்சாலங்குறிச்சி” பற்றி நிறை எழுதினர் எழுத்தாளர்கள் ட்ரெண்ட்.

அப்போது இதில் எழுதபட்ட கதாபாத்திரம் தான் “வெள்ளைய தேவன்”. இன்றைக்கு கூட நாங்கள் தான் “வெள்ளைய தேவர்” வம்சம் என கூறும் முட்டாள்கள் கூட பார்க்கலாம் எல்லாம் திரைப்படத்தின் மாயை.

பகதூர் வெள்ளைதேவன்? இந்த கதாபாத்திரம் சேவல் சண்டையில் பெரியவனாகவும். கட்டபொம்மன் வளர்ப்பு மகன் என்றும். கட்டபொம்மன் தளபதி என்றும் . இன்னும் சிலர் கட்டபொம்மனுக்குரிய பாஞ்சாலங்குறிச்சி “வெள்ளையத்தேவனுக்குரியது” என கதைவிட்டனர். இன்னும் “போகாதே போகாதே என் கனவா” என்ற பாடலை பாடும் கிழவிகளும் கூட பாஞ்சாலங்குறிச்சி பகுதிகளில் பேட்டிகளில் கானலாம். அதுவும் திரைப்பட பாடல் தான். கட்டபொம்மன் பற்றிய திருநெல்வேலி சரித்திரத்தில் மூன்றே மூன்று கதாபாத்திரம் மட்டும் தான் உண்மை “கருத்தையா என்ற கட்டபொம்மு”,”சிவத்தையா என்ற ஊமைதுரை”,”மந்திரி தானாதிபதி பிள்ளை” இந்த மூன்று மட்டுமே ஆங்கிலேயர் ஏடுகளில் உண்டு. வெள்ளையத்தேவன் கதாபாத்திரம் கிடையாது. இதை திட்டமிட்டு உருவாக்கி இன்று அஞ்சலி என்ற இல்லாத ஒரு மோதலுக்கு வகைபடுத்தியுள்ளனர்.

வெள்ளையத்தேவன் என்னும் பெயர் கூட மறவர் பாளையக்காரர்களான சுரண்டை,சொக்கம்பட்டி மன்னர்களின் பெயர் தான் அந்த பெயரை எடுத்து கொண்டு. உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம் தான் “பகதூர் வெள்ளையத்தேவன்”.

தமிழக தெலுங்கர்களான திராவிட இயக்கத்தில் உள்ள ஜெகவீரபாண்டியனார். இவர் எழுதிய பாஞ்சாலங்குறிச்சி வீரச்சரித்திரம் – ஜெக வீரபாண்டியனார் என்ற நூலில் வந்ததே இந்த கதாபாத்திரம். இதுவும் போலியான நாவல் படைப்பே. (கட்டபொம்மன் கூத்து,கும்மி,சண்டை எல்லாம் உருவாக்கபட்டதே)

சுந்தரலிங்க குடும்பன்: 

 

பாஞ்சாலங்குறிச்சி பகுதிகளில் கம்பளத்தார் சாதி,தேவர் சாதி,பள்ளர் சாதிகள் அதிகமாக இருப்பதால் பள்ளர் சாதிக்கும் ஒருவர் வேண்டும் என அதே பாஞ்சாலங்குறிச்சி வீரச்சரித்திரம் – ஜெக வீரபாண்டியனாரின் கற்பனையில் உருவாணதே இந்த சுந்தரலிங்க குடும்பன். இதற்கு திரைப்படம் “கட்டபொம்மனில்” வரும் நகைச்சுவை நடிகர் ஏ.கருநாநிதி கதாபாத்திரத்தை கைகாட்டுகின்றனர். உண்மையில் இந்த மூன்று சாதியும் அடித்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உருவாக்கபட்டது தான் “கட்டபொம்மன் நினைவாஞ்சலி” அன்று மூன்று தலைவர்களையும் வனங்க அரசே ஏற்பாடு செய்கிறது. “கட்டபொம்மன் வெள்ளையத்தேவன் சுந்தரலிங்க குடும்பன்”. எனவே மூன்று சாதியும் விழா எடுக்க வைத்து மோதல் ஏற்படுத்தபடுகின்றது.

இதில் வரும் சுந்தரலிங்க குடும்பன் கதாபாத்திரத்தின் சாகசம் இரண்டாம் உலகபோரில் ஜப்பானிய வீரன் ஒருவன் வெடிமருந்துகளை கட்டிக்கொண்டு பிரிட்டிஸ் ஆயுத கப்பலில் விழுந்து சிதறுகிறான். அந்த நிகழ்ச்சியை மாற்றம் செய்து சுந்தரலிங்க குடும்பன் கதாபாத்திரத்துக்கு நிரப்புகின்றனர். ஒரு பெருமை வேறு “உலகின் முதல் மனித வெடிகுண்டு”. இந்த சாதனையை “குயிலி” வைத்து தற்போது முறியடித்துள்ளனர்.

திமுக கருணாநிதியும் தம் பங்கிற்கு கட்டபொம்மன் கதை எழுதும்போது கூட ரெண்டு வார்த்தை சேர்த்து சுந்தரலிங்கம் “வெட்டும்பெருமாள் பாண்டியன்” வம்சம் என்றும் தன் பூர்வீக நிலத்தை பெறவே கட்டபொம்மனுக்கு துனையாக சண்டைபோட்டான் என பள்ளர்களை மற்ற சாதியருக்கு எதிராக திருப்ப ஒரு யுக்தியை கையாண்டார். இந்த கதாபாத்திரம் பற்றியும் எந்த குற்ப்பும் இல்லை. கட்டபொம்மு கூத்து,கும்மி என இப்போது சொல்லும் புதிய தயாரிப்புகளில் மட்டுமே உண்டு வேறு எதிலும் இல்லை.”கட்டபொம்மன் வெள்ளையத்தேவன் சுந்தரலிங்கம்” இது அந்த மூன்று சாதிகளுக்கும் சண்டை மூட்டவே உருவாக்கபட்ட புனைகதைகள். இன்றைக்கு கட்டபொம்மன்,வெள்ளையத்தேவன்,சுந்தரலிங்கம் வாரிசுகள் இருப்பதாக கூறுவது திரைப்பட,கூத்து நம்பிக்கையே ஒழிய ஆராய்ந்தால் எல்லளவும் உண்மை இருக்காது அந்த கோட்டை கொத்தளம் கூட அரசு உருவாக்கமே. கட்டபொம்மன் பற்றிய பெருமை திரைப்படம் உருவாகியதே இன்று அவரே ஜாதியம் கடந்த விடுதலை தலைவராகி பள்ளிகளில் பேச்சுபோட்டிகள்,மிமிக்ரி போன்றவைகளில் ஊக்கிவிக்கபடுகின்றது.

