Tag Archives: பாண்டியன்

பஞ்சவர்

பஞ்சவர் என்னும் சொல் பாண்டியரை உணர்த்தும். இப்பெயரில் இலங்கையை பொதுக்காலத்திற்கு சற்று முன்னர் ஆண்ட ஐந்து பாண்டியர்களும் குறிக்கப்படுகின்றனர். சங்ககாலத்திலும் பிற்காலத்திலும் பாண்டியரை பஞ்சவர் என்னும் பெயருடன் அழைப்பது மரபாகவே ஆனது. சங்ககாலக் குறிப்புகள் : சிலப்பதிகாரத்தில் வரும் நெடுஞ்செழியனை வாயில்காவலன் ‘பழியொடு படராப் பஞ்சவ வாழி’ என்று வாழ்த்தி விளிக்கிறான். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

கவுரியர்

கவுரியர் என்னும் சொல் பாண்டியரைக் குறிக்கும். கவவு என்னும் உரிச்சொல்லுக்கு அகத்திடுதல் என்பது பொருள். இந்த உரிச்சொல் கவர் என்னும் வினைச்சொல்லாக மாறி, கடல்கோளுக்குப் பின்னர் புதிய நிலப்பகுதியைக் கவவு செய்துகொண்ட (தனதாக்கிக்கொண்ட) அரசர்குடி கவுரியர் எனப்பட்டது. இராமன் இலங்கை வெற்றிக்குப் பின் ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு மறை ஓதி வழிபட்ட கோடி (தனுஷ்கோடி) கவுரியர் எனப் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

தென்னவன்

தென்னர், தென்னன், தென்னவர், தென்னவன், தென்னம் பொருப்பன், தென்னவன் மறவன், தென்பரதவர் போன்ற தொடர்கள் சங்கத்தொகை நூல்களில் தென்னாடு எனப்பட்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியரைக் குறிப்பனவாகவும், அவரோடு தொடர்புடைய மக்களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன. பாண்டிய மன்னர்கள் செழியன், சேய், பஞ்சவன், மாறன், வழுதி என்னும் பெயர்களாலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். ‘தென்’ என்னும் சொல் தென்-திசையைக் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

மூவேந்தரும் ஒரே குடிவழியினர்

பழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய மன்னர் மரபு பாண்டிய மரபு ஒன்றே. பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது. தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை மாறன் வழுதி மாறன் திரையன் மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர் தமிழ்மூ வரசிவர் தாமா வாரே (ந.வே.வ.பாயிரம்) மாறன் திரையன் மரபில் வந்தோர் சோழராயினர் இவர்கள் … Continue reading

Posted in மூவேந்தர் | Tagged , , , | Leave a comment

கொல்லங்கொண்டான் பாண்டியன்

கொல்லங்கொண்டான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொல்லத்தினையும் சுற்றுப்புறப் பகுதிகளினையும் கைப்பற்றியதனால் ‘கொல்லங்கொண்ட பாண்டியன்’ என அழைக்கப்பட்டான் என திநெல்வேலி சேர மாதேவி கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இம்மன்னன் மலை நாடு, சோழ நாடு, இரு கொங்கு நாடுகள், ஈழ நாடு, தொண்டை நாடு போன்றனவற்றினையும் வென்றான் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வரதுங்கராம பாண்டியன் -கி.பி. 1588-1612

வரதுங்கராமர் எனப் போற்றப்பட்ட பாண்டியன் கி.பி. 1588 முதல் 1612 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் இரண்டாவது மகனுமாவான். அபிராம சுந்ரேசன்,வீரபாண்டியன் போன்ற சிறப்புப்பெயர்களையும் பெற்றிருந்தான்.சடையவர்மன் அதி வீரராம பாண்டியன் காலத்தில் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்த வரதுங்கப் பாண்டியன் ‘வில்லவனை வென்றான்,வல்லம் எறிந்தான்” எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சடையவர்மன் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

நெல்வேலி மாறன் பாண்டியன் -கி.பி. 1552-1564

நெல்வேலி மாறன் கி.பி. 1552 முதல் 1564 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் இரண்டாம் மகனான இவன் வீரபாண்டியன்,குலசேகர பாண்டியன்,பொன்னின் பாண்டியன்,தர்மப் பெருமாள்,அழகன் பெருமாள் போன்ற பெயர்களினையும் உடயவனாவான். புலவர்கள் பாடிய வீரவெண்பா மாலை கொண்ட இம்மன்னனது கல்வெட்டுக்கள் தென்காசியில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பராக்கிரம குலசேகரன் -கி.பி. 1543-1552

பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543 முதல் 1552 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் முதல் மகனான இவன் தனது தந்தையின் ஆட்சிக்குத் துணையாக இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

முதலாம் சடையவர்மன் குலசேகரன் -கி.பி. 1149-1158

முதலாம் சடையவர்மன் குலசேகரன் பிற்காலப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் 1190 முதல் 1217 வரை ஆகும். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனிடமிருந்து பாண்டிய நாட்டை மீண்டும் பெற்ற விக்கிரம பாண்டியனின் மகன். இவன் தற்போதைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிப் பிரதேசங்களை ஆண்டான்

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

மாறவர்மன் சீவல்லபன் பாண்டியன் -கி.பி. 1132-1162

மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.கி.பி. 1132 ஆம் ஆண்டு முடிசூடிய இவனது மெய்க்கீர்த்திகள் “பூமகள் சயமகள் பொலிவுடன் தழைப்ப” எனத் தொடங்கும்.திருவாதாங்கூர் சேரன் வீரரவிவர்மன் இவனிடன் திறை பெற்றான்.மாறவர்மன் சீவல்லபனைப் பற்றிய கல்வெட்டுக்கள் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பல ஊர்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment