சின்னனேந்திர பாண்டியன் செப்பேடு

No photo description available.

வாசக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பாண்டிய வம்சத்தவர் யார் என்பதை உரைக்கும் வண்ணம் இந்த செப்பேட்டில் தகவல்கள் அடங்கியுள்ளன. இந்த செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாப்தம் 1171 -என குறிக்கப்பட்டுள்ளது அதன்படி ஆங்கில ஆண்டு 1246 ஆகும். கொல்லம் ஆண்டு 421 என்று கணித்தாலும் சரியாக பொருந்திவருகிறது. ஆயினும் செப்பேடு காட்டும் செய்தியில் “ஸ்ரீபெருமாள் அழகம் இருந்தகாலம்” என வருவதால் இதனை 16ம் நூற்றாண்டாகவே கணிக்க இயலுகிறது. செப்பேடு தமிழிலும் கிரந்தத்திலும் அமைந்துள்ளது. பராக்கிரம பாண்டியன் பெயருக்கு முன்னுள்ள வாக்கியங்கள் முழுவதும் கிரந்தத்தில் உள்ளன. செப்பேடு~•~•~•~•~

உ சொக்கலிங்கம் துணைஅகோர சிவந்த பாதமூருடைய ஆதினம் வடகரை ஆதிக்க சின்னனேந்திரன் அவர்களால் எழுதிய நளச்சக்கரவர்த்தி அம்பொன்னாட்டு தேவர் வம்ச பாரம்பரை தாம்பிர சாசன நகல் பாலர்ய நளச்சக்கரவர்த்தி தேவர் குல கோத்திரம் அம்பொன்னாட்டு டைய மகா ள ஸ்ரீ வடகரை ஆதிக்கம் முடி மன்னன் சின்னனேந்திரன் ராஜாதிராஜன் ராஜகெ ம்பீரன் ராஜ போஜனன் வீரடதகடதட மகுட கோலாகல நாய விதுரன அஷ்டதிக்கு மனோட் சங்கரன் பாண்டிய மண்டல பிரதிஷ்டா வனாச்சியார் இந்திரன் முடிமேல் இனைவழைஎறிந்தோன் ஆரம் தரித்த சௌந்திரஷ்வரர் பூதத்தை பணி கொண்ட புகழ் வீர கேரளன் மேகத்தை திரை கொண்டு வீர நாகற்தை கண்ணு வாங்கும் பெருமாள் கண்டநாடு கொண்ட நாடு ஆப்பநாடு கொண்டநாடு கொடாத புண்டரீக வதனன் கனக சபை அச்சுத சபை சித்திர சபை தாம்பிர சபை மாரதின சபை சிர்ச்சபை ராஜ சபை நர்த்த சபை தேவ சபைக்குடைய வனாயும் அம்பொன்னாடு ஆப்பநாடு செம்பொன்நாடு கிழுவை நாடு பொதுநாடு வன்னிவள நாடு ஈசாங்கு நாடு முதலான நாட்டில் முதன்மை பெற்றவனாம் சண்டப் பிரசண்டன் தண்டுவர் முண்டன் ஷிவ தயாபரன் நித்ய கல்யாண நிபுணன் திரிபுவன சக்கரவர்திகளில் கோனேரிமை கொண்டவன் வாரி வடிவம்பல மகா மேருவின் செண்டு கயலும் தரித்த தெய்வப் பெருமாள் பொற்கை துருகின் தாக மகுட நிகழ்த்தி மகுடந் தரித்த மகராஜன்தென் பொதிகை மேருவின் குறுமுனி ஏவி வருட் புனல் தன்னை மின்னும் சென்றதினால் வழிவிட்டருளிய கொற்கை வேந்தன் ஆரம்பூண்ட வேப்பந்தார் மார்பன் மகாராஜ ராஜாமார்த்தாண்டன் மணிமகுடந் தரித்தோன் முன் வைத்த காலை பின் வாங்காப் புகழ் வீரன் க்ஷத்ரியர்களில் முதன்மை பெற்றோன் அம்புக்கோட்டை கொண்டையங்கோட்டை செம்புக்கோட்டை அணிற்கோட்டை வாள் கோட்டை முதலான கோட்டைக்குக்கோட்டைக்கு முதன்மை பெற்றோன் அம்பனேர் கலனை முக்குழணி மங்கலம் அரும்படியுத்தம் புரிந்தோன் ஆகையால் அம்ப நறியார் என்று பெயரும் பெற்றோன் எட்டு கிளையும் எட்டுக்கொத்தும் உடையோன் தேவர் குல வம்சமாகிய பாண்டி நாட்டுக்கு பதி தீர்த்தயாருரை ன் சு வா மி தெரிய வந்தது கண்டு எங்கள் குலகுருவாகிய காஞ்சிபுரம் பிரம அகோர சிவந்த பாதமூருடைய தேசிகரவர்கள் தென்காசி விஸ்வநாதர் சன்னதியில் சன்னதி மடத்ததிபதியார் வந்திருப்பது தெரிந்து குரு சன்னி தானத்தில் வந்து தெரிசனை செய்தது தெரிந்து திரு நோக்கம் பார்த்து திருவாய் மலர்ந்து அருமை மொழி கூறி தீட்க்ஷய் செய்து திருநீர் ஆசீர்வாதம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் ஸ்ரீ பெருமாள் அழகம் இருந்த காலம் சாலி வாகன சகாப்தம் 1171 ன் மேல் கொல்லம் ஆண்டு 421 புத்திர புவன மகேந்திர: மூலப் பிரதீப மதுர மாகேந்திர மோந்த மங்கல மிரபலாதீப நாரங்க கேரள தாமோதர வந்த்ர சோழ சிந்து ய ட் ஷ்கல நாயக சாயஞ்சய கேரள பௌம மகா ள ஸ்ரீ காசி பராக்கிரம பாண்டிய ராஜா அவர்கள் முன்னிலையில் விஸ்வேஸ்சுர சன்னதியில் எழுதிய தாம்பிர சாசனம் திருவாலவாய் ஸ்வாமி ஆடி வீதியில் சப்தாபரண மண்டபமும் கோவிச்சடையில் சொக்கலிங்கம் பிரதிஷ்டையும் நம்மால் செய்து அதற்கு அருகே நிலமும் சன்னதி மடம் ஸ்வாமி சொக்கலிங்கம் பூஜைக்கு ஊர் மேல் அழகியான் மூன்று கோட்டை விரைப்பாடும் தர்ம சாசுவதமாக ஏற்படுத்தி எங்கள் வம்சத்தார் பரம்பரை குரு சன்னிதானத்திற்கு வருஷ காணிக்கை தலைக்கட்டு 1க்கு பணம் இரண்டும் பெண்ணுக்கு பணம் இரண்டும் தீட்க்ஷைக்கு பணம் பத்தும் சுப முதலான காரியத்திற்கு பணம் பத்தும் அவர்களில் வரம்பு தப்பினவர்களுக்கு வாங்கும் கடமையும் கல்யாணத்திக்கு வெற்றிலை 100ம் பாக்கு 20 இருபதும் கொடுத்து வேண்டுமென்கிற பணிவிடைகள் செய்து வருவோமாகவும் இந்த உடை பண்ணினவர்கள் காசிக்கரையில் காராம்பசுவை மாதா பிதா சிசு கொலை செய்த தோஷத்தில் போவோமாகவும் இதை விடுத்து செய்கிறவர்கள் அஷ்ட ஐஸ்வர்யமும் பெற்று புத்திர சம்பத்தும் பெற்று தங்கள் குலம் உள்ளளவும் பேர் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பார்களாகவும் காசி முதல் கன்னியாகுமரி வரை இந்தப்படிக்கு ஒப்பம் -வடகரை சின்னனேந்திரன் ஒப்பம் – காசி பராக்கிரம பாண்டிய ராஜா ஒப்பம் -ராமசந்திரமகாராஜா அகோர சிவந்த பாதமுடைய வம்ச பரம்பரையில் உதித்த ஸ்ரீ மகா ள குரு சுவாமி அவர்கள் ….ந்திரன் வம்ச பாரம்பரையில் உதித்த திரிபுவன சக்கரவர்த்தி மாற.திரிகூடபுரம் சின்னனேந்திரன் எழுத்துமேலுள்ள செப்பேடு ஒரு பாத்திரக்கடையில் இருந்து தொல்லியல் துறை மேனாள் துணை இயக்குனர் திரு. சொ.சந்திரவாணன் அவர்களால் மீட்கப்பட்டு செப்பேட்டுக்கு உரியவர்களின் சம்மதத்தின் பேரில் தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தற்போது சென்னை கோட்டையில் உள்ள அலுவலகத்தில் உள்ளதாக அவரால் சொல்லப்படுகிறது. செப்பேடு காட்டும் செய்திகள் ————————————————-” பாலார்ய நளச்சக்கரவர்த்தி தேவர் குல கோத்திரம் “”இந்திரன் முடிமேல் இனைவளையெறிந்தோன்””ஆரம் தரித்த சௌந்தரஷ்வரர்””திரிபுவனச் சக்கரவர்த்திகளில் கோனேரிமை கொண்டவன்””வாரி வடிவம்பல மகாமேருவின் செண்டு கயலும் தரித்த தெய்வப்பெருமாள்””கொற்கை வேந்தன்””ஆரம் பூண்ட வேப்பந்தார் மார்பன்””க்ஷத்ரியர்களில் முதன்மை பெற்றவன்””தேவர் குல வம்சமாகிய பாண்டிய நாட்டுக்கு பதி” முதலான தொடர்களால் வடகரையாதிக்கத்து அரசர் குறிப்பிடப்படுகிறார். இது இவர் பாண்டிய வம்சத்தவர் என்பதற்கு உறுதியான சான்றுகளாக உள்ளது. மேலும் செப்பேடு பாண்டியன் முன்னிலையில் எழுதப்படுவதாகவும் தெரிவிக்கிறது. செப்பேடு தனது தொடக்கத்திலேயே மதுரை பாண்டியரின் குலதெய்வமாகிய சொக்கநாதரைக் குறிக்கும்வண்ணம் “சொக்கலிங்கம் துணை” என்று தொடங்கப்பெறுகிறது. வடகரையாதிக்க பாண்டிய தேவ நந்தனார்களாகிய சொக்கம்பட்டி அரசர்களது பிற்காலத் தலைநகரும் “சொக்கன் பட்டி” என்று சொக்கநாதரை நினைந்து உருவாக்கப்பட்ட ஊரேயாகும். மேலும் சொக்கம்பட்டியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைக்கு செல்லும் பாதையில் கருப்பாநதி ஓரத்தில் பெரியநாதன் கோயில் என வழங்கப்படும் பெரியசாமி ஐயன் கோயில் உள்ளது. இக்கோயில் சொக்கம்பட்டி அரசர் பெரியசாமித் தேவர் அவர்களின் பள்ளிப்படையே என்று கருதப்படுகிறது. அக்கோயிலில் இரண்டு கல்வெட்டுகள் சொக்கம்பட்டி அரசர்கள் இருவரைக் குறிக்கின்றன. கோயிலின் முன் மண்டப மேற்புறத்தில் பாண்டிய சின்னமாகிய மீன் மற்றும் செண்டு பொறிக்கப்பட்டு அதன் கீழே பெரியசாமி செம்புலி வேள் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை அடுத்த பதிவில் காண்போம். நன்றி! உயர்திரு. சொ.சந்திரவாணன் அவர்கள். {மேனாள் இயக்குனர் தமிழக தொல்லியல் துறை }தென்கரை மகாராஜ பாண்டியன் அவர்கள் {கடம்பூர் -சொக்கம்பட்டி ஜமீன் வாரிசுதாரர்}அன்பன்:

