Tag Archives: பாண்டியன்

மதிவாணன்

மதிவாணன் கி.பி. 60 முதல் 85 வரை முடத்திருமாறனுக்குப் பின்னர் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

முடத்திருமாறன்

முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிக்கோள்களும் செய்திகளும் … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பசும்பூண் பாண்டியன்

பசும்பூண் பாண்டியன் என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னன். பூண் என்பது அரசர்கள் மார்பில் அணியும் கவச அணி. பசும்பூண் என்பது பூண் வகைகளில் ஒன்று. பசும்பூண் பாண்டியனின் படைத்தலைவன் அதிகன். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த வாட்போரில் கொங்கர் படை இவனைக் கொன்று ஆரவாரம் செய்தது. பசும்பூண் பாண்டியன் யார் : தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது.மூத்த குடியினன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

நிலந்தரு திருவிற் பாண்டியன்

‘நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து’ தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ‘நிலம் தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்’ எனக் குறிப்பிடப்படுகிறான். இந்த நெடியோன் இரு பெரு வேந்தரும், வேளிரும் சாயும்படி போரிட்டு நிலம் தந்தவன் ‘மண் பல தந்த திரு வீழ் பசும்பூண் பாண்டியன்’ என்பவனின் படைத்தலைவனாக விளங்கியவன் நாலை கிழவன் … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுயுள்ளார்.கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment

தென்னவன்(பாண்டியன்) மறவனே

“தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும், முனிதிறை கொடுக்கும் துப்பின்,தன் மலைத் தெறல் அரு மரபின் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தன ஆரமும், இருபேர் ஆரமும் எழில்பெற அணியும் திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்” -பெருந்தலைச் சாத்தனார்(அகம்:13:5) பொருள்: தன்னுடைய தென்கடலிலே பிறந்த முத்தினை கொத்தாகயுடைய அந்த ஆரத்தை அணிந்தவன்; பகைவர் பணிந்து திறைக்கொடுக்கும் … Continue reading →

Posted in பாண்டியன், மறவர் | Tagged , , | 2 Comments

பாண்டிய மன்னனின் உயிரைக் காத்த மகேசன்

பல ஆண்டுகளுக்கு முன்பு வீரபாகு என்ற மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். இவன் இரவில் தலைநகரை காவல்காக்கும் பொறுப்பையும் ஏற்று இருந்தான். குறிப்பாக, வெளியூர் செல்பவர்களின் வீடுகளை கூடுதலாக காவல்காத்து வந்தான். ஒருநாள் வழக்கம்போல் வீரபாகு பாண்டியன் காவல் பணியில் இருந்த போது, வெளியூர் சென்ற அந்தணர் ஒருவர் நள்ளிரவில் வீடு திரும்பினார். அவரை … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , , | Leave a comment

பாண்டியன் திராவிடனா?

மஹாபாரதத்தில் சஞ்சயன் விவரித்த பாரதவர்ஷத்தின் தென் பகுதி நாடுகளில், திராவிடம், கேரளம், சோள தேசம் என்னும் பெயர்களைக் காண்கிறோம். இவற்றுள் கேரளமும், சோள தேசமும் தொடர்ந்து அதே பெயரால் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் திராவிட தேசம் என்னும் பெயரில் ஒரு நிலப்பகுதி சங்க நூல்களிலும், பிற்காலத் தமிழ் மன்னர்கள் குறித்த விவரங்களிலும் காணப்படவில்லை. அதே போல … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , | 1 Comment

பாண்டியனுக்கு பின்னால் தேவர் என்று போட முடியுமா..?

பாண்டியன் என்ற பெயருக்கு பின்னால் தேவர் என்று போடலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பல நாட்கள் நிலவி வந்தாலும், திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட  ஒரு பிரசித்தி பெற்ற சிவாலயத்தில் உள்ள  கல்வெட்டின் ஆதாரத்தின்படி “பாண்டியன் தேவர்” என்று அப்போதிலிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.அந்த கல்வெட்டில் “ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவருக்கு யாண்டு” என்ற மெய் … Continue reading →

Posted in பாண்டியன் | Tagged , | 1 Comment