வென்னி காலாடி : 

 

இந்த கதாபாத்திரம் அறிமுகமானது “பூலித்தேவர் சிந்து” அப்புரம் “மாவீரன் பூலித்தேவன்” என்னும் ந.ராசையா நூலில். பூலித்தேவரின் காலங்களில் பூலித்தேவருக்கும் கான்சாகிபுக்கும் போர்கள் நடக்கும் அப்போது வெற்றி தோல்வி மாறி மாறி வருவதுண்டு. அப்போது ஒரு போரில் வென்னிகாலாடி தலைமையேற்று வெற்றிக்கு உழைத்து வீரமரணம் அடைந்தானாம். கட்டபொம்மன் திரைப்படத்தில் வெள்ளையதேவன் கட்டபொம்மன் மடியில் தலைவைத்து உயிர்விடும் அதே நிகழ்ச்சியை வைத்து திரித்து வெளியிட்ட கதாபாத்திரம். பூலித்தேவன் அதற்க்கு தன் வல்லையத்தை வென்னிகாலடி இறந்த் இடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினாராம். இவரது கதாபாத்திரம் பள்ளர்கள் மத்தியில் அவ்வளவாக விதைக்கபடவில்லை எனவே இவருக்கு மனிமண்டபம் கட்டபடாமல் இருக்கிறது. எதாவது நிஜத்தில் இருந்தா தானே கட்டமுடியும். இந்த கதாபாத்திரம் ஒண்டிவீரன் என்கிற அருந்ததி வீரனை போல் ஒரு பள்ளர் வீரன் பூலித்தேவர் சாதியம் இல்லா பெருந்தலைவர் என காட்ட வருங்கால ஒரு மோதலுக்காக உருவாக்கபட்டது. இதற்க்கும் எந்த ஆதாரமும் கிடையாது.

குயிலி: 

 

இந்த கதாபாத்திரம் புதிய ரிலீஸ் 1994ல் தமிழக கம்யூனிஸ்ட் பிரமுகர்களில் ஒருவரான ஜீவபாரதி என்பவரால் “வேலுநாச்சியார்-ஜீவபாரதி” என்ற நூலில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இது ஒரு “பலவீனமான” இடைசொருகள் ஏனெனில் மருதுகள்,சிவகங்கைசீமை,சேதுபதி பற்றி நூற்றுக்கனக்கான புத்தகங்கள் பல வெளிவந்த பின்பு வந்த இந்த கதாபாத்திரம் எந்த ஒரு புத்தகத்திலும் இல்லை.

குயிலியின் சாதியானது தாழ்த்தபட்ட பெண் என்ற போர்வையில் முதலில் “அருந்ததியர்” சாதி என சொல்லபட்டு அருந்ததியர் சாதிக்கு “ஒண்டிவீரன்” இருப்பதால் இதை பெருந்தன்மையாக பறையர் சாதிக்கு மாற்றி ஏற்கவே பள்ளரையும் சக்கிலியரையும் தேவர் சமூகத்துக்கு எதிராக திருப்பியது போல் பறையர் சமூகத்துக்கு இத்தனை வருட அடையாளம் இல்லாமல் இப்போது குயிலி என்ற புதுக்கதாபாத்திரம் உருவாக்கி அதற்கு மனிமண்டபம் கட்டி சிவகங்கை அரண்மனைகுள் கூட ஊர்வலம் நடத்தி வண்முறை உருவாக்க அடித்தளமிடுகின்றனர்.

இது எதாவது நம்பதகுந்தது போல் தோன்றுகின்றதா? ஒரு பறையர் சமூகப்பெண். அவர் எப்படி படைகளில் சேரமுடியும். இது எதாவது நிஜத்துக்கு பொருந்துகிறதா? இவர் மட்டும் தான் வேலை பார்தாரா இல்லை இவர் அண்ணன் தந்தை கனவன் யாரும் வேலை பார்தனரா? என்ன வேலை பார்த்தனர்? என்ற எந்த கேள்விகளும் சிரிப்பை தான் ஏற்படுத்தும்.

இந்த கதாபாத்திரத்தின் சாகசம். விடுதலை புலிகள் போராளி ராஜீவ் காந்தியை கொலை செய்த “தனு” என்று சொல்லப்படுகின்ற பெண் போராளியை அப்படியே காப்பி அடித்து குயிலி வேலுநாச்சியாருக்கு பாதுகாப்பாக இருந்து இறுதியில் என்னையை ஊற்றிக்கொண்டு வெள்ளையர் ஆயுத கிடங்கில் குதித்து சுந்தரலிங்க குடும்பன் இறந்ததாக சொல்லபட்ட கதையை குயிலிக்கு மாற்றிவிட்டு “முதல் மனித வெடிகுண்டு” சாதனை சுந்தரலிங்க குடும்பனை பின்னுக்கு தள்ளி முன்னேற்றிவிட்டனர் குயிலியை.

இத்தனைக்கும் குயிலி என்னும் பெயர் கூட எந்த சிறுகதையிலோ நாவலிலோ அல்லது எந்த வட்டாரத்திலும் இருந்ததாக கூட தெரியவில்லை. குயிலி பெயர் தமிழ் சினிமாவில் 80களில் வெளியான பூவிலங்கு என்ற திரைப்படதில் அறிமுகமாகி தற்போது சீரியல்களில் நடித்து கொண்டு இருக்கும் ஒரு நடிகைக்கு மட்டும் தான் இருந்துள்ளது.

நடிகை பெயர் + விடுத்லை புலி பெண் தனு + சுந்தரலிங்க குடும்பன் இவர்கள் கதைகளை சுத்தி உருவாக்கிய ஒன்று தான் இந்த குயிலி.

இவர் சிவகங்கையில் எங்கு இருந்தார் என்று கூட தெரியாது ஆனால் மணிமண்டபம் கட்டி “குயில் நாச்சியார்” என பெயர் சூட்டிவிட்டனர். எதிர்காலத்தில் சில புத்தகங்கள் வெளிவரலாம் அதாவது குயில் சிவகங்கையை ஆண்டு கொண்டு இருந்ததாகவும் அதை மறவர்கள் அபகரித்து விட்டனர் என்று கூட வரலாம் யார் கண்டால்?

இதை உருவாக்கிய கம்யூனிஸ்ட் ஜீவபாரதியிடம் கூட கேட்டாகிவிட்டது. எந்த ஆதாரத்தை வைத்து “குயிலி”யை உருவாக்கினீர்கள் என்று கேட்டதற்க்கு பதில் சொல்லாமல் ஓடுகிறார். அவர் சொல்லும் சாக்கு “எத்தனை வருஷத்துக்கு ரெண்டு பேரும் சண்டை போட்டுகிருப்பீங்க?” என சாக்கு சொல்லுகிறார். பறையர்களுக்கும் மறவர்களுக்கும் எப்போது சிவகங்கையில் சண்டை வந்தது? எதுக்காக இந்த குயிலி கதாபாத்திரம் உருவாக்கினார் என்றால் அதற்கு பதிலில்லை?

பின்னே கேட்கலாம் வேலுநாச்சியார் பற்றி மட்டும் குறிப்பிருக்கின்றதா? என கேட்கலாம். இருக்கிறது.

வேலுநாச்சியார் பற்றி “தென் இந்திய போராட்டங்கள்” எனும் புத்தகத்தில் முத்துவடுகநாதரின் “விதவை ராணி” என்றும் இவரின் மகள் வெள்ளச்சி நாச்சியார் பற்றிய குறிப்புகள் இருக்கின்றது. வேறு எதிலும் பெயர் இல்லை. “வேலு நாச்சியார்” என்ற பெயர் எதில் வந்தது என்றால் வேலுநாச்சியார் இறந்தது 1732ல் அவர் இறந்து 40 வருடங்கள் கழித்து 1830ல் எழுதிய “மெக்கன்சி கையழுத்து பிரதி” என்ற புத்தகத்தில் சில வாக்கியம் வருகின்றது. அதில் “பேலு நாச்சாரம்ம்மாள்” என குறிப்பிடுகின்றனர். ஒரு தெலுங்கு எழுத்தாளன் மெக்கன்சி பிரபுக்கு உதவியாலனாக இருந்துள்ளான். இதில் “வேலு நாச்சியார் அம்மாள்” என்ற ரானி தன் மகளுக்கு பிரதானியாக மருது சேர்வைகளை நியமித்ததாக உள்ளது.

1772ல் முத்துவடுகநாதர் கொல்லபட்டு சேதுபதிகளும் வீழ்தபட்டு சிவகங்கை “ஹூசைன் பூர்” எனவும் இராமநாதபுரம் “அலிநகர்” என மாற்றபடுகின்றது ஆர்காடு நவாப் ஆட்சியில். இதில் இராமநாதபுரத்தை மீட்டு பழைய பெயர் வைத்தது மாப்பிள்ளை துரை தேவர். சிவகங்கையை மீட்டது யார் என தெய்ரியவில்லை? அது தாண்டவராயபிள்ளை மற்றும் வேலுநாச்சியாராக தான் இருக்கலாம் ஏனெனில் வேலுநாச்சியார் பதிவி ஏறி 8 ஆண்டுகள் ஆண்டார் அந்த 8 ஆண்டுகளிலும் ஆங்கிலேயருக்கு வரி கட்டபடவில்லை இதிலிருந்து அந்த காலகட்டத்தில் ஆண்டது வேலுநாச்சியார் மற்றும் பிரதானி தாண்டவரயபிள்ளை. முத்துவடுகநாதருக்கும் “ஹைதர் அலி” க்கும் நெருக்கம் இருந்தது கான்சாகிபு வரலாறு கூறுகிறது. எனவே “ஹைதர் அலி” உதவி பெற்று வேலுநாச்சியார் சிவகங்கை மீட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் மருதுகள் இல்லை எனலாம். முத்துவடுகநாதர் காலத்தில் சிறுவர்களாக இருந்த மருதுகள். வேலுநாச்சியார் தன் மகள் வெள்ளச்சி நாச்சியருக்கு பிரதானிகளை நியமித்து இருந்தார் ஒழிய அதற்கு முன் மருதுகள் பிரதானி அல்ல.
(Velu Nacharamma :Mckenzie manuscripts 1830) record

வேலுநாச்சியாரை பற்றியும் மற்றும் மருதுகள் வரலாற்றுக்கு ஆதாரமில்லாமல் அகமுடைய எழுத்தாளர்கள் எழுதிய புரட்டு ஏராளம் அதற்க்கு வரலாறு இல்லை வரலாற்று ஆதாரத்தில் வேலுநாச்சியார் பெயர் இரண்டே இடத்தில் தான் குறிப்பிடபட்டுள்ளது. ஒன்று “மெக்கன்சி கையெழுத்து பிரதி,மிலிட்டரி கன்சுலேஷன்” இது தவிர எதிலும் இல்லை.

குயிலி கதாபாத்திரம் பல வருடங்களாக வெளியாகமல் 1994ல் வெளியான புது புரளி.

வாளுக்கு வேலி அம்பலம்: 
 

பலர் கூற கேட்டிருக்கிறேன் மு.கருணாநிதி என்ற கலைஞர் எழுதிய சில நூல்கள் நெஞ்சில் ஆனியையும் தலையில் கடப்பாரையும் ஒன்றாய் இருக்குவது போன்ற என்னமே வாசகர்களுக்கு தோனுமாம். அப்படி ஒன்று தான் “தெண்பாண்டி சிங்கம்” என்ற நாவல் நிஜத்தை தழுவி எழதபட்ட நாவல். இத்தனைக்கும் அந்த நாவலில் “விடுதலை போராட்டமே” கிடையாது.பட்டமங்கலம் மற்றும் பாகனேரி நாட்டுக்கும் நடக்கும் பங்காளி சண்டை. இதில் ஆங்கிலேயனும் வரமாட்டார்கள் வேரு யாரும் வராது. இது விடுதலை போராட்டமே கிடையாது தங்கையை கொடுமை படுத்திய மைத்துனனை சண்டையிட்டு வெல்கிறார் தங்கையின் அண்ணன். “கிழக்கு சீமை” படம். அதில் வரும் விஜயகுமார் கதாபாத்திரம் “வாளுக்கு வேலி”,பட்டமங்களம் அம்பலம் “நெப்போலியன்” தங்கை ராதிகா வாளுக்கு வேலி தங்கை.

இப்போது இது மணிமண்டபம் நினைவேந்தல் தொடங்கியிருக்கிறது.

பாகனேரி பற்றி எந்த ஆங்கிலேய ஆதாரமும் கிடையாது.

“தென்பாண்டிசிங்கம்” என்பது கிழக்குசீமை படம் 1993ல் வருகிறது. கலைஞர் மு.கருநாநிதி 1995ல் நாவலை வெளியிடுகிறார்.

தீரன் சின்னமலை:

நெடுநாள்களாக இருந்து வந்த தீரன். நடிகர் சிவக்குமார் பேச்சில் பலருக்கும் அறிமுகமானது. அதில் தீரன் “திப்பு சுல்தான்” தளபதியாக இருந்து மைசூர் போரில் 1000 பேரை கொன்று அலெக்ஷாண்டர் மேக்ஸ்வேல் என்ற ஆங்கிலயே தளபதியின் தலையை வெட்டி வந்தார் என பேசுவார். அப்போது ஒவ்வொருவரிடம் எழுந்த கேள்வி இப்படி 1000 பேரையும் ஆங்கிலேய தளபதியையும் கொன்றவரின் பெயர் ஏன் வரலாற்றில் குறிப்பிடபடவில்லை என்ற போது .அதன் மூலத்துக்கும் எந்த ஆதாரமும் கிடையாது. தற்காலத்தில் ஏற்பட்டவையே அது.

இதற்க்கும் எந்த ஆதாரமும் கிடையாது.

அனந்த பத்மநாப நாடார்:

திருவிதாங்கூர் அரசருக்கு படைதளபதியாக பணிபுரிந்ததாகவும் சேரவம்சத்து நாடார் போராளியாக கண்டுபிடிக்கபட்ட இவரை பற்றி “திருவிதாங்கூர் மேனுவலிலும்”,”டச்சு என்கவுண்டர் ஆப்போசிட் கோஸ்ட்” என்ற டச்சு ரெக்கார்டுகளிலும் இல்லாத தளபதி பற்றி பா.ம.க இராம்தாஸ் சொல்லுகிறார். அதாவது டச்சு படைகள் திருவிதாங்கூரை பிடிக்க கப்பல் படைகளுடன் கரைனோக்கி வருகிறதாம். அப்போது பத்மநாபநாடார் பனைமரங்களை வெட்டி பீரங்கிபோல் கரைகளில் வைத்து விட்டாராம். இதை பார்த்த டச்சு படை பயந்து பின்னோக்கி போய்விட்டனராம். பத்மநாபநாடார் அறிவு கூர்மையை திருவிதாங்கூர் வர்மா மெச்சினாராம். எவ்வள்வு ஒரு சிறுபிள்ளை தனமான வரலாறு. இதே பனைமரம் பீரங்கி கதையை சிறுவர்கள் கட்டபொம்மன்,பூலித்தேவர்,மருதுபாண்டியர் ஆங்கிலேயரை ஏமாற்ற வைத்திருந்தனர் என்ற சிறுவர் கதைகளை அப்படியே எந்த வரலாற்றையும் புதுமையாக உருவாக்க வகையில்லாமல் சிறுவர்கள் கதையான குட்டையன் கதை,கரட்டாவண்டி கதை,வடைசுட்ட கதையை விடுதலை போராட்ட வரலாறுகளாக மாற்றுகின்றனர். எதாவது இருந்தால் தானே வரலாறு எழுதுவதற்க்கு. எதுவும் இல்லை எனில் இந்தமாதிரி நையாண்டி கதைகளையும் வேடிக்கைகளையும் தான் வரலாறாக மாற்ற முடியும்.

இதை பற்றி நாம ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

இப்படி பல அடையாளங்களை தத்தம் சாதிக்கு உருவாக்கி எல்லாவற்றுக்கும் ஊர்வலம் சிலை என பேரணி நடத்தி கலகங்களை தூண்டி விடுவதற்காகவே இப்படி உருவாக்கி சாதியமோதல்களை விதைக்கின்றனர்.

இவை ஏன் “குயிலி சிதம்பரம் அருகே பிறந்து 500 பேரை திரட்டி போராடினார் என்றோ இல்லை ஒண்டிவீரன் கோவை அருகே சில படைய திரட்டி போராடினார் என்றோ இல்லை சுந்தரலிங்கம் பரமக்குடி அருகே போராடினார் என்றோ ஏன் எவருக்கும் தோன்றவில்லை காரணம் இவை தேவர் சமூகத்தினர் நடுவே நுழைத்தால் தான் நம்பகதன்மை இருக்கும் என பூலித்தேவர் வேலுநாச்சியார் வரலாறுகளை இதற்கு மூலமாக்கி தேவர் சமூகத்தினருக்கு எதிராக கலகங்களை விளைவிக்க முயல்கின்றனர்.

ஒரு புத்தகம் எழுத குறைந்தபட்சம் 10 லட்சம் முதல 15 லட்சம் ஆகும் . பஞ்ச பரதேசிகளான கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் ஏன் அவ்வளவு பெரியதொகையை இந்த புத்தகத்துக்கு முதலீடு செய்கின்றனர் தன் செலவுக்கு ஏன் அதை பயன்படுத்தாமல் புத்தகம் எழுத காரணம் அது அன்னிய செலவானி இந்த மாதிரி கலகங்கள் விதைக்க முதலில் பூலித்தேவர் வரலாறு,வேலுநாச்சியார் வரலாறு என எழுதி அதில் ஒண்டிவீரன்,குயிலி போன்ற கதாபாத்திரங்களை சொருகுகின்றனர்.

இதற்கு சாதிய ஒற்றுமைக்கு வழிவகை செய்கிறோம் என கூறி அவர்கள் சாதி மோதல்களுக்கே இந்த கதாபாத்திரங்களை நுழைக்கின்றனர். முதலில் சாதி ஒற்றுமை என கூறி பின்ப் அந்த கதாபாத்திரங்கலை வேறு விதமாக எழுதுகின்றனர்.

பணமிழந்து செல்வாக்குமிழந்த அரசகுடும்பங்களான நெற்கட்டான் செவ்வல்,பாஞ்சாலங்குறிச்சி,சிவகங்கை அரச வழியினர் எதோ நம் வரலாறை இவர்களாவது எழுதுகின்றனரே என நமக்கு பணம் செலவழித்து எழுத வகையில்லையே என வருந்தி அந்த புத்தக வெளியிட்டு விழாவுக்கு வருகின்றனர். அதில் பல ஜாதியினரும் பல கட்சியினரும் பங்கேற்கின்றனர். அப்போது சாதிமதத்திற்கு அப்பாற்பட்டவராக பூலித்தேவர்,வேலுநாச்சியார்,கட்டபொம்மன் போன்றவரை புகழ்வது போன்று குயிலி,ஒண்டிவீரனை புகழ்கின்றனர். அப்போது யாரும் கேள்வி கேட்பதில்லை காரணம் இவர்களாவது நமக்கு வரலாறுகளை வெளிவரசெய்கின்றனரே என வாய்மூடி இருக்கின்றனர்.

இப்படி தான் கலவரங்கள் விதைக்கபடுகின்றன. முதுகளத்தூர் கலவரம் முதலில் அகமுடையர்-மறவர் மோதலாக தான் உருவாக்க வேண்டும் என நினைத்த பொதுவுடமை வாதிகளுக்கு தோல்வி ஏற்படவே பின்பு அது மறவர்-பள்ளர் மோதலாக உருமாற்றுகின்றனர். இன்றும் அந்த முதுகளத்தூர் கலவரம் ஆராமல் பார்த்துகொள்ள இதே கம்யூனிஸ்டுகள் இன்னும் புத்தகங்கள் எழுதி இரு சமூகத்தினருக்கும் ஆதரவாக எழுதி என்னை ஊற்றிக்கொண்டே இருக்கின்றனர்.

நிறையபேருக்கு தெரியாது தமிழக இலக்கியதுறையும் இந்திய இலக்கியதுறையும் இன்றும் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களும் கல்வி இயக்குனர்களும் தான் கோலோச்சி புத்தகங்கள் வெளியிடுகின்றனர். வேறு யார் தன்னிச்சையாக புத்தகம் வெளியிட்டாலும் அதை அழித்து விடுவார்கள். ஆட்சி அதிகாரமில்லாத கம்யூனிஸ்ட்டுகளுக்கு எப்படி பணம் வருகிறது என்றால் அது வெளிநாட்டு என் ஜி ஓ பரிவர்தனை மூலம் தான். இவர்களின் வேலை இந்தியாவில் பல சமூகங்களுக்கு இடையில் மோதல் ஏற்படுத்துவதே ஆகும்.

கேரள ஐயப்பனை சிவன்-விஷ்னு ஓரின சேர்க்கையில் உருவாணவர் என்ற கருத்துகள் கூட இவர்கள் வெளியீடுதான். இன்னும் பழமையான வழிபாட்டை சிதைத்து புது புது கடவுள்கலையும் கருத்துகளையும் புத்தகங்களில் வெளியிடுவதும் இவர்கள் தான்.

தெலுங்கு மற்றும் பிராமணர் முதலியார் நாடார் போன்ற சமூகங்கள் இருக்க தாழ்த்தபட்ட சமூகமான பள்ளர்,பறையர்,சக்கிலியர் போன்றவர்களை தேவர்,வன்னியர்,கொங்குவெள்ளாளரிடம் மோத விட்டு நெருப்பு மூட்டி குளிர்காய்வது தான் இந்த கம்யூனிஸ்டுகளும் திராவிட இயக்கத்தினரும்.

எப்படி போலியாக கதைகளையும்,கடவுள்களையும் உருவாக்கி இந்து மதத்தை சிதைக்கின்றனரோ அதே போல் தான் போலி போராளிகளை உருவாக்கி சமூக நல்லினக்கத்தை கெடுக்க முயல்கின்றனர்.

தமிழக எழுத்தாளர் கூட்டமைப்பில் உள்ளவர்கள் அனைவரும் பொதுவுடமை,திராவிட வாதிகளை இவர்கள் புத்தகங்களை வெளியிடும் அது நாவல் போன்ற கர்பனை தான் நிஜம் அல்ல என பலருக்கும் தெரிவதில்லை.

நாவல் கதாபாத்திரங்கள் நிஜகதாபாத்திரங்கள் ஆவதில்லை. இரண்டு ஜாதிகள் மோதலை தவிற்கிரோம் எனில். இரண்டு ஜாதிகள் ஏன் சம்பதமில்லாமல் மோத வேண்டும். மோதலுக்கே நியாமில்லை எனில் ஏன் ஒற்றுமைக்கு நியாயம் எப்படி கூறமுடியும்.

இதற்கு அப்போதே கேள்வி கேட்காதவர்கள், “ஒரு தவறை செய்வது மட்டும் தவறு அல்ல தவறை வேடிக்கை பார்ப்பதும் தவறே”

ஆதாரமில்லாத இந்த நாவல் கதாபாத்திரங்களை நம்பி ஊர்வலம் பேரணி கலவரங்களை வேடிக்கை பார்க்கபோவதற்கு முன் அதை பற்றி பேசும்போதே கேள்வி கேட்டு தடுத்திருந்தால் இந்த தவறே நடக்காமல் தடுத்திருக்கலாம்.

வள்ளுவர் வாய்மொழி உறைப்பது போல்

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்”
“மெய்பொருள் கான்பது அறிவு”

தீரவிசாரித்து எந்த வரலாற்றிலும் உண்மை உண்டு எனில் அதை ஏற்போம் இல்லை எனில் அவற்றை மறுப்போம்.

