பாண்டியர்கள்
சேரர் நாட்டு இளவரசியார்களையும் திருமணம் செய்திருந்தனர்..
இதன்படி
கிபி.1479.ஆம் காலகட்டத்தில்
தென்பாண்டிநாட்டின்
வள்ளியூரை தலைநகராக கொண்டு
பாண்டிய மன்னராக ஆட்சிபுரிந்தவர்
காஞ்சிபுரங்கொண்ட
சடையவர்ம பாண்டியர்களில் ஒருவரான
குலசேகர பாண்டியதேவர்.
இவர்
சேரர்நாட்டின் திருவிதாங்கூர் சமஸ்தான இளவரசியான
குலசேகரவல்லியை திருமணம் செய்து
தென்பாண்டிநாட்டின்
கொற்கையை தன்
கரைநாடாக கொண்டு
மதுரதேய வளநாட்டை முழுவதுமாக
தன் தம்பிமார் நால்வரோடும் அரசாண்டுவருகையில்
நாஞ்சில் நாட்டில் வாழ்ந்த
கன்னடியன்
வெங்கலநாடன் என்பவனின் தாக்குதலால்
குலசேகரபாண்டியன் தன்
வள்ளியூரை விட்டு
திருச்செந்தூர் வட்டாரபகுதியின் வள்ளிநாடு
பக்கம் புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த நிலையில்.
கோட்டாறு நகர்தனில்
குலசேகரபாண்டியன் விட்டு சென்ற
பொன் பொருள் முத்து
ஆபரணங்கள் (குலசேகரவல்லி கொண்டுவந்த சீர்வரிசைபொருட்கள்)அனைத்தும்
நாஞ்சில்நாட்டில் வாழ்ந்த
கன்னடியன் வெங்கலநாடனிடம் சிக்கிவிடகூடாது என்பதை அறிந்தே
திருவிதாங்கூர்மன்னர்
கோட்டார்பதி
ஆதிகேசவபெருமாள் கோவிலில் இருந்த
குலசேகரபாண்டியருக்கும் சொந்தமான
பொன்பொருள் முத்து போன்ற
ஆபரணங்களை எடுத்து
தங்களின்
திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்க்கு சொந்தமான
திருவனந்தபுரம் பத்மநாதபுரத்தின் கோவிலில் இருக்கும்படி செய்தனர்..