முத்துவடம் பூண்ட கோலத்தில் வடகரை ராஜகோபாலத்தேவராகிய சின்னனேந்திர பாண்டியன். கேள்வி.முத்துக்கு உரியவன் யார்? பதில்.பாண்டியன்.கேள்வி. முத்துவடம் -முத்துப்பூணூல் -முத்தாரமணிந்தவன் யார்? பதில். பாண்டியன். படங்கள் – குற்றாலம் கோயிலிலுள்ள வடகரை அரசரும் ராஜகோபாலத்தேவருமாகிய சின்னனேந்திரபாண்டியன் மற்றும் அவர் சகோதரர் சிலைகளில் தென்படும் முத்துப்பூணூல் -முத்தாரம் -முத்துவடம் . விளக்கமான பதிவே தேவையில்லை! படங்களே சொல்லும் எவர் பாண்டியரென்று! …அன்பன்.கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

May be an image of textNo photo description available.May be an image of text that says 'இடம்: தொழில்: மறவன் பாண்டி நாடு பண்டு: போர்த் தொழில் இன்று: காவல், பயிர்த்தொழில், கல்வித் தொழில் 38 பிரிவுகள்: நாட்டார், மணியக்காரர், கொத்தளர், சீத்தல், சேர்வைகாரர், தோலர், காரணர், பண்டாரம், வேடங்கொண்டார், செட்டி, குறிச்சி, வேம்பன் கோட்டை, செம்பி நாடு, குன்றமான் நாடு, இராமன் ஆப்பன் நாடு, கொங்கணர் அம்பொனேரி, வல்லம்பர் இவுளி, வன்னியர், கிள்ளை, ஒரியூர், வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிளை, தும்பை, உப்புக்காடு, அஞ்சுகொத்து, கொண்டையன் கோட்டை, தொண்டை நாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசிகட்டி, கன்னிகட்டி, அணிநிலக் கோட்டை செம்பி நாடு, நாடு, ஆமை நாடு. 5 நாடுகள்: கிழவை நாடு, அகப்பா'May be an image of textMay be an image of text


Muniraj Vanathirayar

No photo description available.
No photo description available.No photo description available.No photo description available.No photo description available.

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

This entry was posted in சொக்கம்பட்டி ஜமீன், பாண்டியன், மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *