16 ஆம் நூற்றாண்டிலே எழுதப்பட்ட இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை என முதலாம் இரகுநாத சேதுபதி என்ற திருமலைரகுநாத சேதுபதி மீது பாடிய பொன்னாங்கால் அமிர்தகவிராயரவர் சேதுபதியை செம்பியர் தோன்றல் செம்பியர் கோன் என பாடியுள்ளபல கண்ணிகளில் சேதிபதிகள் 16 ஆம் நூற்றாண்டு முதல் செம்பியன் என அழைக்கபட்டார் என்ற செய்தி உறுதியாகிறது.
சேதுபதிகள் சோழன் மறவராவர்.இவரை செம்பிநாட்டு மறவர் என வழங்குவர்.பாண்டியநாடு பாண்டி நாடு என கூறுவர். செம்பியன் நாடு செம்பிநாடு என ஆனது. ஒருதுறைக்கோவையிலும் ரகுநாத சேதுபதையை செம்பிநாடன்(60,82) செம்பியர் கோன்(203) செம்பி நாட்டிறை(208) செம்பியர் தோன்றல்(218) என வழங்குதல் காண்க.இச்சேதுபதிகளை இரவிகுலத்தவரெனகூறுதலும் அச் சேதுபதி சாசனங்களில் உள்ள விருதாவளிகளில் முதற்கட் “சோழ மண்டல பிரதிஸ்டாபகன்” ‘அகளங்கன்’ எனவரும் விருதுகளும் இவர் சோழர்மறவராகியவர்கள் சோழநாட்டை விட்டு சேது தீரத்திற் குடியேறிகாலம் இது திரிபுவனதேவன் எனும் பெயர் கொண்டது காரணமாகிறது.இவர்களின் பழைய சாசணங்களிற் பெரும்பாலும் “குலோத்துங்க சோழ நல்லூர்கீழ்பால் விரையாதகண்டனிலிருக்கும் வங்கிசாதிபர்” என சோணாடு ஈண்டுபோந்துகண்ட தலை நகர் குலோத்துங்கசோழநல்லூர் என்பது இங்கு உற்றுனோக்குவதாக.
சோழர்கால கல்வெட்டுகளில் சிலர் மறவரின் கல்வெட்டுகள் இதை உறுதிபடுத்துகிறது.விரையாதகண்டன் எனும் பெயரில் கண்டன் என்பது குலோத்துங்க சோழன் பெயரில் ஒரு பெயராகும்.இக்காலத்து சேதுபதிகள் தலைநகராகிய முகவைக்கு ஒரு காத தூரத்தில் வைகைக்கரையிலே கங்கைகொண்டான் என்னும் பெயரில் ஒரு ஊர் உள்ளது. இச்சேதுநாட்டு வீரபாண்டி,விக்கிரமபாண்டி,வீரசோழன்,சோழபுரம் என்னும் பெயர்கள் இருப்பது நோக்கதக்கது.இச்சேதுபதிகள் சாசணத்தில் அகளங்கன் எனவும். அமிர்தகவிராயர் அபயரகுநாதசேதுபதி,செம்பியன்,அநபாயன் ரகுந்தாதன்(242) புணர்செம்பியன்,சென்னிக்கும் சென்னி ரகுநாதன் என கான்க. இரவிகுலமென்பதுபற்றி சோழரின் குலமாகிலும் இரவி குலத்தில் தோன்றிய சீராமமூர்த்திபெயரே இவர்களுக்குபெயராக வைத்து ரகுநாதசேதுபதியெனச்சிறப்பித்து வழங்கினர் போலும் இச்சேதுபதிகளில் இராஜசூரியசேதுபதி எனவும் சூரியன் புன்னாடட் சோழன் பெயரே. சோழன்மறவனாகிய பண்ணன் பெயர்வழக்கம் இராசசிங்கமங்கலம் ஊரின் அருகே உள்ள பண்ணக்கோட்டை எனவும். சிறுகுடியெனவும் வழங்கும் ஊர்கள் இரண்டும் உள்ளன.தொண்டி சோழரின் துரைமுகங்களில் ஒன்று. சேதுபதிகளின் விருதுவாளிகளின் தொண்டியன் துறைகாவலன் என்னும் பெயர் சேதுபதிகளுக்கு உண்டு.இம்மறவரை தேவரென சிறப்பு பெயர் புனைவதாலும் குலோத்துங்க சோழதேவன்,திரிபுவந தேவன்,இராஜ இராஜ தேவன் என தேவருருவாய் நின்று உலகங்காத்தலின் அரசனைத்தேவன் என்பர் உனர்க.இனி இம்மறவர் புனைகின்ற முல்லை மாலை சோழர்க்குரியதாகும். முல்லையத்தார் செம்பியன்(பாடான் படலாம்-24). என ஐயனாரிதனார் கூறினர்.இச்சேதுபதி “முல்லைவீர தொடை புனைவோன் ரகுநாதன்”(6). இச்சேதுபதிகள் சோழன் மறவர் வழிதோன்றலே என நன்குணரலாம்.
‘திருவுடை மன்னரெல்லாம் திருமால் கூறாவர் ரகுநாதன்’ எனப்பேர் பெற்றது ஸ்ரீ ராம தோன்றிய சூரியகுலத்தவதரித்த விஜயரகுநாதன் என்பதை பேராக கொண்டனர் எனலாம்.குலோத்துங்க சேதுபதியின் புத்திரராகிய சமரகோலாகல சேதுபதி சோழமன்னரிடத்தில் குடாக்கடலில் முத்துகுளீக்கும் உரிமையை பெற்ரனராதலால் தமது கடல்வளமுடைமை பெயர்களே “முத்து” என பெயர் பட்டனர்.இச்சேதுபதிகள் பயன்படுத்திய அரிய வளரிபயிற்ச்சியும்,வீரக்கழல் அனிந்தமைசிற்றம்பல கவிராயர் பாடிய தளசிங்கமாலையில்,”கீர்த்தியுஞ் செந்தமிழ் நிலையாகு……விசய ரகுநாத சேது தளசிங்கமே”.சோழரால் நாடாட்சி பிரித்தளிக்கப்பட்ட திரையர் எல்லாம் தொண்டைமான்கள் என பெயர் கொண்டார்போல், இச்சேதுபதிகளால் நாடாட்சி பெற்றவர் புதுக்கோட்டை தொண்டைமானாகும்.”சூரியன் போற்றுமிராமேசர் நாளினைக் கன்புவைத்தை சூரியன் வீரையர்கோன் ரகுநாதன்” என சேதுபதிகளை குறிக்கிறது.இச்சேதுபதிகள் இராமநாதபுரமாகிய முகவையை தமக்குரிய தலைநகராகக் கொள்ளுதற்கு முன்னே சேது நாட்டிற் பல ஊர்களை தலைநகராக கொண்டு ஆண்டுள்ளனர் அவை
1)குலோத்துங்க சோழ நல்லூர்2)விரையாதகண்டன்3)செம்பினேந்தல்4)கரந்தை5)வீரையம்6)தேவை(இராமேஸ்வரம்)7)மணவை8)மழவை9)புகலூர்(போகலூர்)
இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை-பொன்னாங்கால் அமிர்தகவிராயரவர்
பூமேவுதெய்வந்தளிர்முகைபூத்தபொற்கோலவல்லி நாமேவுகல்விப்புயறளவாயரகுநாதனிசைப் பாமேவுகந்தகிரிமணிச்சாரற்பளிக்கறைசூழ் காமேவுமற்புதநம்பாலத்துக்களிதருமே. (1)
சூலங்கைக்கொண்டவிராமேசாதாணமுடிசூடியெழு ஞாலங்கைக்கொண்டரகுநாதன்செம்பிநாடனையீர் சேலங்கைக்கொண்டுயாவல்லமெனபாலருளசெய்தனனல்ல காலங்கைக்கொண்டரசாளவதுபார்த்திருங்கண்களித்தே. (2)
ஆயுந்தமிழினும்போரினும்பாரிலகத்தியனுஞ் சேயும்புகழ்தளவாய்ரகுநாதன்சிலம்பில்வள்ளை பாயுங்கயலிந்தநேமிகண்டாலெனப்பார்த்திடினான் றோயுந்தடமெனவேயணங்கேயுனைச்சொல்லுவனே. (3)
தேனார்மணமுல்லைவெண்டாரும்பைந்தமிழ்ச்செந்தொடையுந் தானார்தடம்புயத்தான்ரகுநாதன்றமிழ்ச்சிலம்பில் வானாரிளம்பிறைவாணுதலீர்தும்பிவாழுமுங்கள் கானார்குறிஞ்சியிற்செல்கின்றதாரையைக்காட்டிடுமே. (4)
பண்டேந்தியசங்கினம்போலமல்லிகைப்பாசமுகைச் செண்டேந்தியகரத்தான்ரகுநாயகன்றேவைவெற்பில் வண்டேந்தியசெங்கைவாழ்வேயென்னெஞ்சமறுகுமதங் கொண்டேந்தியவெங்கரிக்கோடுதோயுங்குருதிகண்டே. (5)
வானைச்சுரபியைச்சிந்தாமணியைமந்தாரமென்னுங் கானைப்பொருகொடையான்ரகுநாயகன்கந்தகிரிச் சோனைப்புதுமதுவார்குழலீரித்துதிக்கைவெம்போ ரானைக்கிசையிலலங்காரமானுக்கழகல்லவே. (6)
போரேறுவெங்கணரக்கன்முன்மாதலிபூட்டியபொற் றேரேறுசிங்கம்ரகுநாதன்றேவைச்சிலம்பில்வெய்ய காரேறுவன்கண்மைசேர்கையுற்றாயொருகாளைபின்சேர் வாரேறுகொங்கையைநீதடுத்தாயிலைவன்புறவே. (7)
மைம்மானிகர்த்தமலைவளர்காதலிமாதுவளர் பெம்மானருட்குரியோன்ரகுநாதன்பிறங்கலன்னீர் கைம்மான்குதிக்கறியாதென்றுநீரென்கலைமதிக்கு ளிம்மான்குதிக்குமென்றோபிடித்தீர்கையிரண்டினுமே. (8)
ஆரத்தொடையிடைநீலமிட்டாங்களிதோயுமுல்லை வீரத்தொடைபுனைவோன்ரஙுநாயகன்வெற்பனையீர் மாரத்தொடைக்குண்முகைத்தாமரைவிட்டுவன்கொலைசூழ் கோரத்தொடையெனவோபுதைத்தீரமைக்குவலயமே. (9)
நடைநிலஞ்சாதிகுலமோடறிவங்கநல்லதந்திப் படையணிசேர்முன்றிலான்ரகுநாதன்பனிவரைவாய்க் குடையலர்காந்தளம்பூம்போதுதன்னைக்குறிஞ்சியெங்கோ னுடையதண்போதென்னவோவிழியூடுகொண்டொத்தியதே. (10)
இயலைத்தலைபெற்றமுத்தமிழ்வாணர்க்கெழுமடங்கு புயலைப்பொருவுகையான்ரகுநாதன்பொருப்பனையீர் முயலைத்தவிர்த்தமதியூடுலாவியமூரிவரிக் கயலைப்பிடிப்பதென்னோகுறமாதாகளிறிஈழ்ந்தே. (11)
வரைசேர்மருமததிருவஞ்சியாடமணியுஞ்சலாம் விரைசோதளவத்தொடைரகுநாயகன்வெற்பிலின்ப வுரைசேர்தமனியப்பாவாய்செந்தேனங்கையூடுறமின் னிரைசேரமிர்தகடத்தையென்னோவிட்டுநிற்கின்றதே. (12)
பாகந்தருமிசைவல்லோர்க்குமான்மதம்பாய்தருகை மேகந்தருகளவாயரகுநாயகன்வெற்பிலிந்திர போகந்தருகளியானையிலேறுமென்புந்தியின்ப மோகந்தருகிளியேதிட்டிசோதன்முறையல்லவே. (13)
நாகஞ்செறிமலர்ப்பூங்காவும்பொய்கையுநான்மறையும் நாகஞ்செறிதமிழ்த்தேவையாகோன்ரகுநாதன்வெற்பில் நாகஞ்செறிகின்றதென்மதிசாயநற்பார்வைதன்னை நாகஞ்செறிவஞ்சியாய்மறைத்தாயதுநன்றலவே. (14)
மாவானசூரனிருப்பையெல்லாமத்திவாய்க்குதவுந் தேவானவனைப்பணிரகுநாதன்சிலம்பிலென்மேற் காவானபைங்குழலீர்படினோமென்றுகைகளினாற் பூவானதுந்தடுத்தீர்விடுத்தீர்பொற்பொருப்பினையே. (15)
தார்கொண்டபாடலம்பேரோடையாம்பறருங்கமலச் சீர்கொண்டசெங்கரத்தான்ரகுநாயகன்றேவைவெற்பி லோகொண்டநீலமடலேறுகைபெரிதீனமன்றோ வார்கொண்டகொம்மைப்புளகப்படாமுலைவஞ்சியர்க்கே. (16)
தன்னம்புயத்திற்குவலயந்தார்முல்லைதாங்கிமன்னர் சின்னம்பறித்தரகுநாதன்றேவைச்சிலம்பிலின்று பொன்னங்குடத்தையெதிற்காண்டலென்னமைப்போதங்கண்டாற் கன்னங்கறுத்தகுழலாய்நற்காரிகையங்கைப்பலனே. (17)
செந்தாதும்பூவுஞ்சுருதிவண்டார்ப்பத்தினம்பொழியு மந்தாரமன்னகையான்ரகுநாதன்மழவையன்னீர் நந்தாமணம்பெறவந்தேனுக்கின்றுநறியமல ரந்தாமரையொளித்தீரளித்தீர்சிற்றரும்பினையே. (18)
பாரேழ்கழனியும்வாடாதுதன்மப்பயிர்விளைக்குங் *ரேயனையரகுநாதன்றேவைக்கனங்குழையீர் நீரேபொறிவெம்படநாகங்கைவிட்டுநின்றுவெய்ய புரிநஞ்சமெவ்வாறுகையிற்றொடுகின்றதே. (19)
தாழுங்குழலும்பசுந்தேனும்பாகுமிசைந்துகுடி வாழுந்திருமொழியாய்ரகுநாதன்மணவைவுண்டு சூளுங்களபமுலையானைமுன்னித்துயர்க்கடல்வாய் வீழுங்கொடுமையெல்லாங்கண்டிலார்செங்கைவேலவரே. (20)