Continue reading

Posted in தலித், வரலாறு, வெள்ளையத்தேவன் | 1 Comment

சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி

 சேது என்னும் பெயரான “திருவனை” என்ற குறிப்பு வரலாற்றில் அபராஜித பல்லவன் காலத்திலிருந்து கிடைக்கிறது.அபராஜித பல்லவன் சேது “நந்தி” நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளான். இதன் பின் பராந்தக சோழன் காலத்தில் சேது திருவனை பற்றிய “புலி நந்தி” முத்திரை  ஒன்றை வெளியிட்டுள்ளான். 16,17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தளவாய் சேதுபதி,சடையக்க உடைய தேவர் சேதுபதி காலத்தில் நந்தி,சூரியன்,சந்திரன்,மயில் சின்னங்களும் இடம்பெறுகின்றது. பிற்கால சேதுபதிகள் நானயத்தில் அன்னம்,யானை முதலிய சின்னங்களும் முதன் முதலில் முருகனை ஆறுதலைகளுடன் நானயங்களில் வெளியிட்டவர்கள் சேதுபதிகள். சேதுபதிகள் தமிழ் வளர்த்தலையே முதன்மையாக கொண்டுள்ளதால் அவர்களின் நாணயங்கள் தமிழிலிலே அதிகமாக கிடைக்கிறது.

சேதுபதிகளின் நாணயங்களில் சிலவற்றை பார்ப்போம்

பிற்கால சேதுபதிகளின் நாணயங்களில்

தளவாய் சேதுபதி காசுகள்:(1635-1646)

காசில் முதல் பக்கத்தில் இடது நோக்கிய நிற்கும் மயில் உள்ளது. பின் பக்கத்தில் “ரரதளவாய்”  என்று மன்னனின் பெயர் தமிழில் எழுதபட்டுள்ளது. ராசராச என்று எழுதுவதற்கு “ரர” என சுருக்கமாக எழுதுவது வழக்கம். சேதுபதி நாணயங்களில் முதலில் கிடைத்த நாணயம் இதுவே ஆகும்.ஒன்று பரமக்குடி இன்னொன்று மதுரையில் கிடைத்துள்ளது.

இந்த நாணயம் காலத்துக்கு மிகவும் முன்வந்ததாக இருக்கவேண்டும். அதாவது முதலாம் இராஜ இராஜ சோழ தேவரின் தளபதியாக இருந்த உடையணன் என்ற சேதுபதி ஈழத்தையும் கேரளத்தையும் வென்றார். இந்த உடைய தேவரையே ஐயப்பன் கதைகளில் வரும் சோழ மறவர் தளபதியாக இருக்கலாம்.

உடைய தேவர் சேதுபதி:(1711-1725)


இவரும் கேரளத்தை வென்ற உடைய தேவரின் வம்சமாக இருக்கலாம்.கரூரில் இவரது நாணயம் கிடைத்துள்ளது.. நாணயத்தில் சூரியன் சந்திரன் நந்தி சிவன் பொரிக்கபட்டுள்ளது. இவரின் நாணயங்கள் பெரும்பாலும் நந்தி பொரிக்கபட்டுள்ளது. இவரின் நாணயங்களில் “ஸ்ரீ உடைய தெவ” என பொரிக்கபட்டுள்ளது. இவரது நாணயங்கள் மதுரை,கரூர்,கும்பகோணம்,பரமக்குடியில் கிடைத்துள்ளது.

சேதுபதியின் பிற நாணயங்களில் சிவன்,காளை,மயில் சின்னங்கள் வந்துள்ளது.

ஆறுதலை முருகனை நாணயங்களில் முதன் முதலில் தமிழகத்தில் நாணயங்களாக வெளியட்டவர்கள் சேதுபதி மன்னர்களே.

மயில் சின்னம் பொரித்த சேது மன்னவர்கள்.

சேதுபதிகளின் குல தெய்வமான இராஜ இராஜேஸ்வரி அம்மனை நானயங்களில் வெளியிட்ட சேதுபதிகள்.


சேதுபதி,கோனேரிராயன் மற்றும் யாழ்பாண அரசனின் நாணயங்கள் ஒற்றுமை:

சேதுபதிகளின் நாணயங்களில் நந்தி மயில் சின்னங்களே அதிகமாக வந்துள்ளன.இதேபோல் யாழ்பாண அரசனின் நானயங்களிலும்
நந்தி மயில் சின்னங்களே அதிகமாக வந்துள்ளது. இடைக்காலத்தில் சோழநாட்டை ஆண்டை கோனேரிராயன் என்ற வைத்தியலிங்க 
காலிங்கராயனின் நாணயங்களிலும் நந்தி,சூரியன்,வாள் சின்னங்கள் வந்துள்ளது குறிப்பிடதக்கது.

கொனெரிராயன் காலம் 14 ஆம் நூற்றாண்டு .யாழ்பாண அரசனின் நாணயம் 15 ஆம் நூற்றாண்டு. சேதுபதியின் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

இந்து மூன்று அரசர்களின் நாணயங்களிலும் வந்துள்ளது.

சேதுபதி நானயங்களில் கடல் திரவியமான “முத்து” அதிகமாக இடம்பெற்ரதுடன். தென் கடல் முழுவதும் “முத்து சல்லாபம்” சேதுபதியிடம் இருந்ததால் முத்து என்ற பெயரை தன் பெயரோடு சேர்த்து கொண்டனர். மேலும் முத்து நாணயங்களிலும் இடம் பெற்றது

நன்றி:
தமிழக தொல்லியல் துறை
ஆறுமுக சீத்தாராமன்

Continue reading

Posted in சேதுபதிகள் | Leave a comment

மூக்கறுப்பு போரின் “தடயங்கள்”

(Hunt for noses) war between Mysore and Madurai.

Sethupathi Saved Madurai From Kannada Forces.


மூக்கறுப்பு போர் வரலாற்றில் நடந்த மிகக்கொடுமையான போர் முறைகளில் ஒன்று.அதாவது எதிரியை வெட்டி வீழ்த்தாமல் அவன் மூக்கை மீசையுடன் அறுத்து நிரந்தரமான ஊனத்தை செயற்கையாக ஏற்படுத்தி அவன் முகத்தை சிதைப்பது தான் இந்த மூக்கருப்பு போரின் வடுக்கள். Continue reading

Posted in சேதுபதிகள் | Leave a comment

மறக்குல அரசமகளிர் தீப்பாய்தல்(ஜௌஹர்)

 இராமநாதபுரத்து மறக்குல அரசியார் பின்பற்றிய தீப்பாய்தல்

Jauhar and Sati practice in Tamilnadu Kindom of Ramanathapuram Sethupathi.Maravar queens and princess perform Hindu custom of mass self-immolation by women in parts of the Ramanathapuram, to avoid capture,enslavement and rape by invaders, when facing certain defeat during a war.

