மறக்குல மன்னர்களின் பூணூல்.
மற மன்னர்கட்கு தங்கப் பூணூல் என்பது வழக்கத்தில் உண்டு. மேலும் மறக்குல மன்னர்கள் வெறும் பருத்தி நூலில் பூணூல் போடுவதில்லை என்பதால்.. அறியாத சிலர் மறக்குல மன்னர்களுக்கு பூணூல் இல்லை என்று எழுதினர். ஆனால்.. தங்கத்திலும், தங்க இழைகளில் கோர்த்த முத்துக்களிலும் மன்னர்கள் பூணூல் அணிந்திருந்தனர். {ஏற்கனவே வடகரை மன்னர்கள் இருவர் முத்துப் பூணூல் கோலத்துடன் குற்றாலம் கோயிலில் உள்ள படங்கள் பதியப்பட்டுள்ளது}
ஏன் இம் மன்னர்கள் தங்கத்திலும், முத்துச் சரங்களிலும் பூணூல் பூண்டனர்? -எனும் கேள்விக்குப் பதில் இதுதான்…
தங்கத்திற்கும், பரிசுத்தமான முத்துக்கும் தீட்டு என்பது இல்லை. தாம்பத்ய உறவு, அந்தப்புற சங்கதிகளின் போதும் இவற்றுக்குத் தீட்டு இல்லை என்பதுதான் பருத்தி நூலை விடுத்து, இவற்றை ராஜாக்கள் அணியக் காரணம். இவை விண்ணுலகத் தேவருக்கும் மண்ணுலகத் தேவருக்கும் பொதுவான பூணூல் அணிகள். இவற்றை உடைக்கு மேலும் அணியலாம், வெற்றுடம்பிலும் அணியலாம்.
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.
ஏன் இம் மன்னர்கள் தங்கத்திலும், முத்துச் சரங்களிலும் பூணூல் பூண்டனர்? -எனும் கேள்விக்குப் பதில் இதுதான்…