நீலக்கரும்புயறாகணமவெண்ணிலாவணிந்து ஞாலத்துவந்தமின்னேதளவாய்ரகுநாதன்வரைக் கோலத்தினைக்குளினமென்றுமானினங்கூடுமென்றோ காலப்புதைத்துநின்றாய்செங்கண்வேழந்தருங்கொங்கையே. (21)
*யென்றுவந்ததளவாய்க்குநாவலந்தீவிற்குமோர் *யென்றுவந்தரகுநாதன்றேவைத்தமிழ்வரைமேற் *யென்றுவில்வக்கனியளித்தீரென்கலைமதிக்கு *யென்றுசற்றுமலராதுபாணிக்குண்மைம்மலரே. (22)
கோட்டந்தவிர்த்தகுடைமன்னர்கேசரிகூட்டமன்ன ராட்டந்தவிர்த்தரசுநாதன்வெற்பிலென்னாருயிர்க்கு வாட்டந்தவிர்த்தவரிவிழியாரைமறைத்தருளி னீட்டந்தவிர்ப்பதென்னோகுன்றவாணரிளங்கொடியே. (23)
ககராசவீரனெங்கேதனத்தான்கந்தமாதனப்பொன் னகராசன்வீரைக்கிறைதளவாய்ரகுநாதன்வரைச் சிகராசலத்தின்மலராதநீதிதெளிந்துகொண்டோ மகராலயத்தின்மலரவைத்தீர்செம்மலர்க்கஞ்சமே. (24)
கம்பக்கருணைபந்தேனூறுஞானக்கனியருள்சே ரும்பாக்கரரசனையான்ரகுநாதனுயர்வரைவாய் விம்பக்கனியிதழீர்மணிமார்பில்வெங்கோடுடைய கும்பக்கரிகொடிதாம்விலக்கீர்மதகுஞ்சரமே. (25)
தொடைபெற்றகொண்டல்பிறையிளநீர்சுமந்தோதிமத்தி னடைபெற்றகன்னிக்கரும்பனையாய்ரகுநாயகன்வேற் படைபெற்றசெங்கையும்வேழமுமாய்நிற்றல்பார்த்துமதிக் குடைபெற்றவெய்யவனெய்யவன்போர்க்குறிகொண்டனனே. (26)
கீதங்குழல்கஞ்சம்வீணைதடாரிகிளந்தபஞ்ச நாதஞ்சிலம்பியதேவையர்கோன்ரகுநாதன்வரைக் காதங்கமழ்குழலீரெனதாவிகலக்கில்வரு மேதம்பெரிதென்னவோமறைத்தீரின்றிணைக்கயலே. (27)
பண்மூடியசெங்கனியிதழீரெழுபாரகந்தன் ணுண்மூடியபுகழான்ரகுநாதனுயர்வரைவாய்க் கண்மூடியோகியர்போலநின்றீரிக்கருத்தினுக்கு விண்மூடியவரைகைவிடிலேதம்விளைவிக்குமே. (28)
மேகந்தருமணிவெண்மத்தராசியின்மென்மலர்ப்புன் னாகந்தருகடற்றேவையர்கோன்ரகுநாதன்வெற்பி லேகந்தருபதின்மூன்றொன்பதான்மறைத்திங்குநின்றீ ராகந்தருமைந்துமொன்பதுமேவெளியாகியதே. (29)
பாவாய்நிறைகின்றசெம்பொருளோடுநற்பைம்பொருளு நாவாய்கருகடற்றேனவயர்கோன்ரகுநாதன்வரைப் பூவாய்மனுமுறையாலெமைவாழப்புரக்குமிளங் கோவாய்வரையிறைமறைத்தாலதுகொள்கையன்றே. (30)
வில்லிளங்காளை மயில்காப்பமானைவெகுண்டெழுந்த நல்லிளங்கேசரிதேவையர்கோன்ரகுநாதன்வரை வல்லிளங்கோலமணிமுலைசாலவருத்தும்வண்டு புல்லிளங்காமர்விரிந்தசெங்காந்தட்புதுமலரே. (31)
கல்லொன்றிரண்டிளநீர்தாங்கிமுன்வரக்கண்டுமுனி சொல்லென்றுநின்ற ரகுநாதன்றேவைச்சுரும்பின்மணி வில்லொன்றுவாணுதலீர்செப்பினூடத்தமேவுமல்லா லல்லொன்றுநீலக்கடலூடுசேர்ப்பதறிவின்மையே. (32)
பண்ணார்குதலைக்கனிவாய்சிவந்தபசுங்கிளியீர் நண்ணார்சமரிற்புலிதளவாய்ரகுநாதன்வரைக் கண்ணாரிணைக்கயன்மங்கலமாமெனக்கைக்கொண்டநீர் தண்ணார்தரளமணிக்கும்பநீக்குதறக்கதன்றே. (33)
சந்தேறியதடஞ்சாரலிலாயிரந்தண்மதிபோ னந்தேறியகந்தமாதனத்தான்ரகுநாதன்வரைக் கொந்தேறியமலர்வாள்புனைந்தீர்மதகுஞ்சரந்தேன் வந்தேறியமொழியீர்புனைவீர்செங்கைமாமலரே. (34)
கார்பூத்தபுன்னைவெள்ளோதிமஞ்சீதரன்கைவளைபோ லேர்பூத்ததேவையர்கோன்ரகுநாயகனேமவெற்பில் வார்பூத்தபூண்முலையீரறிந்தாய்ந்துமணப்பதற்கோ தார்பூத்தசெங்கையிலேந்திநின்றீரின்பசாகரமே. (35)
பால்வாய்ப்பசுந்தமிழ்வீசியவாசம்பரந்தவைகைக் கால்வாய்த்தவீரையர்கோன்ரகுநாதன்கரந்தைவெற்பின் மேல்வாய்த்திருந்தவெழுத்தாறரிதின்விளங்குமென்றோ நூல்வாய்த்தநுண்ணிடையீர்மறைந்தீரணிநோக்கினையே. (36)
ஆவியும்பூவுந்தகரமுந்தேனுமணிந்துநறு காவியுஞ்சேர்குழலீர்தளவாய்ரகுநாதன்வரைக் காவியங்கைபுனைந்தீர்விடுத்தீர்தனங்கஞ்சமலர்த் தேவியும்போலநின்றீர்விருப்பேதுங்கள்சிந்தனக்கே. (37)
வாவிக்குளொற்றைவனசமென்றோதுமைவானிலங்குங் காவிச்செழுங்குடையான்ரகுநாயகன்காவிரிநாட் டாவிக்குயிர்தந்தகோட்டூர்தொழுதனமப்படிநீர் சேவிக்கநல்குங்கமலாலயமுத்திசித்திக்கவே. (38)
சங்கேகொடைத்தருவேயெனவாழ்வுதருங்கருட வெங்கேதனத்தளவாய்ரகுநாயகன் வீரைசுற்றும் பங்கேருகத்தனமேயொளிசோதனபாரமலை யிங்கேயிருக்கக்கடலேறினாரென்னிறையவரே. (39)
கன்னித்திரைச்சங்குமிப்பியுமீனுங்கராவுமொளிர நன்னிகதிலஞ்சொரிதேவையர்கோன்ரகுநாதன்வெற்பின் மின்னிற்சிறந்தமின்னேகரிக்கோட்டுவெண்முத்திருக்க மன்னித்திகழ்கஞ்சமுத்தமென்னோகைவளைகின்றதே. (40)
போரயினாகம்புலிசிலைவாள்வெம்பொறிவழங்கு மாரெயில்வீரையர்கோன்ரகுநாதனணிவரைக்கு ணீரரணாகியமைவேலைகைக்கொண்டநேரிழையீர் பேரரணானகிரிதுர்க்கநீக்குதல்பெண்புத்தியே. (41)
திரையோங்குபாற்கடற்பூந்தாமரைச்செழுந்தேனிருக்கும் வரையோங்குமார்பன்ரகுநாதன்றேவைமணிவரைமேல் விரையோங்குபங்கயந்தாங்கியநீரிருவெற்பொளித்தா லுரையோங்குவிண்மணியெண்மணினீரென்றுரைசெய்வரே. (42)
மதிசேரமுதவிதழியஞ்சீதளவாசனவகை நதிசேர்தெளிபுனல்வீரையர்கோன்ரகுநாதன்வரைப் பதிசேரிளமுலைசங்கிலிகாட்டும்பணியணிந்தாய் துதிசேர்பரவையுங்காட்டிலென்போலில்லைசுந்தரனே. (43)
முள்ளராவெங்கானந்திரைவரைவானமுகடுசென்று நள்ளராபுகவெஞ்சிலைகுனிந்தோன்ரகுநாதன்வரைக் கள்ளராகருங்குழலீர்கொடுங்கூற்றையுங்கையமைத்தீர் புள்ளராதமைவிலக்கீரெமைவாழப்புரக்கிலின்றே. (44)
போற்றுங்கமடம்பணிகுலநாகம்பொறுத்தசுமை யாற்றும்புயவரையான்ரகுநாதனணிவரையீர் தோற்றுங்கயலைமறைத்தீர்பொற்கஞ்சமுந்தோற்றுவித்தீர் சாற்றும்பொழுதினினீரோமதுரைத்தடம்பொய்கையே. (45)
நறைபெற்றமாலைக்கதிர்வேலுமாலுமெந்நாளுஞ்செவ்வி யுறைபெற்றதேவைரகுநாதன்வெற்பிலென்னுள்ளமென்னுங் குறைபெற்றதாருவைமைந்நீலவண்டுகுடைந்துதிரா திறைபெற்றபோதமைத்தீர்வந்துசாய்க்குமிபக்குன்றமே. (46)
ஆடகமாமதில்வீரையர்கோன்வண்டலம்புமுல்லை யேடலர்மாலிகையான்ரகுநாயகனேமவெற்பிற் சூடகமேவுகைக்கொண்டீர்குவலயந்தோகையன்னீர் கூடலைவேண்டிவந்தேனளித்தீர்பரங்குன்றினையே. (47)
கங்கமுஞ்சீனமுஞ்சோனகநாடுங்கலிங்கமும்போர் வஙகமுஞ்சேரமுன்றிலானரகுநாதன்மணவைவரைச் சிங்கமுஞ்சாயவருகரிப்போரிலென்சிற்றுயிரு மங்கமுந்தேய்வதுபார்த்திரங்காததென்னாரணங்கே. (48)
நூலுந்துடியுங்கொடிமின்னுநாகமுநுண்மதியும் போலுந்தளரிடையாயரகுநாதன்புனற்கரந்தைச் சேலுங்கமலமுங்காவியுமாவுந்தெவ்வேந்தைவென்ற வேலும்பொருவும்விழியையெந்நாட்கண்டுமேவுவனே. (49)
மல்குங்கிரணமணிசெம்பொன்வாரிமருங்கிருபா னல்குநதிரைவைகைநாடனெங்கோன்ரகுநாதன்முறைப் புல்கும்பதியில்விசும்பிடைநீண்டுபுகுகருமீ னொல்குந்துடியிடைதோற்றாதென்றோவின்றொளிக்கின்றதே. (50)
மகக்கண்ணிற்சீலமறையோரைவாழ்வித்துவான்கொணர்ந்து சகக்கண்ணிற்சேர்த்தரகுநாதன்றேவைச்சயிலமன்னீர் முகக்கண்ணிற்காண்டலரிதென்பதோவிழிமூடியன்பா லகக்கண்ணிற்காணப்பதிநோக்கினீர்நன்றறிவுமக்கே. (51)
மலைவேலிவையும்புரந்தசெங்கோன்மனுராசன்மனுக் கலைநூறெரிந்தவெங்கோன்ரகுநாதன்கரந்தைவெற்பிற் றொலையாதிருந்தெம்மனத்தூடுதோன்றுந்துயர்தொலைக்கக் கொலைவேலிருந்தகையாற்குறிப்பீர்மணிக்கொம்பினையே. (52)
தேசிகப்போதணிசண்பகக்காடுதிருந்திழையார் நாசியொப்பாமலாவீரையர்கோன்ரகுநாதன்வரைப் பாசிழைப்பூவைமுகைக்கோங்கில்வேடன்கைப்பாணமுற்றாற் காசினிப்பாலுனைப்பாலையென்பார்கலைகற்றவரே. (53)
முகைநாட்டியமுன்றின்முல்லைநல்லார்தம்முகமதிவெண் ணகைகாட்டியபுகலூர்த்தளவாய்ரகுநாதன்வரைத் தகைகாட்டியசெவ்விளநீரிலம்புயஞ்சாரிலகிற் புகைகாட்டியகுழனான்போகிநீயும்புனலுலகே. (54)
ஆடியதோகையன்னார்முகம்போன்மதியம்பொனெயில் சூடியகாதனைப்பதிரகுநாதன்சுரும்பில்வன நீடியபெண்ணைக்குரும்பைகண்டேன்மலர்நெய்தல்கண்டால் வாடியசிற்றிடை யீருமைப்போலுமணலுலகே. (55)
கொத்தூர்குழலியர்கண்டமொப்பாவெழில்கொண்டமுத்தீ னத்தூர்கரந்தைரகுநாயகன்செம்பிநாட்டுவரை முத்தூர்மருப்பிற்கருவிளங்காணின்முளரிமல ரொத்தூர்மதிமுகத்தீருமைக்கார்வெற்புலகென்பரே. (56)
தொடைகாட்டும்பூங்குழலார்நடைபோலிளந்தூவியன்ன நடைகாட்டும்வைகையம்பூந்துறையான்ரகுநாதன்வெற்பி லிடைகாட்டுநூல்வெற்பிளமுலைகாட்டுமிளங்கொடியீர் படைகாட்டுமைவிழிகண்டுரைப்பேனிப்படியென்னவே. (57)
பூவாளாவாவிக்கமலமும்வீதியும்பொன்மனையு மாவாளாதேவைப்பதிரகுநாதன்மணிவரைமேற் கோவளர்தானத்தினங்கன்றுசேர்கைகுறித்தமைத்தீர் காவளர்பூவைக்கரசுமைப்போலெவர்காசினிக்கே. (58)
அறங்காவல்கொண்டமனுமுறையாலணிநாவசைந்து கறங்காமணிமுன்றிலான்ரகுநாதன்கரந்தையன்னீ ருறங்காதவெங்கண்மதகரிபாயநெஞ்சூடுருவிப் புறங்காணிலார்பொறுப்பார்பிணைபாயப்பொறுக்கினுமே! (59)
நங்காமதேனுவெனவந்தகார்செம்பிநாடனுயர் செங்காவியங்குடையான்ரகுநாதன்சிலம்பின்மிக்க வெங்காமவெய்யவிடாய்க்கிளநீர்தந்துவெவ்விடத்தை யங்காமவல்லிநல்லீர்மறைத்தீர்நன்றறிவுமக்கே. (60) நிலையேந்துமாளிகைமாளிகைமாதர்கணெஞ்சமதிக் கலையேந்துந்தேவைரகுநாதன்வெற்பில்வெங்கள்ளைவரிச் சிலையேந்தும்வாணுதலீரங்கையேந்துஞ்செயலிதென்னோ விலையேந்துமாணிக்கவள்ளமிங்கேவைத்துமெய்ம்மறந்தே. (61)
பொற்பனைவேழம்புரவிவெள்ளோதிமம்பூவையர்தோ ணற்பணைமேவுங்கரந்தையர்கோன்ரகுநாதன்மணி வெற்பணைவாழ்வெமதென்றோமறைத்துமைவேலைவளர் கற்பணைதோகைமயிலேவரைவளங்காட்டியதே. (62) வீரைக்குள்வந்தசிந்தாமணிநீதீவிளங்கவெழு பாரைப்புரந்தரகுநாதன்வெற்பிற்பகலில்விண்சேர் தாரைக்குலம்புவிகாணவொண்ணாதெனுந்தன்மைகொண்டோ வாரைச்சுமந்ததனத்தாய்நின்செங்கைமறைக்கின்றதே. (63) வழியும்பிரகமலர்முல்லையான்வையமேழும்பொய்யும் பழியுந்தவிர்த்தரகுநாதசேதுபதிவரையீர் மொழியுங்குவலயம்பாணியினாலின்றுமூடவந்து சுழியுந்திரையுங்குமிழியுந்தோன்றித்துயர்செய்யுமே. (64)
சத்தந்தெளிக்குங்கலைவாணர்சங்கத்தமிழ்க்குருகிச் சித்தங்களிக்கும்ரகுநாதன்றேவைச்சிலம்பின்மணி முத்தம்பதிக்கும்பவளச்செவ்வாயிளமூரன்மின்னே யத்தந்தனக்குக்கடல்பொருந்தாதென்பராய்ந்தவரே. (65)
முந்நீர்சொரிமுத்தமாணிக்கராசிமுகந்தருவி நன்னீர்சொரிகந்தமாதனத்தான்ரகுநாதன்வரைப் பொன்னீர்பவளத்தமுதெமக்கீயும்பொழுதினஞ்சு தன்னீர்தருமெனவோமறைத்தீர்செழுந்தாமரைக்கே (66)
மானார்விழியெனமைந்நீலம்பூத்தவயற்புகலூர் ஞானாகரனிசைசேர்தளவாய்ரகுநாதன்வரைக் கானார்கருங்குழலீர்சுறவார்கடல்கைப்படுத்தீ ரானால்விடுத்ததென்னீர்வரையீழத்தகலிடமே. (67)
நல்லார்னகைக்குமனைவளர்தாளிநனைமலரு மல்லார்கரந்தைரகுநாதன்றேவைவரையின்மணிக் கல்லார்கனங்குழையீர்மருண்டீரின்றுகண்டசர மெல்லார்வரிவளைக்கைபுனைந்தீர்குருகெய்தவுமே. (68) ஆரியர்போற்றுமிராமேசர்தாளிணைக்கன்புவைத்த சூரியன்வீரையர்கோன்ரகுநாதன்சுரும்பிலின்று கூரியவாளிரண்டங்கையிலேந்தியகொங்கையிளங் காரிகையீருமைமாதங்கியாரென்பர்கண்டவரே. (69)
வாளும்பரசும்வயிரமுமேகொண்டுமாற்றலரை யாளுந்தனிவடிவேல்ரகுநாதனணிவரையீர் தோளுங்கரும்புமெனதாருயிர்வந்துசூரைகொள்ள நீளுங்கணைகொண்டுநின்றாலெவ்வாறுயிர்நிற்கின்றதே (70) இலையேதழைத்துக்கொழுங்கனல்பூத்திகல்காயத்துவெய்ய கொலையேபழுத்தசெவ்வேல்ரகுநாதனைக்கூடலர்போன் மலையேயெனக்களித்தீர்கடலேறுகைவாய்த்துநின்றீர் சிலையேபடைத்ததுநுதலீர்திகைத்ததென்சிந்தனையே. (71)
நெய்வாய்ததிகன்மன்னர்சோரியின்மூழ்கிநிணமருந்து மைவாய்த்தவேற்படையான்ரகுநாதன்மணவையன்னீர் மெய்வாய்த்த கோலவனமுலையார்தம்மைவிட்டுவளைக் கைவாய்த்தமைவிழியாருடன்சேர்தல்கடனல்லவே. (72) செம்பேந்தியமதில்வீரையர்கோன்முச்செகமனைத்து நம்பேந்திவாழுமனுமுறையான்ரகுநாதன்வெற்பி லம்பேந்திநிற்பதுங்கண்டேனினியுன்றனங்கையினாற் கொம்பேந்திநின்றென்னிடையூறுதீரக்குறிக்கொள்ளுமே. (73)
பாவுக்கிசையும்பெயரேபுனைந்துமெய்ப்பாவலர்தந் நாவுக்கிசையும்பெரும்புகழான்ரகுநாதன்வரைக் கோவுக்கிறையின்றளித்தீரெமக்குக்கொடுத்தவிரு மாவுக்கிறையிலிசெய்தீர்புகழும்வகையறிந்தே. (74) தாருஞ்சிலையுங்கலவையும்பூணுந்தருந்தருவுங் காரும்பொருவுகையான்ரகுநாதன்கரந்தையன்னீர் வாருந்துவண்டாமருங்குலுநானும்வருந்தலைநீர் பாருங்கொடிதுகொடிதுகண்டீரிப்பணைமுலையே. (75)
கார்த்தலந்தோயுங்கொடிமதில்சூழுங்கரந்தையர்கோன் பார்த்தலம்போற்றும்ரகுநாதன்வெற்பிற்சுங்கதிர்ப்பூண் சேர்த்தலங்காரித்தமின்னேயினிமைச்செந்தேனிங்ஙனே கூர்த்தலங்கைத்தலமேவியவாறுகொடுமையின்றே. (76) மடற்கேதகைசுற்றுந்தேவையர்கோன்வயமன்னர்க்கெல்லா மடற்கேசரிதளவாய்ரகுநாதனணிவரையீர் விடற்கேதுணிவுற்றிருநாகமும்வெளிவிட்டுவெங்கட் கடற்கேதிருநெடும்பூட்கைதந்தீரென்னகாரணமே. (77)
மேவியதூதின்மெலிவுரைத்தெயன்றுமெய்த்தரும னேவியமேகம்ரகுநாதன்றேவையிலெண்டிசையுந் தாவியசெங்கண்மடப்பிணைக்கேயிறைதாவவுயி ரோவியநீகொடுத்தாலென்செய்யாதிவ்வுலகினையே. (78) சொற்பேறுபெற்றதளவாயெனுந்துரைராயனரு ணற்பேறுதேவைரகுநாயகன்செம்பிநாட்டிலுயர் வெற்பேறவிட்டுத்துணையாகணணேணிவிரைந்தொளிக்கா லறபேறுநெஞ்சமினியென்படாதுபெண்ணாரமுதே (79)
கோங்கராமுகிழ்முலைக்கொம்பரனனீரண்டகோளமெல்லா நீங்காதமெய்ப்புகழானரகுநாதனெடுங்கரந்தைப் பாங்கார்கொடிகயறாங்கநின்றீ*கணபயோத தீங்க நகளையிடிலாங்காணமதிகுலத்தென்னவனே (80)
தூதேக நதகவிகுலமாமணிதோன்றுகொடி மீதேயுயாத்தரகுநாயகன்றமிழவிசைலிப் போதேவனத்தினிறைகங்கைமேவப்புரிநரச- மாதேயுனையுஞ்சொல்லாமாவிகுலமன்னனென்றே (81) செய்க்கஞ்சன*த**யில்செம்பிநாடன்சினவடிவேற் பொய்க்கஞ்சன**பொருரகுநாதன்**கி*மேன மெய்க்கஞ்சன***மினனேயதிசயமெல்லியநின் கைக்கஞ்சன***கவிங்கெனக்கேதனங்கண்ணுற்றேதே (82)
கனமேயெனுஞ்செங்கனிமொழிமாசிலைக்காரவிசயன் றிண்டோக*வும்ரகுநாதன்வெற்பிற்செந்தாமரைமேற் கொண்டேகுவளையிருத்தல்கண்டேனக்குவளையின்மேற் வண்டேயகமலமுங்கண்டேனிதுவென்னமாயங்களே (83) நீதசந்தாததளவாய்குமாரனெடுங்கரு- – – கேதனங்கொண்டரகுநாதன்றேவைக-ளா-த மாகனங்கண்டுவந்தேன்றனுக்கோடிவளை—-த போதனம்போனையீர்கண்டுநானுடல்பூரிப்பதே (84)
ஊனிடமானமுனைவேற்பகைதிகைத்தோடிநெடுங் கானிடமாகவென்றோன்ரகுநாயகன்கந்தகிரித் தேனி மாமொழியீகணபதே*திறசெறிவிலங்*கை மானி மாக்கிவிட்டீருமைப்போலெவர்வல்லவரே (85) கானோ*ருப்புமருவியும்போறகழ்முல்லை-த்த தானேவிளங்கும்புயரகுநாதன்றமிழ்க்கரந்தைத் தேனேவளவனிலைமைவிட்டேகெனத்தென்பொதிய மானே***தன்னமேபுண்டரீகமணிக்கொடியே (86)
சீலத்துமிக்கதளவாயளித்தருள்செல்வனொரு காலத்தும்பொய்யுரையான்ரகுநாதன்கரந்தைநகர் போலத்துவங்கும்பொலங்குழையீர்சென்றுபூம்புன்றோ யாலத்துமாந்தளிர்கண்டோமிதுவென்னவற்புதமே. (87) நடுப்பதுமாலயமாதனையாயநடைகற்றவன்றே கொடுப்பதுங்கற்றரகுநாதன்றேவைக்குவட்டின்மத னெடுப்பதுமெய்வதும்பாராய்வளைதருமிக்கையினி லடுப்பதுங்கஞ்சத்தரும்பாகுமவேலுக்கழகல்லவே. (88)
மெய்ம்மலராசனமின்னான்மிதிலையில்வில்வளைத்த கைம்மலர்மேகந்துரைரகுநாதன்;கரந்தைவெற்பிற் செம்மலர்மேவவுந்தேனுளதேயன்றித்தேனிடத்தி லம்மலர்தோற்றுங்கொல்லோசொல்லுவாய்முல்லையாரணங்கே. (89) வணங்காததெவ்வைப்பொருமால்சொரிமுத்துவன்னியன்பொன் னணங்காருமார்பன்ரகுநாதன்றேவையணிவரைமேற் குணங்காதலிக்குநெடுமீனந்தன்னுடன்கூடியத்த மிணங்காதிணங்குமழியாதகன்னியிளம்பிடியே. (90)
முறையுந்தருமமுநீங்காதமானமும்முரசுமன்னா திறையுந்தருமுன்றிலான்ரகுநாயகன்றேவைவெற்பி னிறையுங்கமலத்திருப்பதல்லாலிந்திரநீலத்தின்மே லிறையுங்குடிபுக்கிருப்பதுண்டோபுவியேழினுமே. (91) கலைக்கேநெடுங்கடலன்னானடைக்கலங்காததவன்செஞ் சிலைக்கேவிசயன்ரகுநாயகன்றமிழ்த்தேவையிலா லிலைக்கேகருங்கொழுந்தேந்துமின்னேகுன்றியற்கையன்றோ வலைக்கேவளாவதென்றோசங்கபாணியமாகின்றதே. (92)
பணையேதடங்கண்டுயிலாதவீனாப்பதியுரக வணையேதுயிலும்ரகுநாதன்வெற்பிலென்னாருயிர்க்குத் துணையேயுனைவந்திரந்தேற்குவெந்துயர்தோன்றவடிக் கணையேபிடித்துச்சிலைவிடுத்தாய்கற்றகல்விநன்றே. (93)
நெய்க்கின்றகூந்தற்கொடியிடையீர்மனுநீதியினான் மெய்க்கின்றவாய்மைரகுநாயகன்றந்தவெற்பிலிப்போ துயக்கின்றமான்மறியும்புண்டரீகமுமோரிடைநீர் வைக்கின்றநீதியினாலிணையோவஞ்சிமன்னனுமே. (94)
பிறியாததெவ்வர்க்கும்பின்னிட்டபேர்க்கும்பிறங்கிலைவே லெறியாதவன்ரகுநாயகன்றேவையிலென்றுங்கணமே யறியாதசிற்றிடையீர்பொருந்தாரையடைக்கியநீர் பொறியாதுவிட்டதென்னோபொறிசூழ்ந்தபொற்கோட்டையின்றே (95)
காரணவுங்கொடைவீரையாகோனன்றுகஞ்சன்விட்ட வாரணம்வென்றரகுநாதன்வெற்பின்மணக்குறிபோற் றோரணமுத்தத்தொடுமாவிளந்தளிர்தோன்றவெதிர் பூரணகும்பம்வைத்தாய்மலர்வீட்டிற்பொலங்கொடியே. (96) அலம்பணிவீரைபுடைசூழும்வீரைக்கதிபனெழு தலம்பணிதேவையர்கோன்ரகுநாதன்றமிழ்க்கரந்தைப் புலமபணிமேகலைப்பொன்னேமறந்துங்கைப்போதின்மின்னார் சிலம்பணியாரென்பதோலரிபாயவண்டுசேர்க்கின்றதே (97)
நிதிகொண்டவண்மைத்தளவாய்குமாரனிலந்தழைக்குந் துதிகொண்டதேவைரகுநாதன்மால்வரைத்தோகையன்னீர் கதிகொண்டுதாமரைதாங்கிநின்றீர்செங்கலசவிம்ப மதிகொண்டுதாங்குமினமாலாமெனக்கலாமாதென்னவே (98) மழையணிவார்குழன்மின்னிடைமாதர்மருளவிசைக் கழையணிதேவைரகுநாதன்வெற்பிற்கதிரொளியோ டுழையணியாழின்விரலாலிசைத்துள்ளுருக்குதலாற் றழையணிகானத்தவரெனுமவாயமைக்குமுயக்கே. (99) முத்திக்குவேலிதழைக்கின்றதேவைமுதல்வனருட பத்திக்குவாய்த்தரகுநாதசேதுபதிவரைமே லெத்திக்குங்கண்டறியோமணங்கேபச்செனுங்குழைசே ரத்திக்குஞ்செம்மலர்காட்டிநின்றாயின்றதிசயமே. (100)
மையாழிவையம்புகழ்செம்பிநாடன்மறந்தும்பொய்யா மெய்யால்விளங்கும்ரகுநாதன்வெற்பில்வெங்கோவடையக் கையாரவேநின்றிசைத்திடக்கன்றங்கவிகைசெய்தாற் பொய்யாதுனைச்சொல்லலாங்கண்ணனாரென்றுபூங்கொடியே. (101) பலவுங்கமுகும்பசும்பனிக்கோடும்படைத்துநின்று நிலவுங்கரந்தைரகுநாதன்காக்குநெறியியல்பா மிலவுந்துகிரும்பொருமிதழாய்நின்னிருகையினுங் குலவும்படிசெங்கதிர்மாமழையேநதிக்குலாவுவதே. (102) காக்குங்கருணையுங்கல்வியும்வாழ்வுங்கவிமதுர வாக்குந்தழைத்தரகுநாதன்றேவைவருவிருந்தாத் தேக்கும்படிகனிவாயமுதாரவந்தேற்கினிமை நோக்கந்தனைமறைத்தாலியல்போவஞ்சிநுண்ணிடையே. (103) பன்னுந்தமிழ்ப்பயிர்வாடாதுமாரியிப்பாரின்முத்தும் பொன்னுஞ்சொரியும்ரகுநாதன்றேவைபொருப்பிலுயர் மன்னும்பெரியவரைநீத்துறுகணமருவுகையாற் பின்னுங்குழலணங்கேயறிந்தேனுன்றன்பேதைமையே. (104) தெளியேகவொண்குடைதன்னாற்குளிர்செகமேழுமிசை யொளியேபரவும்ரகுநாதன்றேவையிலோங்குபசுங் கிளியேயெனுமொழியீரிரங்காதின்றுகேழ்கிளர்தண் ணளியேமறைத்தனற்கொடியாரென்றறிந்தனமே. (105)
வேரிபசுந்துணர்வார்குழலீர்கலிவெப்பொழிக்கு மாரிப்பருவம்ரகுநாதன்றேவையில்வண்குடத்தே பூரிப்பநெஞ்சிற்கருதாமனஞ்சிறபுரிந்ததுகை நீரிப்படிக்கலந்தார்பிறிதேதுநிகழ்த்துவதே. (106) ஆர்க்குங்கலாபமயிலனையீர்பகிரண்டமெல்லாம் போர்க்கும்புகழ்தளவாய்ரகுநாதன்பொருப்பிலணி சேர்க்குந்தனங்கண்மலைபோற்கண்மூடித்திறக்குமுன்னே பார்க்கும்படியிப்படிக்கண்டிலேமொருபாரினுமே. (107) திவளக்களிவண்டிசைபாடத்தானந்தினம்பொழியுங் கவளக்கடாசலத்தான்ரகுநாதன்கரந்தையன்னீர் தவளக்குளிர்முத்தமல்லாமலத்தந்தனிற்சிறந்த பவளக்குலமும்படுவதுண்டோமலர்ப்பங்கயத்தே. (108) ஒன்னாருயிர்விடச்செங்கையில்வேலையுறைவிடுங்கைப் பொன்னாடாதாருரகுநாதன்றேவைப்பொலங்கிரிவேள வின்னாண்மறைத்தகரும்பனையீரந்தவேள்வனச வன்னான்முகையென்கொலொவினையேனுயிர்வாட்டுவதே. (109) சினத்தாமரையரெல்லாந்தனையேதொழச்செங்கடுக்கை யினத்தாமரைத்தொழுமால்ரகுநாதனையெண்ணலாபோங் கனத்தாமரையிருள்வார்குழலீர்கட்கருஞ்சுரும்பென் மனத்தாமரைபுகுமென்றோகையார்மறைக்கின்றதே. (110) தரியார்வணங்குந்தளவாய்குமாரன்செந்தாமரையாள் பிரியாததேவைரகுநாதன்வெற்பிலென்பேரறிவாம் விரியாழிமாயக்கயல்குடியாதுவிலக்கியபின் கிரியாலுழக்குதனன்றோமழலைக்கிளிமொழியே. (111) சீதக்கமலவயற்றேவைகாவலன்செந்தமிழுங் கீதக்கலையும்வல்லான்ரகுநாதன்கிரியினெடுங் காதற்கடல்வெள்ளநீந்துதற்கேகுடங்காட்டியநீ பேதக்கவலையொளித்ததென்னோபுகல்பெண்கொடியே. (112) மொய்தோய்பகைஞர்வரையுரம்பாய்ந்துமுழைப்படுத்துங் கைதோயகடாசலத்தான்ரகுநாதன்கரந்தைவெற்பின் மெய்தோயநின்றவுயிர்வாடுமென்பதும்விட்டிங்ஙனே மைதோய்மழைக்கண்மறைத்தனன்றோசிலைவாணுதலே. (113) வயத்துக்கிசைந்தபுகழ்தளவாய்தந்தமைந்தன்மிக்க செயத்துக்கொருதுங்கவேள்ரகுநாயகன்றேவையிலம் புயத்துக்குவலயந்தார்புனைந்தீரிப்பொறையமைத்தா னயத்துத்தருமனென்றேமடவீர்சொல்லுநானிலமே. (114) சேல்கொண்டநீலக்கடல்சிவப்பேறச்சிலைதிணித்துக் கால்கொண்டதேவைரகுநாதன்வெற்பிற்கருவிளம்பூ மேல்கொண்டகாந்தட்குலத்தோடுங்கூடவிளங்கிழையீர் மால்கொண்டகாலத்துமென்னோமணக்கமலர்ந்திலவே. (115) திரைவந்தமுத்தும்வரைவந்தபொன்னுந்தெவ்வேந்தர்தந்து விரைவந்துபோற்றும்ரகுநாதன்றேவையினேரிழையீ ருரைவந்துதேற்றவுணர்த்தீரென்னெஞ்சமுழலவைத்த வரைவந்தலரியென்கண்ணானதென்னகண்மாயமிதே. (116) வெங்கயங்கேதமபொருந்தாதருளபுகழ்வேந்துயர்த்த செங்கையங்கேதனமால்ரகுநாயகன்றேவைவெற்பிற் பங்கயங்கேகயம்போல்வீரமுதம்பசுங்கணின்ற கொங்கையிங்கேவிட்டிருந்ததென்னோதண்குவலயத்தே. (117) சுளைப்பாரமுட்குடமூற்றுசெந்தேறல்சுனைப்பரந்து திளைப்பார்கரந்தைரகுநாயகன்றமிழ்த்தேவையன்னீர் முளைப்பாரையென்றும்புதைக்கப்படாதென்றுமூதுணர்ந்தோர் விளைப்பாரையின்றுபுதைத்தேதனத்தைவிடுகின்றதே. (118) வங்கந்தழுவுங்கடல்சூழுந்தேவைக்குவாய்த்ததள சிங்கங்கருணைரகுநாதன்செம்பொற்சிலம்பின்மலர்க் கொங்கங்கமழுங்குழலீர்முகத்தைக்குபேரனெனச் சங்கம்பதுமமும்வேண்டுமென்றோகண்ணிற்சார்கின்றதே. (119) கடந்தோய்மதகளிறன்னானந்தம்பரகண்டன்முத்து வடந்தோய்தனத்தியர்வேள்ரகுநாதன்வரையனையீர் தடந்தோயமுற்களமையாதென்றோநிறந்தாழுமல ரிடந்தோயவின்றுமதுகரங்கூடியிருக்கின்றதே. (120) சீதகங்காதரற்கன்பாம்ரவிகுலசேகரன்பூ மாதகஞ்சேர்புயத்தான்ரகுநாதன்மணிவரைக்கோ மேதகஞ்சேர்குழையீரரிமாவொடுமெல்லியகைப் போதகஞ்சேர்ந்தபகையில்லையோவுங்கள்பூம்புனத்தே. (121) தருபாற்புதுமுத்துந்தொன்னாளவயிரமுந்தந்துதெவ்வ ரிருபாற்பரவும்ரகுநாதன்றேவையிலேமவெற்பில் வருபாற்குறுந்தொடியீருலவாவிந்துமண்டலத்தே யொருபாற்கரனண்ணினாலென்படாதிவ்வுலகெங்குமே. (122) நோகின்றசிற்றிடையீர்முகினீருண்டநீட்டுகைம்மா வூர்கின்றதேவைரகுநாதன்வெற்பிலென்னுள்ளிரங்க வார்கின்றவஞ்சனக்கண்மறைத்தீரிந்தமாமறைத்தாற் சார்கின்றபுண்டரிகத்தாலுமக்கென்னதாழ்வுமக்கே. (123) தோமார்பசுங்குழையீரதுரைராயன்சுரந்துநறை யேடாருந்தாமன்ரகுநாதன்வெற்பிலிரவலர்க்கே வீடாதுகுன்றத்திசையொளிதோன்றவிரும்பியத்தம வாடாதளித்ததனாற்சொல்லாமுமைவள்ளலென்றே. (124) அதிராவிருந்தவிருட்குநல்லார்கலியாம்பனிக்குங் கதிராயுதித்தரகுநாதன்றேவையிற்கைம்மலாக ளெதிராயதாணுவிற்கேற்றாலவஞ்சமிமையவர்க்கு முதிராததீஞ்சொற்கிளியேபுனைதன்முறையல்லவே. (125) வஞ்சத்திசைமன்னரோடிடவாணர்வறுங்கலியு மஞ்சக்கனகந்தரும்ரகுநாதனருட்கரந்தை நெஞ்சத்தின்மாலென்றுணர்ந்திக்குடந்தந்துநீர்மலர்ப்பூங் கஞ்சத்திளந்திருவென்றோநற்பரவையைக்கைக்கொண்டதே. (126) வெல்லும்பதாகைத்தளவாய்குமாரன்கைவேழமும்போர் மல்லுங்கடந்தரகுநாதன்றேவையில்வல்லவர்க்குப் புல்லும்படையென்பதோகொலைநாட்டம்புகைமறைத்துச் சொல்லும்பொழுதணங்கேகுயத்தானுந்துயர்செய்வதே. (127) செங்கைத்தருவினிசைவல்லிசோதளசிங்கமலர் மங்கைக்கினியரகுநாதன்றேவையில்வார்க்கடங்காக் கொங்கைக்குநேரில்லையென்றோவிடுத்துவெங்கூர்விழிக்கு மங்கைத்தலமின்றுநேரென்றுகாட்டியதாரணங்கே. (128) களிக்குங்கயல்வெடிபோயுயர்வானவெண்கங்கைத்தெண்ணீர் குளிக்குங்கரந்தைரகுநாதன்வெற்பிறகுவலயங்காத் தளிக்கும்படிப்பெண்ணரசேதுணிவுற்றவ்வாழியுயி ரொளிக்கும்படிவிடலாமோநெறியன்றுனக்கிதுவே. (129) தடமேவுதேவைப்பதிபுறப்போன்றளவாய்மகிழத் திடமேவுவெற்றிரகுநாதன்வெற்பிற்சிறியவனு வடமேருவெற்புக்கெதிர்நிற்குமோவரிவாளரவப் படமேவுமல்குனமின்னேயுய்யுமாறின்றுபார்த்தருளே. (130) வரமேந்துவெற்றியரக்கர்பிரானுயிர்வாட்டவொற்றைச் சரமேந்துதேவைரகுநாயகன்றமிழ்வீரைவெற்பி லுரமேந்துநுங்கள்குலத்தியல்போவனத்தூடுவரக் கரமேந்திநின்றமடவீர்கலைகளவாகின்றதே. (131) வரிவளைநாலுமறுகூடுலாவிவயங்குமுத்தஞ் சொரிதருதேவைரகுநாதன்வெற்பிற்சுருதிபயின் றரிவளர்பூங்குழலாய்தமியேனையிங்காள்வதற்குக் கரிவெளித்தோன்றப்பிணையேன்றொடர்ந்தின்றுகைக்கொள்வதே. (132) சொற்பாவலர்தங்கிளைவாழச்செம்பொன்சொரியும்வண்மை நற்பேறுதேவைரகுநாதன்வெற்பினலந்தருமிப் பொற்பாருநங்கையைச்சேர்ந்தாலுயிரைப்புரப்பதல்லால் விற்பாவியமணிவெங்கரத்தூடென்கொல்வீழ்விப்பதே. (133) கார்ததாமவார்குழலீர்பசுந்தேனுமிழ்கான்றுந்தரா வேர்த்தாமமுல்லைரகுநாயகன்றமிழ்வீரையன்னீர் பார்த்தாதரவொடுபார்ப்பார்மறையிற்பரிந்தக்கதே சோத்தாரென்றோதனத்தாரிவ்வேதஞ்செயிந்துணிவே. (134) சிந்தாடவந்தவர்தம்மோடெழிலைத்தெரிந்துகொள்ள வந்தாடவர்பணிமால்ரகுநாதன்வரையணங்கே பந்தாடல்கண்டனம்மானையாடலும்பார்க்கவரந் தந்தாடல்செய்யிலுனக்கெய்துங்காண்வெகுதன்மங்களே. (135) இல்லாரைக்கற்பகமாக்கியுடையரெனினுமிகப் பொல்லாரைக்கொல்லுஞ்செயரகுநாதன்பொருப்பனையீர் வல்லாரைக்கற்பவகையறிந்தேமுன்னுவர்கடமா நல்லாரைக்கோரியகையாந்தகரையுநாடுவமே. (136) விலைப்பாராச்சரறியக்குனித்திகல்வென்றுவந்த சொலைப்பாவலர்புகழ்மால்ரகுநாதன்சொன்வரைக்குத் தலைப்பாகைதுண்டமென்சோமன்முன்வத்திரந்தனிற்கலந்தான் மலைப்பாசமாவணச்சேலையிலாதமணமெனவே. (137) கண்டரிகம்பவுவாவைத்தெறலிற்கருதலர்வாள் கொண்டரிகம்பமிலாரகுநாதகுபேரன்வரைப் பண்டரிகம்புளமின்னேபொரவத்தம்பார்த்திருந்த புண்டரிகம்பிணைமேற்பாயத்தந்திபுறப்பட்டதே. (138) தீனத்தைவென்றகொடைப்புகழ்கேட்குஞ்செவிக்கமுத பானத்தையொத்தரகுநாதசேதுபதிவரைவாயக் கான்தகைவானத்தைநோசொலிடையொருகன்னியத்த மீனத்தைநாடிச்செலக்கும்பராசிவெளிப்பட்டதே. (139) மஞ்சாங்கருதலர்போர்ப்படைமேற்சண்டமாருதம்போல் விஞ்சாங்கமூலபலரகுநாதன்வியன்சிலம்பிற் பஞ்சாங்கமோதிமறைகாட்டிச்சொர்க்கமிப்பாற்படுத்தி யஞ்சாங்குலத்தவர்பார்ப்பாரைச்சேர்ந்தததிசயமே. (140) பொருப்தெதிர்வரல்போற்கஞ்சனால்வந்தபோதகத்தின் மருப்பதொசித்தசயரகுநாதன்மணியருவி பருப்பதமீதுமலருஞ்செங்காந்தளபரவையிற்பூத் திருப்பததிசயங்காண்குன்றவாணரிளங்கொடியே. (141) நாலாயுதத்தையிகன்மேற்றயித்தியர்ஞாட்பிலெதிர் மாலாயுதத்தைப்புரிரகுநாதன்வரையணங்கே வேலாயுதத்தைக்கைக்கொண்டுநின்றாயெதிர்வெற்புமெய்தாற் காலாயுதத்தையனென்றுௌனயேதொழுங்காசினியே. (142) தொகுந்தளவாய்மகிழ்தெய்வீகத்தேவைத்துறைக்கரசச் சகுந்தவிலோசனத்தான்ரகுநாதன்சயிலமின்னே புகுந்திறையைவாதெரியாமன்மச்சபுரத்திருக்க மிகுந்துரியோதன்பாரவணிகள்வெளிப்பட்டவே. (143) அங்ககலிங்கமலையாளமீழ்மனைத்தும்வென்ற சிங்கவிசயசயரகுநாதன்சிலம்பிற்பொன்னே சங்கிலியாரையுங்கண்டேன்பரவைதனையுங்கண்டேன் மங்களசுந்தரனென்றனையேதொழுமண்டலமே. (144) ஆலங்கையாதவமுதினமுன்னாளுண்டலகையைச்கொ லேலங்கையாதருண்மால்ரகுநாதன்வெற்பேந்திழையீர் சேலங்கைக்கொண்டபின்னேமலையாளமுந்திண்டிக்கல்லைப் போலங்கையாமஃதில்லாதபோதுபுலப்படுமே. (145) பாவூர்றசங்கிராமவிசைசூதா****வளிவரு மாவூர்க்குலனென்னும்ரகுநாதன்வரையனையீர் கோவூர்முன்காட்டியபின்குன்றத்தூர்வழிகூட்டியப்பர் னாவூர்நுங்காஞ்சிபுரங்காட்டுதறொண்டைநாட்டியல்பே. (146) எண்கட்டுமானபுற்றோன்றாமலர்படையேங்கவடுந் திண்கட்டுவாங்கத்துரைரகுநாதவசீரன்வரைப் பண்கட்டுமெனமொழியீர்நீர்மிகவும்பலரறியக் கண்கட்டுவித்தையுஞ்செப்பிடுவித்தையுங்கற்றவரே. (147) தாவீயங்க**றமிலாமற்பொருதச்சமரிலறை கூவியங்கத்திகல்வெல்ரகுநாதகுமுண்னவெற்பி லோவியங்கற்பகவல்லியன்னீரிவ்வுலகியற்கை காவியங்கற்றவர்க்கேயத்தமாகுங்கட்படமே. (148) கண்டரிதங்கையுரத்தையுமூக்கையுங்காதையும்வாட் கொண்டிகொண்டல்ரகுநாதன்றேவைக்குலவரைப்பூ வண்டரிகங்குற்குழலீர்நும்முந்திமடியலையாற் புண்டரிகங்கண்முழுகத்தெரியும்புளினங்களே. (149) நாளத்தையம்புயவன்னப்பணைச்செம்பிநாடன்சக்கிர வாளத்தைவென்றபுயரகுநாதன்மண்வரைவேள் காளத்தைவெல்லுரைநாகப்பாவையைக்காட்டுஞ்சும்மா தாளத்தையேநதிநின்றீரமத்தளமுந்தருகுவனே. (150) இடனாகமற்றைவலனாகச்சாரியியற்றிடுவாட் டிடனாகவமெச்சியல்ரகுநாதன்சிலம்பிற்பெண்ணே கடனாகத்தந்தவரையெதிரேவரக்கண்டுமுறி யுடனேகொடுக்கவுடையார்பிணையையொளிப்பதென்னே, (151) படியுமமரருலகமுமாசையும்பாதலமுங் கொடிகொளிசைரகுநாதவசீரன்கிரியணங்கே கொடியுமுரசுங்கணையுஞ்சிலையுங்கொடாமலணி முடிமாத்திரமதவேளுக்களித்ததன்முறையல்லவே. (152) கேட்டத்தகுவருமுட்குமதுகைக்கிளர்புலவர் பாட்டத்தகுதிரகுநாதசேதுபதிவரைவாய் நாட்டத்தகுவளைவேழங்குவளைநளினமல்லி காட்டத்தகுமிளநீரொன்றுகாட்டல்கணக்கல்லவே. (153) ஆரங்கராசலமாநிதிவீரர்க்களித்திகன்மேற் போரங்கமாகவருரகுநாதன்பொருப்பனையீர் போரங்கமாகும்பகோணத்திற்பாதியைப்பின்மறைத்தீர் சாரங்கபாணியெனும்பேரெவ்வாறுதகுமுமக்கே. (154) சேண்டவர்வாழ்திருத்தேவையையாளுந்திருமணிமார் பாண்டவர்தூதன்ரகுநாதசேதுபதிவரைவாய் நாண்டவர்முன்னிட்டதிலேயொளித்துத்தன்னற்பெயரைப் பூண்டவர்தானத்தைத்தான்வாங்கிக்கொள்ளப்புறப்பட்டதே. (155) விலையைமறைககுங்கனககிரீடிவிவேகத்தெண்ணெண் கலையைமறைக்குமனுரகுநாதன்கவின்வரைவாய்ச் சிலையைமறைக்குநுதலீர்முன்னாகத்தெரிதலின்றி வலையைமறைத்துவைத்தீர்பற்றவோசக்கிரவாகத்தையே. (156) படமினியார்வரைந்தெண்டிக்குங்காட்டெழிற்பார்த்திபன்கைத் திடமினினீண்மந்திரவாள்ரகுநாதனற்றேவைவெற்பிற் றொடமினியோங்குமணியீரமைவாரியைத்தூர்த்தபின்பு குடமினியேதுக்குநீரேவலியக்கொடுக்கினுமே. (157) வெம்பிற்கரளமெனக்காய்நதிகலைவிடுத்துத்தன்னை நம்பிற்கருணைபுரிரகுநாதநரேந்திரன்வெற்பிற் கெம்பிற்கனகமணியணியீர்முனங்கேசவன்கை *யம்பிற்கரன** வெற்பரணங்களகப்பட்டவே. (158) வல்லாரங்காட்டியபம்பரத்திற்சுழல்வாம் பரிமேற் செல்லாரங்காட்டுமுகரகுநாதன்றன்றேவைவெற்பில் வில்லாரங்காட்டுமணியீர்மதிப்புமிகுந்ததனக் கல்லாரங்காட்டியநீரேநல்லாரமுங்காட்டினன்றே. (159) அலசத்தைவாளியெனநோ**வயையகற்றியறி நலசத்தையேகொண்மதியூகியா*ரகுநாதன்வெற்பிற் மலசத்தைநீடுமுவரிமதித்தும்பருக்குவைத்த கலசத்தைக்காட்டியமுதத்தையேதுகர்ந்ததுவே. (160) தவளையிற்செல்வளர்காவினிற்றாவத்தகளமூதிக் கவளையிற்செல்செம்பியாளரகுநாதன்கனகவரைக் துவளையிற்செல்பவராம*யீர்மலர்தோறுந்திரி குவளையிற்செல்வண்டுகோங்கிற்செல்லாததென்கூறுகவே. (161) வண்டிற்காலவலாமுல்லையான்கவிவாணர்செய்யுட் கொண்டிறவீகைதருரகுநாதகுபேரன்வெற்பிற் பண்டிறவாமருந்தன்னீர்வெந்தாகப்பசிதணிக்கக் கண்டிறவாமலிளநீர்கொடுத்தென்கவையில்லையே. (162) மித்திரமன்னர்மகிழப்பகைஞர்முன்வீழ்ந்துதொழச் சத்திரமன்னவருரகுநாதன்சயிலவெற்பிற் சவித்திரமன்னகுயிலேதனத்தைத்தெரியவைத்துப் பத்திரமன்னலறிவுறிற்சேதம்படைத்தவர்க்கே. (163) தளையாடுகாலொடொன்னார்திறைகட்டுஞ்சமுகத்திற்பொற் கிளையாடுதேவைத்துரைரகுநாதகிரீடிவெற்பில் வளையாடுகைத்தலத்தீர்பாச்சிகைக்குண்மறைத்துமனம் விளையாடச்சூதின்கனகவடங்கள்வெளிப்பட்டவே. (164) அனமிகத்தோன்றுவயற்செம்பிநாடனயன்றந்தைவா கனமிகத்தோன்றுதுசரகுநாதன்கனகவெற்பின் மனமிகத்தோன்றுமொருமாமலருண்மறைந்திடவி தனமிகத்தோன்றுமபிமானமுள்ளவர்தங்களுக்கே. (165) தேவுளிருக்கும்வளர்செம்மிநாடனற்றேவையையாள பூவுளிருக்கும்வளரகுநாதன்பொருப்பனமே மாவுளிறைவாக்கெதிர்வைத்துக்காணல்வழக்கிதன்றிக் கோவுளிருக்கவிங்கேதுக்குமாலிகுசக்கனியே. (166) சிற்றாலவட்டங்குடை கொடி தாமரை சேரப்புடை நற்றாலமென்னவரு ரகுநாதன் மைந்நாகமின்னே கற்றாபணி நற்றிரிகூட வெற்பெதிர் காட்டித்திருக் குற்றாலமாந்தலமுங்காட்டி னானிட்டை கூடுவனே. (167) வில்வழக்கத்திற்றனஞ்சயன்கன்னன்விதுரனெனச் சொல்வழக்கத்துரைமால்ரகுநாதசுகுணன்வெற்பிற் செல்வழக்கக்குழலீர்சார சிகைப்பத்திரமிவையில் வல்வழக்கிட்டுவெளிப்படுவாரழுவம்பாகளே. (168) நிக்கிரகமேனையநுக்கிரகமாமநுநீதிபுரி யுக்கிரமகாதளவாய்ரகுநாதன்வெற்போதிமமே சக்கிலியாயினர்பாரப்பாருங்கைக்கொளச்சம்பந்தத்தா லக்கிரமென்றுகுயவரிதைவெளீயாக்கினரே. (169) சொற்பதக்கற்பனையோரெழுத்திற்சதகஞ்சோர்வதிலா மற* தக்கத்தந்தருரகுநாதமகிபன்வெற்பி னிற்பதக்கற்பகவல்லியன்னீர்வெகுநேத்திநுங்கைப் பொற்பதக்கங்கொளமார்பிறகடகாபுறப்பட்டதே. (170) பூமான்பெருஞ்செல்வம்பாமான்கலைகள்பொருட்கொடைக்குக் காமாரகரதலமால்ரகுநாதன்கவின்வரைவாய் மாமான்மதமயிலேயெதிர்கொள்பவாவைத்தனரோ கோமான்வெளிப்படுமுன்னெதிர்பூரணகும்பங்களே. (171) விட்டங்கொடுக்குமுனிவைமுன்னம்பியவீடணற்குப் பட்டங்கொடுக்குமரகுநாதசேதுபதிவரைவாய் வட்டங்கொடுக்கும்பணத்துக்குமேற்றனம்வண்டர்நட்பா லிட்டங்கொடுக்குமைமேனாட்டவாக்கும்வந்தெய்தியதே. (172) நூலாயிருக்குநர்க்கத்தநிதஞ்சதநூறளிக்கு மாலாயிருக்கும்ரகுநாதன்றேவைவரைமயிலே மேலாயிருக்கினும்பார்ப்பாரிரவலர்மேலனறிக்கீழ் போலாயிருக்கினுமீகைத்தனத்தர்புரவலரே. (173) போருடுசென்றுவலவனைபோலத்தைபுத்திரற்குத் தேரூர்சலதரமால்ரகுநாதனற்றேவையன்னீர் நீருரமைநோக்கரும்வெட்கியொளிக்கநிதானத்திலே போரூசிமேலிரும்பரநாட்டுமுப்பகன்றே* (174) திசைபுகழகன்னன்குபேரன்விசயன்சிபியெனச்சொல் லிசைரகுநாதன்மணிவரைமானனையீருமது வசைதீரகசகானவித்தையைப்பார்த்துமகிழ்ந்தனமேற் பசையுறுகோகானவித்தையெப்போதினிப்பார்ப்பதுவே. (175) முடுக்கவருதிரணமல்லினகாவிமுடியவறை கொடுக்குமரரகுநாதன்வரைமலர்க்கொம்பனையீர் அடுக்குந்நெ னீர்கணையாழிமுகத்திட்ட** னிடுப்பினிறகுண்டலமாபிறசிலம்புவந்தேறியதே** (176) கிட**முமுரமுமிசையுங்கொண்டச்சமுந்தீமை புங்க படமுமொழித்தரகுநாதசேதுபதிவரைவாய்க் கெடவாசதியமறியீததீரினிபங்களகீத்தகையு** மடவீரறிவிக்கினான்கொட்டிசகாட்டுவனமத்தளமே. (177) சங்கையிலாமலிரப்போற்குதவுசார்நிதிப் பங்கயமன்னரகுநாதசேதுபதிவரைவாய் மங்கைநல்லீரிதுநல்லாச்சரியமுண்மையுங்கணோக கங்கைகடக்குமுன்னேசித்திரகூடமென்கண்ணுற்றதே. (178) வைரமையுடையகைவேலாவொன்னார்பொன்மணிமுடிக்குப் பைரமையறுத்தரகுநாதசேதுபதிவரைவாய் நைமரையுடை யநுசுப்பீரவாசசங்கநாடுவதிற் கைமமையுடை யவார்கேனணிமைபெயரங்கச்சிமிழே.* (179) இங்கிதாத்தினப்பகுதிகொணர்ந்துமுனெணணிமன்னா பங்கிடுமுற்றரகுநாதசேதுபதிவரைவாய் யங்கிதமாகத்தருசடகோபங்கண்டாச்சதுமுன்** சங்கிடுதோளிடாசக்கரங்காடா க*** ரினிரே. (180) அளையுண்டிர நவநீதந்திருடிமுனயைச்சியாகைத் தளையுண்டமெய்ரகுநாதன்சிலோச்சயானதானவலீர வளைசெண்டுமீனசொனா**துரையடைத்துவரிமுன்வென்றீர் திளையுண்டமேரூவும்வென்றிடினீரந்த** ன்னவரே. (181) குமையவரைநிமிடத்திலொன்னார்மெய்தவியாகைமமேற சமையவரைநிருபனரகுநாதன்றடவரைவா யமையவரையுபாசொக்கமுன்காட்டியருளியநீ ரிமைமடவரைபொளிக்கத்தகுமோசொலுயேந்திழையே. (182) விளவாய்வருமிகல்கன்றாலெறிந்துமுன்வென்றுவந்த தளவாயரசர்பிரான்ரகுநாதன்றடவரைவாய்க் குளவாய்தனிலுங்களவிற்குளச்சேல்கள்குதிக்குமென்றோ களவாய்மறைத்துவைத்தீர்மடவீரீருகைப்பிடித்தே (183) கோவைத்துறைக்குப்பதினாயிரம்பொன்கொடுத்திசைகொ டேவைத்துறைக்குத்துரைரகுநாதனறிகிரிமின்னே யேவைத்துறைக்குள்வெறிகொண்டுசங்கிலியேந்துமத மாவைத்துறைக்குவெளியேவிடிற்பழிவந்திடிடுமே. (184) கடைமுன்னர்நின்றுமுடிமேற்றமதிருகைக்குவித்துப் படைமன்னர்போற்றும்ரகுநாதசேதுபதிவரைவா யிடைதான்குறைந்ததுமச்சமுங்காட்டுவதில்லையென்றான் மடவீருமதுதனத்தையெவ்வாறுமதிப்பதுவே. (185) அமரர்மனிதர்நராமுதாசநராகவுக்கிர சமர்செய்ரகுநாதன்சிலோச்சயத்தையனல்லீர் நமனையட*க்கிக்கடவூரூங்காட்டியஞாயத்தினா லுமையிவ்வுலகிலமுதநடேசரென்றோதுவரே (186) ஈரஞ்சுகண்டனிறக்கவிண்ணோர்குடியேறமதி* பாரஞ்சுமக்கும்ரகுநாதசேதுபதிவரைவாய வீரஞ்சுதாரிப்பதின்றிமுன்கேடகம்விட்டெறிந்து போரஞ்சுவாரிற்கைவாளையொளிப்பதென்பூங்கொடியே (187) சென்றத்தைக்கண்டகப்போரிற்றினந்தள்ளிச்செய்யமாநா ணின்றத்தைக்கண்டரகுநாதன்மால்வரைநேரிழையீ ரொன்றத்தைக்கண்டிருக்கச்சூர்செங்கற்பட்டுயர்ந்தகழுக் குன்றத்தைக்கண்டனன்காண்பதெப்போதுனிகோவளமே. (188) செல்லூரப்பார்ததிபராகுமொன்னாருயிர்தின்னநமன் பல்லூரப்பாற்கொல்ரகுநாதசேதுபதிவரையீ ரல்லூரைப்பாற்பொன்னையீரிப்போதுங்களத்திப்பட்டு வல்லூரைபார்த்தனன்பார்ப்பேனினிநெய்தல்வாயலையே. (189) செல்லக்கைமாறுபடையார்க்குதவுமைசேரலரை வெல்லக்கைபோயவைவேல்ரகுநாதன்விலங்கற்பொன்னே நல்லக்கைவைத்தப்படியெயதுமீளுவனானுமுது பல்லக்கைக்காட்டியனுப்புமெனைவெளிப்பாசறைக்கே. (190) கோசிகமத்தமணிசூறையிட்டெதிர்கூடலாதம் பாசறையிட்டரகுநாதசேதுபதிவரைவா யாசிரியத்தின்முன்கூவிளங்காட்டியருளியநீர் மாசில்கருவிளமுங்காட்டிற்காரிகைவாசிப்பனே. (191) கார்நிரையத்தைத்துரத்தியெடுத்ததன்கைவரையாற் பார்நிரைகாத்தரகுநாதசேதுபதிவரைவாய நேர்நேர்நிரைநேர்நிரைநிரைமூன்றையுநீக்கிப்பின்னா நேர்நிரையொன்றையுங்காட்டியவாறென்னநேரிழையே. (192) வல்லியத்தானையிலொன்னலர்கெட்டுப்பின்வாங்கவடு பல்லியத்தானைரகுநாதசேதுபதிவரைவாய்ச் சொல்லியத்தானையழைக்குமுன்மாமிதொடருதல்போ லெல்லியத்தானையசையாமலேதுக்கெறிகயிறே. (193) சித்தியைக்கண்டமொன்பானிற்செய்வோருநற்சேதுவிற்செய பத்தியைக்கண்டரகுநாதசேதுபதிவரைவாய நத்தியைக்கண்டமணிகோகனகம்பொன்னாடுமணி பத்தியைக்கண்டனமாவுங்கண்டாலரியாகுவமே. (194) முத்தமரகதமாணிக்கஞ்சொன்னமுடிநிருபர் நித்தமெதிர்பெயரகுநாதன்மால்வரைநேரிழையீ ருத்தமராயினர்சாணார்சண்டாளருயர்மகுட வத்தனர்தாழ்ந்தனர்பாருங்கலியுகவஞ்சனையே. (195) காலுலகையளவிட்டமாலெனக்கைவளர்செங் கோலாலளவிட்டமால்ரகுநாதன்குவட்டனமே மேலாம்வருணத்தர்மாலைமுன்காட்டிவிதிப்படிப்பின் னாலாம்வருணத்தர்மாலையுங்காட்டுதனல்வழக்கே. (196) திக்கசமாமைமகமேரெனத்திரிசேடன்மகிழ மிக்கவளர்புகழ்வேள்ரகுநாதன்மைவெற்பணங்கே கைக்களச்சாதிநன்னெயதலைக்கொண்டதுகண்டிடையர் தக்கதென்றக்கணமேபாற்குடங்களைத்தாங்கினரே. (197) வென்றேந்தினமிகலென்றிறுமாந்தமாவேந்தர்நிரு பன்றேந்திகழ்மெய்ரகுநாதசேதுபதிவரைவாய வன்றேந்திசையிசையுஞ்சொனல்லீரண்டாவாழ்த்தவுயர் குன்றேந்திமாலெனமேலொளித்தீருயர்கோக்களையே. (198) வனசம்பழனம்வளர்செம்பிநாடன்மலிசெல்வத்துட் பனசம்பழனம்ரகுநாதசேதுபதிவரைவாய்க் கனசம்பழனம்புயர்கோப்பொருளிடங்கண்டுகொண்டோ மனசம்பழனம்பனதாளிடமுமறிவதென்றே. (199) சொற்புதனாங்கல்வியிலென்றெழுதினந்தோறுமன்னி யற்புதமன்னர்பணிரகுநாதனனிவரைவாய்க் கற்புதருநகையீர்நிலையாமைமுன்காட்டிவந்த புற்புதநிற்கநிலையாமுநங்கங்குப்போகியதே. (200) சேதுவையாளலர்மாதிருநால்வளர்சேதுவையாண் மாதளவாய்ரகுநாதகிரீடிவரைவருமுற பாதமின்னேதண்டுலம்வாங்கச்சொற்சுயம்பாகியென்றே யோதனங்காட்டியநீகழுநீரையொளித்ததென்னே. (201) நாகரமுந்துதமிழோரின்மைக்கங்குனையச்செய்தி வாகரமைந்துமிகுரகுநாதன்வரைமினன்னீர் சாகரமுந்தியடைத்தீரிலங்கைமன்சந்தமணிச் சேகரமுந்தகர்த்ததாலுமையேரவிசேயென்பரே. (202) மானிலமெங்குமந்தாநிலந்தங்கமகிழ்செம்பியா கோனிலம்பாட்டைத்தெறுரகுநாதன்குவட்டணங்கே கானிலங்கார்கடவூர்கண்டநாமக்கலையர்கண்டாற் றேனிலங்காந்திருத்தொண்டத்தொகையுந்தெரிந்தவரே. (203) ஆவசியம்பொன்னையூர்வசியூரப்பெயரார்க்கருளிப் பாவசியங்கொள்ரகுநாதசேதுபதிவரைவாய்ப் பூவசியஞ்செய்தனவசியந்தரப்பூண்டதுபோற் கோவசியந்தரப்பூண்டதெப்போதுசொற்கோகிலமே. (204) பிங்களத்தால்வந்தடைந்தோர்குடும்பப்பிரதிட்டைசெய்யக் கங்கணங்கட்டுசெங்கைரகுநாதன்கவின்வரைவாய் மங்கைநல்லீருங்களரத்திநாகரத்தைமறைத்துவரச் சங்கடங்காட்டத்தகுமோவிரப்பவாதங்களுக்கே. (205) தோமினியார்செயினுஞ்சிரஞ்சேதிக்கத்தோன்றுமுனை மாமினினீள்வடிவாள்ரகுநாதன்வரைமடவீர் தேமினிதாமெய்யமலையைப்போற்றித்திவர்முன்முறை யாமினியேவனநீலியைப்போற்றுதும்யாமினியே. (206) மகமிலைமேவவளர்செம்பிநாட்டிறைவாகுவென்று நகமிலைவீரரணகேசரிரகுநாதன்வெற்பிற் சகமிலையஞ்செயமேலாயுயர்ந்ததனம்படைத்தா சுகமிலையென்றுசொல்வாரோவுலகிற்சுடர்த்தொடியே. (207) வேற்சேரலர்மச்சர்கொங்கர்வங்காளர்விறற்சமுகப் பாற்சேரபயரகுநாதசேதுபதிவரைவாய நூற்சேரனவையினுநூற்றிலொன்றானநுசுப்புடையீர் காற்சேரளித்தரைக்காற்சோகொடாததுகைதவமே. (208) குலத்தைத்தந்தேவர்கொளச்செம்பிநாட்டுக்குடிகளுக்கு நலத்தைத்தந்தாளுமனுரகுநாதன்மைநாகத்திற்சை வலத்தைத்தந்தார்குழலீர்முன்பதக்கவலதென்றுள்ள கலத்தைத்தந்தீரிருதூணியுந்தாருங்கணக்குடனே (209) கருக்குஞ்சீலிமுகமன்சொலிநட்பைமுனகாத்திகலை கருக்குஞ்சீலிமுகமன்னப்பொருரகுநாதன்வெற்பிற் பருக்குஞ்சீலிமுகங்காட்டியநீமறைபாணிக்குளே யிருக்குஞ்சீலிமுகங்காட்டாதிருப்பதென்னேந்திழையே (210) வேந்தாதிவேந்தர்பரவுஞ்சமூகவிசயனுமனு மாந்தாதிகள்புகழ்வேள்ரகுநாதன்வரைமடவீர் காந்தாரியாய்த்துரியோதனமால்பெற்றுக்காட்டியவற் காந்தாதையைமுன்னமேகாட்டியதிங்கதிசயமே. (211) முன்னாரியைச்சிலையாகச்செய்தோன்வெட்கமுன்சிலையைப் பின்னாரியாகச்செயும்ரகுநாதப்பிரபலன்வரைப் பொன்னேதினநற்கரும்பைத்தாராமற்புழுகிலகு பன்னாடைமூடுகுருமபைதந்தாயென்னபாக்கியமே. (212) வஞ்சனையாய்வருங்கொடியோர்கண்மணியிழக்கக் வெஞ்சரமேவுசெயரகுநாதன்வியன்சிலம்பிற் நஞ்சமலாமனைவிட்டுமுன்னான்கனியளிய நஞ்சதிடாமற்செந்தேங்காயையேதுக்குநல்கியதே*. (213) சுரதத்தில்வேள்கல்வியிற்போசன்றந்திற்றுவரையர்கோன் சரதத்தில்ராமனெனும்ரகுநாதன்சயிலமின்னே பரதத்திலாவதறிந்தோஞ்சிவநிசிப்பத்தாபுரி விரதத்திலாவதுநீயேயறிவிக்கவேண்டியதே (214) கலையைமுன்காட்டுமதிபோற்றவளக்கவிகைநிழ னிலையைமுன்காட்டும்ரகுநாதன்மால்வரைநேரிழையீர் மலையைமுன்காட்டியடைத்தீர்கடலைநன்மந்திரத்தா லலயைமுன்காட்டியதுபோலக்காட்டுமனையின்றியே. (215) தங்காவியன்னநிறைசெம்பிநாடன்சரணடைந்தோர் பங்காவியன்னரகுநாதசேதுபதிவிருதாஞ் செங்காவியன்னமணிதானைசேர்க்கச்சேவகமுன் கொங்காவியன்னகுழலீரதுவுங்கொடுக்கின்னறே. (216) கிடைக்குங்கிடைக்குங்கிளர்செம்பிநாடன்கெடிப்பயந்தன படைக்கும்படைக்கும்ரகுநாதசேதுபதிவரையீர் புடைக்கும்புடைக்குந்துரைத்தனநீர்தரப்பூரித்தநான் கடைக்குங்கடைக்குமமைச்சரையுந்தரிற்கைக்கொள்வனே. (217) சூனந்தந்தீர்மலிந்திச்செம்பியர்தோன்றலிசைக் கானந்தந்தீரஞ்செவிரகுநாதன்கவின்வரைவாய வானந்தந்தீரென்நுண்ணிடையிர்நன்மணிக்கனகத் தானந்தந்தீரினங்கோதானமுந்தரிற்றானமெய்யே. (218) பொன்னிக்குப்பொன்னித்திலமணியீதண்புன்றசெம்பியாள சென்னிக்குச்சென்னியெனும்ரகுநாதனற்றேவையன்னீர் வன்னிக்குமுன்றனமீந்தீர்சொற்காவியம்வாசிக்கநீ ருன்னிக்கவிஞரெனக்காட்டிற்கூடற்குடையவரே. (219) நடமுந்திசையெனப்பொற்சதங்கைத்தொனிநல்கமுன்ச கடமுந்துபங்கசத்தான்ரகுநாதன்கவின்வரைவாய வடமொழிதென்மொழியாஞ்சூதமாமுன்பின்மார்க்கப்படித் திடமுன்புகண்டனம்பின்னொன்றுங்காண்டடுஞ்சேயிழையே. (220) சித்தியமாண்மையவுதாரியநன்மைகீர்த்தியைந்து நித்தியமாகும்ரரகுநாதன்மால்வரைநேரிழையீர் சத்தியமில்லையளியில்லைமெய்யுண்மைசாட்சியில்லை யத்தியும்வம்புமுடையீருமக்கிங்கரசில்லையே. (221) கொடைக்கஞ்சியமுகிலார்பொழிற்செம்பியர்கோமதலைத் தொடைக்கஞ்சியமெய்ரகுநாதன்மால்வரைத்தோகையுன்ற னடைக்கஞ்சியபிடிகுத்துணப்பார்த்தன்நாடட்டுமே விடைக்கஞ்சியதுடிகட்டுண்டடிபட்டிருப்பதுமே. (222) சத்துருமித்துருவித்துருமம்பொற்றரளயிட்டு நத்துருநத்துருவத்துருவன்ரகுநாதன்வெற்பின் மத்துருவைத்தரிசித்தோமுன்னாழிமதித்தவன்செய் பத்துருவத்திலொன்றெப்போதுகாண்பதுபைந்தொடியே. (223) மன்னாமரக்கனைமுன்னாளைப்போரின்மகுடபங்கந் தன்னாண்மையாற்செய்தமால்ரகுநாதன்சயிலமின்னே கொன்னார்கலிங்கவங்கம்மலையாளக்குடகுதந்தாய் பின்னாடணிமச்சதேசமுமீயிற்பெருமையுண்டே. (2241) கலமலிவேலையலைவீறுசங்கத்துறைசேர் தலமிகுதேவைத்துறைரகுநாததனதன்வெற்பி னலவனசத்திருவன்னீரும்மாலிங்குநாடொறுமுற பலமிலைமெத்தசலமுண்டிதென்னசமபாவனையே. (225) நரியாடுமானமுசலான்போற்பகையஞ்சநாடுகுய வரியாடவாதிலகனரகுநாதன்வரையணங்கே யரியாடுகூத்துமுன்காட்டியநீயினியம்புலிக்கோ தரியாடுகூத்தையுங்காட்டிலுண்டாம்வெகுதனமங்களே. (226) ஓதண்டாநாட்டிற்குடிவாங்கப்பந்தமொடுமணக்கான் மீதண்டநாட்டப்புரிரகுநாதன்வெற்பணங்கே கோதண்டங்குந்தமுன்னீந்துபின்மாமகுடமுங்கட வேதண்டமுந்தரினானங்கதேசத்தைவெல்குவனே. (227) மாதண்டகாரண்ணியவாசிகண்முன்னிகல்வாய்க்கிலென்வில காதண்டுமென்றருள்செய்ரகுநாதன்கவின்வரைவாய்க் கோதண்டக்குந்தகமின்மைமெய்யாகிறகுடமலைத் லேதண்டராகவமோதலங்காரவிளங்கொடியே. (228) புடவிகடந்தமிளவற்குமெய்த்தவம்பூண்டுமுன்னே யடவிகடந்தபதரகுநாதன்சலமின்னே குடவிகடந்தரலகாட்டிக்கலையைக்கைக்கொண்டொளித்த கடவிகடந்தரலாலுனையுஞ்சொல்வர்கண்ணனென்றே. (229) பூணனைதந்தைதளைநீங்கியானந்தம்பூணக்கஞ்ச னாணமுன்னாகவருரகுநாதன்மைந்நாகமின்னே பாணனையோடியொளிக்கவென்றாயங்கபந்தனையுங் காணவென்றாலுனையேதிருமாலென்பர்கண்டவரே. (230) செற்கோலவெம்பகுவாய்த்தாடகைபுத்திரகளிரா மற்கோலுதவுதனுரகுநாதன்வரைமடவீர் சொற்கோலிலம்பையங்கோட்டூர்தற்கோலந்தொழுதந்திரு விற்கோலமுந்திருவேற்காடுமேற்றொழவேண்டியதே. (231) குருவார்த்தைமேற்கொண்டடர்பிசிதாசநர்கோளைவென்று பெருமகங்காத்ததுரைரகுநாதன்பிறங்கன்மின்னே திருநீலகண்டரைவன்னத்துடன்முன்றிலையிற்கண்டோங் கரைதிருக்காளத்திவேடரைப்போரொடுங்காண்குதுமே. (232) வீடணனாற்சொலிலங்கைச்சுவேலைக்கும்வேலைக்குமேன் மாடணைசெய்யச்செயும்ரகுநாதன்வரைமடவீர் கூடலிறைரத்தினம்பகர்ந்தாமகுடஞ்செயவிளை யாடல்கண்டோம்வலைவீசாடலுங்கண்டறிகுவமே. (233) தருவானகந்தொடுசெம்பியிற்றேவைத்தலத்தளவா யுருவாகியமனுவாமரகுநாதன்வெற்பொண்டொடியீர் திருவானைக்காவுஞ்சிரகிரியுந்தெரிசித்துவந்தோங் கருவூர்திரியம்பகம்விருப்பாட்சியுங்காண்குதுமே. (234) காராநிதிதருசிந்தாமணிசுவர்க்கத்துடனிப் பாராளுமிந்திரரகுநாதசேதுபதிவரைவாய் வாரானையம்புலினாங்கஞ்சப்பாணிமணிவடமுந் நீராடல்காப்புறுவோஞ்சொற்செய்வீரையெந்நேரிழையே. (2350) கங்கையிலேவிடுமோடத்தலைவன்களித்துத்தொழ நங்களுக்கோர்துணைநீயென்றருளரகுநாதன்வரை மங்கைநல்லீர்தமையன்றம்பியர்முறைமார்க்கப்படி யங்குசம்போற்றரிசிக்கட்டுநாமவாயிலையே. (236) துரந்தரராசபுரந்தரனானதுரையுலகு புரந்தவைபோகரகுநாதன்மால்வரைப்பொன்னனையீர் கரந்தொழுவேங்கடங்காட்டியநீரினங்காட்டுமணி யரங்கனையாழிதரனைமுகுந்தனையப்பனையே. (237) கனமானநீர்யௌவனமோகையீகைபொன்கல்விமெய்விற பனமாண்மைமீறுரகுநாதசேதுபதிவரைவாய்த் தனரேகைகாட்டிமெய்லட்சணமுஞ்சொன்னசாத்திரமெய் யினமாநன்மச்சமுங்காட்டியுரைக்கிலிளங்கொடியே. (238) வெப்பளித்தாவமறைபுங்கமெய்திகல்வேட்டிரத்தங் கொப்பளித்தாகவஞ்செய்ரகுநாதகுபேரன்வரை யொப்பளித்தலாவதில்லாவஞ்சனமணியுண்மையிலாச் செப்பளித்தாவதெனப்பிரயோசனந்தேமொழியே. (239) காலையிலாமலெக்காலையிலுஞ்செய்கடுங்கொலைவை வேலையிலார்தருகோரகுநாதன்வியன்சிலம்பி னூலையிலாமற்செயுமிடையீர்முன்புநூதனமாஞ் சேலையிலாமற்றருவதுண்டோவெறுஞ்சீதனமே (240) நாலாம்பனுவனவரசச்சொற்றமிழ்நாவலர்க்கு மேலாம்பரிசருண்மால்ரகுநாதவிதுறன்வெற்பிற் பாலாஞ்சுயோதனமாருதிச்சண்டைமுன்பார்க்கநடு நீலாமபரனில்லையேயுரைப்பாரெவர்நேரிழையே. (241) சேலனமேதிசொரிசுதையுண்பணைச்செம்பியன்செங் கோலனபாயன்ரகுநாதன்மால்வரைகொண்டவரைப் பாலனமென்மொழியீர்முன்குசனைப்பணிந்ததுபோ னீலனையுந்தொழுதாலெய்தலாஞ்செல்வநேத்தியதே. (242) தம்பதமாதியிறக்கநம்பாததரியலர்க ணம்பதசேடரதிராகச்செய்ரகுநாதன்வெற்பிற் கம்பதனமிடற்றீர்முனமாலெனக்காட்டியிகற கும்பதனங்கண்டொளிப்பதென்னாந்தகங்கோவலரே. (243) வந்தனாமாகத்தொழுவார்க்குமந்திரம்வாய்த்ததிக்கு பந்தனமாகும்ரகுநாதசேதுபதிவரைவா யிந்தனவத்திரத்தீர்கலியாணமிசையிலிகு சந்தனமுன்கொடுத்தீர்கொடுப்பீரட்சதையினியே (244) துருப்பதனைக்கொணர்ந்தெதிர்விட்டுத்துரோணரெனுங் குருப்பதமேத்துமனுரகுநாதகுமுணன்வெற்பிற் கருப்பதனால்லுருவீரமுதனாமல்லிகார்ச்சுனமாம் பருப்பதமேத்தினமாடுதுமேற்றுங்கபத்திரியே. (245) மித்திரபுத்திரனீகைக்குவாகைக்குமேவுபல பத்திரனன்னரகுநாதசேதுபதிவரைவாய்ச் சித்திரமென்மொழியீர்காமக்கோடைதெறுவெயிற்குச் சத்திரமுன்கொடும்பின்கொடுநீர்க்குடந்தாகத்திற்கே. (246) தடமிருந்தென்னவனஞ்சூழ்தென்றேவைத்தனிலெண்டிரு நடமிருந்தென்னமுரசொலிசெய்ரகுநாதன்வெற்பிற் படமிருந்தென்னவரையீர்மருந்துடன்பண்டிதவர் கடமிருந்தென்னமுன்சத்திரமிட்டபின்காண்குவமே. (247) அயனங்களித்தவிருதிணைநாற்கதியாமுயிர்க்கெண் பயனங்களித்தரகுநாதசேதுபதிவரைவாய்க் கயனங்களூர்நந்தனமென்றுரைத்தென்னகாட்டியென்ன நயனங்களூர்க்களித்தார்பயிர்செய்குவநன்னுதலே. (248) உடலையுடலையுளமாதவரினுறுநரொடு நடலைநடலையிலாமற்புரிரகுநாதன்வெற்பின் மடலைமடலைவசியாக்குஞ்செய்யுமடவரலே விடலைவிடலையில்லாததனமேதுவெளிப்பட்டதே. (249) சித்திரையாவணிமுன்பேர்நடுங்கச்செறுநர்வேலும் பத்திரையன்னரகுநாதசேதுபதுவரைவா யுத்திரையன்னமடவீர்பணப்பையுடையர்வைச்ச முத்திரையில்லையெனிலாந்தனத்துக்குமோசங்களே. (250) அடலையுடையகிட்கிந்தையர்கோனையடித்தசர விடலையெனுமெய்ரகுநாதன்மால்வரைமெல்லியிலா யிடலைவிடுமணிக்குந்தனமேனெளியேங்களுக்குக் கடலையவலுடனீந்தாலுண்போம்பலன்கைகண்டதே. (251) அருணணையுந்துமணியெயிற்றேவைநகரசன்கொடைத் தருணனையாதருண்மால்ரகுநாதன்சயிலமன்னீர் வருணனைமுன்புகடிநதிநீரணிபணிவார்மொய்க்கும்ப கருணனையுந்தெறினீர்நிசங்கோதண்டங்கைக்கொண்டதே. (252) முல்லையலங்கலின்மின்னார்கண்வண்டின்மொய்க்கவ்வாச் சொல்லுமிவுளித்துரைரகுநாதன்சிலம்பனையீர் கொல்லமுன்னாகக்குயவரிவந்துகுதிக்கக்கண்டும் பல்லையமெங்கொளித்தீருங்கள்சேவகம்பாழ்த்ததுவே. (253) நிற்கடாங்காக்கொடியாலவட்டம்படைநேரலாகோ விற்கடங்காணத்தெறுரகுநாதனல்வெற்பனையீர் சொற்கடங்காதபுகழ்முகராமனிற்றோன்றியநீர் மற்கடங்காண்பித்துத்தரவாமுன்வேலைமறைத்ததென்னே. (254) முனம்படைத்தீரரெனவந்தநேரலாமூடரைப்போல் வனம்படைத்தோடவிடுரகுநாதன்வரெமடவீர் தனம்படைத்தீரிரண்டூர்படைத்ததீரென்னதாட்சியுண்ண வனம்படைத்தீரில்லைசத்திரமேதுக்கடைத்ததுவே. (255) கொள்ளமறையவாக்கெண்ணிருதானங்கொடுத்தமைச்சா விள்ளமறைகொளுளரகுநாதன்வியன்சிலம்பிற் புள்ளமறையீதெனுங்குழலீர்முன்புகல்கணக்கு வெள்ளமறையவுடனேபதுமம்வெளிப்பட்டதே. (256) குத்திபல்லாரிபுனாடில்லியுச்சினிகோல்கொண்டை சித்திரக்கனமுதல்வெல்ரகுநாதன்சிலோச்சயவா யத்திரியைத்தரிசித்தோஞ்சரபங்கனாச்சிரமச் சித்திபெற்றாலினிநாமேயிராமனுஞ்சீதையுமே. (257) கதக்குஞ்சரக்கரினத்தைச்சினத்துக்கடித்ததுணவாய குதக்குஞ்சரக்குமுண்னரகுநாதன்குலவரைவாய் மதக்குஞ்சரக்குழலீர்தன்பாரமதிப்பறிந்தோ மிதக்குஞ்சரக்குப்பைகாட்டிமுன்கொண்டவிலைசொல்லுமே. (258) இடக்குமுறைசெய்கொடுங்கோலர்சரினத்தைவெட்டி யடக்குமுரைவடிவாளரகுநாதனணிவரைவாய்க் குடக்குவடக்கறிந்தோமதனவிற்குணக்குத்தக்கண நடக்குமிடமினியாமறியோமிங்ஙனன்னுதலே. (259) திசையம்படிக்கவளர்செம்பிநாடன்மெய்த்தேவையாகோ தசையம்படிக்கவரும்ரகுநாதனன்னாட்டிலுயர்க தசையம்படிக்கவுங்காவேரிகாணவுந்தந்தவுங்கள் விசையம்படிக்கவிடுங்கல்வினான்கொள்ளமெல்லியரே. (260) போரணவாசிநடத்தியமாத்திரைபுத்திரன்மெய் யோரணவாசிமுன்ரகுநாதன்வெற்பொண்டொடியீர் வாரணவாசிமுன்கண்டுவந்தோநல்லவாரிதிசோ காரணவாசிமணிகோகனமென்றுகாண்பதுவே. (261) படியிட்டமாகப்புரந்தடங்காதபகையைவென்ற வடியிட்டவேற்கைரகுநாததீரன்மணிவரைவாய்த் தொடியிட்டசெங்கையிளம்பிடிநீநயந்தோன்றவுடம் பிடியிட்டபோதல்லவோநிசமாமுன்பிடியிட்டதே. (262) குனிக்குமுன்னேசிலையொன்னலர்வாய்ச்சொல்குளறவுமெய் பனிக்கும்வென்கண்டரகுநாதசேதுபதிவரைவாய்ச் சனிக்குமுன்னேதிருவாரூர்க்கமலத்தடத்தைக்கண்டோ மினிக்கண்டுபோற்றுதும்மபலவாணன்மன்றேந்திழையே. (263) துணிவார்க்குமாபலிபாற்றானமேற்றிடத்தோயத்தைமுன் னணிவார்க்குமாபுரிதேவைத்துறைரகுநாதன்வெற்பிற் பணிவார்க்குச்சொர்க்கமளித்தாயினியப்பரமபதந் தணிவார்க்குநீதரிலுண்டாமகிமைதளிரியலே. (264) சுகராலையத்தையற்றோர்பணிதேவைதொழுமன்னர்சூழ் நகராலையத்தைரகுநாதனாகமுன்னாட்டந்தந்தே சிகராலையத்தைமுன்காணப்பெற்றோம்வசுதேவர்தந்த மகராலையத்தையுங்காணிலுண்டாங்கதிவாணுதலே. (265) ஓகையையூகையுடனேகொண்டாதுலர்க்கோய்வதின்றி யீகையையீகைபுரிரகுநாதன்வெற்பேந்திழையீர் வாகையைக்காட்டியதுபோலிப்போதுங்கண்மன்னவன்ப தாகையைக்காண்பீக்கினீரேயவற்குத்தளகாத்தரே. (266) நூதனமாகத்தருவிற்கனகநன்னூற்கவிக்குச் சீதனமாகத்தருரகுநாதனற்றேவையன்னீர் மாதனநாகமுன்காணவென்றுக்கிரவழுதியைப்போற் கேதனங்காட்டப்பயந்தாலுமக்கபகீர்த்திகளே. (267) நெருப்புஞ்சதாகதியுங்கலந்தாலெனநேரலர்மேற் றிருப்புஞ்சமாவடிவேல்ரகுநாதனற்றேவையன்னீர் கருப்புங்கலகமுமையம்புகலுநல்காதுநற்பால் பருப்புந்தனம்பணியாரமளித்ததென்பாக்கியமே. (268) காலைத்தந்தத்தியையாறிடுமாப்படைக்காவலன்செங் கோலைத்தந்தத்தியைச்செய்ரகுநாதகுமுணன்வரைப் பாலைத்தந்தததியைவாய்மடவீர்முன்பரமனைப்போற் றோலைத்தந்தத்தியையெங்கொளித்தீர்தரிற்றோற்றுவனே. (269) மாட்டாங்குளப்படிபோலொன்னலர்படைவாரிகடந் தீட்டாங்குளத்தினிதிரகுநாதன்வெற்பேந்திழையீர் நாட்டாங்குளமலையாங்குளங்கண்டனநாமினிமேற் காட்டாங்குளத்தையுங்காண்பதெப்போதுகழறுகவே. (270) அடம்பிடிக்கைதைவளர்செம்பிநாட்டிலரசுநன்மை