“கற்பென்னும் திண்மையைக் குலதனமாக பெற்ற பழந்தமிழர்
மன்னர் வம்சத்து குல மாதரில் சில கணவனுடன் உடன்கட்டை
ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக் குளிர்ந்த நிலவென்று
தீண்டியவரும் உண்டு எதிரிகளிடம் வீழ்ந்த பின் தங்கள் கற்புக்கு
ஆபத்து வரும் என கருதி வீர அரச மகளிர் அனைவரும்
குளிர் தென்றலென அக்கினியில் குளித்த கதையும் உண்டு”

வடக்கே ராஜஸ்தானில் பின்பற்றும் சதி(இறந்த கணவனுடன் தீப்பாய்தலும்)எதிரிகளிடம் வீழ்ந்த பின் அவர்களிடம் சிக்காமல் இருக்க ஜௌஹர்( மொத்த மகளிரும் தீப்பாய்தல்).உள்ள பழக்கவழக்கங்கள் தென் தமிழ் நாட்டில் மறவர்,கள்ளர் குல அரசியாரிடம் இடம்பெற்ற பழக்கவழக்கங்களை பார்ப்போம்.

Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Leave a comment

தாணான்மை நாட்டு வணங்காமுடி வழுவாத தேவர்கள் சரித்திரம்

(சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு)

பொன் விழையும் தஞ்சை சீமை அதில் புகழ் விளங்கிய வரலாறுகள் பல உள. அதில் உண்டான பேரரசுகளும் சிற்றரசுகளும் காவிரித் தமிழன்னைக்கு அழகு சேர்த்த செல்வங்களாக உள்ளன. அதில் சோழப் பேரரசர்களின் புகழ் வீழ்ந்த பின் பல அந்நியர்களின் கையில் வீழ்ந்த தஞ்சை மன்னில் தமிழ் வளர்த்த தொல்குடி சிற்றரசர்களின் புகழ்கள் காலத்தில் மறந்திரா வண்ணம் அறந்தாங்கிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் உள்ள கீரமங்கலம்,நகரம்,சேந்தங்குடி போன்ற பகுதிகளில் தமிழ் வளர்த்து பேராண்மையுடன் வாழ்ந்த தமிழ் சிற்றரசர்களான வழுவாட்டி தேவர்களின் சரித்தரத்தை பார்ப்போம். இந்நூல் அந்த வழுவாத தேவர்கள் சரித்திரத்தை அவர்களின் சந்ததியினர் வெளியிட்ட நூலின் மூலத்துடன் அவர்களின் ஒப்புதலாலும் ஊக்குவித்தலால் இக்கட்டுரையை சமர்பிக்கிரோம்.

Continue reading

Posted in கள்ளர், தேவர், மறவர் | Tagged , | Leave a comment

தன்னிகரில்லா தளகர்த்தன் மயிலப்பனின் கதை

‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! “(புறம்)

பார்போற்றும் சீர்மிகு செந்தமிழ் சீமையாம் சேது சீமை.இச்சீமையில் முதன்மையான நாடுகளில் ஒன்றாம் ஆப்பநாடு. அப்ப நாட்டு கோமறவர் கொண்டையங்கோட்டை கரந்தை மறவரின் பெருங்குடியில் சித்திரங்குடி(முதுகளத்தூர் அருகே) பிறந்தவராம் எங்கள் பெரிய வெள்ளைய தேவர் என்ற இயற்பெயரை கொண்டவராம் மயிலப்பன் சேர்வைக்காரர்.அவரின் வீறுகொண்ட வெஞ்சமர் கதை கூற வந்தோம் யாம்.

சித்திரங்குடி என்பது ஆப்பனூர் நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்த ஊர் இராச விசுவாசத்திலும் பாரம்பரிய வீர உணர்வுகளுக்கும் பேர்போன ஊர். கி.பி 1772-ல் இராமநாதபுரம் கோட்டைப் பிடித்த ஆற்காடு நவாபும் கும்பெனியாரும் சேது நாட்டை 9 ஆண்டுகள் நிர்வாகம் செய்த போது பலவிதமான இடைஞ்சல்களை ஏற்படுத்தி அந்த பகுதிக்குள் அன்னியர் நுழையாதபடி செய்தனர் அந்த ஊர் மக்கள் . அத்தகையை ஊரில் பிறந்தவர்தான் தளபதி மைலப்பன் சேர்வைக்காரர்.சேர்வைக்காரர் என்றால் அரச சேவையில் உள்ள தளபதி என்ற பொருளாகும். மைலப்பன் என்பது இவரது இயற்பெயர் அல்ல இவருக்கு முன் வாழ்ந்த மைலப்பன் என்ற பெருமகனாரின் வழித்தோன்றலான இவருக்கும் அந்த பெயர் வந்தது.

 

Continue reading

Posted in அழகு முத்துக்கோன் சேர்வை, சேதுபதிகள், தேவர்கள், மறவர் | Tagged | Leave a comment

ஏழூர் நாட்டார்(கோவனூர்) மறமாணிக்கர்

புதுகை பகுதிகளில் ராங்கியம்,குழிபிறை,ஆத்தூர்,கொவனூர்,செவலூர்,பொன்னமராவதி,பூலாங்குறிச்சி இந்த பகுதிகளுக்கு அம்பலம் எனும் நாட்டார்கள் கோனாட்டு மறவர்கள். இவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட படைப்பற்றில் பாண்டியர் காலத்திலும் சோழர் காலத்திலும் கானப்பட்ட கல்வெட்டு செய்திகள்.

 

பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில்
அரசு:பாண்டியன்
ஆண்டு:12-ஆம் நூற்றாண்டு
செய்தி :
செவ்வலூர் நாட்டவர் தங்கள் பூவாலைக்குடி கோவிலில் மறமாணிக்கன் சந்நிதியை நிறுவியது இதை நிறுவியவர் செவ்வலூர் மறவரான கலிகடிந்த பாண்டிய தேவர்.
“எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரதேவர்க்கு யாண்டு……….கூடலூர் நாட்டு செவ்வலூர் நாட்டவரோம்…பூவாலைக்குடி நாயனார்க்கு மறமாணிக்கன் சந்நிதி………..அமுது படைக்க கொவனூர் பற்றான நிலத்தில் நாங்களும் கலிகடிந்த பாண்டிய தேவரும் விட்ட பூபாலைக்குடி……….மறமாணிக்கன் பேரரையன் குடிகாட்டுக்கு…………
கூடலூர் நாட்டு செவலூர் வடபற்று  குழிபிறை,செம்பூதி,தேனூர்,அரசர்மிகனிலை பற்று……. இப்படிக்கு செவலூர் ஊரவரோம்…….

Continue reading

Posted in கல்வெட்டு, மறவர் | Leave a comment

இலங்கையில் ஒரு மறவர் கோயில் !

மகாபாரதப் போரை நினைவு கூரும் உடப்பு திரௌபதை அம்மன் திருவிழா

உடப்பூர் க. மகாதேவன்
 
 
இலங்கையின் கிழக்கு, வடமேற்கு, மத்திய பிரதேசங்களில் சக்தி வழிபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்துக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் சக்தி வழிபாடு காணப்படினும் இப்பிரதேசங்களில் சக்தி வழிபாடு குலதெய்வ வழிபாடாகக் காணப் படுகின்றது.
மஹா பத்திரகாளி மாரியம்மன், கண்ணகியம்மன் காளியம்மன் நாச்சியம்மன், இராக்குருசியம்மன், திரெளபதையம்மன் போன்ற தெய்வங்களுக்கான ஆலயங்கள் சக்தி வழிபாட்டிற்கு சான்று பகிர்கின்றன. அவ்வகையில் இந்து மதத்தின் தர்ம போதனை நூலான பகவத்கீதை தோற்றம் பெற்ற மகா பாரதக்கதையை சித்தரிக்கும் முகமாக ஆலயங்களும், வழிபாடுகளும், திருவிழாக்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.
மகாபாரதக் கதாநாயகியான தர்ம தேவதை திரெளபதியம்மன் வழிபாடு மட்டக்களப்பு, புத்தளம், பகுதிகளில் சிறப்பாக விளங்குகின்றது. மட்டக்களப்பு, பாண்டிருப்பு திரெளபதையம்மன் ஆலயம் இவற்றுக்கு சான்றாகின்றது. அத்துடன் மத்தியமலை நாட்டில் ஓரிரு இடங்களிலும் வழிபாடுகள் நிகழ்கின்றன. பக்தி சிரத்தையோடு பாரதக்கதையை ஒட்டிய உற்சவங்களும் பூஜைகளும், விசேட தீமிதிப்பு உற்சவமும் இங்கு இடம்பெறுகின்றன.
இலங்கையில் அமைந்திருக்கும் திரெளபதை தேவியின் ஆலயங்களில் தேவியின் புகழ் கூறும் ஆலயமாகவும் இற்றைக்கு 400 ஆண்டுகள் தொன்மைமிக்க ஆலயமாகவும் உடப்பு ஸ்ரீதிரெளபதை அம்மன் ஆலயம் விளங்குகின்றது.
புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகரிலிருந்து 16 மைல்கள் வடமேற்கில் உடப்புக் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள திரெளபதை அம்மன் ஸ்ரீருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீபார்த்த சாரதி சமேத ஸ்ரீ திரெளபதாதேவி ஆலயம் என மிக நீண்ட பெயரைக் கொண்டுள்ளது. இவ்வால யத்தில் 1917ம் ஆண்டு காலத்தில் அம்மனை மடாலயத்தில் வைத்துத்தான் பூஜித்து வந்தார்கள். 1917ம் ஆண்டுக்குப் பின்னர் அம்மனை பிரதிஷ்டை செய்து மகா மண்டபத்துடன் பூரணமிக்க ஆலயமாகக் கட்டி முடித்தார்கள். 1929ம் ஆண்டளவிலேயே ஸ்ரீ ருக்குமணி சத்தியபாமா சமேத பார்த்தசாரதிப் பெருமாளின் சிலை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கிருந்த அம்மனின் சிலை கோயிலின் அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டது.
அதன் பின்னர் 1974, 1994 களில் சுவாமி விஸ்வநாதக் குருக்கள் அவர்களின் தலைமையில் குடமுழுக்கு நடைபெற்ற மையும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வானுயர்ந்த 108 அடி நவதள நவகலச நலகுண்டபக்ஷ நூதன இராஜகோபுர மகா கும்பாபிஷேக நிகழ்வு வெகு கோலாகலமாக 2011-01-24ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
Posted in தேவர், மறவர் | Leave a comment

நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் பேரவை

சூரைக்குடி விஜயாலயத்தேவரின் வம்சத்தை சேர்ந்த
https://www.facebook.com/groups/532904683520538/
https://www.youtube.com/watch?v=g5nqnU6-Iqk
கொண்டையன் கோட்டை தலைவன் வம்சம் திருநெல்வேலியில் காணும் தலைவனார் வம்சத்தோடு தொடர்புடையவர்கள் வாலும்,வேலும் கொண்டு
வீரம் மனதில் கொண்டு
சிரம் நிமிர்ந்து நின்று
எதிர்த்து நிற்கும் எப்படையும் அழித்து நிற்கும் இப்படையும் கொண்ட எம்குடி
IMG-20160125-WA009615731375_600617690134789_819051192_n
unnamed
Posted in தேவர், மறவர் | 2 Comments

சோழர் கால மறவர் நிறுவிய அய்யனார் சிலை கண்டுபிடிப்பு

கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை  கண்டுபிடிப்பு –தினத்தந்தி செய்தி

ஜூன்-29

பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர்  தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்அப்போது அய்யனார் சிலையடியில்

“இச் சிலை கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்”

என பொறிக்கப்பட்டிருந்தது சோழர் கால கலைவடிவில் இது 900 ஆண்டு பழைமையான ஒன்றாக

கருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.


“கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்”

நன்றி: தினதந்தி

 

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Leave a comment