யிடம்பிடிக்கைதரச்செயரகுநாதன்வெற்பேந்திழையீர் கடம்பிடிக்கைதைவருமுங்களூர்ப்பயிர்காணக்குடி யுடம்பிடிக்கைதருமுன்வாரகந்தந்ததுத்தாமே** (271) கடம்பணிலஞ்செறியுஞ்செம்பிநாட்டிற்றரியலாய யிடம்பணிகேட்டுத்தொழுரகுநாதனடுமாயேமவெற்பிற் கடம்பணியாங்குகுடமுன்கண்டோமயில்காணிலன்றோ திடம்பணிவோமயில்வாகனனென்றுனைத்தேமொழியே. (272) ஊனைமுன்காட்டுப்புறவினுக்காவுதவுமனுக் கோனைமுன்காடாத்தகுரகுநாதகுபேரன்வரை யானையின்மேல்வைத்துக்கோலமுனா**** மீனையுங்காட்டிலன்றோகலியாணமெய்மெல்லியலே. (273) நாலார்கலிப்படையேவாருயிர்கொண்மனெனவே வேலார்கரதலமால்ரகுநாதன்விலங்கன் நின்னே மாலாதிருக்கச்சியசதிதிரிகண்டுவாழ்த்தவரைம் பாலாறு சோதிருப்பாற்கடல்கண்டு பணிதனன்றே. (274) வெருவிடநரைக்கோல்லட்சியமாநாகைவேல்கொண்டிக லுருவிடந்தைதக்கப்பொருரகுநாதன்வெற்பொண்டொடியீர் மறுவிடந்தைபணியீரதிருநீர்மலைமாலைக்கண்டோர் திருவிடந்தைக்குமயிலைக்கும்போவாரெரிசிக்கவே. (275) தரைக்குத்தரையெனவாழ்செம்பி**** துரைக்குத்துரைரகுநாதகாசிலோச்சயத்தோள்கயன்னீர் வரைக் குவரையுளதென்றுமுன்காட்டிலரினு** திரைக்குத்திரையிடுவாரோயுலகிற்றெரிந்தவரே. (276) மஞ்சளையிஞ்சிதளிவளர்செய்மொடும்ஞானி* விஞ்சுமெய்த்தேவைவந்துன்’ரகுநாதனவி*மின்னே துஞ்சுமுனெமுசுகுந்தனிலாமற்றுரத்தியநீ கஞ்சனையுந்தொலைதராற்றொழுவாருனைக்கண்ணனென்றே. (277) கேட்டந்தமன்னரிசைவீரமாண்மைகிளர்புகழ்புண் சூட்டந்தமாமெயரகுநாதன்றேவைச்சுடர்க்கிரிவாய்ச் காட்டந்தமாஞ்சொற்கடைமருந்தீரபெருங்காயமென்று கோட்டந்தநதீர்கடுக்காய்ப்புவுநீந்தரக்கோர்வனே. (278) குச்சிலையெய்தப்பெறாதவரேனுந்தற்கோரிவந்தான் மச்சிலையெய்தச்செயும்ரகுநாதன்வரைமடவீர் நச்சிலையென்பதறிந்தோநும்பாலினிநாங்களுய்யக் கச்சிலையென்பதுஞ்செய்தால்வெகுநன்மைகாணுமக்கே. (279) அஞ்சையிலேவெருவேலென்றெளியரையாதரிக்கு மஞ்சையிலேகெனச்செய்ரகுநாதமகிபன்வரைப் புஞ்சையிலேதுவரையென்றுகாட்டியிப்போதழகா நஞ்சையிலேயெனலாமோபெண்ணேபொன்னிநாட்டினிலே. (280) சந்தனுபோசனளன்மாதவனரிச்சந்திரன்போல் வந்தனுமான்மறுரகுநாதன்வரைமடவீ ரெந்தனுவெய்தமறிமாவிரண்டதிலக்குத்தப்பி வந்ததிலொன்றைமறைத்தொன்றைக்காட்டன்னமார்க்கமன்றே. (281) தாகமிருந்தவறியோர்க்கமுதந்தறுதலிற்றி யாகமிருந்தசரரகுநாதனணிவரைவாய் மாகமிருந்தநடுவீரதுரோணவருபதும் யூகமிருந்துஞ்சயினியமோடியொளித்ததென்னே. (282) வீரரண்போர்க்குவெருவிமுன்சந்திவீடினுமொப்பாத் தீரரணமதமாரகுநாதன்சிலம்பனையீர் நீரரண்கைக்கொண்டுவெற்பதனைத்தள்ளனீதியன்று பாரரணமமிலையுங்கள்ரமனைப்பாழென்பரே. (283) வாட்டானைகொண்டகடற்றானைமண்டவருமகத நாட்டானைவென்றசெயரகுநாதநரேந்திரன்வரைக் காட்டானைவென்றகட்டீர்கிள்ளையேந்திமுன்காணுமயிற் கோட்டானைவென்றகரும்பிளையாதுரங்கோகிலமே. (284) கூட்டிடநட்பைப்பிரிக்கப்பிரித்ததைக்கூட்டிப்பின்னு மீட்டிடச்செய்தரகுநாதன்விலங்கலன்னீர் நாட்டிடைச்செட்டியுரத்தைமுன்காண்பித்துநஞ்சத்தைப்பின் காட்டிடவோமறைத்தீருங்களவாணிபங்கைகண்டதே. (285) கிள்ளைமறைசொலக்கோகிலங்கேட்டுக்கிளர்பொழில்சூழ் வள்ளைவயற்செம்பியாள்ரகுநாதன்வரைமடவீர் பிள்ளைமுன்பெண்டந்ததானங்கண்டோமந்தப்பிள்ளைசைவங் கொள்ளையிடச்சமணேடிட்டதுங்கண்டுகொள்வதென்றே. (286) கலையிருந்தாலுமுளத்திற்றருமங்கழறுமனு நிலையிருந்தால்மகிழரகுநாதநிருபன்வெற்பிற் சிலையிருந்தாவதென்னோகட்டியப்பரைச்சேர்க்கமுன்னே யலையிருந்தாலல்லவோசொல்லுவாயினியங்கனையே. (287) நாதகமம்புகதையீட்டிமாரதவி*மன்செய் சாதகமன்னுமுரரகுநாததயாளன்வெற்பிற் பேதகமின்னற்பெருந்துறைகாட்டியபின்னலவோ போதகங்காட்டத்தகுமடியார்கட்குப்பூங்கொடியே. (288) வான்சிந்திப்பூநிகரில்லாகைம்மாறுடை*வள்ளல்செம்பிக் கோன்சிந்திப்பாவலாசொல்ரகுநாதன்குவ*மனையீர் தேன்சிந்திப்போமென்றளித்தீர்முன்பானையத்தேனைத்தந்தா னான்சிந்திப்போனென்றுந்தித்திக்கக்கொண்டுங்கணாமத்தையே. (289) கட்டணக்கோட்டைநிதியொடுமன்னர்தங்கைகுவித்துக் கொட்டணக்கோட்டைவிடுரகுநாதகுபேரன்வரை யுட்டணக்கோட்டைநிகர்களத்தீத்தருமுங்கள்பெரும் பட்டணக்கோட்டையைப்போற்சந்தைப்பேட்டையைப்பார்க்கட்டுமே. (290) குஞ்சத்தைவெள்ளைக்குடையைத்தமிழ்க்குக்குலவுசப்பிர மஞ்சத்தையீயுங்கொடைரகுநாதமகிபனல் வஞ்சத்தைவென்னடைமானேமுன்பந்தயையாதரித்த கஞ்சத்தைச்சேர்ந்தனன்கோவதெப்போதுவங்காளத்தையே. (291) விண்புவிபூடணமாடைபென்னாடைவீபவமென்று நண்புவிபீடணாசெய்ரகுநாதநரேந்திரன்வெற்பிற் பண்புவிபூதியனையீரிருகொங்கைபாலித்தநீ ருண்புவிபூசனையாற்கொள்ளுவாகை*யுகவலையே. (292) பம்புவியாகரணங்கலைசானங்கொள்பண்டிதரா னம்புவியாழமெனும்ரகுநாதன்மைந்தர்மின்னே கொம்புவியாசாகதையெழுதேடுகொடுத்தாதுமெய் யம்புலியாளவரமுந்தந்தாற்கலியாணமெய்யே. (293) உருமானையிட்டிகவேதாவிபவத்துருப்பசிக்கோ தருமானையிட்டவிரல்ரகுநாதன்றடவரைவாய வருமானைமென்குழலீர்செய்குவார்கைவரினுமெய்யாக் கருமானையீன்றியமையாதுகாண்கும்பகாரனுக்கே. (294) கங்கையைக்கண்டவர்கங்கையைக்கண்டுகருதுமவர் சங்கையைக்கண்டனைசெயரகுநாதன்சயிலவரை யிங்கையைக்கண்டசொற்றேன்வஞ்சிகூடலிறைசொல்வஞ்சி கொங்கையைக்கண்டனன்பாணரையுங்கண்டுகொள்ளுவானே. (295) வானங்குலவரையெங்குந்தன்சீர்த்திவளரவுமை கோனங்குலப்பணிசெய்ரகுநாதகுமுணன்வரைத் தானங்குலவுமினன்னீர்முன்பேற்றவாதங்களுக்கு மானங்குலமெய்தப்பண்ணுமுன்னேவந்தமாதங்கமே (296) தென்னவரைவில்லவரைமனுவிற்றிருததியிசை மின்னவரைசுபுரிரகுநாதன்விலங்கலன்னீர் சொன்னவரையறிந்தோமுங்கள்காவியஞ்சூத்திரம் மென்னவரையமறையாமலீந்திடுமெங்களுக்கே (297) திறையடிக்கும்பலதீவுங்கலிப்பகைதீரவென்று பறையடிக்கும்பொன்ரகுநாதசேதுபதிவரைவரைவாய்க் கறையடிக்கும்பமுனிகாட்டக்காணுந்தொல்காப்பியத்தின் மறையடிக்கும்பன்முடிக்குமுரையொன்றுவாணுதலே (298) சிந்துரத்தந்தளமேற்கொண்டடிப்பர்சேனையைமொய் சிந்துரத்தந்தளவேல்ரகுநாதன்சிலம்பிற்பொன்னே சிந்துரத்தந்தச்சந்தங்கண்டனமொன்றுசேரையடிச் சிந்துரத்தந்தமிகுகீதமுங்கண்டிதோவதொன்றே. (299) நிசிசரனன்றுமெய்யென்னும்வெங்கூற்றைநிமிடத்திற்கொல் விசிகரமன்றோடுவேல்ரகுநாதன்வியன்சிலம்பில் ருசிகரமென்றயின்மோகனதம்பனரூபமின்னே வசிகரமென்றறிவிப்பாய்முன்பேதனம்வாய்த்தவாக்கே. (300) மச்சுபெய்வீடுநிதியாமறையவாவாழ்த்தவொரு மிச்சுப்பெய்தான்ரகுநாதன்மால்வரைமின்னனையீர் நச்சுப்பயோதரவண்ணப்பொன்மாலைமுன்காட்டியநீர் நச்சுப்பொய்கைத்தலத்தைவரைமீட்டிடினன்மையுண்டே (301) தனதடம்பத்திசெலுத்தலரறகெனுந்தர்மவுள்ளத் தனதடம்பத்திதருரகுநாதன்சயிலமன்னீர் தனதடம்பத்திபந்தந்தீரினியஞ்சனவைவச்சு தனதடம்பத்தியதிகாரமுந்தரதரக்கவரே (302) வைப்போதகத்தைமரமாநிதிமணிமானுமெய்யி சைப்போதகத்தைவரரகுநாதன்சயிலமன்னீர் நைப்போதகத்தைநுசுப்பீரினிதுடனானுங்கள்பொய் கைப்போதகத்தையுங்கைப்போதகமெனக்காண்டடுமே. (303) பண்டுதந்தீர்வையில்லாமற்குடிகட்குப்பற்றலாமெய் விண்டுதந்தீர்படச்செயரகுநாதவிசயன்பவெற்பில் வண்டுதந்தீர்வைகியகுழலீர்கொண்டைமாலைமணச் செண்டுதந்தீர்சரமுந்தரக்கோருமென்சிந்தனையே. (304) வருமலைவென்றசவிபோற்பகையைமடித்துக்கொடைத் தருமலைவெயத்தகருரகுநாதன்சயநிலமன்னீர் பொருமலையீசரதியையொழித்தீருப்புரிவலியை யிருமலையுந்தவிரத்தானீர்மருத்துவரெங்களுக்கே. (305) அல்லர்கைக்குண்டலவில்லாரைமந்திரத்தாற்செம்பிநா டெல்லாரையுந்தொடவாழரகுநாதன்வெற்பேந்திழையீர் நல்லாரைப்போல்வருங்கல்லாரைடெந்தஞாயஞ்சொல்லு மில்லாரைக்காய்கின்றவல்லாரைக்காட்டுதலெங்களுக்கே. (306) உடலையிருதலையுற்றோன்பழிதொடர்ந்தோடிவர வடலையும்வென்றரகுநாதன்றேவையணிவரைவாய் மடலைநிகர்த்தகுழலீர்நற்சாக்கரைவட்டுத்தந்தீர் கடலையும்விட்டுக்கலந்தாலல்லோருசிகாண்பதுவே. (307) வளமேவுதேவைரகுநாதபூபன்வரையிடத்தே குளமேவுசெஞ்சொற்குயிலனையீர்நின்கொடுவிரக முளமேவு****சுரதாகந்தீர்நதி*வுன்னிடத்தா மிளநீரைத்***னிக்கண்டிறவாவிடிலென்பலனே. (308) நிகதயகும்பிட்டுப்பரராசாபற்கெஞ்சிநிற்பப்பொன்னை வைத்தங்கிருக்குரகுநாதன்தேவைமணிவரைவாய் நத்தங்கும்பிட்டகுழலீரதிசயநன்றுநன்றிங் கத்தங்கும்பத்தைவிட்டப்பாலிராசிநட்பானதுவே. (309) பையாடரவம்புனைராமலிங்கர்பதம்பணியு மையானெனுஞ்சொற்றுசரகுநாதன்மைந்நாகமன்னீர் செய்யாததிசயஞ்செய்தீர்தனத்தைத்திறந்தளித்துக் கையாற்கடலடைத்தீர்திருமாறிறங்காட்டியதே. (310) கோவைத்துறையொன்றினானூறுகொண்டமைக்கொணடலெங்க டேவைத்துரைதளவாய்ரகுநாதன்சிலம்பின்மத னேவைக்கொடியைமுரசைவின்னாணையெழில்வனசப் பாவைக்கமுதமனையீர்மறைத்தீரென்பகையென்னலே. (311) இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை முற்றிற்று.